Author Topic: ~ ஹைதராபாதி கீமா ~  (Read 345 times)

Offline MysteRy

~ ஹைதராபாதி கீமா ~
« on: July 05, 2016, 08:38:39 PM »
ஹைதராபாதி கீமா



எலும்பில்லாத மட்டன் (ஆட்டுக்கறி) – 200 கிராம்
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
மிளகாய்த்தூள் – 15 கிராம்
எண்ணெய் – 30 மில்லி.
மஞ்சள்தூள் – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 50 கிராம்
கொத்தமல்லித்தழை – 10 கிராம்

செய்முறை:

எலும்பில்லாத மட்டனை நன்றாகக் கொத்திக் கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் கலந்து, 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் ஊற வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில் ஊறவைத்த மட்டனை சேர்த்து, தண்ணீர் எல்லாம் ஆவியாகும் வரை வேகவைக்கவும். வெந்தபின், உப்பு சேர்த்து கொத்தமல்லித்தழையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.