Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 203  (Read 681 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 203
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline AshiNi

 • Full Member
 • *
 • Posts: 145
 • Total likes: 976
 • Karma: +0/-0
 • Gender: Female
 • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
என் ஆசை மகளே செல்ல கண்மணி...
  என் துயர் உரைக்க கவிஞனாகிறேன் பொன்மணி...
 
உனக்காகத்தான் அப்பா ஜீவன் வாழ்கிறேனேடி...
  உன்னை வாழ வைக்கத்தான் தினம் சாகிறேனடி...

உன் தாயும் நமை விட்டு வேறு வாழ்வு தேடினாளடி...
  கூராய் பாயும் சொற்கள் தந்து எமை விட்டு ஓடினாளடி...

பாலூட்டி உன்னை நெற்றி முத்தமிட்டவள்,
  இன்று கண்களில் இரத்தம் வரச் செய்தாள்...
சீராட்டி  நம்மை மூச்சாய் சுவாசித்தவள்,
  இன்று வன்பேச்சினால் இதயம் நெய்தாள்...

ஐந்தடி பெண் மானவள், உணர்வற்ற தூணானாள்!
  கண்ணடி சில்லென வீசியவள், கல்லடி முடிவற்று வீசுகிறாள்!

ஆப்பிள் பழமாய் நிதமும் இனித்தவள்,
  பாகற்காயாய் நாவிட்கு கசக்கிறாள்...
மழையென குளிராய் பொழிந்தவள்,
  எரிமலையென சுட்டு அழிக்கிறாள்...
அக்கறையால் எமை சொக்க வைத்தவள்,
  இன்று வேதனையில் சிக்க வைக்கிறாள்...

மல்லிகை வாசம் வீசும் என் காதலும்
  அவளை உருக்கவில்லை...
தித்திக்கும் மாம்பழமான உன் பாசமும்
  அவளை மயக்கவில்லை...

எவனோ ஒருவனுக்காய் வீடு பிரிந்தாள்...
  அவனே உலகம் என போற்றித் திரிந்தாள் ...

பிஞ்சு உன்னை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை...
  கல்வி ஞானம் இல்லாததால் நல்ல தொழில் கிடைக்கவில்லை...

உன்னில் அத்தர் மணம் வீசச்செய்ய,
  என்னில் புழுதி மணம் பரப்புகிறேன்...
உன்னில் மழலை பசித்தீர்க்க,
  என் உதிரத்தை வியர்வையாக்குகிறேன்...
 
கூலித்தொழிலால் உன் சிணுங்கல்கள் சிதைப்பேன்...
  காயங்கள் பல கண்டும் உன்னை சிறப்பாய் வளர்ப்பேன்...

அயராது உழைத்து உன்னை விண்ணளவு உயர்த்துவேன்...
  உன்னை பிரிந்த தாய்க்கு நானும் ஓர் தாயுமானவன் என பாடம் புகட்டுவேன்...!!!   
« Last Edit: October 23, 2018, 02:13:52 PM by AshiNi »

Offline thamilan

கல் சுமப்பவனே
கவலை வேண்டாம்
ஒன்றை ஒன்று சுமப்பதிலேயே
இந்த உலகம் சுழலுகிறது

நம்மை நம் தாய் சுமந்தாள்
நம்மையெல்லாம் இந்த
பூமித்தாய் சுமக்கிறாள்
இந்த பூமியையும் அண்ட  சராசரங்களையும்
ஈர்ப்புவிசை தாங்கி நின்று சுமக்கிறது 

கல் சுமப்பதும் மண் சுமப்பதும்
ஒன்றும் இழிவான தொழில் அல்ல
அந்த சிவனே
பிட்டுக்கு மண்சுமந்த கதையும் உண்டு

மற்றவரை ஏமாற்றாமல்
களவு செய்யாமல் பொய் சொல்லாமல்
உன் உடல் உழைப்பால்
உழைக்கும் எதுவுமே உன்னதமானதே
கல்சுமைப்பது உன் உடம்பின் வலிமைக்கு
ஒரு எடுத்துக்காட்டு

என்ன தொழில் செய்கிறாய் என்பது
ஒன்றும் பெரிய விடயம் அல்ல
ஊரை  ஏமாற்றி 
மற்றவர் வயிற்றில் அடித்து
கூடி கோடியாய் சம்பாதிக்கும்
கோடிஸ்வரர்களை விட
நீயே உன்னதமானவன்
உன் உழைப்பால் நீ சிந்தும்
நெற்றி வியர்வையால்
உன் குடும்பம் நிம்மதியாக
உலகினில் வாழ்கிறது என்று நினைத்துப் பார்
உன் உழைப்பின் மேன்மை
உனக்கு புரியும்

நீ சுமக்கும் ஒவ்வொரு கல்லும்
கோபுரமாக கட்டிடங்களாக
வானுயர உயர்கிறது என்று  பெருமை கொள்
அந்த கோபுரங்களினதும் கட்டிடங்களினதும்
சிமெந்து மண் கலவையுடன்
உன் வியர்வையும் கலந்திருக்கிறது என்று
கர்வம் கொள்

செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமை தான் நமது செல்வம்
கையும் காலும் தான் உதவி
கொண்ட கடமை தான்
நமக்குத் பதவி 

Offline JeGaTisH

தலையின் மேல் மலையைக்கூட  தூக்க நினைக்கிறேன்
அடுத்தவேலை சோற்றுக்காக .

நம் உடலையே ஆட்டிப் படைக்கும் தலையின் மேல்
எத்தனை எத்தனை சுமைகளடா?

குடும்ப சுமை தூக்கி நடக்கவேண்டிய காலத்திலே
பிறர் வாழ அவர் சுமை  தூக்கி நடைப்பிணமாக நடக்கிறேன் .

கடவுழும் காண்கிறார் என் சுமையை
பிறகு ஏன் என்னைக் காப்பாற்றவில்ல்லை 
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி 
பெற்றார் என்பதை பிறர்சொல்லி கேட்டேன் .

கஷ்டம் என்பது மனிதனை நல்வழி படுத்தும் ஆயுதம்
அதுவே பிறர் கை கொடுங்கோலாக மாறிவிடுகின்றது .

இன்று பூமி மண்ணை தலைமேல் தாங்கி  செல்கிறாய்
என கவலை கொள்ளாதே !
என்றோ ஒரு நாள்  உன் பூத உடல் மண்ணுள் செல்லும் போது
அந்த பூமியே உன்னை அன்புடன் தாக்கிக்கொள்ளும்.         அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்
« Last Edit: October 21, 2018, 08:08:43 PM by JeGaTisH »

Offline பொய்கை

 • Full Member
 • *
 • Posts: 108
 • Total likes: 788
 • Karma: +0/-0
 • Gender: Male
 • யாகாவராயினும் நாகாக்க...


கூலி தொழிலாளி என்
குறை கேட்க வாருமையா
பாவி என் அவலத்தை
படமெடுக்க வாருமையா

ஏழை என் மனசுக்குள்
எத்தனையோ சுமை இருக்க
கல்லு சுமையை நானும்
காலமெல்லாம் சுமக்கிறேனே

பெத்த தாயும் என்  சுமையை
பத்து மாசத்தில் இறக்கி வச்சா
ஏழையவ பெத்தபுள்ள  நானும்
எத்தனை நாள் சுமப்பேனோ

கால்வயிறு கஞ்சோடு
கல் தூக்கி சுமக்கையிலே
காந்தி போட்ட நோட்டுதானே
கண்முன்னே வருகுதையா

அடிமேல அடிவச்சு
அஞ்சுமாடி போறேனே
படிப்படியாய்  நான்மெலிஞ்சு
கட்டையில வேவேனோ ?

கண்ணீருடன் ஒரு கட்டிட தொழிலாளி!
« Last Edit: October 21, 2018, 07:54:05 PM by பொய்கை »

Offline SweeTie

கொற்றவன் சுமப்பது  தேசத்தின் சுமை
கொண்டவன் சுமப்பது  குடும்பத்தின் சுமை
கற்றவன் சுமப்பது அறிவின் சுமை
கல்லாதவன்  சுமப்பது அறியாமையின் சுமை

செல்வந்தர் சுமப்பது செல்வத்தின் சுமை
ஏழைகள் சுமப்பது கண்ணீரின் சுமை 
தோழமை சுமப்பது நண்பர்கள் சுமை
தாய்மை சுமப்பது  பாசத்தின் சுமை

கவிஞர்கள் கவிதையில் கற்பனை சுமை
காதலர் இதயத்தில்  காதலின் சுமை 
மாணவர் வாழ்க்கையில்  பாடங்கள் சுமை
மனையாள்  சுமப்பது மனையின்  சுமை.

பூமித்தாய்    சுமப்பது  உயிர்களின் சுமை
புத்தகம் சுமப்பது சொற்களின் சுமை
மரங்கள் சுமப்பது  கனிகளின் சுமை
மனங்கள் சுமப்பது சோகத்தின் சுமை

சுமைகளும் வலிகளும் இயற்கையின் நியதி
சுற்றமும் சமூகமும் தருவது  சுமை
வேதனை  சோதனை இரண்டுமே சுமை
மானிடர்  வாழ்க்கையில் என்றுமே சுமைகள் 
 
« Last Edit: October 22, 2018, 09:43:56 AM by SweeTie »

Offline VipurThi

 • Hero Member
 • *
 • Posts: 877
 • Total likes: 1602
 • Karma: +0/-0
 • Gender: Female
 • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
கடல் தாண்டி வந்தாலும்
கஷ்டங்கள் கடப்பதில்லை
கண்மூடிக் கிடந்தாலும்
கடமைகள் ஓய்வதில்லை

குறைந்திடும் ஆயுளில்
குறையாத சுமைகள்
பொறுப்பில்  தவறிவிட்டால்
சுட்டிக் காட்டிடும் உறவுகள்

வட்டமிடும் வயதிலே
வாழ்க்கை பற்றிய குழப்பங்கள்
நால்வரின் விமர்சனத்தால்
வீணாய் போன திருப்பங்கள்

தலை குனிந்தது  சுயவிருப்பம்
சுமையாய் ஏறிக்கொண்டது
என் வாழ்வில் பிறர் விருப்பம்


கோடிகள் குவித்திடும்
வாழ்க்கை என்றாலும்
உன் மேல் திணிக்கப்படும் முடிவுகள்
என்றும் உன் மனதின் சுமைதான்


                               **விபு**Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 678
 • Total likes: 2098
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
என்றும் போல்
அன்றும் சூரியன்
கிழக்கே தான் உதித்தது

அழகு கண்டு , அந்தஸ்து கண்டு
காதல் கொள்ளும் இவ்வுலகில்
அன்பை கண்டு காதல் கொண்டாள் அவள்

கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொண்டு
வீட்டில் வறுமை இருந்தும் என்றும் 
அன்பை வறுமை இன்றி வழங்கும்
என் மனைவி

சின்னஞ்சிறிய எறும்புக்கும் உழைப்பு தேவை படும்போது
நம் கனவை நினைவாக்க
நமக்கும் தேவை தானே யோசி
என உழைக்க வைத்தவள் அவள்

உளி பட்ட கல்லில் தான்
உருவத்தை காண முடியும் கடின உழைப்பு  இருந்தால் தான்
உயர்வை அடைய முடியும் !
என்னும் தாரகமந்திரம் என் தலையணை
மந்திரமாய் தினம் உணர்த்துபவள் இவள்

தீவாளி வரும் நேரம் என் குழந்தை
கேட்ட இனிப்பு மிட்டாயும் ,
என் மனைவிக்கு உடுக்க
கிழியாத ஒரு சேலையும் வாங்க வேண்டும்

என் இதயத்தில் இவர்களை  சுமக்கையில்
என் தலையில் சுமக்கும் எதுவும்
எனக்கு பாரமில்லை"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Evil

 • Hero Member
 • *
 • Posts: 631
 • Total likes: 412
 • Karma: +0/-0
 • Gender: Male
 • iam new appdinu sonna namba va poringa
   
எங்கள் நினைவை  சுமந்து கனவை களைத்து உன்னை இழந்தாயோ அப்பா !!!
   

கனவைக் கலைத்து பாசம் எனும் பாரம் சுமந்து சுமந்து பழகிபோனாயோ அப்பா !!!


கல்லை சுமந்து சுமந்து துயில் எனும் தூக்கத்தை  தொலைத்து  போனாயோ அப்பா !!!


கல்லை சுமந்து சுமந்து தூக்கமே கனவாகிப் போனதோ அப்பா!!!


தனக்காக உழைக்காமல் தனது குடும்பத்திற்காக உழைத்து  உழைத்து ஓடாய் தேய்ந்து  போனாயோ அப்பா !!!


நாங்கள் படிக்க நாளெல்லாம் நடந்து நடந்து நலிவடைந்து போனாயோ அப்பா !!!


கண் இமைக்காமல் கடமை கடமை என்று களைத்து போனாயோ அப்பா !!!


பண்பு எனும் பாடத்தை புகுத்தி  புகுத்தி புழுதியாகி போனாயோ  அப்பா !!!


பண்பு எனும் பாடத்தை புகுத்தி புகுத்தி நீ புழுதித்தனில் தேய்ந்து  போனாயோ அப்பா !!!


குடும்பத்தை கரை சேர்க்க எண்ணி எண்ணி கரைந்தே போனாயோ அப்பா !!!


நித்தம் எங்களை  நினைத்து நினைத்து நிம்மதியை  தொலைத்தாயோ அப்பா !!!


மண்ணை சுமந்து சுமந்து மண்ணிலே மடிந்து போனாயோ மறுபடியும் வருவாயோ                                   
                                                                                          என் மகனாக அப்பா !!!


கண்ணீர் சிந்தி சிந்தி கவலை போக்க  கடவுளானாயோ  அப்பா !!!
                                                        கடவுளானாயோ  அப்பா !!!என்றும் உன்னை மறவா உன் பிள்ளைகள் நாங்கள் அனைவருமே அப்பா !!!
« Last Edit: October 22, 2018, 09:02:04 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Tags: