Author Topic: இன்னிசை அளபெடை - 8  (Read 265 times)

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 348
 • Total likes: 872
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
இன்னிசை அளபெடை - 8
« on: March 20, 2019, 08:13:18 PM »
இன்னிசை அளபெடை - 8

உண்டானோம் மெய் தாளத்தில்..

Ftcயின் நிகழ்ச்சிக்காக தமிழர்களின் இசையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபொழுது இசை என்கிற வார்த்தைக்கான அர்த்தம் புலப்பட்டது. இசை என்றால் இசய வைப்பது என்று அர்த்தமாம். எவ்வளவு உண்மையாக பொருந்தி போகக் கூடிய அர்த்தம், நம் எல்லாரையும் ஆட்படுத்தி இசய வைக்கும் சக்தி இசைக்கு மட்டும் தானே உண்டு. ஒவ்வொரு விதமான மனநிலைக்கும் ஏற்ற வகையில் இசை அமைந்திருப்பது தான் பேரதியசமான ஒன்று. மகிழ்ச்சியான மனநிலையில் நாம் சோக பாடல்களை கேட்க விரும்புவதில்லை. சோகமான மனநிலையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாயிலாக அமையும் மென்சோக பாடல்களையே விரும்பி கேட்கின்றோம்.

என்னளவில் நான் உணர்ந்தது என்னவெனில் இசை நம்மை நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பது தான் உண்மை. இந்த இசை நம்முடைய ஞாபக சக்தியையும் உந்தும் விதம் தான் ஆச்சரியமானது. உதாரணமாக ஒரு பாடலை கேட்கும்பொழுது அதனோட பொருந்தி போகும் நினைவுகள் நம் ஞாபகத்திற்கு வருவது ஆச்சரியமான விசயம் தானே? நீட்ஷே இசையப் பற்றி சொல்லியிருக்கிற மேற்கோள் எனக்கு ரொம்பவே பிடித்தமானது,

“Without music, life would be a mistake”

இசையில்லையெனில் என் வாழ்க்கையும் கூட என்னவாகியிருக்குமோ என்று நாம் ஒவ்வொருவருமே எண்ணியிருக்கிற தருணம் ஒன்று உண்டு தான். இசையை நமக்குள்ள புகுந்து நம்மை ஆட்டுவிக்கும் ஒரு மாயம், ஒரு சக்தி, ஒரு ஆற்றல். எல்லாவித நினைவுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் காலத்தின் கண்ணாடி. சில பாடல்களைக் கேட்கும்பொழுது இதயமே இசையோடு உருகி வழிந்தோடுவது போல இருக்கும், மீண்டும் அந்த இதயத்தை எடுத்துப் பொருத்திக் கொள்வது உதவுவதும் இசையாக தான் இருக்கும்.

ராஜிவ் மேனன் திரைப்படங்களில் இசை -2

முந்தய பகுதிகளில் மின்சார கனவு பட பாடல்களைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்திருந்தேன். அது போலவே இந்த பகுதியில் அடுத்தப் படமான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திலிருந்து சில விருப்பப் பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன் இரண்டு பகுதிகளாக.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

முந்தய படத்தினைப் போலவே இந்த படத்திலும் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். எல்லா பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் வைரமுத்து.
ராஜீவ் மேனனின் இசை ரசனையை நாம் இந்த படத்திலும் உணரலாம். க்ளாசிகல், ஜாஸ் என ஒரு கலவையான பாடல்களை கொண்ட திரைப்படம் இது. ஸ்மாயியாய் பாடல் மட்டும் தான் ஜாஸ் வகையை சேர்ந்தது. என்ன சொல்ல போகிறாய் க்ளாசிக்கலோடு folksy அமைவு இருக்கும். எங்கே எனது கவிதையும், கண்ணாமூச்சி ஏனடாவும் மிக அழகான ராகங்களின் கலவையாக அமைக்கப்பெற்ற பாடல்கள்.

கண்ணாமூச்சி ஏனடா பாடலுக்காக பல்வேறு பாடல்களின் Renditionகளை எடுத்து அந்த பாடல்கள் ஒருங்கே அமைந்திருப்பது போல இசைத்து தர கேட்டிருக்கிறார் ராஜீவ். அப்படியாக நாட்டக்குறிஞ்சியும் சஹானாவும் இணைந்த ராகமாலிகா தான் கண்ணாமூச்சி ஏனடா பாடல். பாரதியாரின் சுட்டும் விழி சுடர் தான் பாடலையுமே கூட அழகாக பயன்படுத்தியிருப்பார் ராஜீவ். அதனால் தான் அதிகமான பாடல்கள் இருந்த போதிலும் சோடையடிக்காமல் இந்த படத்தில் பாடல்கள் அற்புதமாக அமைந்திருக்கும்.

எங்கே எனது கவிதை

இந்த பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல். எப்பொழுது இந்த பாடலை கேட்டாலும் ததும்பி நிற்கும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. இத்தனைக்கும் அழகான சிந்து பைரவி ராகத்துடன் லதாங்கி ராகம் இணையும் அற்புதமான பாடல் இது. பாடல்வரிகள் அவ்வாறு மனதை சிதறடித்து மனதை வெதும்ப வைக்கிறது.

ஒரு பெண்ணின் காதல் தோல்வியை அழகான ஒரு பாடலாக கொடுத்திருப்பார் ராஜீவ். சித்ராமாவின் வலி தோய்ந்த குரலில் ஒலிக்கும் இந்த பாடல் காதலில் தோல்வியுற்ற எந்த பெண்ணின் உள்ளத்தையும் உலுக்கியெடுத்துவிடும். சில சமயம் இந்த பாடலை பார்க்கும்பொழுது சித்ராவின் குரலில் இருக்கும் தோல்வியின் வலியின் ஐஸ்வர்யா அப்படியே பிரதிபலிக்க முடியவில்லையோ என்று கூட தோன்றும். சித்ராம்மா எப்படி இப்படி ஒரு பாடலை உணர்வுக்கும் மனதிற்கும் இவ்வளவு அருகில் கொண்டு சென்று பாடுகிறார் என்றே புரியவில்லை. சில பாடல்கள் ஆழமான வரிகளை கொண்டிருப்பினும் பாடகர்கள் தட்டையாக பாடி பாடலை கெடுத்து வைத்திருப்பார்கள் ஆனால் சித்ராமா பாடலின் உணர்வை புரிந்து கொண்டு வசீகரமாக பாடக் கூடியவர். அதுவும் இந்த,

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்


வரிகளை பாடும்பொழுது விழியோரம் நீர் நிறைவதை என்னால் எப்பொழுதும் தவிர்க்க முடிந்ததே இல்லை.

வெஸ்டர்ன் கருவிகளும் க்ளாசிகல் கருவிகளுக்கும் சங்கமிக்கும் அழகை ஒரு பாடலில் கொடுக்கும் வித்தை ரஹ்மானிற்கே கை வந்த கலை. பாடலில் வெஸ்டர்ன் ட்ரம்ஸ் இசையும் மிருந்தங்கமும் இணைந்து ஒலிக்கும் பேரழகு தான் இந்த பாடலின் சிறப்பே. சரணங்களின் பிண்ணனியில் ஒலிக்கும் மிருதங்கம் மனதை அலைகழித்து இசையிடம் சரணடைய வைக்கிறது
சரளி வரிசை முடிந்ததும் சரணம் மெதுவாக லதாங்கி ராகத்தில் நுழைவதே அவ்வளவு அற்புதமாக இருக்கும். “மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்” என தொடங்கும் சரணத்தில் இதை உணரலாம். ஒரு பக்கா செமி க்ளாசிக்கல் என இந்த பாடலை வகைப்படுத்தலாம்.

பாடல் நெடுக ஆங்காங்கே chimes சில இடங்களில் ஒலித்தாலும் பாடலின் இறுதியில் ஒலிக்கும் chimes மனதை உருக்கும் விதமாக இருக்கும். அதேபோல இண்ட்ர்லூடில் வரும் நாதஸ்வரம் சில நொடிகளே இருந்தாலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்த விதம் பாடலில் ஓவர்லாப் ஆகாமல் நுட்பமாக அமைந்திருக்கும்.

<a href="https://www.youtube.com/v/qfAJxAbUGNI" target="_blank" class="new_win">https://www.youtube.com/v/qfAJxAbUGNI</a>

லிரிக்ஸ்:

பெண்ணின் காதல் தோல்வியை துயரத்தின் பிரதியாகிய வடித்திருப்பார் வைரமுத்து. கவிதை போன்ற தன் காதலை தொலைத்துவிட்டு நிற்கும் காதலி
“எங்கே எனது கவிதை” ஆரம்பித்து கானல் நீர் போல அதை உருவகிப்பதற்காக கனவிலே எழுதி மடித்த கவிதை என்று கவிஞர் கூறுகிறார். ஆக விடியல் வரும்பொழுது கனவும் முடிந்துவிடும், கனவு முடிந்ததும் கவிதையும் தொலைந்ததாக தொடர்கிறார். கவிதையாவது திரும்ப கொடுங்கள் இல்லை கனவினையாவது மீட்டுக் கொடுங்கள் அந்த கனவின் லயிப்பிலேயே நான் வாழ்ந்துவிடுக்கிறேன் என்ற தொணிப்பை கொடுக்கும் இந்த வரிகள்.

” அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்”
எவ்வளவு அழகான அதே சமயம் வலி நிறைந்த வரிகள், உறவுகளை பிரியும்பொழுது ஒரு முறையாது பிரியும்முன் பார்த்திட வேண்டும் என்று தோன்றும். அப்படி பிரிந்தபின் எத்தனைமுறை அந்த நபரை  அந்த கடைசி சந்திப்பு தான் நினைவிற்கு வரும். ஆனால் மனம் அமைதி அடைந்துவிடுமா என்ன ?

அவனின் நுனிவிரல் கொண்டு தீண்டினாலே நூறு முறை பிறந்தது போல் இருக்கிறது என்றால் அவன் இல்லாம் அப்பெண் இறந்த நிலையை ஒத்ததாக இருப்பதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

”பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன் பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்”

எந்தவித சலனத்திற்கும் அசைந்து கொடுக்காத மனம் கொண்ட பெண்ணினை அசைத்துப் பார்ப்பது காதல் மட்டும் தான் இல்லையா? பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியை என்ன செய்ய முடியும். அது நீக்க முடியாமல் வளர்ந்து நிற்கும். பாறை போன்ற என் மனதில் வேர்விட்ட கொடியாய் நீ நிறைந்துவிட்டாய் என அப்பெண் சொல்வது போல கவிஞர் வரிகளை அமைத்திருப்பார்.

மனதை உருக்கும்விதமாக ஆத்மார்த்தமாக அமைந்த பாடல் இது.

கண்ணாமூச்சி ஏனடா

நம் மனதோடு கண்ணாமூச்சி ஆடுவதுபோல அமைந்த அழகான பாடல் இது. சித்ராவின் குரலை பற்றி என்ன சொல்வது. பாடல் வரிகளில் உள்ளது போல நம் மனம் என்ன விளையாட்டு பொம்மையா ? இப்படி இசை மனதோடு விளையாடிப் பார்க்கிறது. நம்மை அப்படியே வீழ்த்திப் பார்க்கிறது இசை. முன்பே சொன்னது போல நாட்டைக்குறிஞ்சியும் சஹானாவும் இணைந்த ராகமாலிகா தான் கண்ணாமூச்சி ஏனடா பாடல். சரணங்களில் சஹானா தொனித்தாலும் நாட்டைக்குறிஞ்சி தான் பாடல் முழுதும் மேலோங்கி நிற்கிறது.

நாட்டைக்குறிஞ்சி – கருணையை பிரதிபலிக்கும் ராகம். இந்த பாடலுமே கருணையினை போன்றதொரு பிரதிபலிப்பை கொண்டிருப்பதால் தான் இந்த பாடல்வரிகளும் இசையும் அப்படியே கலந்து மெய்யான போதையை தருகிறது. 

இந்த பாடலிலுமே வெஸ்ட்ரன் கருவிகளையும் க்ளாசிக்கல் கருவிகளையும் குழைத்து இசையை கொடுத்திருக்கும் அற்புதமான கரங்களுக்கு கோடி முத்தம் இட தோன்றுகிறது. அவ்வளவு மனதிற்கு இதமாக மென்மையாக இருக்கிறது பாடல். பியானவும் மிருதங்கமும் இணைந்து ஒலிக்கும் பல்லவியும் அனுபல்லவியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த பாடலிலுமே மிருந்தங்கம் அவ்வளவு இதமாக ஒலிக்கிறது.

ஒரு வரிசைப்பிரகாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பல்லவியும் அனுப்பல்லவியும் நீண்ட சரணங்களும் என்று அழகாக அமைந்திருக்கும். பாடலின் தொனியும் ஐஸ்வரியாவின் நடனும் அழகிய இசைக்கு ஒரு மான் துள்ளி ஓடுவது போலவே இருக்கும்.
கண்ணை மூடிக் கேட்கும்பொழுது எல்லாவித கற்பனைகதைகளும் விரிய தானே செய்யும்

பல்லவியும் அனுப்பல்லவியும் முடிந்த பிறகு முதல் சரணம் ஆரம்பிக்கும் முன் வரும் இண்டர்லூடை கவனித்துப் பார்க்கும்பொழுது,வரும் வயலின் இசை ஒரு மெய் மறந்த இன்பத்தை கொடுக்கும். அதை தொடர்ந்து வரும் இடமெல்லாம் செமி க்ளாசிக்கலாக ஒலிக்கும். முதல் இண்ட்ர்லூட் போலில்லாமல் இரண்டாவது இண்டர்லூடில் வரும் வீணை இசையும் அட்டகாசமாக அமைந்திருக்கும். இரண்டு இண்டர்லூடுமே அப்படியே வருடி செல்கிறது நம்மை. இரண்டாவது இண்டர்லூடில் வயலின் ஆரம்பிப்பதற்கு முன்னமே வெஸ்டர்ன் தொனியில் ஒலிக்கும் இசையோடு க்ளாசிக்கலாக வயலின் ப்ளண்ட் ஆகும் மாயத்தை என்னவென்று சொல்வது. முக்கியமாக இந்த வயலின் இடமெல்லாம் நாட்டைக்குறிஞ்சி பெருகியோடுவதை உணரலாம்.

சாதாரணமாக அல்லாமல் இந்த பாடலில் மிக நீளமாக சரணம் அமைந்திருந்தாலும் ஒரு இடத்திலும் தொய்வே இல்லாமல் அமைந்திருக்கும். Except இண்டர்லூட் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் வாய்ஸ் ஓவர். அதிலும் கூட பிண்ணனியில் இசை ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்.

<a href="https://www.youtube.com/v/X8Y5UCEbNuM" target="_blank" class="new_win">https://www.youtube.com/v/X8Y5UCEbNuM</a>

லிரிக்ஸ்:

பெண்களுக்கு கண்ணன் என்றாலே ஒரு வித மாயை தானே. ஒரு பித்து தானே. தலைவனை கண்ணா என்று விளிப்பதில் தான் எத்தனை சுகம் இருக்கிறது. சொல்லில் அடக்கி விடமுடியாத சுகம் அது. தலைவனுக்கு தூது செல்லும் தலைவியின் தோழி போல இந்த பாடலில் தன் தமக்கையின் உள்ளக் கிடக்கை தங்கை எடுத்து செல்வது போல அமைந்திருக்கும் இந்த பாடல்.

என் அக்காவிடம் கண்ணாமூச்சி ஆட்டமிடும் கண்ணனே, “நான்
கண்ணாடி பொருள் போலடா”
அவளின் மனம் ஒரு கண்ணாடியைப் போல கவனமாக கையாள வேண்டும், சிறு உரசலை கூட தாங்க முடியாது, அதனால் கண்ணாடியை போன்ற அவளின் மனதுடன் விளையாடாமல் உன் மனதில் இருப்பதை அவளுக்கு தெரிவித்துவிடு என்பதாக தொடக்க வரிகள் அமைந்திருக்கும்.

நதியின் கரையை கேட்டும், காற்றை நிறுத்தியும், வான்வெளியையும் கூட கேட்டு விடையில்லாத அக்கேள்விக்கு, இறுதியில் தன் இருதயத்திடமே கேட்கும்பொழுது அவன் இருப்பதை காண்கிறாள் அப்பொழுது தான் அவளுள் அவன் இருப்பதை உணர்கிறாள். இந்த இடத்தில் கவிஞர் இதயத்தை இருதயப்பூ என்று குறிப்பிடும் இடமே கவித்துமாக இருக்கும்

என் மனம் உனக்குகொரு விளையாட்டு பொம்மையா,  எனக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று மனதுடன் விளையாடும் காதலனிடம் கோபம் தொனிக்க வினவும் தலைவி(தலைவின் பொருட்டு கேட்கும் தங்கை)அடுத்த வரிகளிலேயே அந்த கோபம் தணிந்து

”உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா”


என்று தாபம் கொண்டு பாடுவதாக வரிகளை அமைத்திருப்பார் கவிஞர்.
தனியொரு கவிதையை போலவே இந்த வரிகள் அமைந்திருக்கும்.

நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா ?
அதை நீ காண
கண்ணில்லையா ?
உன் கனவுகளில்
நான் இல்லையா ?


முதலில் எனக்கென்ன உணர்ச்சிகள் இல்லையா என கேட்கும் நாயகி இறுதியில் நான் என்ன பெண்ணில்லையா என்றும் கேட்கிறாள், அது உனக்குத் தெரியவில்லையா கண்ணா, உன்னுடைய கனவுகளில் நான் இல்லையா என்று வினவுகிறாள்.

முந்தைய பாடலைப் போலவே இந்த பாடலிலும் தலைவனின் சிறு தீண்டலுக்காக ஏங்கி நிற்கிறாள் தலைவி அவனின் சிறு தீண்டலிலே அவளின் உயிரைக் காப்பதாக இருக்கும் உணர்வை இந்த வரிகள் வெளிப்படுத்தும்,

என் உயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே !
உயிர் தர வா


இவ்வாறு உள்ளத்தில் உள்ளதை சொல்லாமல் நீ அலைகழிப்பதால் ஊசாலாடுகிறது என மனது. அதனால் கண்ணாமூச்சி ஆடாமல் என்னிடம் உன் உள்ளத்தை விரைவில் தெரியப்படுத்து கண்ணா

தொடர்ந்து இந்த படத்தின் இன்னும் இரண்டு பாடல்களில் எனக்குத் தெரிந்த விஷயங்களை அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)

-ChikU


வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline சாக்ரடீஸ்

Re: இன்னிசை அளபெடை - 8
« Reply #1 on: March 21, 2019, 11:58:29 AM »
chikuu ennaku super super nu solli solli bore adichi pochu (sad)....semaiya iruku ...intha tym rendu songs ...athuvum neenga chitrama pathi sollum bothu na unga kita main la sonna pola tha ennaku vellithirai movie la vizhiyile en vizhiyile song tha nayabgam vanthchu ....
ஒரு பெண்ணின் காதல் தோல்வியை அழகான ஒரு பாடலாக கொடுத்திருப்பார் ராஜீவ். சித்ராமாவின் வலி தோய்ந்த குரலில் ஒலிக்கும் இந்த பாடல் காதலில் தோல்வியுற்ற எந்த பெண்ணின் உள்ளத்தையும் உலுக்கியெடுத்துவிடும். சில சமயம் இந்த பாடலை பார்க்கும்பொழுது சித்ராவின் குரலில் இருக்கும் தோல்வியின் வலியின் ஐஸ்வர்யா அப்படியே பிரதிபலிக்க முடியவில்லையோ என்று கூட தோன்றும். சித்ராம்மா எப்படி இப்படி ஒரு பாடலை உணர்வுக்கும் மனதிற்கும் இவ்வளவு அருகில் கொண்டு சென்று பாடுகிறார் என்றே புரியவில்லை. சில பாடல்கள் ஆழமான வரிகளை கொண்டிருப்பினும் பாடகர்கள் தட்டையாக பாடி பாடலை கெடுத்து வைத்திருப்பார்கள் ஆனால் சித்ராமா பாடலின் உணர்வை புரிந்து கொண்டு வசீகரமாக பாடக் கூடியவர்.


நாட்டைக்குறிஞ்சியும் சஹானாவும் இணைந்த ராகமாலிகா intha mathiri visiyam ellam na ippotha kelvi paduren ....ennaku ithu elam rombo pudhusa iruku ..na ellam paatu ketoma ponamo nu iruthen but ipadi details terichi keta nalla iruku 

பல்லவியும் அனுப்பல்லவியும் முடிந்த பிறகு முதல் சரணம் ஆரம்பிக்கும் முன் வரும் இண்டர்லூடை கவனித்துப் பார்க்கும்பொழுது,வரும் வயலின் இசை ஒரு மெய் மறந்த இன்பத்தை கொடுக்கும். அதை தொடர்ந்து வரும் இடமெல்லாம் செமி க்ளாசிக்கலாக ஒலிக்கும். முதல் இண்ட்ர்லூட் போலில்லாமல் இரண்டாவது இண்டர்லூடில் வரும் வீணை இசையும் அட்டகாசமாக அமைந்திருக்கும். இரண்டு இண்டர்லூடுமே அப்படியே வருடி செல்கிறது நம்மை. இரண்டாவது இண்டர்லூடில் வயலின் ஆரம்பிப்பதற்கு முன்னமே வெஸ்டர்ன் தொனியில் ஒலிக்கும் இசையோடு க்ளாசிக்கலாக வயலின் ப்ளண்ட் ஆகும் மாயத்தை என்னவென்று சொல்வது. முக்கியமாக இந்த வயலின் இடமெல்லாம் நாட்டைக்குறிஞ்சி பெருகியோடுவதை உணரலாம்.

thirumba kekum bothutha ithu ellam kavanichi keten ...ivalo visiyam irukanu

semaiya iruku keep rocking chikuuuuuu ...

ennoda request ennakaga MAY MADHAM movie la "MINNALAE NEE VANTHATHENADI SONG"pathi intha innisai aalapadaila  post podunga
« Last Edit: March 21, 2019, 12:01:11 PM by சாக்ரடீஸ் »

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 348
 • Total likes: 872
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
Re: இன்னிசை அளபெடை - 8
« Reply #2 on: March 21, 2019, 12:22:38 PM »
Sockyy frnd பேரன்பும் நன்றியும் சொல்லி சொல்லி சலிக்காது எனக்கு. ஒரு வகையில உங்க எல்லாருக்குமே நான் ரொம்ப கடமைபட்டிருக்கிறேன் அன்பால. எனக்கு இப்படி ஒரு platform அமைச்சு கொடுத்து என்னை எப்பவும் ஊக்குவிக்கற இந்த அன்புக்கெல்லாம் என்ன செய்ய போறேன்னு தெரியல. கொடுப்பதற்கு அன்பு நிறைய இருக்கு. :) And கண்டிப்பா மின்னலே பாடலுக்கு எனக்கு தெரிஞ்சதை கண்டிப்பா Share பண்றேன். ஆனா ரெக்வஸ்ட்லாம் வேண்டாம், இதுக்கு எழுது புள்ளன்னு சொன்னா எழுதிவிட்டு போறேன் 😁😁
« Last Edit: March 21, 2019, 12:25:46 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline சாக்ரடீஸ்

Re: இன்னிசை அளபெடை - 8
« Reply #3 on: March 21, 2019, 12:48:13 PM »
சரி  எழுது புள்ள  ;D

Offline SaMYuKTha

 • FTC Team
 • *
 • Posts: 373
 • Total likes: 1195
 • Karma: +0/-0
 • Gender: Female
 • இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது!
Re: இன்னிசை அளபெடை - 8
« Reply #4 on: March 21, 2019, 02:25:21 PM »
chiku romba romba alagaa aazhama eluthrukinga. paadaloda oru oru variyayum athanoda nunukalgaloda romba precise ah describe panirukinga. oru oru innisai alapedai padikurathum oru oru vidhamana experience kudukuthu.. thnx a lotttt Chikuuu.. u r a veraa level music lover i must say..

enakum oru request iruku.. neriya drumbeats, guitars la amainja paadalgal pathi oru knowledge vanthruku ungalala. Pls throw some lights on folk musics too. intha thara, thapattai, parai ithu mathri namma man manam maratha paadalgal pathi therinjika virumburen. so if u r comfortable with it antha mathri ethavthu song ungakita irunthu innisai alapedai la expect panren.. Keep rocking Chikuuu... lotss of love to u..

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 348
 • Total likes: 872
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
Re: இன்னிசை அளபெடை - 8
« Reply #5 on: March 21, 2019, 03:50:45 PM »
பேரன்பும் நன்றியும் சம்யூ. Sockyy ப்ரண்ட் கிட்ட சொன்னது தான், சத்தியமா இந்த அன்புக்கெல்லாம் என்ன பண்ண போறேன்னு தெரியல. எனக்கு சில சமயம் ரொம்ப கூச்சமா கூட இருக்கு சம்யூ :D திரும்ப திரும்ப நன்றின்னு சொல்லி தூரமா வைக்க விரும்பல. நீங்க தொடர்ந்து கொடுக்குற motivation, encouragement தான் நிஜமா என்னை எழுத வைக்கிது.

Folk பாடல் கண்டிப்பா எழுதறேன் சம்யூ. எனக்கும் தாரை தப்பட்டை ரொம்ப பிடிக்கும். So, ஒரு போஸ்ட் போடலாம் கண்டிப்பா

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Tags: