Author Topic: எனக்கு பிடித்த பாடல் வரிகள்  (Read 616 times)

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 678
 • Total likes: 2098
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?

தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்

திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்...

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 678
 • Total likes: 2098
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 678
 • Total likes: 2098
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா


கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்


கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்
நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 678
 • Total likes: 2098
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
படம்-மங்கையர் திலகம்.

நீல வண்ண கண்ணா வாடா !
நீ ஒரு முத்தம் தாடா !
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா !

பிள்ளையில்லாக்  கலியும் தீர
வள்ளல் உன் தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லாக்  கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா !

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சிதங்கநிறம் உன்தன் அங்கம்
அன்புமுகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி

பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே
நியாயமல்ல உன்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
"அம்மா என்ன புதுமை ஈது?!" என்றே
கேட்கும் மதியைப் பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே !
இணையில்லா செல்வம் நீயே!
பொங்கும் அன்பின் ஜோதி நீயே !
புகழ் மேவி வாழ்வாய் நீயே !

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 678
 • Total likes: 2098
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அழகு நிலா அதன் நிறம் என்ன
இது பகலா இதன் நிறம் என்ன
இதுவரை எனது வானில்
திசைகளும் கருப்புதான்
தடவிய பாதையெங்கும்
தனிமையின் தவிப்புதான்
பாடுகிறேன் எந்தன் பாடல்களை
தேடுகிறேன் இன்னும் தேடல்களை

அழகு நிலா அதன் நிறம் என்ன
இது பகலா இதன் நிறம் என்ன

பூவை நானறிவேன் அது தரும் வாசனையால்
பொழுதை நானறிவேன் பறவைகள் பாஷையினால்
எவர் மனம் என்னென்று தெரியவில்லை
அறிந்தவர் யாருண்டு புரியவில்லை
இங்கு பேச வந்த தென்றல்
அது ஜன்னல் மாறிப் போச்சு
நிஜம் ஒன்று அதைக் கண்டு
நான் புரிந்துகொண்டேன் இன்று

அழகு நிலா அதன் நிறம் என்ன
இது பகலா இதன் நிறம் என்ன

ஊன்றும் கோல்தானே உறுதுணை வாழ்விலே
ஊரார் சொந்தங்கள் விலகுது பாதியிலே
எனக்கொரு கனவுண்டு அதில் மிதந்தேன்
உனக்கொரு கனவுண்டு அதை மறந்தேன்
உன் கனவைப் புரிந்து கொண்டு
என் கனவு கலைந்ததின்று
நிஜம் ஒன்று அதைக் கண்டு
நான் புரிந்துகொண்டேன் இன்று

அழகு நிலா அதன் நிறம் என்ன
இது பகலா இதன் நிறம் என்ன
இதுவரை எனது வானில்
திசைகளும் கருப்புதான்
தடவிய பாதையெங்கும்
தனிமையின் தவிப்புதான்
பாடுகிறேன் எந்தன் பாடல்களை
தேடுகிறேன் இன்னும் தேடல்களை

அழகு நிலா அதன் நிறம் என்ன
இது பகலா இதன் நிறம் என்ன
« Last Edit: October 09, 2018, 01:17:33 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Tags: