Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 184  (Read 429 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 184
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: May 13, 2018, 06:56:24 PM by MysteRy »

Offline AshiNi

 • Full Member
 • *
 • Posts: 101
 • Total likes: 624
 • Karma: +0/-0
 • Gender: Female
 • ✔✔I believe that everything happens for a reason✔✔
விழிகளில் காதல் வழிந்தோட
  உன் விழியால் என் விழியை
அணைத்து நிற்கும் நீ யாரோ...
  தேகமதில் காதல் புரண்டோட
உன் கரத்தால் என் கரத்தை
  இறுகப்பற்றி நிற்கும் நீ யாரோ...

ஆதிமனிதன் உணர்ந்த
  இனிய காதல் தென்றலை
எனக்குள் மூச்சுக் காற்றாய்
   செலுத்தும் நீ,
என் பொன் நட்சத்திரமோ...

ஆதாம் ஏவாள் ரசித்த
  அழகிய காதல் மெட்டினை
எனது செவிகளுக்குள் இதமாய்
   செலுத்தும் நீ,
என் வண்ண வானவில்லோ...

காத்து நின்றேன் உனக்காக
   வாடிய மரத்தடியில்
காதல் ரதத்தில் வந்து நின்றாய்
   என் விழி வாசலடியில்...

கண்களில் கண்டதும்
   என் பூமியின் வண்ணங்களும்
காதல் வண்ணங்களாகின !
   உன் நறுமணம் கொண்டதும்
வாடி நின்ற கிளைகளும்
   காதல் மலர்களால்
பூத்துக் குலுங்கின !

வெண்புறாக்கள் காதல்சேதியினை
   உலகிற்கு உரக்கச் சொல்ல
மென்மை சிறகடிக்கின்றன...
   கட்டாந்தரைகள் செங்கம்பளமாகி
நம் ஜோடித்தடம் பதிய
    ஆசையால் காத்துக்கிடக்கின்றன ...

இதைமிஞ்சி வேறு தேசங்கள்
   இனிகாண விரும்பவில்லை
 என் விழிகள்
   உனையன்றி இனியோர் கன்னியை
என்றுமே  தீண்டாது
  என் இதயம்

தெய்வீகத்திற்கு ஒப்பான
     காதல் இது...
காவியத்தில் இடம் பிடிக்கா
    காதல் இது...

அன்று அன்னத்திடம்
    தன் தூய காதலுக்காய்
தூதுவிட்டாள் தமயந்தி...
     அவள் நளன்பால்
கொண்ட காதலையும்
      மிஞ்சிவிட்ட நீ என் வஞ்சி...

இடைவெளிகள் நமக்குள்
   வேண்டாமடி கண்மணியே !
காற்றும் புகுந்தால் நம் அன்பு கண்டு
   பொறாமை கொள்ளுமடி வெண்ணிலவே !

காதல் மனங்கள் உரச
     அருகே வா என் கண்ணே...
உன் இதழ்களால் என் இதழ்களில்
   காதல் ஓவியம் தீட்டு பெண்ணே...
நிச்சயம் இதில் காமவாசம் இல்லையடி
    இது நாம் லயிக்கப்போகும்
"உன்னத காதல்தேசம்"
« Last Edit: May 14, 2018, 10:38:29 AM by AshiNi »

Offline RyaN

நீரில் இருந்து பாலை மட்டும்
பிரித்தெடுக்கும் அன்னப்பறவை
போல் தான் என் காதலியும்..
என் உடம்பில் இருந்து
உயிரை மட்டும் பிரித்தெடுத்து
சென்றுவிட்டால்..!

நீல வானத்து மை தொட்டு
என் சிந்தை யெனும்
கூர் முனையில் எழுதினேன்
அவள் தொடுத்த வலிகளை!
நீல வானத்து மை தீர்ந்ததடா!
அவள் தொடுத்த வலிகள் மட்டும் இன்னும் தீரலடா!

நீ தொடுத்த தீரா வலிகளை எந்தன் சுவாசத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்!
இவ்வுயிர் உடலைப் பிரிந்தாலும்
நீ தொடுத்த வலியும் பிரிந்திடுமோ! இல்லையோ!
நான் அறியேன்!

உன்னை நினைக்க கற்று
கொடுத்த நீ
உன்னை மறக்க கற்று
கொடுக்காமல் சென்றதேனடி....

உன்னை மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல் நான்!

அணைகள் நிரம்பி வழியும் நீரைப்போல,
உன்னை காதலித்தபின்
என் மனம் நிரம்பி கண்களில்
நீராய் ஓடுகிறது
உன் நினைவில்.

Offline thamilan

என் உயிருள்ள தாஜ்மகாலே
என் மனமெங்கும் சலசலத்து ஓடும்
நைல் நதியே
உன்னால் தானடி காதல்  எனும் நாகரிகத்தை
என் மனம் அறிந்தது கொண்டது 

காதல் என்றால் மாயை என்றிருந்தேன்
அது மனதை மயக்கிடும்
மாயாஜால வித்தை என்பதை
புரியவைத்தவள் நீயடி

யாரும் திற‌க்க‌ முடியாத‌
என் இத‌ய‌த்தை
புன்ன‌கை எனும்
க‌ன்ன‌க்கோல் கொண்டு திற‌ந்த‌வ‌ளே
திருடுவ‌த‌ற்கு ப‌திலாக‌
உன் இத‌ய‌த்தை வைத்து
பூட்டிச் சென்றாயே
இது என்ன‌ புதுமையான‌ திருட்டு
நான் ஆயுள் முழுவதும்
ஆயுள் கைதியாக
இருக்கச் சம்மதம்
நீ உன் மனச்சிறையில்
 என்னை சிறை வைப்பாய் எனில்

என் இதயம் முழுவதும்
ஏன்
இந்த உலகம் முழுவதும்
நீயே இருக்கிறாய்
பார்க்கும் இடமெல்லாம்
பார்க்கும் பொருள் எல்லாம்
நீயே இருக்கிறாய்

முகத்திரையற்ற உன்
வதனத்தை
தரிசிக்கும் பரவசத்தை விடவா
சொர்க்கம் இனிமையானது?
உன் தரிசனம் கிடைக்காத‌
என் விரக தாபத்தை விடவா
நரகம் துயரமானது?

அன்பே உன்முன்னே நானொரு யாசகன்
என் பிச்சைப் பாத்திர‌த்தில்   
ஒரு புன்ன‌கையை நீ
போட்டால் கூட‌ போதும்
அதை வைத்து
நான் உயிர் வாழ்வேன்

எளிதில் அடைய‌முடியாத‌ உன்னை
எப்ப‌டி அடைந்தேன் என்று கேட்கிறார்க‌ள்
காத‌லுக்கு காணிக்கையாக‌
க‌ண்ணீரை கொடுத்து என்றேன் நான்« Last Edit: May 14, 2018, 11:39:38 AM by thamilan »

Offline MysteRy

 • Global Moderator
 • *
 • Posts: 207268
 • Total likes: 17318
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/
நீ முழுமையாக புரிந்திருப்பாயோ
என்பது சந்தேகமே
என் வாழ்வை ஊடுருவிச் சென்றவன் நீயென்பதை
என்னை எனக்கே உணர்த்தியவன் நீயன்றோ
என் தொடுவானமும் நீயேயன்றோ

உனக்கே தெரியாது
நீ உண்மையில் என் வாழ்க்கைக்கு
எத்தனை முக்கியமானவன் என்று
என் இருண்ட வாழ்க்கை பாதையில்
நீயே மின்விளக்கு

எனக்கு பிரியாத பலவற்றை
எனக்கு புரியவைத்தவன் நீயே
என் உடல் மனம்  ஆன்மா எங்கும்
அன்பை விதைத்தவன் நீயே

என் காதலை முழுமையாக
உணர்ந்தாயோ நானறியேன்
நீயே என் வாழ்க்கை என்பதையும்
நீ அறிந்திருக்க மாட்டாய்
என் இதயக் கோவிலில் கொலுவிருக்கும்
என் இரட்சகன் நீயே அன்பே

நீ ஒரு உன்னதப் பிறவி
நீ இல்லையேல் நான் இல்லை என்பதை
என் காதல் எனக்கு உணர்த்துகிறது
என் வாழ்வில் உன்னை  அடைந்தது
நான் போன ஜென்மத்தில் செய்தபுண்ணியம்

Offline Socrates

 • FTC Team
 • *
 • Posts: 230
 • Total likes: 760
 • Karma: +0/-0
 • Gender: Male
 • ★★~~விதி தந்த பொக்கிஷம் நீ ~~எந்நாளும் மறவேன்~~★★
காதல்
மாய உலகில்
நிழலை பின் தொடர்ந்து
நிஜங்களை துறந்து
நினைவுகளை சுமந்து
உயிர் வசிப்பது தான் காதல்
காதல்
கண்ணீரில் சந்தோஷத்தையும் 
புன்னகையில் வலியையும் 
உணர்த்துவது காதல்

மரணம் தழுவிய  காதல் பற்றி
இந்த கிறுக்கன் கிறுக்கும்
ஒரு கிறுக்கல்
என்னவளே
உன் நேசத்தை
அளவுகோல் கொண்டு
அளக்கவா முடியும்
அள்ள அள்ள குறையாத 
காதல் தான் நம் காதல் ..

உன்னை வர்ணிக்க
என்  தமிழ் மொழியில் ...
வார்த்தைகளை தேடி தேடி
கலைத்து போகிறேன்  ...
பார்க்காமலே காதல்
கொள்ள முடியுமா
என்று வினா எழுப்பிய நானே 
பதிலாக இன்று ...

என்னவளே நீ
விதைத்த காதல் விதையை 
நெஞ்சம் என்னும்
கருவில்  சுமந்தேன்  ...
பிரசவிக்கும் முன்னே
மரணத்தை தழுவியது
உன் பிரிவால் ...
நீ கடைசியாக
பேசிய வார்த்தைகள்
பல கோடி முறை
என் செவிகளில்
ஒலித்து கொண்டிருக்கிறது

என்னவளே
அதில் உன் முழு காதலை
நீ உணர்த்தியதாக உணர்ந்தேன்
நீ உணர்த்திய பிரிவு கூட
காதலாக புரிந்து கொண்டேன் 
என்னவளே
இன்னமும் உன்னை
தவறாக நினைக்க
முடியாமல் தவிக்கிறேன்
என்னவளே
நீ என்னை பிரிந்து சென்றாலும்
உன்னிடம் நியாயம்
இருக்கும் என்று மட்டுமே
நினைக்க தோன்றுகிறது

என்னவளே
என்னை ஒரு நொடியாவது
நீ நினைத்து பார்ப்பாயா
என்னவளே நீ
என்றாவது வருவாய்
என்ற நினைவில்
காற்றோடு கலந்து
உனக்காக எழுதுகிறேன்
இந்த கிறுக்கலை ....
அன்று நான் இல்லமால் போனாலும்
என் எழுத்துகள்
இந்த கிறுக்கனின்
காதலை வெளிப்படுத்தும்

மெய்யாக பேசுவது மட்டும்
காதல் அல்ல ...
மெய் மறந்து பேசுவது
தான் காதல்
உலகில் மிக அழகான தவறு காதல்
« Last Edit: May 16, 2018, 01:33:17 AM by Socrates »

Offline SweeTie

உன் நினைவுகள் வருடும் தருணம்
என் உணர்வுகள் விழித்துக்கொள்ளும்
காற்றினில் பரவிடும் உன் வாசம்
என் மூச்சினில் கலந்துவிடும்.

உறக்கத்தில் கலைந்திடும்  கேசம்
உன் தழுவலில்  சுகம் காணும் 
பித்தன்  நீ பிதற்றும்  வார்த்தைகள்
என் செவிகளில் துதி பாடும்.

விண்ணில் மினுங்கும் தாரகைகள்
துயில் கொள்ளும் நிலா முத்தத்தில்
மண்ணில்  உதித்த  காதலனே  - என்
கண் மடலில்  உறங்க  வருவாயா?

கொலுசு சத்தம் கேட்கும் கணங்கள்
சுழலும்  உன் கண்கள் நாற்புறமும் 
பசும் புல்மேல் விழுந்த பனித்துளிபோல்
தீரா இன்பம் நீ   பெறுவாய்

இரவும் பகலும் தெரிவதில்லை 
சுகமும் துக்கமும் புரிவதில்லை   
இருவர்  உயிரும் ஒன்றாகி  -  துவி
சக்கரவண்டி  போலானோம் 

அந்தி மயங்கும் வேளையிலே
உன்னை பிரிய மனமின்றி
பிரிந்து செல்லும் நேரங்கள்  - நான்
புளுவாய்த்  துடித்துப் போகின்றேன்.

சோலைக் கிளிகள் போலானோம்
காதல் மொழிகள்  பேசுகிறோம்
வாழ்தலில் காதல் போதை என்றார்
காதலில் மீண்டு  வந்தவர்கள். 

 

Offline joker

 • Sr. Member
 • *
 • Posts: 499
 • Total likes: 1506
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பலநாள் இரவில் என் தூக்கத்தை
ஆக்ரமித்தவள் நீயே

என் காதலை சொல்ல எத்தனித்து
வார்த்தை வர மறுத்து என்னை நானே
வெறுத்த நாட்கள் ஏராளம்

காதல் சொல்ல வாங்கிய மலர் கூட
மனம் மாறி மணம் வீச தவறலாம்
ஆனால் என் காதல் என்றும் மாறாதே

என் மௌனம் சொல்லாத காதலை
என் வார்த்தைகள் தான் சொல்லிடுமோ

ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அலைகடல்
போன்றதல்ல என் காதல்

பொக்கிஷம் பல உடன் இருந்தும்
அமைதியாய் இருக்கும் நடுக்கடல் போல
என் காதல்

தொலைபேசி அழைப்பு ஒலிக்கும் போதெல்லாம்
உன் முகம் வந்து வந்து போகிறது

அரட்டை அரங்கத்தில் ஓசை இல்லா பல குரல் கேட்பினும்
உன்னிடம் இருந்து வரும் ஒரு குறுந்செய்திக்கு
காத்திருப்பதே சுகமாகி போனதெனுக்கு

என் இதயத்தை உன்னிடம் கொடுத்துவிட்டேன்
அன்பே என்று நீ
என் இதயத்தில் இருப்பதை அறிவாயோ ?!


என் காதல் அது நீ உணரும் வரை
சுகமான வலி மட்டும் மிச்சம் !

« Last Edit: May 17, 2018, 02:10:52 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

சில உறவுகளுக்கு பெயர் உண்டு
உன்னை பார்த்தபொழுது வந்த உணர்வுக்கு
பெயர் தெரியாமல் தள்ளாடுகிறேன்.

காதல் என்று சொல்லி
உன்னை காயபடுத்தவும் மனமில்லை
சொல்லிய காதலை மறுத்துவிட்டால்
என்னோடு முடித்துவிடவும் மனமில்லை

காதலுக்கு மொழி தேவை இல்லை
உன் இமை திறந்த பார்வை போதும்

சுடும் என தெரிந்தும் நிலவு
சூரியனை விடுவதில்லை
வலிகள் தரும் என்னும் போதினிலும்
காதல் செய்யாதவர்கள் யாருமில்லை

அடை மழையினிலே குடைசாய
காதலி நீ என் அருகினிலே
குளிர் வீசும் நேரத்தில்
தேன் ஓன்று என்னுடன் தேணீர் அருந்துகிறது.

இரு இதயம் பிரிக்க யார் வந்தாலும்
இரு இதயமும் ஓர் உயிரென வாழ்ந்து காட்டுங்கள்...     அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்


« Last Edit: May 17, 2018, 02:33:48 PM by JeGaTisH »

Tags: