மாலைவேளையில், வேலை முடித்து
வீடு திரும்பும் வேளையில்
விசேஷமாய் ,வித்தியாசமாய் ,விசித்திரமாய்
மனதோரம் ஒரு ஆசை, மனம் நிறைந்த  சிறு ஆசை .
ஆசைக்கு ஆசை தோன்றியது
அப்படி ஒன்றும் ஆச்சரிய படுவதர்க்கில்லையே  என
அவசரப்பட்டு அனுமானித்துவிட வேண்டாம்
அன்பர்களே !
அடிப்படையில்  ஆசையின்  மேல் எனக்கு
அவ்வளவாய் ஆசையே  இருந்ததில்லை
இருந்துமாசை என பெயர் மட்டும் ஏன் ??
சரி நம்மில்தான் இல்லை குறைந்தது
பெயரில் ஆவது இருக்கட்டுமென
புனைபெயறாய் புகுத்தியுள்ளேன்  "ஆசை"
விஷயத்தை விட்டு வெகு தூரம் செல்கிறோமோ ?
சரி,விரைவாய் விஷயத்துக்கு வருவோமே !
மனதோரம் ஒரு ஆசை, மனம் நிறைந்த சிறு ஆசை
"நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி "
நிகழ்ச்சியில் தொடர்ச்சியாய் முறையே
மூன்று முறை  கலந்து கொண்டு
முடிந்தவரை என் சிற்றறிவிற்கு எட்டிய வரை
பதில் கூறி  வெற்றி மீது வெற்றிபெற வேண்டும்
வெற்றிதொகையாம் மூணு கோடியை
கட்டு கட்டுகளாய்   பெட்டியில் இட்டு
பெட்டி  பெட்டியாய் பெற்றுக்கொண்டு
அப்பணத்தை அத்தனையும்  தொட்டு கூட பார்க்காமல்
முழு தொகை மூணு கோடி மொத்தத்தையும்
முத்தான உன் மூக்கின் அழகிற்கு
என் சார்பு சொத்தாக சுயநிணைவுடனும்
சம்மதத்துடனும் சொத்தெழுதி வைத்திட
"மனதோரம் ஒரு ஆசை , மனம் நிறைந்த சிறு ஆசை "
"ஆசை" தன் ஆசையை ஆசை வார்த்தைகள்
கொண்டு வரி பதித்து பதிப்பித்தால்
அதை படித்து அளவிட முடியாத ஆனந்தத்தில் 
பேசமுடியாத அளவுக்கு ஆனந்த  கண்ணீர் வடிந்தால் 
அதில் ஆச்சரியம் இல்லை 
ஆச்சரியத்திற்கு அவசியமும் இல்லை 
கண்ணீர்துளிகளே அவசியம் இல்லை எனும்போது 
உன் கண்களில்  இருந்து 
உதிரத்துளிகள்  கசிவது எதற்க்கடி ??