Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 126  (Read 2540 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 126
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:45:12 AM by MysteRy »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா
                                         - மகா கவி பாரதியார்


சிட்டாய் சிறகடித்து
சில்லு கோடு தாண்டி
நொண்டி விளையாட்டில்
நொண்டி  நொய்வடைந்து

ஓடி பிடிச்சு அவ
ஒத்த ஜடை தனையிழுத்து
கையில் உள்ள பண்டம்
காக்கா  கடி கடிச்சு

ஆளுக்கு ஒரு பங்கு
அன்பாய் கொடுத்த பாசம்
பிடிக்காத போது டூ
சொல்லி பிரிஞ்ச நேசம்

தட்டானும் ஓணானும்
தலை தெறிக்க ஓடுமய்யா
சிட்டா பறக்கும் இந்த
சின்ன சிறுசு கண்டா

சுற்றி கால்  களைச்சு
நாய் போல மூச்சிரைச்சு
ஓய்ந்து படுத்த காலம்
வாழ்வினில் வசந்த காலம்

மின்னணு உலகத்தில்
மின்னும் ஒளி பட்டு
கண்ணும் மங்கிவிட
கால்களும் செத்துவிட

பள்ளி படிப்புக்கு
பாட நூலை சுமந்து
முதுகு தண்டு வடம்
தானாய் வலுவிழந்து

ஓடி விளையாட ஓர்
அடி எடுத்து  வச்சா
தேடி பிடிச்சு வந்து
மூடி வச்ச கதவுக்குள்ள
சிறை படுத்தும் 
நிலைதான் இன்று

துள்ளி திரியும் காலம்
பள்ளி இல்லா காலம்

ஓடி விளையாட இப்போ
ஒருத்தரும் காணவில்லை..

தேடி பிடிச்சாலும் இப்போ
திறந்தவெளி காணவில்லை..

« Last Edit: November 30, 2016, 10:48:49 AM by பொய்கை »

Offline JEE

பாதம் கல்லில் இடறாது
பசுமையான புற்கள்...............
 
பாதசாரிகள் அணியும்
பாதணி அணியாது
பாதஉறை அணிந்தும்
பாதஉறை அணியாமலும்
ஓடுவதேனோ?........................

அரசின் அதிரடி ஆணைப்படி
அரசிடம் பழையன சமர்பித்து
அரசிடம் புதியன பெற்றிட
அரசு விடுமுறையென்ற
களிப்பால் ஆனந்த  ஓட்டமா?.............

பழைய ஐநூறு ருபாய்
பழைய ஆயிரம்  ருபாய்
பண மூடை  கொட்டபட்ட
இடத்தை பார்க்க ஓட்டமா?...................

பழைய ஐநூறு ருபாய்
பழைய ஆயிரம்  ருபாய்
மாற்ற அல்லாடூம் கூட்டம்
அலைமோதும் வரிசையை
ஆவலுடன் காண ஓட்டமா?...................

இரண்டாயிரம் புதிய ருபாய்
காலை முதல் மாலை வரை
கால்கடுக்க இயந்திரம் முன்னின்ற
பெற்றோரைத் தேடி ஓட்டமா?...............

நாளொன்றுக்கு யாவர்க்கும்
இரண்டாயிரம் மட்டுமே
இயந்திரம் கொடுக்கும்
இயந்திரத்தை சுற்றி
ஒப்பாரியை கேட்க ஓட்டமா?..............

பாதம் கல்லில் இடறாது
பசுமையான புற்கள் 

பாதசாரிகள் அணியும்
பாதணி அணியாது
பாதஉறை அணிந்தும்
பாதஉறை அணியாமலும்
ஓடுவதேனோ?........................

புசிக்க உணவில்லை
குடிக்க நீரெங்குமில்லை
இருக்குமிடம் விட்டு
ஏதுமங்கே
இல்லாததால்
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலையுதே
வனவிலங்கு  ........................

எந்தநேரமும் ஊருக்குள் வரலாம்
என்ற அச்சத்தில் வாழுமிடத்திலோ?
குரங்கு வந்ததோ?
கரடியை கண்டனரோ?
வனத்தில் வாழ்வது நம்
மினத்தை அழிக்கவோ?
வனவாசம் முடித்து நம்
இனவாசம் தேடுவதேனோ?

வனத்தை பாதுகாப்போம்
வனவிலங்குகளை பாதுகாப்போம்...............

இருக்குமிடம் விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ மனம் அலையுதே

குழந்தை போல் மனம்
பாம்பை போல் வினா
புறாவைபோல் கபடற்ற மனம்
மனதிலே காண்பாயே...................................

வாழ்க வளமுடன்,,,,,,,,,,,,,,,,,,,,,,...................
« Last Edit: November 27, 2016, 08:44:41 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline ~DhiYa~

அது ஓர் கனாக்காலம்..
நிலைக்கும் ஆண்டாண்டு காலம்..

நட்பினில் திளைத்து..
ஒரே காற்றை சுவாசித்து..
நெஞ்சத்தில் வஞ்சங்கள் ஏதுமின்றியே..
பாலின் நிறமும் தூய்மையையும் கொண்டே..
நட்பின் இலக்கணம் ..
புரிந்தும் புரியாமலும்...
 
இனம் பாராது மேனி நிறம் பாராது..
ஒன்றாய் சுற்றித் திரிந்தோமே..
சிரிப்புச் சத்தங்களோடும்..
ஆடல் பாடல் விளையாட்டுகளோடும்....
புல்வெளிதனில் ஓடிக்களித்தோமே.
சண்டைகள் பிடித்து..
பின் நட்பு கொண்டாடி..
நட்பிற்கோர் உவமையாய்த் திகழ்ந்தோமே..!

கால்களில் சக்கரங்கள் முளைக்க..
நாட்களும் அதிவேகமாய்ச் சுழல..
அழகிய நிகழ்வுகள்..
பசுமை மிகு நினைவுகளாய்..
என் நெஞ்சில் தஞ்சம் புகவே....

ஒன்றின் மேல் ஒன்றாக
அலைஅலையாய் மலரும் எண்ணங்கள்....
அடுக்கடுக்காய் தோன்றும் சிந்தனைகள்...
கண்களில் எதிர்காலம் குறித்த
வண்ண வண்ணக் கனவுகளை ஏந்தி
மனக்கவலை ஒரு சிறிதுமின்றி
பட்டாம் பூச்சிகள் போல் ...

அறியாப் பருவத்தில் மலர்கின்ற நட்பில்
ஆதாயம் தேடும் கள்ளத்தனம் இல்லை
ஆத்மார்த்தமான அன்பு....
     
 
« Last Edit: November 29, 2016, 01:12:09 AM by ~DhiYa~ »
commercial photography locations

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
அகம் வெடித்துப்பாயும் தகனத்தின்
வெப்பக்கருவைச் சுமந்து 
மானிடர்தம் மனது சுயநலமென அறிந்து.
தன் தேகத்தின் வலுவிழந்த பூமித்தாய்
உறங்குகின்ற தருணத்தில்,


அன்னையவள் பசுமை அழகில்,
சோர்விழந்த பச்சிளம் சிட்டுக்கள்
உறங்கிக்கிடக்கும் பூமித்தாயவள்
உணர்வை எழுப்பி,

தம்மவருடன் கைகோர்த்து தன்னிகரற்ற
தரணியை உருவாக்கிடுவாரோ ?
வர்ண உடையணிந்து பசுமைப்
புரட்சி செய்திடுவாரோ ?
சோலை வனம் மீது சாலை அமையாமல்
சாதனை படைப்பாரோ?


சிறகுகள் முளைத்தால் உலகை மறந்து
விண்ணை நோக்கிப் பறந்திடுவாரோ ?
அதனால் தான் சிறகுகளின்றி பாரினில்
பாலகராய் ஆட்டம் காண்பாரோ?


ஆட்டமும் ஓட்டமும் தன் உடல் மீது
நாட்டமும் கொண்டுள்ள இந்தச்  சிறார்களின்
பாதம் தன்னை வணங்கிச்செல்லும்.

அவர்தம் ஆரவாரம் உலகிற்கு
மகிழ்ச்சியெனும் செய்தி சொல்லும்.


நாளைய நாளை எண்ணா
நாழிகை இன்றைய பொழுதாய் எழும்.


கள்ளம், கபடம் இல்லா
களிப்பில் அவர்தம் எண்ணம் சிறக்கும்.


வயது, வரம்பு இல்லா
வட்டாரம் தோழமை கொள்ளும்.

இயல்பியல் விகுதிக்கு ஆளான பாலகர்தம்
வாழ்வும் கடந்து போகும்.


மழலைக் குரலேந்தி மழையாய்ப்
பொழிந்த சிறார்களின் செல்லக்குரல்
வன் சொல் பேசி வலிகள் கொடுத்து
வலிமை இழந்து விடுமோ? இனிவரும்
நாட்களில்.


கூடி வாழ்ந்து குதூகலித்து
உளம் பசுமை கொண்டவாழ்வு
தனிமை பெற்று சோர்ந்திடுமோ
கடந்து போகும் வயதுகளில்.


இப்பருவம் இளமை கொள்ளும்
இன்னல் போக்கும்
இனிமை தரும்
இன்சொல் பேசும்
இன்னிசையாய் ஒலிக்கும்.   


ஆனால்
இதுவும் கடந்து போகும்.
நாளைய வாழ்வில் இத்தருணங்கள்
தொலைந்து போகும்.
மீண்டும் பிறந்திட மனது ஏங்கும்.

« Last Edit: November 29, 2016, 04:39:38 PM by AnoTH »

Offline ReeNa

சுகந்தமான காலங்கள்
சுவையான பொழுதுகள்
அதில் வளர்ந்த  பால்யம்
அத்தனையும் இன்று நினைவுகள்!

கவலை இல்லாத உலகினிலே
கபடம்  இல்லாத கோட்டையிலே
பசுமையான புல் வெளியில்
பாசமான நண்பர்கள் அருகையிலே..!

திறந்த வானத்தின் அடியினிலே
தீண்டும் காற்றில் பட்டம் விடுகையிலே
பம்பரம் போல் வாழ்க்கை ஓடுகையிலே
நான் நானாக வளர்ந்தேன் என்னுள்ளே.

வாசல் அருகில்  தஞ்சாவூர்  கட்டம்,
வா... வா... என்று அழைக்கும்  நண்பரின்  சத்தம்.
அதிலி புதலி ஆட்டம் போட்டும்,
அச்சு போட்டு மழை நேர கொண்டாட்டம்.

கொட்டும் மழையிலும் தர தர...
கொஞ்சம் விளையாடுவோம் கொக்கு பற பற..!
ஓடி ஆடி விளையாடும்  நாட்கள் சர சர...
பல்லாங்குழி  ஆட்டம்  என்றால் என்றும் அட! அட!!

நான் நடக்கும் போது
நிலவும் என்னுடன் நடக்குமென
நினைத்தது பால்யம்!
கண்மூடித்தித்திறப்பதற்குள்
கனவாகிப்போனது!!
அர்த்தம் புரிவதற்குள்
முடிந்து போனது எல்லாம்!!!

உற்சாகம் தீரா பால்யம்
திகட்டாத அக்காலம்
இயல்பான பொற்காலம்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்,
அன்னையின் முந்தானை காலம்...
« Last Edit: December 01, 2016, 05:33:03 PM by ReeNa »

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
126- மாலை மயங்கும் நேரம்
« Reply #6 on: November 28, 2016, 09:50:07 PM »
கதிரவனின் உதயத்தில்
கவின் சிட்டு குருவிகள்
கிரீச்சிட்டு ஆரவாரமிட்டு கூவிக்கூடுதம்மா ...
வண்ண வண்ண வண்ணத்து பூச்சிகள்
மலர்களை சுற்றி சுற்றி திரிந்தம்மா ...

மறுபுறத்தில் மரங்களின்  இடையே
கண்கவர் அழகிய  மயில்கள்
தோகையை விரித்து ஆடுதம்மா...
அசத்தலான புள்ளி மான்கள் 
துள்ளி துள்ளி ஓடுதம்மா..

சின்னஞ்சிறு  குழந்தைகள்
சிட்டு குருவியை மிஞ்சி பறக்குதம்மா...
பச்சிளம் குழந்தைகள்
வண்ணத்து பூச்சியின் பலநிறத்தில்
ஆடை அணிந்ததம்மா..

துரு துருவென  குழந்தைகள்
மயில்களை போல  நடனமாடுதம்மா..
கள்ளம் கபடம் இல்லா குழந்தைகள் 
புள்ளி மான்களை போல  குதிக்குதாம்மா...

புல்வெளிதன்னில் நட்பை வளர்த்ததம்மா   ...
மனதில் சஞ்சலமில்லாமல் இணைந்ததம்மா...
பாகுபாடு  இன்றி சேர்ந்ததம்மா...
பிஞ்சு  குழந்தைகள் நமக்கு  உணர்த்துதம்மா...

கடந்த காலம்  கலைந்ததம்மா
இனி ஒரு நாளும் மீண்டு வராதம்மா...
சிறுவர் ஆட்டத்தில் நம் உளம் கரைந்ததம்மா..


நன்றி


« Last Edit: November 29, 2016, 08:11:12 PM by BlazinG BeautY »

Offline KaBaLi

ஐ!! ஐ!! ஐ !! எங்களுக்கு லீவ் விட்டாச்சு

ராஜா ராணி விளையாடலாம்
ரகசிய போலீஸ் நாமாகலாம்
கூஜா தூக்கி நடந்துகாட்டி
கட்சித் தலைவராய் நடமாடலாம்
திருடனாய் நடிச்சு திருந்திடலாம்
வாத்திய பழிச்சு சிரித்திடலாம்
பரிட்சை எழுதி லீவுவிட்டாச்சு
கூடி கும்மாளம் போட்டிடலாம்- என்று

சிறுவர்கள் ஒன்றுகூடி!
ஒதுக்கிடம் தேர்ந்து!
ஒற்றுமையாய்!
ஓரினமாய்!
தொடங்குவர் விளையாட்டு!

வலியவன் தலைவன்!
தோழன் ஆ​லோசகன்!
அவர் விதித்ததே சட்டம்!
தலையாட்டி ஓணான்களாய்!
ஏற்று தொடர்ந்திடும்!
புதுமையாய் விளையாட்டு!

குதூகலம் மிஞ்சிவிடு்ம்!
சத்தமும் வானுயரும்!
அலப்பல்கள் இடையிடையே!
வலியவன் ஆயுதம்!

சண்டைகள் இடையிடையே!
சாந்தமும் அதனிடையே!
சலிப்பின்றி தொடர்ந்திடும்!
பெயரில்லா விளையாட்டு!

குழந்தை விளையாட்டு வாழ்க்கை
மந்திரமல்ல தந்திரம் என்றறிருந்தும்
மயக்கிடும் லீலைகள்

இந்தக்கால குழந்தைகள் தான் வீட்டுக்குள்  மொடங்கிடுச்சு
கம்யூட்டரிலும் மொபைலிலுமே விளையாட்டா ஆடிடுச்சு
கண்டதையும் கொரிச்சிக்கிட்டு டிவிமுன்னே கெடக்குதுங்க‌
அந்தக்கால விளையாட்டு எல்லாம்  எங்கேபோயி ஒளிஞ்சுக்கிச்சோ.
« Last Edit: November 28, 2016, 10:39:27 PM by KaBaLi »

Offline சக்திராகவா

காலைப்பனி கால் நனைக்க
களம் படர்ந்த புல்லோ கை விரிக்க
மதம் கடந்த மழலை பூக்கள்
பல வண்ணத்தோடு வாய் சிரிக்க

வார இறுதிக்கு
வாரமெல்லாம் காத்திருந்து!
வயலோடும் முயல் கூட்டம்
இது வாயாடும் முகிலாட்டம்!

தட்டானுக்கு தாவிவிட்டு
சிட்டாங்குச்சி சீவி விட்டு
பாண்டியாடும் வேப்ப நிழல்
பகடை உருண்ட பாதி திண்ணை

நெருப்போடும் விளையாடி
நேரத்தில் பசி உண்டு!
எல்லாம் மறந்து!
இனி எல்லாம் மருந்து!


காலமெனும் கரையானோ
கையில் வைத்து கரைத்தானோ
வீதியில்லா வில்லாக்கள்
விளையாட்டு என்பது இல்லாமல்

நகர்ந்து நகர் வந்தோம்
நாகரிகம் மேம்படுமாம்
நாலு சுவர் தடுப்பதற்கே
நம் பிள்ளை நடுங்கிடுவான்

நாளை தலைமுறையோ?
பஞ்சு பொம்மைக்கு
பாவாடை சட்டை தைக்கும்
மிஞ்சிபோனால் மட்டை தூக்கும்

மறந்த பண்பாட்டில்
மருத்துவமும் உள்ளதனால்
இறந்த விளையாட்டை
திருந்தி மீட்டெடுப்போம்!

சக்தி ராகவா