Author Topic: சாட் மசாலா மிக்ஸ்  (Read 2356 times)

Offline kanmani

சாட் மசாலா மிக்ஸ்
« on: July 23, 2011, 08:27:13 PM »
 
  * கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன்
    * சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
    * ஓமம் - 1 டீஸ்பூன்
    * காய்ந்த மிளகாய் - 3
    * கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    * மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    * ட்ரை மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன்
    * கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன்
    * வினிகர் - 1/2 டீஸ்பூன்


    * கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும்.
    * கரம் மசாலாத்தூள்,  மிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும் சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.
    * எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
[/b][/color]