அன்பே !
நீ அறிந்ததுதான் முன்பே 
உன்னை நேசிப்பதை விட 
பன்மடங்கு தமிழை நேசிப்பவன் நான் 
இருந்தும்,தமிழ் புகழ் பறைசாற்றும் 
நன்நூலையே அளவாய் ரசித்து 
அளவாய் ருசித்தவன் 
உன் தொடர்பினில் தொடர்ந்திட
தொடர்ந்து தொடர் தொடர்ச்சியாய்  
பித்து பிடித்த ரசிகனாய் 
முகநூலிலேயே 
வசிக்க தொடங்கிவிட்டேன் 
கேலிபேசுவோர் பேசிவிட்டு போகட்டும் 
வருத்தபடோவோர் வருந்திவிட்டு போகட்டும்
திருத்தபடுவோர் திருந்திவிட்டு  போகட்டும் 
வருந்தினாலும் ,திருந்தினாலும் 
உன்னை புரிந்துதான்,மனம் பொருந்தி தான் 
உன் அகநூல் என்னும் மனம் படிக்க 
எனக்கு வைக்கப்படும் தகுதித்தேர்வே 
முகநூலில் உனக்கான காத்திருப்பு..
இது என்ன ஆச்சர்யம் 
இன்றெனக்கு இல்லாவிட்டாலும் 
ஒரு நாள் நிச்சயம் கிட்டும்
உன் அருகாமை எனும் நம்பிக்கையில் 
நான் செத்த பின்பும் தொடரும்
முகநூலில் நாம் தொடர்பு..