உன் பார்வை என்னும் மழையில் 
வாழ்ந்திருந்தேன் பெண்ணே....!! 
வறண்டு கிடக்கிறது என் வாழ்க்கை 
இப்போது எப்போது பொழிவாயோ
மீண்டும் உன் பார்வை மழையை
என்னும் தேடலை நோக்கி செல்கிறேன். 
என் கால சுவடுகளில் 
உன் தேடல் சுவடுகளே
சுகமளிக்கின்றன....!! 
சிரிப்பில் என்னை ஆயுள் கைதியாக்கி,,, 
சிதைத்து எடுத்து சென்றாயே 
என்னை உன்னுடனே... 
பெண்ணே இறைவன் கூட
அர்த்தநாதியாய் தான் திகழ்கிறான்.
ஆனால் என்னில் நீ பாதி அல்ல
என்னுள் முழுதுமாய் நின்றவளே.. 
களவு செய்யாதே என் வாழ்கையை 
உன்னை தேடி தேடி கண்ணாமூச்சி ஆட்டத்தினால் 
இருண்டு கிடக்கிறது என் இதய வாசல் 
என் தேகம் சுருங்கினும் 
என் தேடல் நிற்காது பெண்ணே  
காலங்கள் கடந்து தேடும் நேரத்தில் 
என் தேடலை காகிதத்தில் எழுதினேன் 
என் தேடலின் முடிவில்
நீ படிப்பாய் என்று எண்ணி....!!!