Author Topic: ~ மீன் பிரியாணி ~  (Read 100 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218309
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மீன் பிரியாணி ~
« on: June 19, 2016, 09:46:48 PM »
மீன் பிரியாணி



தேவையான பொருட்கள்

மீன் – 1/4 கிலோ

அரிசி – 2 ஆழாக்கு

வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 150 கிராம்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

தனியாத்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

தயிர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணை – 1/2 குழிக் கரண்டி

செய்முறை

* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்,

* வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.

* வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். * சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி