நிறைவில்லா உலகில் 
குறைவில்லாமல் கிடைப்பது
கல்வி ஒன்றே, கல்வியை 
கற்பிக்கும் கல்விமான்களே இதோ 
உங்களுக்காக!
மாதா! பிதா! குரு! தெய்வம்!
மூன்றாம் இடத்தை பெற்றாலும்
எங்களை முதலிடம் பெற வைப்பது
தங்களின் தனித்துவமே!
எங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி நீ!
நாட்டின் உயர்விற்கு,எதிர்காலத் தூண்களாகவும் 
ஏதுவாகவும்  ,ஏணியாகவும் விளங்கும்
எங்களை  ஏந்துகின்றாயே !
நீயும் ஒரு தாயே!
அன்பை அனைவர்க்கும் சமமாய்
அன்பளிக்கும் அன்னையை போல
கல்வியையும் கபடமில்லாமல்
கற்பிக்கும் ஆசிரியர்களும்
அன்னைக்கு சமமே!
கல்விக் கண் திறந்த காமராஜர் 
கல்விக்கு கலங்கரயாக  விளங்கியவர்
படிக்காத மேதை, படிக்காவிட்டாலும்
மேதைதான் ,பட்டம் பெறாமலும்
கல்வி எனும் விதையை விதைத்த
ஆசிரியர் அவர்!
ஏகலைவன் !அவன் ஒரு ஏழை,
வில் அம்பு கலையில் கைதேர்ந்தவன்,
தன குருவாக நிழல் உருவை  வைத்தே கற்றான்,
குருவின் நிஜ உருவிற்கு தட்சணையாக, 
வில் அம்புவிடுவதற்கு வித்தாக விளங்கும் 
தன் கட்டை விரலையே கொடுத்தான், 
அத்தகைய பெருந்தன்மை உடையவர்கள்தான் 
ஆசிரியர்கள்!!!
நாமும் எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் பிறப்போமடா,
நம் முன்னோடியாகவும் , வாழ்வின்
மூலாதாரமாகவும் விளங்கும்
ஆசிரியர்களுக்கு விரல் கொடுத்த 
ஏகலைவனாக மீண்டும் இம்மண்ணில்
ஆசிரியர்கள் வாழும் வரை!!!