[சிவன்   மீட்டும்    உடுக்கை
விஷ்ணு  மீட்டும்    சங்கு
கண்ணன்   மீட்டும்   புல்லாங்குழல்
நந்தி   மீட்டும்  மிருதங்கம்
நாரதர்   மீட்டும்    வீணை
சரஸ்வதி   மீட்டும்    வீணை
ஒலி அலைகளுக்கும் 
சக்தி உ ண்டு.
அண்டம் முழுவதும் பரவியுள்ள 
இறைவனின் அலைகளுக்கும் 
சக்தி உ ண்டு
இறைவனின் அலைகளோடு 
சத்தம் என்பது  கலக்கும் போது  
அந்த சத்தம் சக்தி வாய்ந்தது
சக்தி உ ண்டு
அந்த சத்தம் இசையாக யிருந்தால்
இசைக்கு சக்தி உ ண்டு
இப்போதுள்ள மின்கருவிகளால் 
அந்த  இசையதனை
சேமித்து வைத்து 
திரும்ப திரும்ப கேட்டாலும்
மாறாத தண்மையோடு 
சக்தி உண்டு
இறைவனின்அலையோடு
இணைந்து விட்ட
இசைசக்தியை பிரிக்க இயலாது
காலத்தால் அழியாத
சக்தி உ ண்டு
.
இசைக்கு பாம்புகளையும்
மிருகங்களையும் கூட மயக்கும்
சக்தி உ ண்டு
இருதயம் இசைக்கு
அடிமையானால்
இம்மையில் இன்புற்று வாழ 
சக்தி உ ண்டு 
துன்பம்   கோபம் இவைகளைப் 
போக்கி ஒருவரை மகிழச் செய்யும்
சக்தி உ ண்டு
கல் மனதையும் கரைக்க வல்ல
சக்தி உ ண்டு 
இறைவனை அடையவும் 
உயர்ந்த சிந்தனை சிந்திக்கவும்
சக்தி உ ண்டு
ஈர்க்கும் இசையுடன்
ஒன்று பாடத் தெரிய வேண்டும்
அல்லது இசைக்கருவி 
மீட்டவாவது தெரிய வேண்டும் 
இரண்டும் இல்லாவிடில் 
ரசிக்க தெரியாது 
உடனே முடிவெடு 
பாடு 
மீட்டு
இசை உனக்காக மட்டுல்ல,,,,,,, 
லட்சோபலட்ச மக்களை   ஈர்த்து
துன்பம் போக்கிடு,,,,,,,,