என் இதயம் ஒரு கண்ணாடியடி   
உன்  முன்னே  நான்  ஒரு  குழந்தையடி  
நீ  பிரிந்ததால்  நான்  உடைந்தே போனேனடி    
உடைந்தே  போனாலும்  நம் காதல்  எதிரொலிக்குதடி
உன்  நினைவோட  பேச  ஆசையடி   
நீ  இல்லை   என்ற   கவலையடி 
கனவோடு  பேசலாம்  என்றே  நினைத்தேனடி 
உன்  வார்த்தைகள்  என்னை  தூங்க  விடுவதில்லையடி  
உன்னை  நினைத்து   நித்தம் அழுதேனடி
என்  இதய  துடிப்பை  தேடினேனடி  
உணவே  உண்ணாமல்    இருந்தேனடி 
வாழ்வே  மாயம்  என்றே  பாடினேனடி 
ஒரு  நொடியில்   அறுத்தே போய்விட்டாயடி 
என்  விழிகளைப்  பார்த்து  ஏன்  என்று சொல்லடி  
மரணமே  முடிவென்று   நினைத்தேனடி 
பெற்றோரைப்  பார்த்தே  வாழ  முடிவெடுத்தேனடி   
கட்டின  கோட்டைகளை மேகம் கொண்டு  சென்றதடி 
உண்மையான  காதலை  புறக்கணித்தாயடி   
எங்கே   இருந்தாலும்  நீ  நன்றாக  வாழவேனுமடி 
என்  மகளுக்கு  உன்  பெயர்  வைக்க  மாட்டேனடி