Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 208  (Read 1720 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 208
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Enigma (a) Mirage அவர்களால் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Online ChikU

 • FTC Team
 • *
 • Posts: 344
 • Total likes: 852
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog

நம்புங்கள்,
இந்த உலகம்
எல்லாருக்கும் ஒரே மாதரியானது அல்ல
அது உங்கள் குற்றமில்லை தான்

யாரோ விதைத்து யாரோ அறுத்து
தெரு சூல் கொண்ட
சிறு குழந்தை அது.
கீழே கிடக்கும் கசங்கிய தாளென
அச்சிறு குழந்தையை கடந்து செல்கிறீர்கள்
அது உங்கள் குற்றமில்லை தான்

ஈன்றெடுத்த குப்பைத்தொட்டி
அச்சிறு குழந்தையின்
வயிறு நிறைக்கும்
என குப்பைத்தொட்டியில் எறிவது போல்
தாராள மனதினாய்
மீதமிருக்கும் பிஸ்கட் துண்டுகளை
எறிந்துவிட்டு செல்கிறீர்கள்
அது உங்கள் குற்றமில்லை தான்

ஓராயிர மனிதக் கூட்டத்தினிடயே
தாங்கி நிற்கவும்
ஏந்தி பிடிக்கவும்
மனிதக் கைகள் இல்லை
உரிமை கொண்டாட உறவுகளுமில்லை
காலத்தை கடத்தி செல்லும் உங்கள் கால்களுக்கு
காலடியில் கிடக்கும்
நாதியற்ற பூ ஒரு பொருட்டில்லை
அது உங்கள் குற்றமில்லை தான்

பெற்றால் தான் பிள்ளையெனில்
ஏதுமற்ற இக்குழந்தை தாங்கி நிற்கும்
இந்த பூமி தாய்
உங்களினும் மேலானவள்
வீடற்ற இக்குழந்தைக்கு
வீதியே வீடென்றாகிபோன
இந்த நடைபாதை
உங்களினும் மேலானது
உதறிச் சென்ற உறவுகளிடையே
அன்பு தேடும் இக்குழந்தைக்கு
தாயின் அரவணப்பைத் தரும்
சிறு நாய் கூட
உங்களினும் மேலானது தான்
நம்புங்கள்,
இந்த உலகம்
எல்லாருக்கும் ஒரே மாதரியானது அல்ல
அது உங்கள் குற்றமில்லை என்று
ஒதுங்கிப் போவது
சர்வநிச்சயமாக
உங்கள் குற்றம் தான்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline RishiKa

 • FTC Team
 • *
 • Posts: 146
 • Total likes: 681
 • Karma: +0/-0
 • Gender: Female
 • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..

ஒ! மனிதர்களே ! மனிதர்களே !
இங்கே மனிதம் விற்கவில்லை!
நீங்கள் இன்னும்....
மானுடம் கற்கவில்லை

மிருகங்கள் நாங்கள்...
மிகவும் நன்றி உள்ளவர்கள்!
நீங்களோ...
கருணையை கொன்று ...
கற்சிலைகளாய்  நிற்கிறீர்கள் !

அனாதை குழந்தைக்கு ....காவல் நான் !
அதை பெற்றெடுப்பதில் மட்டும் ஆவல் நீங்கள்!
உங்கள் காதல் என்று பெயர் சொல்லும் ...
காமத்துக்கு பலி ..இச்சிறுபிள்ளை!

கயவர்களின் கையில் கிடைத்தால்...
காலன் பிடியில் ....
உங்களை போல் நல்லவர் ..
காப்பாற்றினால்...பொற்காலம் அவன் கையில் !

போதும் வேடிக்கை மனிதர்களே !
இங்கு வியாபாரம் நடக்க வில்லை!
மனிதம் ஏலம் போடுவதற்குள்...
மனசாட்சியோடு வாருங்கள் !

நாளைய இந்தியா இங்கு  உறங்குகிறது!
நேற்றைய தூண்களே !
இன்று உங்கள் மானுடத்தின் ..
மகுடம் தரித்து நிரூபியுங்கள்
Offline JeGaTisH

பெற்றவள் என்னை  கைவிட்டபோது 
விதி எனக்கு வீடானாது !

தாயின்  பாசத்தை மறந்துவிட்டேன்
தரையே எனக்கு மடியானது!

அம்மா என்று சொல்ல யாருமில்லாமல் 
அணைப்பதுக்கு ஓர் கையில்லாமால்
காத்திருந்த  காத்தாடியானேன்!

உறவென கிடைத்தது! எனக்கென இருத்தது  !
நிழல் என புரிந்தது! பிராணியின் பாசம் !

நித்திரையில் கூட நடைபாதை சத்தம்
நிரந்தரமில்லா வாழ்வில் நிம்மதி இல்லை !

எவர் எவரோ பார்த்து போகிறார் 
என்னை தூக்க ஒரு கை இல்லை
ஈன்றவளுக்கே  என்னைப்பிடிக்கவில்லை
இனி என்னை யாருக்கு பிடிக்கும்!

வித்திட்டவன் எவனோ
அவனே நீரையும் பாச்சுவான்
கவலை மறந்து கண்ணுறங்குகிறேன்
காலங்கள் கனியும்   என்ற  நம்பிக்கையுடன் !!!
  அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்
« Last Edit: December 17, 2018, 06:05:32 PM by JeGaTisH »
அன்புடன் SINGLE  சிங்கக்குட்டி  ஜெகதீஷ்


Offline KoDi

ஆரவார பொதுவெளியில்
ஓடித்திரியும் மக்கள் கூட்டம்
வந்தவேளை முடிக்க  எண்ணி
சக்கரமாய் சுழலும் கூட்டம்

நடந்து செல்லும் பாதையில்
காணக்கிடக்கும் கண்மணியை
கண்டுக்கொள்ள நாதியின்றி   
கடந்துசெல்லும்  கயவர்கூட்டம்

கட்டிலிட  அன்னையில்லை
தொட்டில்கட்ட தந்தையில்லை
சொல்லிக்கொள்ள சொந்தமில்லை
சுமந்துதிரிய  சுற்றமில்லை
 
கோடிகள்  செலவழித்து
குழந்தைக்காய் ஏங்கிநிற்க
கவனியாதார் வீட்டில்
கரு தரித்ததெதனாலோ?

குப்பைக்கு சரிநிகராய்
வீதியிலே ஒரு பிள்ளை
தூக்கிக் கொஞ்ச ஆளில்லை
துக்கமிது எங்கு சொல்ல?

இதயத்தை தொலைத்துவிட்டு
இயந்திர மனிதர்களாய்
அன்பு காட்ட மனமில்லா
சுயநல பேய்களானோம்

கூத்தாடிக்கு கூடும் கூட்டம்
குழந்தைக்காய்  கூடவில்லை
பொதுவெளியில் காட்சிப்பொருளாய்
புரளுகிறது நம்குழந்தை

பாலகன் அறியவில்லை
அது படுக்கையல்ல பாதையென்று
பாழுலகம்   உணரவில்லை
அது  பச்சிளம் குழந்தையென்று
 
பாதையிலே  பட்டுக்கம்பளம்
பசியால்  துவண்டிருக்க
கண்பொத்தி செல்கிறது   
கருணையில்லா மாந்தர் கூட்டம்
 
மயிலிறகால் சுத்தம் செய்து
எறும்பு நீக்கி நடந்த இனம் 
தலைகுனியும் நேரமிது 
நாயோடுறங்கும் குழந்தைக்கண்டு
« Last Edit: December 17, 2018, 04:08:00 AM by KoDi »

Offline SweeTie

வாழ்விடம்   தேடும் மானிடர்  இவர்கள்
மானிடம்  தொலைந்ததா?   
என்னவொரு விசித்திரமான உலகம் 
தொலைந்ததை தேடுவதே வாழ்க்கையாகி
 தினம் தினம் எதையோ தேடுகிறோம்

தூங்காத இரவுகளை நடைபாதையில் தொலைத்து
தூக்கத்தை  தேடும்  விந்தை  மனிதர்கள் 
குப்பை மேட்டிலே கொட்டிய எச்சில் இலைகளை
வளித்துண்டு  மிருகங்களுடன் உறங்கும் வாழ்க்கை 
ஏழைகளின் இந்த வாழ்க்கைக்கு யார் காரணம்?

ஏழைகளை மிரட்டி வாங்கிய வோட்டுகளால்  ஏறிய   
நாற்காலிகளை  சூடாக்கி இறங்க மறுக்கும்
சுயநலவாதி அரசியல் கழுகுகள் வாழும் குட்டையில்
சமரச பேச்சுக்கே இடமில்லை என்றபோது
ஏழைகளின் உறைவிட பேச்சுக்கு  எங்கே இடம்?

நாளாந்த தேவைகளின் விலையேற்றங்களை விழுங்கும் 
மானிடர் உணர்வுக ள் விலை கொடுக்கவொண்ணா விழுமியங்கள் 
ஊழல்கள் நிறைந்த மாண்புமிகு சேவைகள்
 மருத்துவம்  கல்வி  உள்நாட்டுசேவைகள் என பலதும்
அரசியல்வாதிகளின் கைலாகு பெறும் சாம்ராஜ்யங்கள் இன்று.

நாட்டின் மானியங்களை  தடுத்து நிறுத்தி
விழுமியங்களை  மண்ணோடு மண்ணாக புதைத்து
சீன நாட்டு மலிவு விற்பனையில் அதி மோகம் கொண்டு
கண்ணியமான கனவான்கள் பெறும் கைலாகு 
நம் ஏழைகளின் வாழ்விடங்களை நியமிக்குமா?

கருப்பு பணத்தை  வெண்மையாக்கும் லாண்டரிகள்
தேடி ஓடும் கருப்பு மனம் படைத்த கந்துவட்டிகள்
பஞ்சணை மெத்தையில் படுத்துறங்கும்  பிரம்மாக்கள்
தங்கள் சமுதாயத்தின் ஒரு அங்கமான ஏழைகளின்
வதிவிடங்களை நியமிக்கத்தான் இணங்குவார்களா?

மேடை போட்டு பேசும்  நாயகர்களே!
நாட்டின் மேலாண்மை பேசும்  அரசியலாளர்களே!
சிந்தியுங்கள் செயல் படுங்கள்
மக்களை மாக்களாக  எடைபோடாமல்
ஏழைகளுக்கு வதிவிடம்  கொடுங்கள்
மனிதம்   வாழட்டும்!!
 

Offline JasHaa

 • Jr. Member
 • *
 • Posts: 83
 • Total likes: 363
 • Karma: +0/-0
 • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!

தெருவில்  உறங்கும்  எமது 
தேவதையின் பிள்ளைகள்  இவர்கள்...

யாரோ  ஒரு ஆணின் இச்சைக்கு
பலியான  மலரின்  மகரந்தமோ

காதல் எனும் மாயவலையில்  சிக்கி 
சீரழிந்த  செண்பகப்பூவின் நறுமணமோ 

நவநாகரிகத்தின் உச்சத்தில் 
போதையோடும்  மோகத்துடனும் உதித்த 
வான் நட்சத்திரமோ 

சின்னஞ்சிறு  சிசுவை 
சிதைத்ததனால்  புழுதியில் 
கிடக்கும் மாணிக்கமோ 

அரை வயிற்றை  நிரப்ப 
அன்றாடம்  இரையாகும்  தாசிகுல
தீஜ்சுவை  சுனையோ 

தாசியோ   தாரகையோ 
சதியோ  ￰சந்தர்ப்பமோ
மொட்டோ  மலரோ  ...

உதித்த கணங்கள் வேறாயினும்  உதித்தது
உருபெறுமோ இல்லை  உதிர்ந்துவிடுமோ ?
 
தேவதைகளுக்கு  ஒரு  வேண்டுகோள்   
விந்தையாடும்    இப்புவியில் 
இச்சிசுக்கள்   விளையாடுமோ ?  இல்லை
சருகாகுமோ?

ஆறறிவு கொண்ட மிருகம் 
வேடிக்கை  பார்க்க
ஐந்தறிவு கொண்ட மனிதம்
மலர்கிறது  அழகாய் ...
« Last Edit: December 17, 2018, 03:19:02 PM by JasHaa »

Offline பொய்கை

 • Full Member
 • *
 • Posts: 108
 • Total likes: 788
 • Karma: +0/-0
 • Gender: Male
 • யாகாவராயினும் நாகாக்க...
நாயுடன் நித்தம் படுத்துறங்கும்
நவநாகரீக உலகம் - வீதியில்
படுத்திருந்தால் வியக்கும்
விந்தையான உலகம்.

ஆயிரங்கள் விலைகொடுத்த
விலங்கினங்கள் வசதியோடு
அருகருகே உறங்குது - அன்பான
வீடில்லா இரண்டுஉயிர்
வீதியில உறங்குது.

ஏழ்மை நிலைகாரணமாய்
குழந்தை வீதிக்கு வந்ததுவோ?
பெற்றவளை வேசியென
பேர்வாங்கி தந்ததுவோ?

சிவனை தழுவிட்ட
சக்தியை ஒத்ததிது
பைரவரை தழுவிய
பச்சிளம் குழந்தையிது

பார்த்ததும் வணங்குகிறேன்
பரமனிடம் வேண்டுகிறேன்
பாசமான இந்த உயிர்களை
பாதுகாக்க ஓடுகின்றேன்..
« Last Edit: December 17, 2018, 06:11:52 PM by பொய்கை »

Offline ThoR

 • FTC Team
 • *
 • Posts: 636
 • Total likes: 328
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I Love the world ... Love you lot
ஆடம்பர மாளிகை வேண்டவில்லை
இளைப்பாற ஒருகுடிசை வேண்டுகின்றோம்

பலவகை உணவுகள்  வேண்டவில்லை
ஒருவேளை உணவையே  வேண்டுகின்றோம்

பணத்திற்காக நிறம் மாறும்
பச்சோந்தி கூட்டத்திற்கு
பணிவிடை செய்யும் மனித  இனமே

வறுமையில் பிறந்து நிம்மதியிழந்து
வாழ்க்கையை தொலைத்துவிட்ட இவர்களை

உன் ஒரு கண்ணினாலாவது சற்று
உற்றுநோக்கிப்பார்

ஒருகோடி அம்புகள் இவர்கள்
உள்ளத்தை துளைத்திருக்கும்

உயிரை இழந்துவிட்டு வெறும் உடலைமட்டும்
மண்மீது சுமக்கும் இவர்களுக்கு
உயிர் கொடு

உதவுகின்ற மனமிருந்தால்
உன் உதவிக் கரங்களை நீட்டி
உயிர் கொடு...!
« Last Edit: December 17, 2018, 10:48:43 PM by ThoR »

Tags: