Author Topic: ஜோக்கரின் குட்டி கதைகள் பகுதி  (Read 5777 times)

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
உருவ வழிபாட்டை கிண்டல் செய்து,
ஒரு மன்னன் பேசிக் கொண்டிருந்தான்.

மக்களே! கடவுள் மீசை வைத்திருக்கிறானாம்.
சாமியாரைப் போல ஜடாமுடி தரித்திருக்கிறானாம்.

ஒருவன் தலையில் கங்கை நதியை தூக்கி வைத்துள்ளானாம்.

ஒருவன் கையில் சங்கையும், சக்கரத்தையும் வைத்திருக்கிறானாம். அவனுக்கு 16கை இருக்கிறதாம்.

இன்னொருவனுக்கு 12கைகள் உள்ளதாம்.
ஒரே கடவுள் என்று வேறு பீற்றிக்கொள்கிறார்கள். ஒரு கடவுளுக்கு இத்தனை உருவங்கள் எப்படி இருக்க முடியும்? சிந்துத்து பார்க்க வேண்டாமா?  என்றான்.

அந்தக் கூட்டத்தில் இருந்த விவேகானந்தர் எழுந்தார்.

ராஜாவே! உங்கள் தந்தை யார்?

என் தந்தை இறந்துவிட்டார் ஏன் கேட்கிறாய்?

காரணத்துடன்தான். இறந்து போன உங்கள் தந்தை எங்கே?

அதெப்படி எனக்கு தெரியும்?

சரி..  உங்கள் தந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்ன செய்வீர்கள்?

அவர் படத்தை பார்ப்பேன்.

கண்ணுக்கு தெரியாத உமது தந்தையின் படத்தைப் பார்த்து எப்படி மகிழ்ச்சி அடைகிறீரோ, அப்படித்தான் இந்த மக்களும். கண்ணுக்கு தெரியாத ஒரே இறைவனைஅவரவர் வசதிப்படி காளியாகவும்  சிவனாகவும் கிருஷ்ணனாகவும், ராமனாகவும் பார்த்து மகிழ்கன்றனர்.
தங்களது குறைகளைச் சொல்லி ஆறுதலடைகின்றனர். புரிகிறதா?

மன்னன் தலை குனிந்தான்.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
🐊🐊ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.


யார் அந்த முதலைகள் 🐊🐊 நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி 💸💵💸 ரூபாய் பரிசு என்று.


அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

 அப்போது ஒருவன் 🤸🏻‍♂ மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை🏊🏼 அடைந்தான்.


அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. 💸💵💸


உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து கேட்டான்.... யார்டா என்னை குளத்தில் தள்ளி விட்டது?😡😡😡கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧


அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி மட்டும் அவனைப் பார்த்து சிரித்தாள்.😎😎


நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள் :D :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது.

ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக்
கொண்டிருந்தனர்.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது
.
கணவன் மட்டும் எழுந்து போனான்
.
கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.

“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட முடியுமா?”
என்று அந்த குடிகாரர் கேட்டார்.

கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை
சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்
.
“யாரது?” என்று மனைவி கேட்டாள்
.
“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”

“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி, மழை வேற
பெய்யுது எவன் போவான்?”

“3 மாசம் முன்னாடி நம்ம கார்
ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப
இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க
அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?

கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி.

கணவன் எந்திரிச்சான், ட்ரஸ்
பண்ணிக்கிட்டு மழையில்
நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில்
சரியா தெரியாதாதால
சத்தமா கேட்டான்.

“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”

“ஆமா சார்”

“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே,
இப்ப செய்யலாமா?”

“ஆமா சார்
 வந்து கொஞ்சம்
தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”

“எங்கே இருக்கீங்க?

“இங்கதான் ஊஞ்சல் மேல
உட்கார்ந்திருக்கேன்
வாங்க
வந்து தள்ளிவிடுங்க....”

😳அட நன்னாரிப் பயலே....

Ha ha ha 😬😀

எப்ப பாரு கருத்த மட்டுமே  எதிர்பாக்காதீங்க
லைஃப எஞ்ஜாய் பன்னுங்க! :))))))
Be happy 😀😄😜😀😄

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன !! 🌳🌳
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க☁ இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது
😣😣😣😣😣😣😣😣

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது
😌😌😌😌😌😌😌

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦

அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச்சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது  , எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று !!!!

அதற்கு அந்த மரம் கூறிய பதில் :  எனக்குத் தெரியும் நான் வழுவிழந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன் , தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று ,  நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢

கருத்து:   உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்!!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
(((((((எச்சரிக்கை )))))))

    உண்மை கசக்கும்

ஒருவரின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது.

 பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார்.

பரிசோதனை செய்து விட்டு
காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர் சொல்ல, அதிர்ச்சி
அடைந்தவர் தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார்..
...
சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார்.

வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போனவர் அதற்கும் ஒத்துக் கொண்டார்.
...
இரு கால்களையும் இழந்து, மரக் கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்தவருக்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.
...
மரக் கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட, பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு மரக் கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து 'அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும்' முடித்த பின் மருத்துவர் சொன்னார்...
" உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்து விடுங்கள்"..
...
இதுதான் இன்றய

 மருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல...
...
சிந்திக்க...

மட்டுமே. ........

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை
ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு
ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்,
💑 "நேரம் நெருங்கிவிட்டது,
பிரசவ வலி நாளை அல்லது
நாளை மறுநாள் கூட வரலாம்..
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்..

💑 இதை கேட்ட அவள் கணவனுக்கு
நெஞ்சில் ஆனந்தம் பொங்கி
இரு கண்களை மறைக்கிறது,

💑 அன்று இரவே கணவன் தன் மனைவியின்
வயிற்றில் காதை வைத்துப் பார்க்கிறான்,

💑 "என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி
கேட்க நாளை இன்நேரம் என் மகனோ,
மகளோ என் கையில்... என்கிறான்,

💑 அதை கேட்க மனைவி எனக்கு
ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல,
இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான்
வேண்டும் என்று கணவன் சொல்ல
ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்,

💑 படுக்கையில் தன் கணவன் அருகில்
நெருங்கி வந்து அவன் கை விரலை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள்,

💑 தூக்கத்தில் இருந்த கணவன்
விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.

💑 "என்னவென்று தெரியவில்லை
இதயம் படபடவென துடிக்கிறது,
எனக்கு தூக்கமே வரவில்லை
பயமாக இருக்கிறது", என்று சொல்லி
கண்கசிகிறாள் அவன் மனைவி.

💑 உடனே இழுத்து தன் மார்போடு
மனைவியை அனைத்தவன்
அவள் கண்ணீரை துடைத்து
அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.

💑 அவள் நினைத்தால் போல்
திடீரென பிரசவ வலி வந்தது.
பயத்திலும் கடுமையான
இடுப்பு வலியிலும் கட்டிலேயே
துடித்து அழ ஆரம்பித்தாள்,

💑 என்ன செய்வது என தெரியாது
முழித்த கணவன்
அவள் துடிப்பதை காண இயலாமல்
அப்படியே அவளை தூக்கிக்கொண்டு
காரில் சிட்டுக் குருவியை போல்
பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான்,

💑 இரவு நேரம் என்பதால் உடனே
தன் மனைவியின் பெற்றோர்களுக்கு
தகவல் தெரிவித்தான்,

💑 ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்க
அவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும்
பயங்கரமாக கேட்டது,

💑 இரு கைகளையும் பிசைந்து கொண்டு
பிரசவ வார்டின் வெளியில்
இங்கே அங்கே என சுற்றுகிறான்.

💑 "அம்மா! அம்மா ..!" என்று
மனைவி வலியில் துடிக்க
அழத் தெரியாத அவள்
கணவனுக்கும் அழுகை வந்தது.

💑 "ஆண்டவா என் மனைவியின்
முதல் பிரசவம் இது,
தாய்கும் பிள்ளைக்கும் எந்த
ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது"
என்று உலகின் உள்ள
எல்லா கடவுளிடம் வேண்டினான்.

💑 நேரம் ஆக ஆக அவனுக்கு
முகமெல்லாம் வேர்த்து கொட்டியது,
பிரசவ வலியில் தன் மனைவி
துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள
இயலவில்லை.

💑 சற்று நேரத்தில் திடீரென
மனைவியின் குரல் அமைதியானது.
கணவன் என்னாசோ! ஏதாச்சோ! என
மிகவும் பயந்துபோனான்,

💑 மீண்டும் ஒரு அலரல்...

💑 அதை கேட்ட கணவன்
ஆண்டவா என் மனைவிக்கு
இவ்வளவு சித்திரவதையா?
என தலையில் கை வைத்தவாறு
இருக்கையில் அமர்ந்து மனைவியை
அவள் தியாகத்தை நினைத்து
கூணி கூறுகிப்போனான்,

💑 அப்போது ஒரு நர்ஸ் மட்டும்
வெளியே வந்து
உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம்
பயப்படும்படி ஒன்றுமில்லை,
தாராளமாக உள்ளே சென்று
பாருங்கள் என்றார்.

💑 காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன்
முதலில் தன் மனைவியை பார்க்கிறான்,
அவள் இன்னும் கண் திறக்காமல்
மயக்கத்தில் சோர்ந்து படுத்திருக்க
அடுத்து எங்கே என் குழந்தை என
அவன் கண்கள் ஒரு வழியாக தேடி
தாயின் அருகில் குழந்தை இருப்பதை கண்டு
மெதுவாக நகர்ந்து பூமியின் பாதம் படாத
சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு
முத்தமிட்டு அதன் தலையை மெதுவாக
கோதிவிடுகிறான்.

💑 தந்தையின் கை விரல் பட்டவுடன்
சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.
யார் சொன்னது பெண்கள் மட்டும்தான்
உயிரை சுமக்கின்றனர் என்று.

♥ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும்
ஒவ்வொரு ஆணின் "இதயத்தை"
தொட்டுப் பாருங்கள்,
அவன் வாழ்நாள் முழுவதும்
அந்த பெண்ணின் நினைவுகளையும்
குடும்ப பாரங்களையும் சுமந்தே மடியும்
உன்னதமான படைப்பு தான் ஆண்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
 வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , 

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
 மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
 
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

 கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
 
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
***
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

 🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும் !

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
எங்கள் வீட்டின் செடிகளின் நடுவே ஒரு புறா முட்டையிட்டிருந்தது. எனக்கு புறா என்றால் பிடிக்காது, ஒவ்வொரு வாரமும் வீட்டின் பால்கனியை சுத்தப் படுத்துவோர்க்கு புறாவை கண்டிப்பாக பிடிக்காது.  அது மோதியின் ஸ்வச்ச பாரத் எப்பவும் எதிரி. எங்கும் எச்சம் இட்டு அசுத்தபடுத்திக் கொண்டே இருக்கும். எனவே என் பரம் எதிரி. 

நான் தான் முதலில் அதை பார்த்தேன்.  ஆனால் ஜைன மதத்தை சேர்ந்தவன் என்பதால் அதை தூக்கு எறிய முடியாது.  வேறு யாரிடமும் சொல்லி அதை வேறெங்காவது அப்புற படுத்தி விட நினைத்தேன்.  ஆனால் என் மனைவி பிடிவாதமாக மறுத்து விட்டாள். யாராவது அந்த முட்டையை தொட்டு விட்டால் அது குஞ்சு பொறிக்காது என்று வாதிட்டாள்.

பிறகு என்ன அந்த பெண் புறா வந்து அழகாக அந்த முட்டையின் மேல் அமர்ந்து கொண்டது. அனைவருக்கும் அங்கே போக 144 தடை உத்தரவு போட்டு விட்டாள்.  தினமும் காலை எழுந்தது முதல் அங்கே ஒரு பார்வை பார்த்தபடி இருந்தாள். தினமும் புறா புராணம் எங்கள் வீட்டில், அந்த புறா தண்ணீர் குடிக்கவில்லை, ஏதும் உண்ணவில்லை என்ன செய்வது.

3 வது நாளில் இருந்து எனக்கும் ஆர்வமும் பரிதாபமும் வர, நானும் எட்டி பார்த்து கொண்டே இருந்தேன்.  ஆச்சரியமாக இருந்தது, ஒரே இடத்தில் நாள் கணக்காக உணவோ நீரோ இன்றி எப்படி, இதுதான் தாய்மையோ, பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து இத்தனை மன உறுதி, கட்டுப்பாடு வந்து விடுகிறது.

அடுத்த 6வது நாளில் நாங்கள் பால்கனிக்கு போனபோது அது பயப்படவில்லை. அது பார்த்த பார்வையில் என்னை தொந்திரவு செய்யாதீர்கள் என்று சொன்னது போல இருந்த்து.  எங்களுக்கு ஒரு மகள் இருந்திருந்தால், இப்போதோ இன்னும் சில வருடங்களிலோ இப்படிதான் குழந்தை பிறப்பிற்க்காக வந்திருப்பாளோ என எனக்கு தோன்றியது.  என் மனைவியோ அதை எங்கள் மகளாக ஏற்கனவே முடிவு செய்து விட்டாள்.

அதன் அருகில் அவள் போனபோதும் அது அமைதியாக அமர்ந்திருந்தது. ஒரு தட்டில் சிறிது கம்பு, கேழ்வரகு, ஒரு கிண்ணத்தில் சிறிது குடி நீர், அதை சுற்றி அட்டையில் வெயிலோ, குளிரோ படாத வண்ணம் ஏற்பாடு செய்து விட்டாள்.

 ஆனால் அந்த புறா எதையும் சாப்பிடாமல் தவமாய் அமர்ந்திருந்த்து.  சுமார் 21 நாட்கள் நேற்று காலை பார்த்தபோது இரண்டு குஞ்சுகள் அசைவின்றி இருந்தன.  எங்களுக்கு பதட்டம், என்னாயிற்று குஞ்சுகள் ஏன் அவைவற்று கிடக்கின்றன? என்ன செய்வது. வேலைக்கார அம்மா பார்த்து விட்டு எதுவும் புரியவில்லை என்றாள்.  அது உயிரோடு இருக்கிறாதா என்றும் சந்தேகப்பட்டாள்.  அய்யோ அந்த புறா என்ன பாடு படும்,

இத்தணை நாள் தவமிருந்து கடைசியில் இப்படி ஆகிவிட்டதே, இந்த புறாவையும் காணோம்.  ஒரு வேளை விரக்தியில் எங்கும் போய்விட்ட்தோ? மனம் பரிதவித்த்து. சுமார் 10 நிமிடத்தில் எங்கோ போன தாய் பறவை வந்து அமர்ந்ததும் சிறிது சிறிதாக குஞ்சுகள் அசைய தொடங்கின.
 
ஆஹா என்னவென்று சொல்வது அந்த தருணத்தை, எங்களுக்கும் உயிர் வந்த்தை போல, என் மனைவியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.  எனக்கோ ஏதும் பேச்சில்லை.
 
பறவைகளோ, மிருகமோ, மனித இனமோ, பெண்களின் தவ வலிமைக்கும், உறுதிக்கும்,  தன் குழந்தைகளுக்காக எதுவும் ஏற்கும் மன திடமும், கண்டிப்பாக எந்த ஆணிடத்திலும் இருக்க முடியாது.  காட்டுக்குள் சென்று தவமிருக்கும் முனிவர்களை விடவும் பெண்கள் மேலானவர்களே.  வணங்க தகுதியானவர்களே. 

இதுவரை இருந்த ஆண் என்ற அகம்பாவம் இன்று ஒரு சிறிய பெண் புறாவின் மூலம் பொடி பொடியானது.  மகளீர் தினத்துக்கு வாழ்த்து சொல்வதில் ஒரு பயனும் இல்லை, ஆனால் அவளின் வலிகளை நாம் ஏற்க முடியாவிட்டாலும், அந்த நேரத்தில் ஆதரவாக இருந்தால் போதுமே, பெண்கள் எதையும் சாதிப்பார்களே. 

உறுதி ஏற்ப்போம் நண்பர்களே, சிறு சிறு உதவிகள் ஆதரவாய் சில வார்த்தை, நம் பெண் இனத்தை போற்றுவோம். மதிப்போம்.

பின்னனியில் யேசுதாஸின் குரலில், இளையராஜாவின் இசையில் " ஒரு பெண் புறா, கண்ணீரில் தள்ளாட, என் உள்ளம் திண்டாட, என்ன வாழ்கையோ? ...." ஒலித்து கொண்டே இருந்தது.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார்.
அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது
அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்!
சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன்
தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான்
விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.

திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம்
கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம்
வேறு பொங்கியது…

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள்
அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர்.
அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த
பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத்
தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.

அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது…
பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன்
கேட்டார்.

அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம்
மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான்
விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…
அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான்.

மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன்
தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான்.

திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான்.

அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.

அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.

எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான்.
முதலைகள் அவனை விரட்ட தொடங்கின.

அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.
அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.

வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி  தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான்.

" இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?"
மனைவி அமைதியாக சொன்னாள் "அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்".

நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.
 :D :D :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline DoRa

 • Sr. Member
 • *
 • Posts: 381
 • Total likes: 1157
 • Karma: +0/-0
 • Gender: Female
 • making someone SMILE is the best feelings😁
  Anna Ella Kathaiyum  Nalla IRuku NA Enku Romba Pidichaa Kathai   Andh kuruvi Kathai Na 
எனக்குத் தெரியும் நான் வழுவிழந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன் , தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று ,  நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் Elllorum Ippadiye Nenaithal Life A ellam Romba Happy a Irugalam indha Kuruviku Irukura ManASU manichangaluku enga iruku ippo ellam poramai erichal idhu thane iruku.....Anna Unga Kathai Inum Thodaratum En vaazhlthukkal Anna

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

 கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.  ;) :) :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை சிரித்துக் கொண்டே அமைதியை பதில் சொன்னது:

"நான் கால் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன்.
என் மீது சேறு படாதிருக்கவும், என்னால் பன்றிக்கு பாதிப்பு நேராதிருக்கவும் தான் நான் ஒதுங்கிக் கொண்டேன். என்னை விட பலசாலியாக அது தன்னை காட்டிக் கொண்டு சந்தோசம் பட்டால் பட்டு விட்டு போகட்டும்.

ஆலயத்திற்குள் நுழைந்தால் இறைவனுக்கு சமமாய் நம்மை வணங்குவர்.

அதை ஆலயத்திற்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள். முட்டாளிடம் நம் பலத்தை காட்டுவது தர்மமாகாது" என்று கூறி அமைதியாக சென்றது.

தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அறியாத முட்டாள்கள் தான் அகந்தையில் ஆடிக் கொண்டிருப்பார்கள்.

ஆன்மீகம் என்னும் அருட்கடலை உணர்ந்தோர்கள் மனம் இறை தேடலிலேயே லயித்திருக்கும். தான் யார் என்பதை மற்றோர்க்கு உணர்த்த ஆசைப் படுவது இல்லை. ஆன்மீக சின்னங்களை உடலில் தரித்துக் கொண்டு தானும் ஆன்மீக அன்பர் என உணர்த்த ஆசைப் படுபவர்களுக்கு மட்டுமே உதாரணங்கள் தேவைப்படும். உண்மையான ஆன்மீகம் தன்னை வெளிக்காட்டாது. தன்னை சுற்றிய நிகழ்வுகளின் நடுவே தன்னை மட்டும் உற்று
நோக்கும்.

#உண்மையில்_ #நிறைகுடம்_தளும்புவதில்லை.
#குறைகுடம்_மட்டுமே_கூத்தாடி_நிற்கும்.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு அறிஞரை சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அவர் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக், டொக் என்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.

அதைப் பார்த்த ஒரு மனிதன்,

 "மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலை அல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை,

""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். சோம்பேறியாக இருந்தால் எதுவும் கிடைக்காது...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கி இருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து,

மனிதனே, நீயும் தேடு... மரத்திலும்,, மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த அறிஞர்,அந்த மனிதனைப் பார்த்து.,

நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு.., உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமையும், நோயும் தான் உனக்குக் கிட்டும்'' என்றார்..

ஆம்.,நண்பர்களே..,

உயிரோடு உள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல்..

சோம்பல் உங்களை ஏமாற்றாமல் காத்துக் கொள்ளுங்கள்!

ஓய்வு என்பது சோம்பலின் நண்பன். ஓய்வை உள்ளே நுழைய விட்டால், சோம்பலும் வரும்.

அடுத்த வேலை தான் ஓய்வு. இன்னொரு சவால் தான் இன்னொரு தினம்.......

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 764
 • Total likes: 2384
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்

மனம் குழப்பத்தில் இருக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்..??

ஒருமுறை புத்தர்
தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.
சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்.
நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது .

சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.
புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார்.

பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.

மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே..

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Tags: