முதிர்ந்த மலர்களுக்குள் 
மொட்டாக நீ ....
முட்டி மோதி எதை பார்க்கிறாய் 
கண்ணாடியில் தெரியும் 
உன் பிம்பத்தையா ..
கையில் உள்ள 
பூக்களின் அழகு கோலத்தையா ..?
கர்வம் கொள் ....
என் கண்களுக்கு 
மலர்களை விட 
மலர் சுமந்த நீதான் அழகி ...
கறுப்பழகி....
என்ன...? நான் பொய் ஏதும் சொன்னேனா ..?
உன் பூ முகத்தில் புன்னகை காணோம் ..?
ஒரு வேளை.. நீ 
ஊன்றி பார்ப்பது .....
உள்ளே உள்ளவர் 
உன் உள்ளம்...
 கை சுமக்கும் 
உதிரிப் பூக்களை 
வாங்குவார் என்றா ....?
கனவு காணாதே ..
அம்மா சொல்லவில்லை 
கனவுகள் ..... ஏழையின் கனவுகள் 
என்றுமே பலிப்பதில்லைஎன்று ...
உள்ளே இருப்பவர் 
ஒரு போதும் உன் பூவை 
வாங்கப் போவது இல்லை ...
அலங்காரமாய் அணிந்துள்ள சட்டையில் 
அழகாக  சொருகிக் கொள்ளும் 
அன்றலர்ந்த பூவை கூட 
ஐம்பது ருபாய் கொடுத்து 
அலங்காரமான கடையில் வாங்கினதாக 
வாய் திறந்து சொல்லத்தான் ஆசை கொள்வான் ..
அநாதை சிறுமி போல் அருகே வந்து 
அரை காசுக்கு கொடுத்ததை 
கை நீட்டி வாங்கினாதாக சொல்லவே மாட்டான் 
கை நீட்டி உன் கை தொட்டு வாங்கினால் 
அவர்கள் கெளரவம் மாசு படும் 
உன் கை பட்ட அந்த கண்ணாடியும் மாசு படும் ...
நீ மட்டும் மொட்டாக இல்லாமல் 
பூவாக இருந்திருந்தால் 
உன்னை பூஜைக்கு அழைத்து 
புழுதியில் உருட்டி இருப்பார்கள் 
நீதான் மொட்டாக சிரிகின்றாயே ..
சிரி....
வறுமையின் நிறம் சிவப்புதான் 
உன் கையில் உள்ள மலரை போல 
அவர்கள் வாழ்கையின் நிறம்
 கருப்புத்தான் .. கண்ணாடி  போலே 
இவர்கள் திறக்காது போனால் என்ன 
கதவடைப்பு ஒன்றும் 
கஷ்டப் படுபவர்க்கு புதிதல்ல 
இன்னும் ஒரு கதவு 
எங்கோ உனக்காய் திறந்திருக்கும் 
இறுதி வரை தட்டு நம்பிக்கையுடன்  ...