Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 215  (Read 501 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 215
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline thamilan

தேர்தலும் ஒரு தீபாவளி தான்
இனாம் பரிசுப்பொருட்கள் உறுதிமொழிகள்
இங்கேயும் உண்டு
ஒரு வோட்டுக்கு ஒரு கிரைண்டர்
ஒரு வீட்டுக்கு ஒரு தையல்மெசின்
இப்படி இலவச இணைப்புகளும் இங்குண்டு

அரசியல்வாதி
தேர்தல் வந்தால்
தொகுதிப் பக்கம் வராதவன் கூட
நடந்தே கை கூப்பி  வருவான்
ஏழைகளை ஏறெடுத்தும் பார்க்காதவன்
கட்டியணைத்து உச்சிமுகர்வான்
மூதேவிகள் என்று திட்டிய பெண்கள் எல்லாம்
சீதேவிகளாகத் தெரிவார்கள்

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும்
சாகசம் தெரிந்தவன்
சின்ன மீனுக்கு ஆசைப்பட்டு
தூண்டிலில் சிக்குண்டு தவிப்பது
பாமர மக்கள்

வோட்டு
ஒவ்வொரு ஓட்டும்
ஒவ்வொரு வேட்டு
நாட்டையே மாற்றி அமைக்கும்
சக்திமிக்க ஒரு ஆயுதம்
ஒரு நாட்டின் குடிமகன் என்பதற்கான
தனி அடையாளம்   

வோட்டை நோட்டுக்கு விற்றால்
அந்த வோட்டு வெறும் வெத்து நோட்டு
உன் ஒரு வோட்டு
ஒரு அரசியலையே புரட்டிப்போடும் என்பதனையும்
சிந்தித்துப் பார்
வோட்டு நம் கையில் இருக்கும் வரை
அரசியல்வாதி நமக்கடிமை
அந்த வோட்டு பணமாக நம் பைக்குக்குள் வந்தால்
நாம் அவனுக்கு  அடிமை 
« Last Edit: April 01, 2019, 09:21:12 AM by thamilan »

Offline KuYiL


நில்!  கவனி ! புறப்படு!   ஓட்டு பெட்டி --- நோட்டு பெட்டி!

ஐந்தாண்டுக்கு ஒரு முறை  தேர்தல் வரும்
அன்று பள்ளிகள்  விடுமுறை இது தானே
இன்றைய தலைமுறைக்கு தெரிந்த தேர்தல்.

அரசியல் சாக்கடை ! அதிலே ஏன் விழவேண்டும் ?
மூன்று பொழுது சோறு போடும் ஒரு தொழில்
சொகுசு வாழ்க்கை , நான் மட்டுமே நன்றாக
இருந்தால் போதும் ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன ?
இப்படியே ஆண்டுகள் அறுபதும் கழிந்தன.

மாற்றம் ,முன்னேற்றம் ,தடுமாற்றம், ஏமாற்றம்
வாய் கூசாமல் விமர்சனம் செய்வோம்.
மறுநாளே கூட்டணியும் வைப்போம்.
யாரும் எங்களை ஏன் இன்று கேட்கமுடியாது
உங்களால் முடிந்தது ஒன்றே ஒன்று தான்
மீம்ஸ் ட்ரோல்ல்ஸ் போட்டு 
இன்னும்  புபிளிசிட்டி தான் தேடி தருவீர்கள்.

ஓட்டு பெட்டி நோட்டு பெட்டி ஆகி போனது!
ஐநூறுக்கு ஆசை பட்டு வாழ்நாளை அடமானம்
வைக்கிறோம் என்கிற பகுத்தறிவு இல்லாது போனோம்.
அறிவியல் முன்னேற்றம் போதுமா?
அரசியல் அமைப்பு பற்றி தெரியாது
போனோமே! -சாதனை என்பது செவ்வாய்
செல்வது மட்டும் அல்ல - சாமானிய
மனிதனுக்கு எல்லாம்  கிடைக்குமானால்
அது சாதனை.

மயங்கி போனோம் இலவச மாயையில்
அவன் கொடுப்பதே உன்னிடம்
இருந்து பறித்தது தான் ! பதவி என்பது பணம்
பறிக்கும் தொழில் அரசியல் என்பது தாவி
குதிக்கும் குரங்கு வித்தை கரை வேட்டிகள்
லஞ்ச கரை படிந்த தேசிய கொடிகள்.

எதிர்காலத்தின் தலை எழுத்து இந்த தலை முறையின்
விறல் சொடுக்கும் சின்னத்தில் தான் இருக்கிறது
ஆத்தி சூடியோடு அரசியலும் கற்று தருவோம்
 பள்ளி பாடங்களில் மனித உரிமை மேம்படுத்துவோம் !


Offline JeGaTisH

காலங்கள் மாறுகின்றன   ஆனால்
காசுக்காக  ஒட்டு போடும் பழக்கம் மாறவில்லை !

இன்று காசு கொடுப்பான் 
நாளை உன் கழுத்தை பிடிப்பான் !

பதவிக்கு வருபவர்கள் பதுக்க நினைப்பதால் 
பாலாறு கூட கூவம் ஆகிவிடும் நிலை !

கொடுத்தவன்  நடத்துவான்  கொடுங்கோல் ஆட்சி 
கோவணம்  கூட இல்லாமல்  நிற்பான் விவசாயி வீதியிலே !

ஒட்டு  கேட்பவனோ   மாடி வீட்டிலே 
ஆனால் நாளை நீங்களோ
வீதியிலே கொட்டும்  மழையில்


ஆள்பவர்களை தேர்ந்தெடுப்பது  உங்கள் கையில்
அதை சரியான முறையில் தேர்ந்தேடுங்கள் 

நாடு  நன்றாய்  இருப்பதற்கு  நல்ல எழில் தேவை
நன் மக்கள் சிறக்க நல்ல தலைவன் தேவை !

யார் தலைவர்கள் என்று இருப்பதை விட
மக்களின் கவலை தீர்ப்பவன் தலைவனால்
நாட்டு மக்கள் நன்மை பெறுவர் !
அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ் !!!
« Last Edit: April 23, 2019, 01:43:08 PM by JeGaTisH »

Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4266
 • Total likes: 1262
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebookசிவகாசி...
சின்ன அச்சகத்தில் கூட
அழகான பொய்களின்
அடுக்குவரிசை.

திருநெல்வேலி...
ஆயிரம் "டன்" அல்வா அவசரம்
எல்லா கட்சிகளும்
'இ-மெயில்'

சிங்கார சென்னை
இன்று,
அலங்காநல்லூர்.
இடவேட்டையில்
எள்ளும், எலிப்புழுக்கைகளும்

வண்ண சேலைகளும்,
வளையல் தினுசுகளும்,
ஆண்களின் அளவுக்கு
இறக்குமதி.

பிணம் தின்னும் கழுகுகளுக்கு
நவீன அறுவை சிகிச்சை.
வெண்புறாவாக
வீதி உலா...

ஓநாய்களின்
உதட்டில் தத்துவ வாசம்.
கண்களில்
தேர்தல் வெறி.
ஆடு நனைகிறது...
என
ஆதங்க பிரச்சாரம்!

காது குத்துவிழாவிற்கு
உன்
காதை துடைத்துக்கொள்...
கடைசியில்,
அதுதானே கட்டாயம்!!
« Last Edit: April 11, 2019, 02:09:32 PM by Maran »

Offline SweeTie

அழுகிய அரசியல் சாக்கடையில் 
ஆரவாரிக்கும்  தவளைகள்  அவர்கள்
பணத்தையும்  பதவியையும்  உண்டு
பெருத்த  ஏப்பம் விடும்   பங்காளிகள்

தன்னைத் தானே விற்கும் ஏமாளிகள்  இவர்கள் 
ராமன் ஆண்டால் என்ன  இராவணன் ஆண்டால்  என்ன
கூட வந்த குரங்கு ஆண்டால்  என்ன 
நாளைய பொழுது விடிந்தால் போதும்  என்றிருப்பவர்கள்
  '
காலங்கள்  மாறினாலும்  மனிதன் மாறவில்லை
எஜமான்  சாப்பிட்டு விடும்  எலும்புகளை
சுத்தம் செய்யும் நன்றியுள்ள நாய்கள் அவை
என்றுமே  மாறுவதில்லை

 வேதங்கள் போதிக்கப்படலாம்  திணிக்க முடியாது
பதவிகளை தக்கவைக்க போராடும்  கபோதிகள்  அவர்கள்
பணத்துக்காக  விலைபோகும்   முட்டாள்கள்   இவர்கள்
 காசேதான்  கடவுள் என்றானபின்  இருவருமே  ஒரே ஜாதி

நிறைவேற்ற முடியாத  செயல்களை  வாசகமாக்கி
விற்று பிழைக்கும்  அரசியல் வாதிகளும் 
அற்ப ஆசையோடு  அரைகுறை தெரிந்ததோடு
விலைபோகும்  மானிடரும்  மாறவே போவதில்லை. 

Online ChikU

 • FTC Team
 • *
 • Posts: 315
 • Total likes: 811
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog

நம் தலைவிதியை நாமே நிர்ணயம் செய்யும்
எத்தனையோ செயல்களை போல
இதுவுமொரு
சாதாரண செயலென கடந்து செல்லுமொரு விநாடி
மோசமானதொரு தலைவிதியை
மீண்டுமொருமுறை நிர்ணயம் செய்கிறோம்
தண்ணீர் விட்டா வளர்த்தோம்
கண்ணீர்விட்டு காத்தோம்
என அந்நியனிடம் தப்பி
ரத்தமும் சதையுமாய்
நம் தோழனை, நம் சகோதரியை
உள்நாட்டு பிசாசுகளிடம் தொலைத்தோம்


விரல் நுனியில் மினுங்கும் தேசத்திற்கான தீர்ப்பை
ஒற்றை தாளிற்கு நம்மை அடமானம் வைத்தால்
உடமையும் இழப்போம் உயிரையும் இழப்போம்
ஒரு நோட்டிலா உரிமை அடங்கியிருக்கிறது
ஒரு ஓட்டில் அடங்கியிருக்கிறது
நம் வாழ்வும் தாழ்வும்
தற்காலிக சந்தோஷம் தரும்
ஒற்றை தாளிற்கு
மதிமயங்கி மடத்தனம் புரிந்தால்
தார்மீக உரிமையும் கைமீறி போகும்
சொந்த நாட்டிலே தேச விரோதி ஆக்கப்படுவோம்


கடமையல்ல உரிமையென்றெண்ணும்
ஒரு தருணம்,
நம் பையை உருவி
நம்மிடமே நம்மை அடகு வைக்க கோரி பணத்தை சொருகும்
மோசமானதொரு கூட்டத்தை
அடையாளம் கண்டுகொள்ளும்
ஒரு தருணம்
பணம் மறுத்து
உண்மையான ஜனநாயத்தை நிலை நிறுத்தும்
ஒரு தருணம்
போராடி பெற்ற சுதந்திரத்தை பணத்திற்கு விற்காமல்
நியாயத்தை நிலைநாட்டுமொரு தருணம்

#Vote for right not for money

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline MysteRy

 • Global Moderator
 • *
 • Posts: 214551
 • Total likes: 20637
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/
தேர்தல்
ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வரும்
தொகுதி வேட்பாளர்
ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வருபவர்
மக்கள்
ஐந்து  வருடமாக அவதிப்படுபவர்கள்

வோட்டு
வெறும் வெத்து நோட்டு தான்
அந்த ஒரு நோட்டுக்கு விலை
பல ஆயிரம் நோட்டுக்கள்
அந்த ஒரு வோட்டுக்கு விலை
தையல் மெஷின் கிரைண்டர் ஸ்டவ் அடுப்பு
ஒரு பார்சல் பிரியாணிக்கும்
ஒரு போத்தல் சாராயத்துக்கும்
ஒட்டு போடும் பாமரர்களும் உண்டு

ஒரு அரசியலையே புரட்டிப்போடும்
சக்திவாய்ந்த ஆயுதம் வோட்டு
ஒரு நாட்டின் தலைவனை தேர்ந்தெடுக்கும்
விலைமதிப்பில்லாத ஒரு வோட்டு
அரசியல்வாதிகளை சொல்வதை செய்யும்
குரங்குகளாக ஆட்டுவிக்கும் மந்திரக்கோல் வோட்டு 

படிப்பறிவில்லாத ஏழைகள்  நிறைந்தது
நம் பாரதம்
அவர்கள் அறிவின்மையை ஏழ்மையை பயன்படுத்தி
ஓட்டுக்களை நோட்டுக்களாக மாற்றும்
அரசியல்வாதிகள் இருக்கும்வரை
ஓட்டின் மதிப்பு வெறும் பூஜியம் தான் 

நம் அறிவை பயன்படுத்தி
அரசியல்வாதிகளின் நன்மைகளையும் தீமைகளையும்
அலசி ஆராய்ந்து
நல்லவர்களை நிலைநிறுத்தி
கெட்டவர்களை தலையறுத்து
நல் ஆட்சியை நிலை நிறுத்தவேண்டியது
நம் ஒவ்வொருவருடைய கடமை
நம்  ஓட்டுகளை ஆயுதங்களாக மாற்றுவோம்
நாளைய பாரதத்தை நல்ல பாரதமாக நிலைநிறுத்துவோம் 
 

Tags: