Author Topic: இன்னிசை அளபெடை - 7  (Read 230 times)

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 301
 • Total likes: 769
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
இன்னிசை அளபெடை - 7
« on: March 15, 2019, 11:39:52 PM »
இன்னிசை அளபெடை - 7

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் ராஜா

இந்த பாடலை இப்பொழுது ரீமிக்ஸ் பண்ண முடியுமா என்றால், சத்தியமாக முடியாது. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் க்ளாசிக் பாப்(Pop) பாடல் இது. இந்த பாடலை ஏன் ரீமிக்ஸ் செய்ய வேண்டும்? இன்றளவும் கூட fresh feel கொடுக்க கூடிய பாடல் இது. யுவன் சங்கர் ராஜாவும் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்ய முயன்று, எதை செய்தாலும் அது பாடலை டிஸ்டர்ப் செய்யும் வகையில் அமைந்ததால் அந்த எண்ணத்தையையே கைவிட்டிருக்கிறார். சில பாடல்களை ரீமிக்ஸ் செய்யாமல் அதன் சுயதன்மையோடு இருக்க செய்வது தான் அந்த இசைக்கும் நாம் செய்யும் நியாயம்.

ரீமிக்ஸ் என்கிற பெயரில் பல பாடல்களின் ஆன்மாவை சில இசையமைப்பாளர்கள் கொன்றிருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் டிஜிட்டலி ரீமாஸ்டரிங்(Digitally remastering) செய்வது போல வாத்தியங்களின் ட்ராக் மற்றும் வோக்கல்ஸின்(Vocals) ட்ராக்களை தொந்தரவு செய்யாமல் ட்ரபில்(Treble) மற்றும் பாஸ்(Bass)ஐ வளப்படுத்தி noice reduction செய்து மறு உபயோகப்படுத்தினாலே அட்டகாசமாக இருக்கும். இசையும் சிதைக்கப்படாமல் இருக்கும். இன்னொரு விஷயம் அந்த பாடலை இசையமைத்தவர்களாலேயே அதனை ரீமிக்ஸ் செய்வது கடினமாக இருக்கும்.

இந்த பாடலை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதே கடினமாக இருக்கிறது. உண்மையில், கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக ஒரு நாளின் பெரும்பாலான நேரங்களின் இந்த பாடலை மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இன்னமும் என்னால் முழுமையாக அனாலிஸிஸ் பண்ண முடியாமல் உழன்று கொண்டு தான் இருக்கிறேன். மேலோட்டமாக கேட்கும் போது நல்ல beat  இருக்கும் பாடல் என்பது போல தான் தோன்றும். ஆனால் இந்த பாடலில் எத்தனை எத்தனை layers இருக்கிறது என்பதை ஆராய்ந்து அனுபவிக்கவே அவ்வளவு ஆச்சரியமாக ஆயாசமாக இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இசையை எப்படி இளையராஜா அந்த காலத்தில் கொண்டு வந்தார் என்பது இப்பொழுதும் கூட பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

Beatsக்கு போவதற்கு முன்பு இந்த பாடலின் மற்ற சில சிறப்பம்சங்களாக எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன். இந்த பாடல் fusion வகையான பாடல். Electro funkல் இருந்து Jazz வகைக்கு transitionஆகும் ஆகச் சிறந்த பாடல். Funk என்பதே Jazz, Rythms, Blues இவற்றின் கலவையான ஒரு இசைவகை தான். Funkல் பாஸ் கிட்டார்(Bass Guitar), எலக்ட்ரிக் கிட்டார், ட்ரம்ஸ், ட்ரம் மெஷின்ஸ், கீபோர்ட் etc. போன்ற இசைக்கருவிகள் இருக்கும். Jazz வகையின் கீழும் இந்த இசைக்கருவிகள் வருவதோடுமட்டுமல்லாமல் காற்றுக் கருவிகளாலன க்ளாரினட், சாக்ஸ்போன், Brass கருவிகளான ட்ரம்பட், ட்ராம்போன், கம்பி கருவிகளான வயலின், வயலா, செல்லோ என பல instrumentationஐ உள்ளடக்கியது.

அப்படி இருக்கும்பொழுது, இந்த பாடலின் சிறப்பென்ன? ஒரு எலக்ட்ரோ ஃபன்க், ஜாஸ் இசை கலவையை இளையராஜ ட்ரம்ஸ், அதுவும் எண்பதுகளின்(80s) ட்ரம்கிட்களில் ஒரு க்ளாசிக் பாடலை நமக்கு கொடுத்திருக்கிறார்.தி பெஸ்ட் எல்க்ட்ரோ இசைக் கோர்வைகளில் கூட வெறும் ட்ரம்ஸ் மட்டும் வைத்த இசைக்கோர்வை கிடையாது. எவ்வளவு பெருமை பட வேண்டிய விஷயம் இது!

பாடலுக்குள் போகும் முன்னர் ட்ரம்கிட்டை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. இதை தெரிந்துகொண்ட பின் பாடல் கொடுக்கும் அனுபவமே வேறு விதமாக இருக்கிறது. சிலருக்கு கீபோர்ட்,பியானோ இசை பிடிக்கும், சிலருக்கு வயலின், சிலருக்கு கிட்டார், போலவே நான் ஒரு ட்ரம்ஸ் பைத்தியம். பொதுவாகவே எனக்கு percussion instruments மீது அலாதி ஆர்வம் உண்டு. மற்ற வாத்தியங்கள் உற்சாகமான மற்றும் துயரம் ததும்பும் இசையை கொண்டுவரக்கூடிய ஆற்றல் இருந்தும் எனக்கு எப்பொழுதும் percussion வாத்தியங்கள் தான் விருப்பமானது. ஏனெனில் percussion வாத்தியங்கள் தான் நம்மை எப்பொழுதுமே உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். எத்தனையோ நாட்கள் கைகளை காற்றில் அலைபாயவிட்டு ஸ்னேர் ட்ரம்யும், டாம்-டாமையும், சிம்பல்களையும் இசைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். அது எனக்கொரு தீராக் கனவு போல.

பலவிதமான தாளக் கருவிகள்(Percussion instruments)
இணைத்து உருவாக்கப்பட்டது தான் ஒரு ட்ரம் கிட்.
அதாவது பலவித ஓசைகளை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் முழுமையான ட்ரம் கிட் உருவாகி இருக்கிறது.

ஒரு சாதாரண ட்ரம்கிட் கீழிருக்கும் படத்தை ஒத்ததாக இருக்கும். ட்ரம்கிட்டின் முக்கியமான ட்ரம் Snare drum இதன் ஓசை மார்ச்சிங்(Marching) செய்யும்பொழுது ஒலிக்கும் ஓசை. அடுத்து Bass drum எனப்படும் கால் பெடல்களால் இசைக்கப்படும் ட்ரம். டாம்-டாம்(Tom -Tom)களில்
நிறைய வகைகள் உண்டு. தேவைக்கேற்ப டாம்-டாம்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அளவிற்கேற்ப இந்த டாம்-டாம்களின் Pitchஉம் மாறுபடும். அடுத்து Cymbals - Hi-Hat, Crash மற்றும் Ride cymbalகள் தான் பிரதான crashing சத்ததிற்கு உபயோகப்படுத்துவது. க்ராஷ், ஸ்ப்லாஷ் (crashhhh, splashhh) இது போன்ற ஓசைகளை உருவாக்க கூடியவை Cymbalகள்


பாடலுக்கு செல்லும்முன் இந்த basic drum kit சத்தங்கள் ஒருமுறை கேட்டுக்கொண்டால் பாடலை எளிதாக கிரகித்து கொள்ள ஏதுவாக இருக்கும். கீழிருக்கும் சுட்டியில் basic drum kitல் இருக்கும் ட்ரம்களைப் பற்றி எளிமையாக விளக்கியிருப்பார்கள், [\color]

<a href="https://www.youtube.com/v/9Mb-NQ2koWA&amp;t=10s" target="_blank" class="new_win">https://www.youtube.com/v/9Mb-NQ2koWA&amp;t=10s</a>

Bass drumல் ஆரம்பிக்கும் பாடல் தொடர்ந்தது மெதுவாக 0.07ல் tom-tomகள் இணைகிறது. டாம்டாம்களில் வெரைட்டியாக 0.07ல் இருந்து பல்லவி ஆரம்பிக்கும் வரை அருமையான பீட்டை கொடுத்திருக்கிறார். பாடல் முழுதுமே பெரும்பாலும் டாம்-டாம்களை தான் உபயோகப்படுத்தி இருக்கிறார்.

பாடலின் பல்லவியின் ஆரம்பத்தில் இருந்து இருந்து முடியும் வரையிலும் bass ட்ரம் பீட் ஒன்றும், crash symbal பீட்டும் பின்னணி லேயரில் கொண்டே இருக்கிறது. அதே போல் பல்லவி முடிந்ததுமே டாம்-டாம்களை வைத்து cheerfullஆன பீட்டை கொடுத்திருப்பார். 1:08ல் தொடங்கும் இதில் டாம்-டாம்களுடன் bass drum மற்றும் ஹை-ஹாட் சிம்பலும் (Hi-Hat Cymbal) இணைந்து அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக 1:24ல் இருந்து 1:30 வரைஅதாவது சரணம் ஆரம்பிக்கும் முன்பு வரை உற்சாகம் ததும்பும் பீட் நிறைந்திருக்கும்.

சரணம் ஆரம்பித்ததும் பல்லவி போலவே bass drum மட்டும் பிரதானமாக ஒலித்துக் கொண்டிருக்கும், 'நிலவும் மலரும் செடியும் கொடியும் வரும் இடம் மட்டும் டாம்-டாம் பாடல் வரிகளோடு இணைந்து ஒலிக்கும். மறுபடியும் பல்லவியில் எந்தவொரு மாற்றமும் இல்லை. ' கோட்டை இல்லை கொடியும் இல்லை என்கிற வரியில் அப்பவும் நான் ராஜா என்கிற இடத்திலும் அதே டாம்-டாம் வரிசை ஒலிக்கும்.


<a href="https://www.youtube.com/v/2CYWWDLWv04&amp;t=40s" target="_blank" class="new_win">https://www.youtube.com/v/2CYWWDLWv04&amp;t=40s</a>

இப்பொழுது தான் அட்டகாசமான interlude வருகிறது. இந்த பாடலில் நான் வெகுவாக ரசிக்கும் இடம் இது தான். இளையராஜா இந்த இடத்தில் தான் Jazz transitionல் Scat singing முறையை உபயோகப்படுத்தியிருப்பார். Scat singing எனப்படுவது அர்த்தமற்ற வார்த்தைகளை(vocables) வாத்தியக் கருவிகளின் ஒத்திசைவோடு அமைக்கப்படுவது. "பப்பா பாபப்பாபா" என ஆரம்பிக்கும் இந்த இடம் நம்மளையும் கூட வாய்த்தாளம் போட வைக்கும். இந்த இடத்தில் scatடுடன், சொல்லப் போனால் அதற்கு முன்னரே ஆரம்பிக்கும் டாம்டாம் scatடின் பின்னணியில் அதை தொந்தரவு செய்யாத வகையில் அமைந்திருக்கும். 'தகுதிகுதகுதிகு'  என்று முடியும் இடத்தில் க்ளாப் ஒலியில் டாம்டாம் ஒலிக்கும். இந்த scat பகுதி நாயகன் மற்றும் அவனின் நண்பர்களின் விளையாட்டுத்தனத்தை வெளிப்படுத்துவது போலவே குறும்பாக அமைந்திருக்கும்.தொடர்ந்து இரண்டாம் சரணம் எந்தவித மாறுபாடுமின்றி முதல் சரணத்தை போலவே அமைந்திருக்கும்.

Cymbalஐயும் கூட அழுத்தமாக ஒலிக்க விடாமல் அழகாக அமைதிருப்பார் ராஜா. பாடல் முழுக்க கவனித்து பாருங்கள் overlap ஆகிற எந்த இடமும் சிதைவுறாமல் இருக்கும். அதே போல எந்த ட்ரமின் இசையும் ராஜவின் குரலை dominate செய்யாமல் இருக்கும். வேற எந்த கருவிகளும் உபயோகப்படுத்தாமல் ஒரு சவால் போலவே இந்த பாடலை இசையமைத்திருப்பதாக தோன்றும். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. synth மற்றும் bass guitar உபயோக்கப்படுத்தப்பட்டிருந் தாலும் உங்களால் அதை சர்வ நிச்சயமாக கண்டுபிடிக்கவே முடியாது. அது தான் ராஜா மேஜிக்.

இப்படிப்பட்ட நுணுக்கமான பாடல் இன்றளவும் கூட தமிழ் திரையிசையில் வந்திருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரு சீராக பீட் ஒலித்துக் கொண்டே இருக்கும். எதோ ஒரு இடத்தில் அதிகப்படியாக இருக்கிறது என்கிற எண்ணமே தோன்றாது. இந்த மாதிரியான  மாஸ்டர்-பீஸ்களையெல்லாம் எந்த காலத்திலும் ரீமிக்ஸ் செய்திட அனுமதித்திடவே கூடாது. அது தான் இந்த பாடலுக்கு செய்யும் மரியாதை. இதுபோல் ஒரு பாடல் இனி வரலாம், ஆனால் இதைவிட betterஆன electro funk தமிழில் இனி அரிது தான்.

ஏனெனில்,

நேற்று இல்லை நாளையில்லை ராஜா எப்பவும் ராஜா தான்


Digitally remastered Mp3 பாடலை தரவிறக்க கீழிருக்கும் சுட்டியை சொடுக்குங்கள்,

http://friendstamilmp3.in/index.php?page=Special%20Collections&spage=&spage=Digitally%20Remastered%2024%20Bits%20%20ILaiyaraja%20Songs&s1page=Collection%204%20-%20Digitally%20Remastered%2024%20Bits%20%20ILaiyaraja%20Songs


இந்த பாடல் குறித்து மற்றுமொரு Perspective இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே. தெரிந்து கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். மீண்டுமொரு முறை வேறொரு இசையில் தொலைந்துபோவோம்..

உண்டானோம் மெய் தாளத்தில்..
ChikU
« Last Edit: March 16, 2019, 12:18:06 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline சாக்ரடீஸ்

Re: இன்னிசை அளபெடை - 7
« Reply #1 on: March 16, 2019, 11:41:36 AM »
chikuuuu ....ithuvarai neenga panna innisai aalapadailae...the best nu sonna ...athu intha post tha ..semaiya iruku nethu nightae padichiten guest la ukathukitu but appo reply panna mudiyala....semaiya iruku ...ennaku pidichathae intha idam tha

 "பப்பா பாபப்பாபா" என ஆரம்பிக்கும் இந்த இடம் நம்மளையும் கூட வாய்த்தாளம் போட வைக்கும். இந்த இடத்தில் scatடுடன், சொல்லப் போனால் அதற்கு முன்னரே ஆரம்பிக்கும் டாம்டாம் scatடின் பின்னணியில் அதை தொந்தரவு செய்யாத வகையில் அமைந்திருக்கும். 'தகுதிகுதகுதிகு'  என்று முடியும் இடத்தில் க்ளாப் ஒலியில் டாம்டாம் ஒலிக்கும். இந்த scat பகுதி நாயகன் மற்றும் அவனின் நண்பர்களின் விளையாட்டுத்தனத்தை வெளிப்படுத்துவது போலவே குறும்பாக அமைந்திருக்கும்.தொடர்ந்து இரண்டாம் சரணம் எந்தவித மாறுபாடுமின்றி முதல் சரணத்தை போலவே அமைந்திருக்கும்.

ennku intha saranam pallavi ellam teriyathu ..but neenga sonna layer layer ah kekum bothu ...semaiya iruku ....sema joperuuuuuuuuu chikuuu  :D :D :D

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 301
 • Total likes: 769
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
Re: இன்னிசை அளபெடை - 7
« Reply #2 on: March 16, 2019, 01:09:33 PM »
பேரன்பும் நன்றியும் Sockyy ப்ரண்ட். இதுல எனக்கு தெரியாத விஷயங்கள் கூட நிறைய இருக்கலாம். அப்படி சிறப்பா இந்த பாடல்ல நீங்க உணர்ந்தத பகிர்ந்துகிட்டா எல்லாரும் தெரிஞ்சிப்போம் ப்ரண்ட்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline SaMYuKTha

 • FTC Team
 • *
 • Posts: 347
 • Total likes: 1128
 • Karma: +0/-0
 • Gender: Female
 • இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது!
Re: இன்னிசை அளபெடை - 7
« Reply #3 on: March 16, 2019, 05:19:24 PM »
Chikuu woww u r amazing... evlo details paahhh. senior sonna mathri one of the best innisai alapedai.. kudossss to u... kuripa song explain pana munnadi basic drums details and that beginner lessons just an eyeopener for our knowledge on instrumentals i would say. kandipa intha song lam recreate panavo illa ithuku equal ah kuda oru song compose pana yaralayum mudiyathu. neriya menakettu romba romba details eduthrukinga. keep rocking chikuu.. u r the bestttt....

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 301
 • Total likes: 769
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
Re: இன்னிசை அளபெடை - 7
« Reply #4 on: March 16, 2019, 06:47:27 PM »
பேரன்பும் நன்றியும் சம்யூ ♥♥ எப்பவும் சொல்றது தான், நீங்கள்லாம் இல்லாம நான் இல்ல. நீங்க கொடுக்கற ஊக்கம் தான் என்னை தொடர்ந்து எழுத வைக்கிது. இந்த அன்பு தான் தொடர்ந்து எனக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்க வைக்கிது. மற்றபடி நான் எப்பவும் கல்லாதது உலகளவுன்னு நம்பற சாதாரணள் தான்.

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Karthi

Re: இன்னிசை அளபெடை - 7
« Reply #5 on: March 17, 2019, 11:32:58 PM »
Amazing chik  ;)...romba azhaga explain panirukingaa...pothuva oru song'na lyrics,singing,movie situations,choreography,dance ithapathi thaan vimarsanam panuvaangaa but neenga music pathi athulayum ulla use panura instruments level la ulla irangi explain panirukinga...kuripa DRUM Kit pathi sonnathu and video explanation semaa...intha song la neenga sonna pola oru second kuda beat's miss aagi irukathuu nijamave full energy kudukakudiya song thaan ithuu...song ah second by second ah inch by inch ah rasikaa ungaita irunthu thaan kathukanum polaa...really super chik keep rocking 8) next update sikiram solungaa...waitingggg :o

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 301
 • Total likes: 769
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
Re: இன்னிசை அளபெடை - 7
« Reply #6 on: March 18, 2019, 11:10:47 AM »
பேரன்பும் நன்றியும் கார்த்தி. நான் சில விஷயங்கள் தப்பா கூட அனலைஸ் பண்ணி இருக்கலாம், So, எந்தவித க்ரிடிக்சும் சொல்லுங்க அது கண்டிப்பா என்னைய திருத்திக்க உதவும். என்னை எப்பவும் மோட்டிவேட் பண்றது நண்பர்களாகிய நீங்க தான்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 678
 • Total likes: 2098
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: இன்னிசை அளபெடை - 7
« Reply #7 on: March 18, 2019, 11:52:55 AM »
வணக்கம் சிக்கு ,

நீங்க சொன்ன விஷயம்லா அந்த பாட்டுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கே தெஇர்யுமானு தெர்ல  :D :D

எதுக்கும் இந்த போஸ்ட் #டேக் பண்ணி விடுறேன் அவருக்கு  ;)

அப்புறம் இந்த பாட்டு கேட்கும்போது ஒரு நினைவுதான் அது
"எப்போதும் ராஜா ராஜா தான் "

நன்றி

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 301
 • Total likes: 769
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
Re: இன்னிசை அளபெடை - 7
« Reply #8 on: March 18, 2019, 03:22:08 PM »
பேரன்பும் நன்றியும் ஜோக்கர்ண்ணா, ஏது எது நீங்களே என்னிய அவர்கிட்ட மாட்டிவிட்டுருவிங்க போலயே. இதுக்கும் காப்பிரைட் பிரச்சனைன்னு வந்துட போறாரு

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Tags: