தனக்கு நிகறாய் தனி அழகும் பொலிவும் புகழும் 
தரணியிலே எவர்க்கும்  இல்லை என தலைகனத்துடன் 
தலைகால் புரியாமல் திரிந்து வந்த தலை (தலைவி) ரோசா இதுவோ?
தளிர் நிலவின்  குளிரோடும் 
குளிர் தோற்கும் குரலோடும் 
தீம் தமிழின் சுவையோடும் 
தேட தூண்டும் தனி திறனோடும் 
திரு திரு வென பெயர் புகழுடன் 
துரு துரு  வென பேசும் குறும்பு பேச்சுடனும்
தகும் திறனுடன் விளங்கும் திருமகள் உன்னை கண்டு 
தன் தற்பெருமை, தலைகனம் ,தகுதி மீறிய சிந்தனை 
தவறென தெரிந்து தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று 
தீக்குளித்து தற்கொலை   புரிந்துகொண்டதோ ? தலை (தலைவி) ரோசா !