Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 061  (Read 1995 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 061
இந்த களத்தின்இந்த  நிழல் படம் IMP அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.


உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: August 27, 2015, 11:16:59 AM by MysteRy »

Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
அழுது புரண்டு ஐந்தாம் வயதில் வாங்கிய கலர்கண்ணாடி
 
     உன் ஐந்து நிமிட ஏக்க பார்வையால் பறித்துச் சென்றாயடி..

பத்தாம் வகுப்பில் பரிசாய் பெற்ற  பவள பேனா

     பக்கம் அமர்ந்து பச் என இச் இட்டு பறித்துச் சென்றாயடி...

நம் திருமண பரிசாய் என்னுயிர் தோழியிட்ட வைர  மோதிரம்
 
    உன் சந்தேக பார்வையில் சட்டென பறித்துச் சென்றாயடி...


அன்றோ உயிரில்லா கண்ணாடி,பேனா,மோதிரம்

     இன்றோ  உயிருள்ள பச்சிளம் குழந்தை....



என்னிடம் பறித்துச் செல்வது உன் வழக்கமடி...

         உன்னிடம் விட்டுச் செல்வது என் பழக்கமடி...




note : ennaiyum nampi kavithai eludha sonna kanmani ku dedicate pannidunga



« Last Edit: March 03, 2013, 10:29:22 PM by user »
:)

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்த
காலம் போய் ஆயிரம் பொய் சொல்லி
விவாகரத்து வாங்கும் காலமாகி போனது ...

பெரும் வலியை  பெற்றோருக்கு கொடுத்து
தெருமுக்கு பிள்ளையாரிடம் பிரியாத வரம் வாங்கி
அதிவேகத்தில் முடிந்த திருமணம் சடுதியில் முடிந்தது ....

காதலில் பிழை இல்லை .
காதலர்களில் தான் பிழை
காதலில் இரு மனம் மட்டுமே போதும் ...

திருமணம் என்று வரும்போது
ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, கவுரவம் ,
நிறம் வந்து தடுமாற வைக்கிறது ...

அதையும் கடந்து திருமணத்தில் இணைந்தால்
சிலரது காதலில் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாததால்
இன்பத்தையும் தாண்டி  வெறுப்பே மிஞ்சிகிறது ....

சிலருக்கு தாலி கட்டும் போது
இருக்கும் சந்தோஷத்தை விட கழட்டும் போது
நிம்மதி பெரிதாக இருக்கிறது ...

கட்டிய தாலி சுருக்காக மாறும் போது
பாவம் அவளும் தான் என்ன செய்வாள்
இல்லை அவன் தான் என்ன செய்வான் ....

சிலரோ அழிந்து போகும்
 அழகு இல்லை என்று அழகான
 வாழ்க்கையை தொலைக்கிறார்கள் ...

உள்ளமே நிரந்தரம். உள்ளத்தில்
 வையுங்கள் உங்கள் துணையை .
பிள்ளையை பாச பட்டினி போடாதீர்கள் ...

ஆயிரம் பேர் வாழ்த்தியதில்
தொடங்கிய வாழ்க்கை
ஒருவரின் தீர்ப்பில் முறிவது நியாயமா ?...

புரியாத வயதில் பிரியாத வரமும்
வாழவேண்டிய வயதில் விவாகரத்தும்
இன்றைய கலாச்சாரம் ஆகி போகுது ...

காதலர்கள் பிரியலாம் .
கணவன் மனைவி பிரியலாம் .
ஆனால் தாய் தந்தை பிரியக்கூடாது ...

இனிமையாய் வாழ்ந்த வாழ்கையை
ஒரு முறை நினைத்து பாருங்கள்
அனைத்தையும் மறந்து வாழுங்கள் ....

உங்கள் பிள்ளைக்காக ....
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
திருமணம் ஒரு புனிதமான உறவு
பெரியவர்களால் பொருத்தம் பார்த்து
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன்
அக்கினி சாட்சியாய் நடை பெறுவது ......

இதில் ஒருவர் ஒருவர் புரிந்து கொள்ள
நாட்கள் தேவைப்படும் -ஆனால்
அவசரமாய் கணவன் மனைவி
ஒருவரைஒருவர் புரிந்துகொள்ளும்
முன்னே குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் ...

ஒரு குறுப்பிட்ட நாளில் இருவரிடம்
குழப்பங்கள் நிலவுகிறது !
குழப்பங்களை இருவரும் மனம் விட்டு
பேசினால் மட்டுமே இதற்க்கு
 விடைகான முடியும் .....

சரியான முடிவை எடுக்காத
விளைவு இருவர்க்கும் பிரிவு
இருவரின் சந்தோசத்தை மட்டும்
பார்க்கும் கணவன் மனைவி
தன் குழந்தையை தவிக்கவிடுகிறார்கள் ....

பிஞ்சு குழந்தைன் தவிப்பு
அவர்கள் மனதில் ஒரு துளி கூட
எழுவதில்லை தாய் தந்தை
இருந்தும் சிறகு ஒடிந்த கிளியாய்
வாழ்க்கை தொடர்கிறது .....

ஒருவருக்கொருவர் புரிந்து
இரண்டு இதயங்கள் இணைந்து
குழந்தை பெற்று எடுத்தால்
குழந்தைக்கு மட்டும் அல்ல
குடும்பத்திற்கே மகிழ்ச்சி நிலை பெரும் ....
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் கைகள்
==========

உனக்கு முன் ஓடிவரும்
உன் வலிகளைப் போக்க
உன் சுமைகளைச் சுமக்க
நம் தாயின் கைகளே ...!

உன் தோள்களுக்குள் தோழனாக
உன் துணையாக ஓடிவரும்
உன் மன பாரத்தைப் போக்க
நம் தந்தையின் கைகளே ..!

பலவைத்தியம் பல வழிகளில்
பலராலும் முடியாத வைத்தியம்
பாட்டியின் கை வைத்தியம்
நம் தமிழச்சியின் கைகளே ...!

உனக்காக சேர்த்துவைக்கும்
உனக்கான சொத்தாக சொத்தையும்
உனக்கான அறிவுரையும்
உன்னைத் துய்மை வழியில்
உணர்த்திடும் அனுபவத்தின் கைகள்
நம் தாத்தாவின் கைகளே ...!

உன்னோடும் உயிரோடும்
உன்னோடு தொடர்ந்துவரும்
உன்னோடு சண்டையிட்டும் பாசம் காட்டியும்
உன்னை வளர்த்திடும் கைகள்
உன் உடன்பிறப்பின் கைகள் ...!

உன்னிடம் உரிமையோடும்
உன்னிடம் உண்மை பேசி கூடி மகிழும்
உன்னையே உயிராக நெஞ்சில் சுமக்கும் கைகள்
நம் நண்பனின் கைகள் ...!

உன்னையே அன்போடும் பாசத்தோடும்
உன்னிடம் தோல்விக்கு தோல்வியாக
உன்னிடம் துணையாக கைகோர்க்கும் கைகள்
உனது மனைவியின் கைகள்...!

அனைவரும் கைகொடுக்கும் கைகள்
அனைவரும் வாழ்க்கையின் வழிதோன்றல் கைகள் என இருந்திடினும் .
உனக்குள்ளே இருக்கும் கைகள்
உனக்குள் ஒளிந்திருக்கும் நம்பிக்கைகள்
உனைக் காக்கும் கைகள் ...!


தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline HumaNoid

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Female
  • There Is No CreatioN Without Creator
என் நெஞ்சுக்குள் ஒரு வலி.
பெற்றோர்கள்
விட்டு பிரிந்து போவது இந்த நாள்
சூழ்நிலை மாறப்போவது இல்லை
என் இதயம் அழுகின்றது..
பிரிவு என்பது விளையாட்டா
என்ன பாவம் செய்தேன்
ஏன் இந்த விளையாட்டு
என் வாழ்க்கையில்


பெற்றோர்க்கு விடை தரும் நேரத்தில்
அறியாமலே கண்களில் கண்ணீர்
எதற்கு என்று மனமும் பதில் தரவில்லை
அம்மா ஒரு பக்கம் அப்பா ஒரு பக்கம்
மிக தூரம் போகணும் என்று
சொல்கின்றது என் மனம்
ஏன் இந்த பிரிவு ஏன் இந்த தண்டனை எனக்கு
உங்கள் பாசத்துக்காக ஒரு ஜீவன் இருக்கிறது
தெரியவில்லையா

நீங்கள் விட்டுப்போன அந்த நிமிடங்கள்
என் நெஞ்சில் பதிந்து விட்டது
அந்த நிமிடம் என் வாழ்வில்
திருப்பத்தை உண்டாக்கியது
போகின்ற இடம் எல்லாம்
பழைய நினைவுகள் வந்து தாலாட்டுதே
இதற்காகவா என்னை உயிர் கொண்டு
சுமந்தாய் அம்மா
இதற்காகவா என்னை தோள் மீது
சுமந்தாய் அப்பா

தனியாக நிலவை ரசித்தேன்..
நிலா என்று சொல்லி
நிலா சோறு ஊட்டுவதற்கு 
பக்கத்தில் நீ இல்லை அம்மா
தனியாக வானத்தை ரசித்தேன்..
இது தான் வானம் என்று தோள்மீது
தூக்கிவைத்து சொல்வதற்கு
நீ என் பக்கத்தில் இல்லை அப்பா

விளையாட போனேன்..
நீங்கள் இல்லை என் கை பிடித்துப் போக
பொறாமை கொண்டேன்
ஏனைய குழந்தைகள் பெற்றோர்
கைபிடித்து வரக்காண
சினம் கொண்டேன்
ஏன் கிடைக்கவில்லை அந்த பாசம் என

தவிப்புகள் மனதுக்குள்
உங்கள் பாசத்திற்காக
ஏக்கங்கள் அனைத்தும்
உங்களைச் சேர்கிறதா
ஏங்கித் தவிக்கிறேன் மீண்டும்
நாம் சேர்ந்து வாழும்
அந்நாளை நோக்கி

[/b]
« Last Edit: March 08, 2013, 11:46:49 AM by SuperNova »



Offline kanmani

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகமாம்   
நல்லதொரு குடும்பமாய் இருந்தாலும்
பல்கலைகழகமாய் ஆகாத குடும்பங்கள் பல /

வாழ்க்கை என்பது என்பது நெடுந்தூர பயணம் ....
அப்பயணத்தில் அடி எடுத்து வைத்து
திருமணம் என்னும் சந்தோஷ ஆற்றை கடக்கும் முன்னே
ஏதோ ஒரு காரணத்தால் பாழும் சுழலில்
சிக்கித்  தவிக்கிறது .
 
இவளின்  தாயோ  தந்தையை குற்றம் சாட்ட
தந்தையோ தாயை குற்றம் சாட்ட
இருவருக்கும் நடுவில் வாழ வழி
தெரியாமல் அவல  நிலை ....

நாட்கள் வாரங்கள் ஆனது
வாரங்கள் மாதங்கள் ஆனது
மாதங்கள் வருடங்கள் ஆனது
பிரிவு மட்டும் நிரந்தரம் ஆனது ...

இவள் மட்டும் என்ன பாவம் செய்தால் ?
இவர்களுக்கு பிறந்தது குற்றமா 
இல்லை இது விதியின் குற்றமா
இல்லை சமூக  குற்றமா ...

தொடங்கும் இடம் நினைவில் இல்லை
முடியும் இடம் தெரியவில்லை
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே இவளுக்கு புரியவில்லை ...

தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டி கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது ...

அவள் எதிர் காலம் மட்டும்
தெரியவில்லை தேடி பார்க்கிறாள்
வருமா அவள் வாழ்வில் மீண்டும்
வசந்த காலம்
அந்த வசந்தகாலம் ?...