கண்வழி புகுந்து 
கருத்தது சேர்ந்து 
கால ஓட்டத்தில் 
கட்டிக்கொண்ட 
காதல் இதயங்கள்தான் ...
முற்றிய பலா பழத்துள் 
முழுதும் மறைந்திருந்தாலும் 
தன்  தெள்ளிய சுவையை 
தெவிட்டாது கொடுக்கும் 
பருத்து வெடித்த பலா பழம்  போல் 
நம்முள் முற்றி வெடித்து 
கனிந்து கசந்தது காதல் அமுதோ ..?
எதனை எதனை இன்பப் பேச்சு 
எளிதில் மறக்குமா அந்த மூச்சு ...
ஒன்றல்ல இரண்டல்ல 
பல பத்தாண்டுகள் தாண்டி 
பரவிவிட்ட கற்பனைகள் 
கடிவாளமிட்ட குதிரையாய் 
கனைத்து  கவிழ்த்து போனதேன் ..
உனக்கு வேண்டாம் எனக்கு வேணாம் 
நம் இருவருக்குமாய் இரு குழந்தை 
ஆணொன்று பெண் ஒன்று 
அளவான அன்புகுடும்பம் 
உன் அருகேயான என் நாட்கள் 
உன் அன்போடான என் ஆயுள் 
அறுந்து தொங்குவதன் 
ஆத்ம பதில் என்னவோ ..?
என் கனவுகளை புசித்த உனக்கு 
அதற்க்கு உயிர் கொடுக்க மனதில்லை 
என் மன கருவினில் சுமந்த உன்னை 
கரு சிதைவு செய்ய நீ தயங்கவில்லை 
காதல் எனும் போது  தூங்கிய 
ஜாதி , மதம் , இனம் , அந்தஸ்து எல்லாம் 
கல்யாணம் என்றதும் கண் திறப்பு செய்தது ஏன் ..?
உன் கல்யாண மேடையில் 
என் காதல் தூக்கில் இடும்வரை 
நம் கனவுக்  குழந்தைகளுடன் 
காத்திருப்பேன் உனக்காய் ...