Author Topic: 2014 நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்  (Read 1011 times)

Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
2014 ஆ‌ம் ஆ‌ண்டு நவம்பர் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க. ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-1, 10, 19, 28


1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வாகனம் வாங்குவீர்கள். என்றாலும் மனைவிக்கு இடுப்பு வலி,  கழுத்து வலி வந்து நீங்கும்.

மையப்பகுதியிலிருந்து செல்வாக்குக் கூடும். மகனுக்கு வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். முகப்பரு,  தூக்கமின்மை விலகும்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். நினைத்ததை முடிக்கும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்:1, 3, 5, 18, 30
அதிர்ஷ்ட எண்கள்:3, 6
அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள்:புதன், சனி


Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-2, 11, 20, 29


2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் இழுபறியாக இருந்த காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கட்டிடப் பணியை தொடங்குவீர்கள். பெற்றோரின் உடல் நலம் சீராகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.

அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்திகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீண் அலைச்சல்,  டென்ஷன்,  தூக்கமின்மை வந்து நீங்கும்.

யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியை தொடர்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பனிப்போர் நீங்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிற்பகுதியில் சாதிக்கும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்:2, 7, 6, 15, 16
அதிர்ஷ்ட எண்கள்:1, 9
அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு, வியாழன்


Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-3, 12, 21, 30


3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தைரியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு,  வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக சில பணிகளை செய்வார்கள்.

கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மாதத்தின் முற்பகுதியில் வாகன விபத்து,  அலைச்சல்,  மனஉளைச்சல்,  மனைவி வழியில் மனத்தாங்கல் வந்து நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரியும்.

கன்னிப் பெண்களே! காதல் விஷயங்களை ஓரங்கட்டிவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்:3, 12, 15, 27
அதிர்ஷ்ட எண்கள்:6, 9
அதிர்ஷ்ட நிறங்கள்:மயில்நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமைகள்:செவ்வாய், வியாழன்


Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-4, 13, 22, 31


4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். திருமணம்,  சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். என்றாலும் வாகன விபத்து,  வீண் டென்ஷன் வந்துப் போகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். மாதத்தின் ஆனால் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அதிகாரி உங்களை மதிப்பார். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ரகசியங்களை காக்க வேண்டிய மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்:4, 6, 15, 22, 24
அதிர்ஷ்ட எண்கள்:3, 7
அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர்கிரே, ப்ரவுன்
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு, திங்கள்


Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-5, 14, 23


5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் உங்கள் பேச்சில் கனிவுக் கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரியின் திருமணத்தை முன்னின்று முடிப்பீர்கள். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தாய்வழி உறவினர்களின் அன்புத்தொல்லைகள் விலகும். என்றாலும் விமர்சனங்களும்,  தாழ்வுமனப்பான்மையும் வந்துப் போகும்.

பணம்,  நகையை கவனமாக கையாளுங்கள். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! அதிரடியாக செயல்பட்டு தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். நம்பிக்கைக்குறியவர்களுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். என்றாலும் கொஞ்சம் கவனமாக செயல்படப்பாருங்கள். கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறும் மாதமிது.   
 
அதிர்ஷ்ட தேதிகள்:5, 6, 8, 17, 23
அதிர்ஷ்ட எண்கள்:4, 6
அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், மயில்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள்:செவ்வாய், வியாழன்


Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-6, 15, 24


6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். திடீர் பணவரவு உண்டு. வீடு,  வாகன வசதிப் பெருகும். கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். சொத்து வாங்குவது,  விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். அரசால் ஆதாயம் உண்டு.

தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து டென்ஷன்,  வேலைச்சுமை,  நண்பர்களுடன் நெருடல் வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டுச் செலவு கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கன்னிப் பெண்களே! புது வேலை கிடைக்கும். பெற்றோருடன் இருந்த மோதல்கள் விலகும்.

அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்,  வாங்கலில் நிம்மதி ஏற்படும். மறைமுக போட்டிகள் இருந்தாலும் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் உடைபடும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்:4, 6, 13, 14, 26
அதிர்ஷ்ட எண்கள்:1, 3
அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட், பிஸ்தாபச்சை
அதிர்ஷ்ட கிழமைகள்:புதன், சனி


Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-7, 16, 25


7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஓரளவு பணப்புழக்கம் உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து முதுகு வலி,  சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும்.

வீடு,  வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல்,  செலவுகள் வந்துப் போகும். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வரக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். ஹிந்தி,  தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் சந்தேகம்,  மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம்.

கன்னிப் பெண்களே! தூக்கமின்மை,  தோலில் நமைச்சல் வந்து விலகும். அரசியல்வாதிகளே! யதார்த்தமாக நீங்கள் பேசுவதை எதிர்கட்சிக்காரர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்:7, 2, 6, 11, 20
அதிர்ஷ்ட எண்கள்:5, 9
அதிர்ஷ்ட நிறங்கள்:நீலம், பிங்க்
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு, வெள்ளி


Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-8, 17, 26


8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் யாவும் நிறைவேறும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அழகு,  இளமைக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம்கண்டறிவீர்கள். நவீன ரக ஆடியோ,  வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.

வீட்டில் கூடுதலாக ஒரு அறைக்கட்டுவீர்கள். மகனுக்கு உங்கள் ரசனைக்கேற்ற மணப் பெண் அமையும். உறவினர்கள்,  நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். டிரஸ்ட்,  சங்கங்கள் தொடங்குவீர்கள். கோவிலில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். கன்னிப் பெண்ளே! தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சலிப்பு,  சோர்வு,  பல் வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிரடியாக வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.   
 
அதிர்ஷ்ட தேதிகள்:5, 8, 14, 15, 26
அதிர்ஷ்ட எண்கள்:4, 7
அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள்:திங்கள், சனி


Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4264
 • Total likes: 1252
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-9, 18, 27


9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். திடீர் யோகம் உண்டாகும். அரசாங்கத்தாலும்,  அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.

வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். மாதத்தின் மையப்பகுதியில் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

பிற்பகுதியில் சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் அறிவுரையை ஏற்பீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்யவும். மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். அனுசரித்துப் போவதால் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்:9, 1, 6, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்:1, 5
அதிர்ஷ்ட நிறங்கள்:பிஸ்தாபச்சை, சில்வர்கிரே
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு, சனி


Tags: