சொந்தபந்தம் வேணாமடி  
உன் இதயத்தில் விழுந்து விட்ட  எனக்கு 
காதல் என்ற கரம் கொடு போதும் 
வாழ்கையை நான் கொடுக்கிறேன் 
என  பசப்பு   மொழியில் தொடங்கும் காதல். 
உன்னிடம் நான் உயிரையே வைத்திருக்கிறேன் 
உனக்காக எதுவும் செய்வேன் என்று கூறி
 உரிமை கொண்டு நம்பிக்கை ஊற்றி
எதற்கும் துணிய வைக்கும் காதல் .
காதல் பூக்களை போன்றதாம் 
சில நாளில் வாடி போகும் பூக்களின் 
வாழ்வு போல ஒரு வாழ்க்கை. 
அநேகமான காதல் பொழுது போக்காய்
அன்றாடம் கண்ணீருடன் முடிகிறது. 
காதல் கண்களை போன்றது 
இருவரின் பார்வையும் அன்பு கொண்டு 
நோக்கினால் மட்டுமே வாழ்க்கை பயணம் சிறக்கும்
மாறாக கண்ணிர்  வடிக்க விடாதீர்கள் ....
ஜாதி ,மதம் ,அந்தஸ்து பொருத்தம்  பார்த்து
மணம் முடிக்கும் பெற்றோரே,
இரு மனங்களும்   பொருந்தியதா என்றும்  பாரும் .
அசையும் அசையா சொத்தை அளக்கும் பெரியோரே 
அவர்களின்  மனதையும் அளந்தபின்
முடியும் திருமணத்தை ...
திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம்தான். 
இதை உணர்ந்தால் மட்டுமே  இனிய வாழ்வு சாத்தியம் 
இல்லையேல்  நரகத்தில் வசிக்கும் உணர்வு அனுதினமும். 
ஆதலால் நேசியுங்கள் உங்கள் வாழ்க்கை துணையை ..
திருமண பந்தத்தை உறுதியாய் கொண்டு தொடரும் காதலும் 
அன்பு,காதல்,நேசம் இவற்றை உறுதியாய் கொண்டு 
தொடரும் திருமண பந்தமுமே இனிய வாழ்வுக்கு வழி .
 
உள்ளத்தால் உண்மையை நேசியுங்கள் வாழ்க்கை துணையை 
இனிதான வாழ்வு உங்களை நேசிக்கும் என்றென்றும்...