Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 117  (Read 2814 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 117
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Pavithra அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:37:00 AM by MysteRy »

!! DJ HussaiN !!

  • Guest
!! அனைவருக்கும் வணக்கம் !!



என் உயிருக்கு  உயிர் ஆன நண்பனே


ஒவ்வொரு முறையும் நீ முன்னேறி செல்லும் போதும்
என்னையும் உற்சாக படுத்தி கை கொடுத்து மேலே ஏற்றினாய் 

நான் என் வாழ்க்கையில்  விழும் பொழுதும்
என்னை கை கொடுத்து தூக்கி விட்டாய்

இயற்கையை  ரசிக்க மலை உச்சத்திற்கு சென்றோம்
அதிலும் நீதான் முதல் உச்சத்திற்கு சென்றாய்

அப்பொழுது நான் கீழே விழும் நிலையில்
என்னை காப்பாற்ற நீ கை கொடுத்தாய்

உனக்கு  தெரியும் அந்த விளிம்பில்
என்னை காப்பாற்ற முற்பட்டால் நீயும் கீழே  விழுவாய் என்று

தெரிந்தும் உன் உயிரை துச்சமாக எண்ணாமல்
எனக்கு கை கொடுத்து மேலே  ஏற்றி காப்பாற்றினாய்

உன்னை போல் ஒரு நண்பன் கிடைக்க என் வாழ்வில்
எத்தனை  தவம் இருந்தாலும் கிடைக்க மாட்டான் ...

என்றும் நட்புடன்
Dj HusaiN


« Last Edit: September 11, 2016, 01:57:21 AM by !! DJ HussaiN !! »

Offline JEE

சூரியனுதிக்கும் காலை வேளையா?........
காலமே அங்கென்ன வேலை?........

சூரியனுதிக்கும் காலை 
சூரியோதயம் பார்க்க ரசிக்க வந்து
தன்னாயுளை அட்தமிக்கச் செய்யவா?........

சூரியனட்தமிக்கும்  மாலை வேளையா?........
மாலையிலே அங்கென்ன வேலை?........

சூரியனட்தமிக்கும்  மாலை 
சூரியனட்தமிப்பை பார்க்க ரசிக்க வந்து
தன்னாயுளை அட்தமிக்கச் செய்யவா? ........

உல்லாசமாய் உலாவி வர
உற்சாகத்தின் உச்சமோ?........

பாறையின் விளிம்பிற்க்கேச்  சென்று
பயணப் பையின் பாரத்தோடு
பாதம் சரிக்கிடுமென அறியாத்தன்மையா? ........

உற்ற துணையின் கைப்பிடியோடு
உற்ற துணையோடு கடலில் மாய்ந்தார்களா?........

தோளில் பயணப் பை பாரத்தோடு
வீழ்ந்தவளை கரம் பிடித்து
காப்பாற்றுமவர் இக்கால மனிதரா?........

இக்கால மனிதர் நிச்சயமாய்
பெலனில்லாமல்  கை விட்டிருப்பாரன்றோ? ........ 

அக்கால மனிதர் நிச்சயமாய்
பெலனில்லாமல்  கை விடமாட்டார்
உடைநடைகள் இக்காலத்தவரென்கிறதே......

அக்காலமனிதர் உண்டு
உரம் படைத்தோர்
உரம் படைத்தோர் வயலுக்கு
உரம் படைத்தவிதமே ....

இக்காலமனிதர் உண்டு
உரம் படைத்தோரன்று
உரம் புடைத்தோர் வயிற்றுக்கு
உரம் படைத்தவிதமே .... ........

நீச்சல் கற்றுக்கொள்ளென்றால்
கற்க மாட்டாள் நீந்திப்பிழைக்க,,,........

உடல்பயிற்சி கற்றுக்கொள்ளென்றால்
கற்க மாட்டார் சமயத்தில் உதவ.....

உலகில் வாழ்வெனும் ஓடத்திலே
உலாவரும்  யாமனைவரும்
காற்றெனும் அலையெனும்
துன்பமதால் ஓடம் கவிழ்ந்தாலும்
துவண்டு விடாமல் எதிர் நீச்சல்
நீந்த கற்றுக்கொள்........

வழுவாதபடி நம்மை காக்க
வழுவியோரை நிலை  நிறுத்த........

பாறை போன்ற உயர்ந்த இடத்தில்
பகைவரால் வழுக்கி விழப் போனாலும்
வழுவாமல் நம்மை காப்பாற்ற
பகவானிடம்  ஞானத்தைக் கேள்.............

பாறை போன்ற உயர்ந்த இடத்தில்
வழுக்கி உயர்ந்த இடத்திலிருந்து 
வீழாமல் வீழ்பவரை காப்பாற்ற
பகவானிடம்  பெலததைக் கேள்.........

உற்ற துணையின் கைப்பிடியோடு
உற்றதுணையோடு கடலில் மாய்ந்தார்களா?

இருவரும் வீழ்ந்தார்களா?
இவர்கள்  முடிவு என்னவென்று
சின்னத்திரையில் காணவா?
மனத்திரையில் காணலாமே.....

எதனையும் கண்டு கொள்ளாக் கடல்
எதனையும் கண்டு கொள்ளாச் சூரியன்
எதனையும் கண்டு கொள்ளாக்காற்று....

எதனையும் கண்டு கொள்ளுமொருவர்
எதனையும்  சந்திக்குமொருவர் உண்டு...........

நிகழ்வு நேரக் கூடாது....
நேராமல் என்றென்றும்
நம்கால்  சறுக்கும்போது கைவிடா 
அன்பர் அவர் ஒருவரே....

வாழ்க வளமுடன்.......
« Last Edit: September 11, 2016, 01:04:49 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline thamilan

இந்த நிழல் படத்தில்
விழுவது ஆணா இல்லை பெண்ணா
விழுவது பெண்ணாகவும்
காப்பாற்ற முனைவது ஆணாக இருந்தால் 
அததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்

விழுவது ஆணாகவும்
தடுப்பது ஆணாகவும் இருந்தால்
அதற்கு ஒரே ஒரு காரணம் தான்
அது நட்பு

அது பெண்ணாக இருந்தால்
விழும் போது
நீயும் கூட வந்துவிடு என
ஆணின் கையை பிடித்து இழுக்கிறாளோ
என்ற சந்தேகமும் எழுகிறது எனக்கு

அந்த ஆண்
இத்தனை நாளும் உன்னோடு வாழ்ந்து
நான் பட்ட அவஸ்தை போதும் 
போய்த்தொலை   என
கையை உதறுகிறானோ
என்ற சந்தேகமும் எழுகிறது எனக்கு

   என் சந்தேகங்களுக்கு
விடை சொல்லவேண்டியது
இந்த நிழல்படத்தை அளித்த
பவித்திராவே

விழுவோம் என்று தெரிந்தும்
விழுபவனுக்கு கரம் கொடுப்பது
நட்பு ஒன்றே
எந்த எதிர்பார்ப்பும் சுயநலமும் அற்றது
நட்பு ஒன்றே
விழுமுன்னே கண்ணீர்துளிகளை
கரம் கொண்டு துடைத்திடும் நட்பு 

ஆயிரம் உறவுகள் இருக்கலாம்
அவை அனைத்தும் ஒரு நட்புக்குள் அடங்கிவிடும்
உயிர் கொடுப்பான் தோழன்
உயிர் எடுப்பாள் காதலி
ஒரு நல்ல நட்பு கிடைப்பது
ஒரு ஜென்மத்தின் பலாபலன்


Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
நட்பு!!!
« Reply #4 on: September 11, 2016, 02:52:44 PM »

நட்பிற்கு ஆண் பெண் தெரியாது...
இன்பத்திலும் துன்பத்திலும்
தோள் கொடுக்கும் நட்பு ...

நட்பின் ஆழம் எவ்வளவு என்று
இப்போது உணர்கிறேன்...
இந்த நொடியில்...

என் கைகளை இறுக்கமாக பிடித்து கொள்ளும் வேளை ...
விழாமல் காக்கிறது நட்பு...
நட்பின் வலுமையை..
நட்பின்றி நான் இல்லை...

நட்பின் சினேகிதி

ப்ளாஜிங்


« Last Edit: September 13, 2016, 06:05:16 PM by BlazinG BeautY »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 704
  • Total likes: 2383
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear

நீயும் நானும்
சிறு வயது முதல் நண்பர்கள்
ஒன்றாய் படித்தோம் ஒன்றாய் விளையாடினோம்
ஒன்றாய் உறங்கினோம்

ஒரு மாங்காயை
இருவரும் மாறி மாறி கடித்து உண்டோம்
அந்த எச்சில் கூட அமிர்தமாய் இருந்தது
சின்ன வயதில்
எனக்காக நீ செய்த தியாகங்கள்
நான் செய்த  குறும்புகளை
நீ செய்ததாகச் சொல்லி
எத்தனை முறை எனக்காக
திட்டு வாங்கி இருப்பாய்

பருவ வயது வந்ததும்
படிப்பில் நானோ ஆமை
நீயோ  முயல்
வகுப்பில் முதல் மாணவனாக வந்தும்
எனக்காக என் கூட வருவதற்காக
நான் தேர்ந்தெடுத்த பாடத்தை
நீயும் தேர்ந்தெடுத்தாயே

பருவம் வந்தது
மீசையுடன் கூட ஆசைகளும் வளர்ந்தது
காதல் எட்டிப்பார்க்கத் தொடங்கியது
நீ காதலிக்கும் பெண்ணை
நான் காதலிப்பது அறிந்து
உன் காதலை விட்டுக் கொடுத்தாய்

இப்படி வாழ்நாள் எல்லாம்
எனக்கு துணையாக இருந்த உன்னை
கை விட்டு விடுவேனா
என் துயரத்தில் எல்லாம் கூட
துணையாக இருந்த உனக்கு
நான் துணை நிற்க மாட்டேனா

மூக்கு இருக்கும் வரை
சளி இருக்கும்
மனிதன் இருக்கும் வரை
துன்பங்களும் இருக்கும்

சாவு தான் விடை என்றால்
மனித இனமே இருக்காதே

இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருந்த நாம்
சாவில் மட்டும்
ஏன் பிரிந்திருக்க வேண்டும்

நண்பன் கை கொடுப்பான் என்று நம்பினால்
என் கைகளை பற்றி மேலேறி வா
இல்லை என்னையும் கூட்டிச் செல்     
சாவிலும் இணைபிரியா நண்பர்களாக
நாம் இருப்போம் 




பதிப்புரிமை
BreeZe
« Last Edit: September 11, 2016, 11:56:35 PM by MysteRy »
Palm Springs commercial photography

Offline RubeshV

ந்தி நேரத்தில்
ருயிர் நட்பினை  பற்றிய 
னிமையான நினைவுகளில் ....

ன்பை ஊட்டுவித்த அம்மாவினை போல்
றறிவினை புகட்டிய  அப்பாவினை போல்

னமறியா உலகறிவினை கற்பித்த ஆசிரியனை போல்
கைக்கு இலக்கணமான கர்ணனை போல்

வகை பூக்கும் நந்தவனத்தினை போல்
க்கத்திற்கு நல்ல உதாரணத்தினை போல்
 
ப்பொழுதும் நட்பின் நினைவினைபோல்
ற்றம் மிகுந்த எண்ணங்களைப்போல்
 
க்கியமான இதய  உணர்வினைப்போல்
 
ற்றுமைக்கான இலக்கணத்தினைபோல்
ங்கி வளரும் மரத்தினைப்போல்

ஒருங்கே  அமையப்பெற்ற  நட்பே...

இடர்பாடுகளில்  இருகரம்  கொடுத்து  கை தூக்கி  விட்டவனே 

நமது வாழ்வு இருக்கும்வரை
நமது நட்பு வளர்ந்துகொண்டே இருக்கும்..

வீடு , மனைவி, மக்கள் அமைவதுமட்டும்
இறைவன் கொடுத்த வரமல்ல...

நல்ல நண்பன் அமைவதும்
இறைவன் கொடுத்த வரம் தான்.


« Last Edit: September 13, 2016, 11:25:31 AM by RubeshV »

Offline GuruTN

  • Jr. Member
  • *
  • Posts: 52
  • Total likes: 207
  • Karma: +0/-0
  • Gender: Male
  • !!!Anbullam Ondrin Aravanaipil Naan!!!
"நட்பின் வழி ஓர் தாய்"

பறவைகள் கூட்டம் கூடி கூச்சலிடும் நேரம்,
குளிர் வந்து நெஞ்சில் சிலிர்ப்பூட்டும் காலம்,
நாம் வந்த பாதை, மலை ஒன்றை கண்டோம்,
அதன் உச்சம் கண்டுவிட ஆவல் ஒன்று கொண்டோம்.

சாகசங்கள் செய்திடவே நாம் கொண்ட பயணத்தில்,
என் மூச்சில் ஒரு யுத்தம், நீ சறுக்கும் சமயத்தில்,
உன் உயிரை நான் காப்பேன் என்று சொல்லி ஊக்குவித்தேன்,
உனைநோக்கி என் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

ஞாயிறு தன் முகம் காட்டி புன்னகையும் பூத்திருக்க,
இளம்வெயிலின் கதிர்கள் பட்டு நம் மேனி வேர்த்திருக்க,
நாம் செய்த முயற்சியாலே தென்பட்டது இலக்கு ஒன்று,
மார்தட்டி கூவி சொன்னோம் வெற்றி எங்கள் தோழன் என்று.

மலையுச்சி உனை ஏற்றி என் பதற்றம் இறக்கி வைத்தேன்,
என் வெற்றி உனில் கண்டு என் பாதம் எடுத்து வைத்தேன்,
கல்லொன்று சறுக்கிவிட, உயிர் நாடி உறைந்து போக,
இறுதி நொடி ஆழம் தனை, என் உயிரில் நான் உணர்ந்தேன்.

எதிர்காலம் இருள் சூழ, கனவுகள் யாவும் கதையாக,
என் முடிவை நான் ஏற்க, எனில் நானே தயாராக,
முடிந்து விட்ட சோகக்கதை, நான் உணரும் வேளையிலே,
கரம் ஒன்று பாய்ந்து வந்து பற்றியது என் கரத்தை.

பத்துமாதம் வயிற்ச்சுமந்து, பெற்றெடுக்கும் தாய் போல,
உன் கரத்தில் எனை சுமந்து, உயிர் கொடுத்த என் தோழா,
நீயும் இனி என் தாய் தான், என்று சொல்லி போற்றிடுவேன்,
நிகரில்லா நம் நட்பை, கண்ணீர் கொண்டு வாழ்த்திடுவேன்.

-குரு-
« Last Edit: September 12, 2016, 02:21:58 PM by GuruTN »
glittertextmaker.info" width="290" height="100" border="0

Offline சக்திராகவா

தூக்கிவிட தோழனுண்டு
தோல்வி பயம் வந்ததில்லை
துன்பமென்று வந்தபோதும்
சொந்தமென்று வந்தவனால்

இமயத்தை தொட்டாலும்
இழுத்துப்போட்டவன் மேலே!
விழும்போது விரல் தந்த
எதிரியும் கூட எதிர்பாரா நண்பன்!

நட்புக்குள் பகையுண்டு
நடந்ததை மறந்தால்
நாள்பட நகைத்துவிடும்
நட்பும் உயிர்திருந்தால்

உதட்டு சிரிப்புக்கு
உரிமை மீட்டவனே
பள்ளியில் தொடங்கி
பாடையில் முடங்க

சுமக்கா சொந்தம் முன்
எமக்கா வருந் தோழன்
மலர்தூவி மாற்றிவைத்தான்
இறுதியும் ஏற்றிவைத்தான்!

சக்தி ராகவா





Offline ReeNa

புயல் வேகத்தில் ஓடும்
இந்த வாழ்க்கையில் 
ஒருவன் விழுந்தாலும் அவனை
தூக்கிவிட யாரும் இல்லை.......

நான்... என் குடும்பம் என்ற
எல்லைக்குள் அநேகர் வாழ்கிறார்கள்

நல்லவர்களை நம் மத்தியில்
காண்பது உண்டா?

நன்மைகளை எதிர்ப்பவர்களே
உதவாதவர்கள்...

சுயநலத்தை வென்று வெற்றி பெற்றவர்களே
உண்மையான பாசத்துக்குரியவர்கள்...

அந்நியருக்கு உதவுபவர்களே
நல்லவர்கள்....

இப்பிறவிப் பெருங்கடலில் நீந்துபவர்களே
கருணை உள்ளம் படைத்தவர்கள்.,......

வாழ்க்கைப்பொறியிலிருந்து தப்புவிப்பவர்களே
பிறரை வாழ வைப்பவர்கள்....

பாதளத்தில் வீழ்ந்தவரை தூக்குபவர்களே
உத்தமர்கள்........

உதவும் உள்ளம் படைத்தபவர்களே
கூடப் பிறவா  சகோதரர்கள்...,

வானத்துக்கும் கடலுக்கும் எல்லை உண்டு
இவர்களைப்போல் யாருண்டு?...

கடவுள் கொடுத்த வரமே
பிறர் வாழ்வில் இனிய ஸ்வரமே

நல்லவர்களாய்  என்றென்றும் வாழ
வாழ்த்தும் உங்கள் அன்புத்தோழி ரீனா.......
« Last Edit: September 16, 2016, 04:23:11 PM by ReeNa »

Offline gab

வாழ்க்கையில்  வெற்றியெனும் சிகரம் தொட
 பல மேடு பள்ளங்களை தாண்டி நிதானமாய்
பயணித்து கொண்டிருக்கும் வேளையில்
என்னை தாண்டி சென்றவர் சிலர்
ஏறும் முயற்சியில் பலர் ....

 மிக சோர்வாய்  பயணப்பட்டு
ஆபத்தின் விளிம்பில் தொங்கிய உன்னை
என் பயணத்தின் ஊடே காண்கையில்
மனதில் ஏதோ நெருடியது…

அனுதாபமா? இல்லை
உன்னை வழி நடத்த வேண்டியது
சக மனிதனின் கடமையா?

சிகரத்தின் உச்சம் தொடும்
சூச்சமத்தை  நான் சொல்லி
கொடுக்க நினைத்து நட்பாய்
ஒரு புன்னகை …

நீ என் கரம் பற்றி சிகரம் தொட
மேல செல்லும் வேளையில்
உன்  உயிர்மூச்சின் திறன்  குறைய …

நான் நினைத்த சிகரத்தின் உச்சம் நீயும்
எட்டும்வரை உன் கரம் விடமாட்டேன்
என்ற உறுதியான எண்ணத்தோடு
உன்னை தூக்கிவிடும் முயற்சியில் நான்.

நட்பின் கரம் கோர்த்து
நாம் ஏற வேண்டிய சிகரங்கள் பல
மனோதிடம் மேலோங்கிட வெற்றியின்
எல்லைவரை தொடர்வோம் வா  ..

« Last Edit: September 15, 2016, 03:10:09 AM by gab »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
பெண்ணுக்கு வாழ்க்கை நல்வழிகாட்டும்
பெற்றோரில் துவங்கி பாதுகாப்பு உணர்வு தரும்
கணவனுடன் பயணப்பட்டு நல் பாசத்தை பொழியும்
மகனுடன் அமைத்தால் அவள் பாக்கியசாலி...!இல்லையா

பால்யகாலத்து நட்பு இடுகாடுமட்டும்
துணைவருவது ஆணுக்கு மட்டுமே சாத்தியமா ?
இல்லை சில பெண்ணுக்கும்
வரங்களாய் அமைகிறது ...!

என் பால்யகால நண்பன்
என் கனவுகளோடு இன்று வரை
எனக்காய் பயணப்படுகிறான்
சுயநலம் துளியுமின்றி ...!

பாரம் ஏற்ற விரும்பவில்லை
கரம் கொடு போதும்விழாமல்
என்னை நான் தற்காத்துக்கொள்வேன்
உன் கண்ணால் என் கனவுகைளை
காண நாம் காதலர்கள் இல்லை...!

உன்னோடு பயணப்பட்டால்
என்றாவது ஒரு நாள்
நிச்சயம் காண்பேன் வெற்றி
என்னும் விடியலை ...!
« Last Edit: September 15, 2016, 05:26:56 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....