ஒளியை கூட்டி ஒலியை குறைத்து 
திகிலூட்டும் பேய்ப் படம் காண 
எண்ணினேன் ஆவலாய் 
இணையம் வாயிலாய் 
   திரையில்.. 
அமானுஷ்யத்தை உணரும் குடும்பம்
இன்னல்களின் மத்தியில் 
அப்படிப்பட்ட நிலையிலிருந்து
மீட்டு எடுக்க உதவும் குழு என  

..இடையகவைப்பு ..

பதறச் செய்யும் இசை 
நாய் வீட்டை சுற்றி குறைக்க   

..இடையகவைப்பு..  

சாளரம் வேகமாய் அடிக்க   

..இடையகவைப்பு ..   

.....................................
பொறுமையை இழந்தேன்
இனி பேய் வருமா வராதா  

என்றெண்ணி உற்று நோக்கினேன் 
மீண்டும் …இடையகவைப்பு…
' அட சீ ...போ ..பேயே '   
  
 என்று சொல்லி 
கணினியை நிறுத்திவிட்டேன் 
திரைப்படத்தில் கூட 
ஆவிகள், தீய சக்திகளின் வரவு 
பின்னணி இசையும் அறிகுறிகளும்
விளக்க முடியும் ..ஏனோ 
உயிருள்ள மனிதர்களிடத்தில்
முன்னுக்குப்பின் முரண்பாடான 
செய்கைகளை யூகிக்க இயலவில்லை?
அர்த்தங்கள் மருவி அச்சங்கள் பெருகிற்றோ?
மரத்தின்  அடியில் இரவில் இருக்க கூடாதென்பது 
மன உளைச்சலின் வெளிப்பாடோ ?
ஆவிகள் பிடித்து ஆட்டும் அபலைகள்
புதரை போல் இரகசியங்களை
உள்ளடக்கிய மானிட பதரே 
விடைகான விழையலமே சில 
விஞ்ஞான முயற்ச்சியில் 
கிறுக்கலுடன்
பருஷ்ணி 

இடையகவைப்பு - Buffering