உனக்காய் துடித்து 
ஒவ்வோர் துடிப்பிலும் 
உன்னை நினைத்து 
என்னைச் சுமந்தவளை விட்டு 
உன்னைச் சுமந்த என் இதயம்
இன்றோ இரத்தம் சிந்துகிறது 
நீ கிழித்த காயத்தால்
 
நான் அறியா வண்ணம் 
என்னுள் நுழைந்த நீ 
நான் அறியாமல் சென்றிருக்கலாமே? 
போகும் போது மட்டும்,
நீ வாழ்ந்த என் இதயத்தை 
குத்தி கொல்ல துணிந்ததேன்??
கண்ணீர் சிந்தாதே 
இரத்தம் சிந்தும் 
என் இதயத்திற்காக,
பட்ட காயத்தை 
நட்பென்னும் நூல் கொண்டு 
தைத்திடுவேன், 
ஆனால் தைத்த வடு 
வாழும் உன் நினைவுகளாய்