Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 112  (Read 2571 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 112
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Sweetie ( Jo ) அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:34:43 AM by MysteRy »

Offline JEE

18 வயதுக்குக் கீழ் இருக்கும் அனைத்து நபர்களும் குழந்தைகளே....................

சும்மா இருடா
உனக்கொன்றும்தெரியாது
இதுதானா இப்பருவம்......

கூட்டாக   மளமளவென
பனீரென்டு பிள்ளையைப் பெற்று....
கூட்டாக கலகலவென  இருந்து
கூடிவாழ்ந்தே இன்பம் கண்டோர்....

தன் வம்சத்திற்க்கென   நாலு
தலைமுறைக்கு சொத்து சேர்த்து
வைத்து போயினர் முன்னோர்....

தகவல்தொழில்நுட்பம் எங்கும்
எதிலும் மளமளவென பெருகிட.....
காலத்தின் கோலம் நேரமில்லீங்க
கூட்டாக கலகலவென  இருக்க.................

தனக்கேபோதா போதாதென்று
வம்சத்திற்க்கென   நாலு
தலைமுறைக்கு சொத்து சேர்த்து
வைத்து போகவா?பின்னோர்....

பொருளாதார நிலை வறுமை
என்ன வழிகூறுவாய் நீ?.............

வலிமை மீறியபணிகளில் 
கட்டாயப்படுத்துவது
கொடுமைக்குள்ளாவது
என்ன வழிகூறுவாய் நீ?.............

குழந்தைகளுக்கான உரிமைகள்
சட்டம் மட்டும் போதுமா?
 
இலவசங்கள் அள்ளிஅள்ளி
கொடுத்தால் மட்டும்போதுமா?

வேலையில்லாத்திண்டாட்டம்
 ஒழிப்பதே     முதல்வேலை....   

இந்தகுழந்தைகள்அவல நிலைக்கு
காசைகொடுத்து  தூங்க வைத்தான் ...

இந்தகுழந்தைகள்அவல நிலை மாற
காசைகொடுத்தும் விழிக்கும்
கண் பிரகாசமாய்வேண்டுமே........

வாழ்க வளமுடன்.............
« Last Edit: August 05, 2016, 05:31:39 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
அப்பன் குடிகாரன்
அம்மா செலவாளி
வயத்து பொழப்புக்கு
கையேந்த மனமில்லை
ஒருவேளை உணவுக்கு
உழைத்து பிழைத்திடவே
கல் தூக்க வந்திட்டேன்  - நானும்
கல் தூக்க வந்திட்டேன் ..

அப்பாவும் எனக்கில்லை
அம்மாவும் எனக்கில்லை
அனாதை நான்  எங்கு போவேன்
பாலும் வயிறு பசிக்கிறதே
விறகில் நான் வேகும் முன்னே
விறகு வெட்ட வந்திட்டேன் -நானும்
விறகு வெட்ட வந்திட்டேன் .

பெயர் தெரியா நோயெல்லாம்
பேயாட்டம் ஆடுகையில்
மருந்து செலவுக்கும்
மாத்திரைக்கும் என்ன செய்வேன்
மண் தோண்ட  இசைந்ததாலே   
புறங்காட்டி ஓடுதய்யா! - நோயும்
புறங்காட்டி ஓடுதய்யா!

ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையுமா ?
அதனாலே ஐந்தில்
வளைந்திடுவேன்
ஐம்பதில் நிமிர்ந்திடுவேன்...
« Last Edit: August 06, 2016, 09:35:22 PM by பொய்கை »

Offline ReeNa

சின்ன  சின்ன  முத்துகள்
நம்  நாட்டின் எதிர்கால  தூண்கள்
தோட்டத்தில்  வளரவேண்டிய  மலர்கள்
இன்று  போராடுகின்ற   தொழிலாளிகள்
விளையாட  வேண்டிய  கரங்கள்
இன்று  சுமக்கின்றதே  குடும்ப  பாரங்கல்
பூங்காவில் ஓடி விளையாட வேண்டிய கால்கள்
இன்று தெரு தெருவாக அலைகின்றார்கள்
பள்ளி  பை  சுமக்க  வேண்டிய  தோள்கள்
அதில்  வைக்கப்பட்டதே  இன்று  செங்கல்  சுமைகள்
படித்த   பலர்  வேலைக்கு   அலைகின்றார்கள்
அலையாமலே  இவர்களுக்கு  வேலை  செய்யும்  கட்டாயங்கள்
வறுமை , துன்பங்கள் மனிதனின்   சுயநலன்கள்
இவர்களின்  வாழ்க்கையின்  திசை  திருப்பிகள்
மாயமான  தருணங்கள் 
மறையச் செய்யும்  இதயம்  கவரும்  புன்னகைகள்
ஒரு வேளை உணவுக்காக  இருளில்  தள்ளப்பட்டார்கள்
இந்த சின்ன உடலை  சீரழித்தார்கள்
சமுதாயத்தின்  விழுதுகளில்  சிக்கின்றார்கள்
எழும்ப முடியாமல்  உருகி  தவிக்கிறார்கள்
இவர்களுக்கு  யார்  குரல் கொடுப்பார்கள்?
இந்த  குரலுக்கு  யார் செவிசாய்ப்பர்கள்?
செவிசாய்த்து  யார்  கரம்  நீட்டுவார்கள்?
கரம்  நீட்டி  யார்  முற்றுப்புள்ளி வைப்பார்கள்?

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
மண்ணில் ஓடியாடி மழலையோடு
மனமகிழ விளையாடும் பருவத்தில்
மண்ணைக் கொத்தி பணிசெய்யும்
மாறுபட்ட நிலையினை பாரீர் !.....
மண்ணை மட்டுமல்ல சிறுவன்  நம்
மனதையும் கொத்தி செல்கிறான்.....

பள்ளிசென்று பாடம்கற்று-புத்தகமதை
கரங்களில் ஏந்தும் பருவத்தில்
கனமான செங்கற்களை கையிலேந்தும்
கடினமான நிலையினை பாரீர் !.....
செங்கற்களை மட்டுமல்ல அவன்-சீழ்பிடித்த
சமுதாய நிலையினையும் ஏந்தி செல்கிறான்...

மெலிந்த உடலுடன் - அருவியாய்
வழிந்த வியர்வை பரவ
மலராத மொட்டொன்று இங்கே
மரக்கட்டை சுமந்து திரியும்
மனம்நோகும்  நிலையினை பாரீர் !....
மரக்கட்டையை மட்டுமல்ல சிறுவன்-வறண்ட
குடும்ப வறுமையினையும் சுமந்து திரிகிறான்

தோளில் தகப்பன் தூக்கிவைத்து
துள்ளும் மகிழ்வுடன் திரியும் வயதில்
தோளே சுமைதாங்கியாய் மாறிவிட்ட
துயரமான நிலையினை பாரீர் !....
தோள்சுமையை மட்டுமல்ல சிறுவன்-தேசத்தின்
அவலத்தையும் சேர்த்தே சுமக்கிறான்......

குழந்தை வேலை செய்யும் இக்குற்றத்திற்கு
பெற்றோரும் ஒரு காரணம்
பெருஞ்செல்வந்தனும் ஒரு காரணம்
சமுதாயமும் ஒரு காரணம்..
சாக்கடை அரசியலும் ஒரு காரணம்...

முதலாளிகள் மாறுகையில் இக்குழந்தைகளின்
முகவரிகள் மாறுவது எப்போது?
அரசியல்வாதி மாறுகையில் இக்குழந்தைகளின்
அவலநிலை மாறுவது எப்போது?

"இனியொரு விதி செய்வோம்" என்றான் பாரதி ....
விதிகள் எங்கே செய்வது ?- சிறார் சட்டத்துக்கு
எதிரே சதிகள்தான் இங்கே செய்கின்றனர் ...
சிறு தளிர்கள் தளர்ந்து போகாமல் -ஒருநாள்
தளிர்த்து வளரும் நிலையது பெறும் !
அன்றுதான் இச்சிறுவர் 
மனதில் மகிழ்ச்சி அலையது வரும் !!

Offline EmiNeM

கல்வி
பயில வேண்டிய
மழலைக்கு
யார் தந்தார்
கல்லுடைக்கும்
பணியினை

புத்தகம்
சுமக்க வேண்டிய
தோள்கள்
பாரம் தூக்க
சுமை தூக்கும்
சிறுவனைக் கண்டு
சுமையாகிப்போனது
மனது

இவர்கள்
வீட்டுச்சுமையை
சுமக்க
கல்விக்கனவை
சிதைத்துக்கொண்ட
தியாக சுடர்கள்

கடமை தவறிய
அரசின் அவலமென்று
உரக்க சொல்ல எத்தனித்தது
உதடு
நீ என்ன செய்தாய்
என என் நெஞ்சம்
எனை வினவ..
வெட்கித் தலைகுனிந்தேன்
 நான்

Offline thamilan

சீரியலில் அழும்
கதாபாத்திரங்களுக்கு  கண்ணீர் வடித்துவிட்டு
தெருவில் உயிர் துடிக்கும்
உண்மை மனிதர்களை கண்டு
கண் மூடிப் போகும்
உழுத்துப் போன உலகம் இது

விளையும் பயிர்கள் இவர்கள்
விளையும் முன்னே   
அறுவடை செய்வதும் ஏன்

புத்தகம் சுமக்கும் தோள்களில்
மண்  மூட்டைகள்
எழுதுகோல் பிடிக்கும் கைகளில்
செங்கற்கள்
வளர வேண்டிய பருவத்தில்
பெற்றோரின் இல்லாமை கல்லாமை
இந்த சிறார்களின் தோள்களில்
குடும்ப பாரத்தை இறக்கி  வைக்கிறது
பட்டம் பூச்சிகளின் இறக்கைகளில்
பாறாங்கற்களை கட்டிவிட்டு
 பறக்கச்  சொல்கிறது


நாட்டின் எதிர்காலத் தூண்கள் இவர்கள்
இவர்களுக்கே அஸ்திவாரம் இல்லை
கட்டிடங்களுக்கு அஸ்திவாரம் போட
மண் கற்கள் சுமக்கிறார்கள்
இவர்கள் வாழ்க்கைக்கு
சீரான பாதைகள் இல்லை
பாதைகளை சீரமைக்க
மண் கொத்துகிறார்கள்   

மண்ணை கொத்தும்
இச் சிறுவர்களின் நிலைக்கண்டு - நம்
மனங்களைக் கொத்திப்
பண்படுத்த வேண்டும் மானிடா


நம் அரசாங்கம் மனது வைத்தால்
இவர்களையும் இன்னொரு
அப்துல்கலாமாக   உருவாக்கலாம்
ஒவ்வொரு சிறுவர்களும்
கட்டாயம் படிக்க வேண்டும்
எனும் நிலை வர வேண்டும்
அந்த சிறுவர்களுக்கு படிப்பதற்கு
எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும்
அப்போதுதான் இந்தியா ஒரு வல்லரசு நாடு எனும்
கனவு நனவாகும்

« Last Edit: August 10, 2016, 02:32:56 PM by thamilan »

Offline JerrY

குழந்தை - கடவுள் - மனிதன் - தேவை = குழந்தை தொழிலாளி


கல்வியின் கடவுள் சரஸ்வதியே ..
என் பெயரும் கலைவாணிதான் //
உன் விறல் தொடும் முன்பே , என் விறல் பட்டது உன் வீணையில்
குழ்ந்தை தொழிலாளியை மறப்பட்டறையில் !!

அழகாய் விளையாடும் கிருஷ்ணருக்கு
என் பெயரும் கண்ணன் தான் // உன் வயதே இருக்கும்
உன்னை போல் விளையாட ஆசை தான் எனக்கும்
ஆனால் மாடு மேய்க்கவே நேரம் போதவில்லையே ??

பணம் படைத்த லட்சுமி தேவிக்கு
என் பெயரும் வேத லட்சுமி தான் /
படிப்பு பணம் கொடுத்து வாங்க வேண்டிய காரணத்தால்
பாறைகள் உடைத்து பாவமாய் நிற்கிறான் ??

மலை மீது அமர்ந்த முருகஆ
நானும் கூட வேலவன் தான்
வேலை என்ன தெரியுமா .. நீ அழித்து சூரனுக்காய்
பட்டாசு தயாரித்து கொண்டு இருக்கிறேன் ??

குழந்தையும் , கடவுளும் ஒன்று ..

பட்டம்ப்பூச்சி பாறை உடைப்பது சரியா ??
மின்மினி பூச்சியிடம்  பட்டாசு தயாரிப்பா ??
அழகிய காகிதம் குப்பை பொறுக்கலாமா ??

உலகின் விதைகளை , அறிவு என்னும் உரம் போட்டு வளர்ப்போம் ......
குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம் ......

இவன் ,

இரா.ஜெகதீஷ் ..

Offline SweeTie

பள்ளி செல்லும் வயதினிலே 
வெயில் மழை பாராமல்
ஒரு சான் வயிறுக்கு   
உழைக்கும் உழைப்பாளிகள்.

புரியாத வயதில்
தெரியாத அறிவில் 
அறியாத உணர்வில் 
உழைக்கும் பாட்டாளிகள்

கண்ணியம் மிக்க கணவான்கள்
கால் நீட்டி வீற்றிருக்க
கந்தல் உடையில் வெந்து வியர்த்து
மண்டியிடும்  மஹான்கள்.

சிந்தை இல்லா மனிதர்களே
சிந்தித்துப் பாருங்கள்
குழந்தைகளா இவர்கள் -  இல்லை
நாளைய  தலைவர்கள்

பள்ளி சென்று படிக்கட்டும்
உங்கள் சிந்தை திறக்கட்டும்
நாலும்  கற்று நாட்டுக்கு சேவைசெய்ய
வழி விடுங்கள் அவர்களுக்கும்

 
« Last Edit: August 11, 2016, 06:31:27 PM by SweeTie »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
பென்சில் பிடிக்க வேண்டிய
பிஞ்சி கரங்கள்
கடப்பாரை பிடித்து கற்கள்
உடைக்கின்றது.......
புத்தகப்பைச் சுமக்க வேண்டிய
தோள்கள் மணல்
மூட்டைகள் சுமக்கின்றது ....

பாடச்சாலை  ,
மழலைகள் கல்வி கற்க
செல்ல மறந்து அவ்விடம்
கட்டுமானப்பணிக்குக்   கல்தூக்கச்
செல்கின்றனர் .....
கலியுகம் என்று இதைத்தான்
சொல்கிறார்களோ ???

மணல் வீடு கட்டி
விளையாட  வேண்டிய வயதில்
வீடுகட்ட மணல்களும்
கற்களும் தூக்கியது கொடுமையே .....
ஒரு கைப்பிடிச் சோற்றுக்கு
இந்த பிஞ்சி கைகள்
சேற்றுபுண்களால் அவுதியுறுகின்றது
இது கொடுமையின் உச்சமே  ....

பெற்றோர்கள்  செய்த தவற ???இல்லை
சமுதாயத்தின் அலட்சிய செய்யல ???
மழலை முத்துக்கள்
நம் நாட்டின்
வருங்கால சொத்துக்கள் ....

வசதியான வாழ்க்கை கேட்கவில்லை
வாழ்வதற்கு வசதி கேட்கின்றனர் ....
தனியார் பள்ளியில் படிக்க வேண்டும்
என்று கேட்க வில்லை ...
படிப்பதற்கு இடம் கிடைத்தால்
போதும் என்கின்றனர் ....

உதவி கரம் நீட்டுவோம் ...
இன்றைய சிறார்கள்
நாளையே உலக
சாதனையாளர்கள் என
திகழ வழிவகுப்போம் ....

நன்றி ....
~ !! ரித்திகா !! ~
« Last Edit: August 12, 2016, 04:39:24 PM by ரித்திகா »