சுயமரியாதையின் எடுத்துக்காட்டு பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் அவசியமே 
பிறக்கையில் சிறகுகளின் வளர்ச்சி குறைபாடு 
அவற்றை பறக்க வேண்டுமானால் தடுத்திருக்கலாம் 
ஆனால் அதனின் பறக்கும் கனவை அல்ல 
மானின் கால்கள் விபத்தினால்
சேதம் அடைந்திருக்கலாம் 
ஆனால் அதனின் எண்ண ஓட்டம் 
கால்களை விட வலிமையானவை 
யாரையும் சார்ந்திராது., 
சுயமதிப்புடன் வாழ நினைக்கும் 
மனிதர்களை 
பாவம் என 'உச்' கொட்டாது,
தள்ளி நின்று பரிகாசம் செய்யாது, 
புற வித்தியாசங்களை ஒரு பொருட்டாய் எண்ணாது..
இருத்தலே நலம்.
அவர்களுக்கு நாம் இதைவிட பெரிதாய் 
என்ன செய்துவிட முடியும் ?
----கிறுக்கலுடன்
      பருஷ்ணி  
