Author Topic: அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்  (Read 984 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
2014 ஆ‌ம் ஆ‌ண்டு அக்டோபர் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க. ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28


1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு, சலிப்பு, படபடப்பு நீங்கும். முன்கோபம் விலகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
 
தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். மனக்கசப்பால் விலகி நின்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும்.
 
சுக்ரன் 3-ல் நிற்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். பழைய கடனை பைசல் செய்ய என்ன வழி இருக்கிறது என்று யோசிப்பீர்கள். என்றாலும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
 
அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! திருமணத் தடை நீங்கும். ஆரோக்யம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். சிக்கல், பிரச்னைகள் தீருவதுடன் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 9, 12, 21, 30
அதிர்ஷ்ட எண்கள்: 4, 8
அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29


2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தின் முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். திடீர் நண்பர்களை நம்ப வேண்டாம். விலை உயர்ந்த நகை, பணத்தை கவனமாக கையாளுங்கள்.
 
முடிந்த வரை முக்கிய விஷயங்களை நீங்களே, நேரில் சென்று முடிக்கப் பாருங்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். பழைய இனிமையான நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். என்றாலும் அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
 
மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்துப் போகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பழைய சொந்த-பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு.
 
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய மாதமிது.
     
அதிர்ஷ்ட தேதிகள்: 2, 7, 6, 11, 25
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30


3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். ஷேர் மூலம் லாபம் வரும். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஓரளவு பணவரவு உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். கம்பீரமாக பேசுவீர்கள்.
 
சகோதரருக்கு இருந்த பிரச்னை தீரும். காலி இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். என்றாலும் பல விஷயங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி பெரிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு.
 
சில நாட்களில் தூக்கம் குறையும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மனைவிவழியில் மோதல்கள் வெடிக்கும். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர வாய்ப்பு கிடைக்கும்.
 
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்: 3, 1, 10, 21, 27
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31


4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளுமளவிற்கு பணம் வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
புது சொத்து சேரும். அரசால் அனுகூலம் உண்டு. என்றாலும் பிள்ளைகளை அதிகம் செலவு செய்து அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பணபலம் உயரும். ஷேர் லாபம் தரும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள்.
 
 உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். வெளிநாடு, அண்டை மாநிலங்கள் செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.
 
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 4, 8, 15, 17, 26
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23


5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பதவிகள் தேடி வரும். புது வேலைக் கிடைக்கும். பிதுர்வழி சொத்துகள் சேரும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வரைபட அனுமதி கிடைக்கும்.
 
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய புது உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மாதத்தின் பிற்பகுதில் கட்டை விரல், கண் புருவம், கால் மூட்டில் அடிப்படும்.
 
யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்காதீர்கள். சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் இருக்கும். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். ரகசியங்களை காக்க வேண்டிய மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 5, 1, 17, 14, 26
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, கிரே
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24


6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தொட்ட காரியம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும்.
 
குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும் என்றாலும் தந்தைக்கு வேலைச்சுமை, அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும்.
 
 பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.
 
கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப் பெறும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்: 6, 8, 15, 17, 26
அதிர்ஷ்ட எண்கள்: 7, 8
அதிர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் 7, 16, 25


7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக பேசி முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.
 
மாதத்தின் மையப் பகுதியிலிருந்து செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அவ்வப்போது ஒருவித அச்சம், தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். உங்களுடன் பழகுபவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். நெருங்கிய நண்பராக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துப் பங்கை போராடி பெறுவீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் விலகும். சகோதரிக்கு திருமணம் முடியும். ரியல் எஸ்டேட், கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
 
அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களை கடிந்துப் பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். தன்கையே தனக்குதவி என்பதை உணரும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 7, 16, 25, 20, 15
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மயில்நிலம்
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26


8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் திருப்தி ஏற்படும். பழைய வழக்குகளில் வெற்றியுண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள்.
 
வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
 
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். மாதத்தின் பிற்பகுதியில் ஒருவித பதட்டம், படபடப்பு, கோபம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.
 
 புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த சில சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வெற்றிக்கனியை பறிக்கும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 8, 5, 6, 17, 24
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, ஆலிவ்பக்சை
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4256
  • Total likes: 1230
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27


9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசியலில் செல்வாக்குக் கூடும்.
 
வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். ஆனால் தொண்டை புகைச்சல், கழுத்து வலி, வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்துப் போகும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.
 
சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது. விலை உயர்ந்த நகைகளை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்துக் கொள்வார்கள்.
 
உத்தியோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரியால் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சிக்கனம் தேவைப்படும் மாதமிது.   
 
அதிர்ஷ்ட தேதிகள்: 9, 1, 12, 21, 10
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

Tags: