Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 224  (Read 352 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 224
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   JO (a) Sweetie v   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline JasHaa

 • Full Member
 • *
 • Posts: 100
 • Total likes: 430
 • Karma: +0/-0
 • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
நீல வானவெளியில்  மிதக்கும் உனை கண்ட
நொடியினில் காதல் கொண்டேனடா  !

மண்ணில்  போராடும்  நான் விண்ணில் தவழும் 
உன்னோடு காதல் கொண்ட  விந்தை  என்னவோ

காற்றின்  அலையில்  தத்தித்தாவும்  மோகஆட்டத்திலும்,     
கண்ணில் கண்ட நொடி மறையும் வேக ஆட்டத்தினுள்ளும்
விண்ணில் மிதக்கும் உன்னில்  காதல்  கொண்டேனடா

தென்றல் தீண்டும் நொடியினில் உன்னை  நாடுகையில்
தென்றலோடு நீ கலந்தது ஏனோ?

கரைந்து போவாய் என அறிந்தும் கசிந்து 
உருகிறேன் காதலாய்
உனை நான் தொடர்கையில்  நிலா பெண்ணின் 
மோகத்தினிலுள் நீ முகிலுகிறாய்

நீ விலகி  ஓடினாலும் உனையே  நெக்குருகும்  மனதிற்கு 
எப்படியடா  சொல்லுவேன்  நீ
வெள்ளிநிலாவின் வேந்தன் என ...

ஏங்கும் உணர்வுகளை  கடக்க  முடியாமல் ,
உன்னோடு  பிணைந்துவிட மேகமாய்  மாறிவிட்டேனடா !
மாறிய என்னை மோகமாய் பிணைத்து கொல்லடா !!
« Last Edit: July 07, 2019, 01:20:57 PM by JasHaa »

Offline Mr.BeaN

 • Newbie
 • *
 • Posts: 28
 • Total likes: 172
 • Karma: +0/-0
 • Gender: Male
 • i just enter to devoloping my creativity......
நீலவானில் நெடுஞ்சான்கிடையாய்
வீழ்ந்து கிடந்தாயே ..
நெடுங்கடல் மீது தோகை வரித்தே
எழுந்து நடந்தாயே..

ஊதும் காற்றின் உரசலினாலே
ஊஞ்சலானாயே..
உலகம் முழுதும் சுற்றிக் கழிக்கும்
வாலிபனும் நீயே..

வெட்கை தீர்க்கும் வேட்கை கொண்ட
வீரனும் நீயே!
வெட்கம் கொள்ளும் நிலவை மறைக்க
திரையாகின்றாயே..

தூய்மை இனிமை இரண்டும் சொல்லும்
உவமையும் நீயே..
தந்த வாக்கை தரமாய் காக்கும்
உண்மையும் நீயே!!

புயலோ மழையோ பொதுவாய் உள்ள
புன்னியனும் நீயே..
புகுந்த வீட்டில் பொருளை சேர்க்கும்
அந்நியனும் நீயே..

சாதி மதங்கள் சாராதிருக்கும்
சமத்துவமும் நீயே!!
ஐம் பூதம் அடக்கி ஆளும்
மகத்துவமும் நீயே!
வானம் யாவும் கோலம் கொண்டு
அலங்கரிக்கின்றாயே..
வாழும் யாவும் வளமது பெறவே
மழை தருகின்றாயே!!

பூமி மீது கருணை கொள்ள
அன்று உதயமானாயோ.?
உயிர்கள் மீது கொண்ட அன்பால்
இன்று இதயமானாயோ?

உழவனுக்கு நண்பனாகி போனாய் நீயே!!
உயிர்களுக்கு உணவளிக்கும் நீயும் ஓர் தாயே!!

   அன்புடன்   பீன்...


[/center][/b][/size][/color][/left]
« Last Edit: July 07, 2019, 02:03:31 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Unique Heart

 • Jr. Member
 • *
 • Posts: 96
 • Total likes: 173
 • Karma: +0/-0
 • Gender: Male
 • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நீலவானில் சுற்றி திரியும் மாய மேகமே , உன்னில் தான் எத்தனை கனவுகள்.

ஒவ்வொரு நாளும்,  மேக கூட்டத்தினால் உருவம் கொள்ளும் உன் கனவுகள்.

இன்று உன் கனவானது வெளிப்படுத்திய உருவமோ இணைந்த இதயங்கள்.

மணாளன் தன் மங்கை அவள் கை பிடிப்பது போலானதும், மங்கை தன் மணாளனின் தோல் சாய்ந்து போலான உன் பிம்பம்...

பூங்காற்றும் புன்னகைத்து உன் காதல் நயம் கண்டு.

செங்கதிரும் நாணத்தில் தலை சாய்த்தது உன் காதலின் கவர்ச்சி கண்டு.

கதிரவனும் பொறாமை கொண்டது   உன் காதலின் மேன்மை கண்டு.
இன்று உன் கனவின் கலைநயம் கண்டு வியந்து போனேன்.

உன்னில் உன் காதலின் உருவம் கண்ட நொடி முதலே, என்னுள் என் அவளின் மேல் கொண்ட காதலின் மகிழ்ச்சி தனை உணர்ந்தேன்.

என்னுள் நான் கொண்ட காதலுக்கு என் தேவதையே உரித்தானானவள் என்பதுபோல,
உன்னில் உன் காதல் யார் என்று  தான் புரியவில்லை.

உழவனின் கவலை நீக்க மழையாய் பொழியும் கார் முகிலும் நீயே,
உணர்வுகளை உருவக  படுத்தும் மாய மேகமும் நீயே.

எதுவான  போதிலும், காதல் எனும் உணர்வு மனிதர்களுக்கு மட்டும் அல்ல,

உலகில் படைக்க பட்ட ஒவ்வொன்றும்,  காதல் எனும் நேசம் கொள்ளும் என்பது உந்தன் கனவின் வழியே இவ்வுலகம் உணரட்டும்...

மாய மேகமே உன் கனவுகள் தொடரட்டும், பூமிக்கும், வானிற்குமான தொடர்பு என்பது,  பெற்றெடுத்த தாயிற்கும், பெற்றெடுக்க பட்ட சேயிற்கும் உண்டானது என்பதை,  உன் கனவுகள் வெளிப்படுத்தட்டும்.......

இப்படிக்கு கனவுகளை சுமந்த இதயத்துடன் மாய மேகம் ❤️❤️❤️.. - MNA........
« Last Edit: July 08, 2019, 11:35:33 PM by Unique Heart »

Offline KuYiL

"காதல் மேகங்கள் "

வெட்கப்பட்டு  சிரிக்கும்  செவ்வானம்  தெரியும் ..
காதலர்கள்  போல்   கட்டியணைத்து  நிற்கும்           
இதய மேகங்கள்   இப்போது  தான்  பார்க்கிறேன் !
 
சூரிய  காதலனின்  மோகத் தீ  சுட்டுஎரிக்க
கடல்   ராணிகள்    சிந்திய   வியர்வை துளிகள்
அள்ளி  தெளித்த    வெண் பட்டு  மேகங்கள் ..!

நிலவை  ஒளித்து   கண்ணாமூச்சி  ஆடும் உன்னை
வாராய் ...  என்று   ஆசையில்  தலையாட்டி நிற்கும்
பல்லாயிரம்   பச்சை   கம்பள    காட்டு(காதல்l)ராஜாக்கள் !

மேகம்  சுமந்து   நிற்கும்    நீல வானம்
தேகம்  நனைத்து   போகும் உன்   நீர் துளி கோலம்
தாகம்    தீர்க்க      நீ      வேண்டும்
மோகம்   கொண்ட  நீ மழை மேகமாக வேண்டும் !

உன்   காதல்   வைபோகம்  எங்கள் மழைக்காலம்!
தேகம்   கறுத்து    நீ நாணும்   கல்யாண கோலத்தில்
உன்      சலங்கை   ஒளியாய்   இடி முழங்க
வெள்ளி   கீற்றாய்     மின்னல்    சிரிப்புடன்

எங்கள்  புவி   அணைத்து   நிலம் நனைத்து
நெல்  விதைத்து   பச்சை   பயிர் வளர்த்து
இந்த   புவிதனில்   உயிர்கள்   உயிர் வாழ

காதல் செய்யுங்கள் மேகங்களே...

நட்புடன்
உங்கள் குயில் .....


« Last Edit: July 11, 2019, 12:51:41 PM by KuYiL »

Offline SweeTie

வானில் பறக்கும் பஞ்சு முகில்களிடை
தேனில்  ஊறிய  இரு இதயங்கள்  காணீர் !
போதையில் தள்ளாடுது  பாரீர்!    .. அவை
காதலைப்   பேசுது    கேளீர்!

காதலை  வரைந்தாள்  மைவிழிமாது 
 கசிந்துருகிப்  போனான் காவியத் தலைவன்   
பேச மொழி யின்றி  நாணிச்  சிவந்தவளை   
கூசாமல்  அள்ளி   இதயத்தில்   ஜீரணித்தான்

பனியில் நனைந்த  பசும்புற்றரை
அதிகாலை  அரும்பிய  மல்லிகை மலர்கள்
புதிதாக  முளைத்த  அவரைச்  செடிகள்
மொட்டவிழ்க்கும்  முதல் காதல்  அது.

வானத்து தாரகைகள்  வரிவரியாய் 
வந்து மலர்தூவி  வாழ்த்துரைப்பர்   
கானகத்து கரும் குயிலும்  இசைபாடும் 
காதலர்   இவர் வருகை கண்டு   

பந்துகள்  பல  நகரும் தொண்டைதனில் 
பட்டாம் பூச்சிகளும் பறக்கும்  இதயமதில் \
காண்பதற்கு  அலைபாயும் கருவிழிகள்
கண்டுவிட்டால்  நாணமது கவ்விவிடும்.

தொட்டுவிட துடிக்கும்  அவன் விரல்களை
பற்றிக்கொள்ள  விரையும்  தளிர் விரல்கள்
சுட்டுவிட  நோக்கும்   அவன் கணைகள்  - அதில்
தக்கிவிட  ஏங்கும்    மலர்  விழிகள்

விட்டு விட்டு  துடிக்கும்    அவள்  இதயம் 
கட்டிக்கொள்ள  நாடும்  அவன்  மனசு
அந்தரத்தில் தொங்கும்  வித்தை  இது
மந்திரத்தால்கூட இதை மாற்ற ஒண்ணா.

பித்தனையும் ஆட்டிவைக்கும் மாயவலை
 முனிவனையும் விட்டுவைக்கா  இந்த வினை
தந்திரங்கள் பல நிறைந்த சாகரத்தில்
தப்பியதாய்   யாருமே  இருந்ததில்லை 

Offline JeGaTisH

வேகமாய்  ஓடி வந்தேன்
மேகமாய் உன்னை கவரவந்தேன்
கரு மேகங்களில்  மறைந்தாய்
என்னை கண்ணீர் சிந்தவைதாய் !

மாயமாய்  மறையும் என் கண்மணியே 
உன்  காதுகளில்  கேட்கிறதா
மண்ணில் வீழும் மழைத்துளிகள்
அவை  மழைத்துளிகள் அல்ல
நான் சிந்தும் கண்ணீர் துளிகள்  !

மழையாக  பிறந்தாய் 
நீராக   பெருக்கெடுத்து
ஆறாக   ஓடி 
கடலுடன்  கலந்தாய்   ,,,, திரும்பவும்
என்னை எப்போது  வந்து சேர்வாய் !

அழகான நட்சத்திரம்  கொண்டு  அதில் 
அழகான கணையாழியை செதுக்கி
 என் காதல் சின்னமாய் '
உன்  அழகான கை விரலில்  அணிவிக்க
 காத்திருக்கிறேன்  காதலியே  !

காலை கதிரவன் வரவுக்கு ஏங்கும்
காக்கை குயில் களின் சத்தம்  எங்கே
என் மனதை மயக்கிய
மாங்குயிலை தேடி சென்றனவோ  !

பெண்மையின் மென்மை  கொண்டாய் 
மழையாக மாறி  உயிரளின் தாகம் போக்கி 
ஆறாக மாறி  கழிவுகளை  அகற்றி 
கடலுடன் கலந்து  உப்பு  செறிந்து
மீண்டும் மேகமாக  சீக்கிரமே வந்துவிடு    !

என் மேகக்  காதலியே உன் வருகைக்கு
காற்றிலே   அசைந்தாடி என்றும்  காத்திருப்பேன்  !


அன்புடன் SINGLE சிங்க குட்டி ஜெகதீஷ்
« Last Edit: July 09, 2019, 10:30:04 PM by JeGaTisH »
அன்புடன் SINGLE  சிங்கக்குட்டி  ஜெகதீஷ்


Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 685
 • Total likes: 2126
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இரு இதயங்கள்
சிக்குண்டு
கிடப்பதே
காதல்
எனில்

உன் சாயலை
உணர்த்தும் எதுவும்
உன்னிடம் சிக்குண்ட
காதலை
உணர்த்திக்கொண்டிருக்கும்
எனக்கு

சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
சிக்குண்ட காரணம்
தெரியுமுன்
பிரிவென்பது
உயிர்பிரியும் வலி தரும்

காதலிக்கையில்
உன் மௌனம் கூட
புரிந்தது எனக்கு
இன்றோ

இனி
பேசிப்பயனில்லை என்று
மௌனமான உன்
நிசப்தத்தின் அர்த்தம்
தெரியாமல்
திக்கு தெரியாமல்
அலைகிறேன்

இவ்வளவு தான்
காதல் என்று
உணர்ந்தாயோ

இல்லை

இது காதல் அல்ல
என்று
உணர்ந்தாயோ

அன்பின்
தீவிரத்தை
உணர்த்திவிட்டு
செல்கிறாய்

நடுநிசியில்
உறக்கம்
கலைகிறேன்
பின்பு

கனவில் உன்னை
தொலைத்ததாய்
வருந்துகிறேன்
விழித்ததை எண்ணி

எத்தனை யோசித்தும்
பிடிபடாத ரகசியம்
நான் கண்டது
கனவா ?

இல்லை

உன்னை நினைத்து
வாழும் வாழ்க்கை
தான் கனவா?

எதுவாயினும்
உன்னிடம்
சிக்குண்டு
தான்
கிடக்கிறது
என் இதயம் !!!==================================================
சின்னஞ்சிறு வயது
மனதில்
எண்ணிலடங்கா ஆசை

எப்படி கேட்பது
கேட்டால் சம்மதம்
கிடைக்குமோ

இதயம்
வேகமாய்
படபட
என்று அடிக்கிறது

வானில் தெரியும்
மேகங்கள் எல்லாம்
இதயம் வடிவில்
தெரிகிறது
இது மனப்பிழையா
இல்லை
ஆசையின் மோகமோ

பார்க்கும் திசை எங்கும்
இதயம் வடிவில்
தெரிகிறது

சாவிக்கொத்து முதல்
சாய்ந்து அமர்ந்திருக்கும்
நாற்காலி வரை

பார்ப்பதெல்லாம்
மஞ்சளாய் தெரியுமாம்
மஞ்சல்காமாலை
நோய் உள்ளவனுக்கு

இதுவும் ஒரு வகை நோயோ ?

இன்று

எப்படியும் கேட்டுவிட வேண்டும்
அடுக்களையில் வேலையாய்
இருந்த
அம்மாவிடம் கெஞ்சி சொன்னேன்
விஷயத்தை

சரி
அப்பாவிடம் சொல்லாதே
என்று
கடுகு டப்பாவில் இருந்து
எடுத்து தந்தாள் 10 ரூபாய்

குஷியாய்
ஓடினேன்
அருகில் இருக்கும்
அண்ணாச்சி கடைக்கு

நெடுநாள்
ஆசை கொண்ட
இதய வடிவ
"Little Hearts" biscuit
வாங்க

 :D :D :D :D :D

*******************ஜோக்கர் *************************"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

LioN

 • Guest
நீல வானமே,
நீ நிலமகளின்
மடிக்க மாளாத
நீள சேலையா?
விண்மீன் பூக்கள்
பூக்கும் தென்றல்
சோலையா?
அறிய முடியாமல்
அளவற்ற மயக்கத்தில்
முயங்கி நின்று மரமானேன்!


அகிலமே உன் அரவணைப்பில்
அன்பு காண்கிறது!
பல சமயம் அமைதியோடும்!
சில சமயம் ஆரவரத்தொடும்!


ஆகாயமே!
நீ இந்த அவயதுடன்
ஒப்பந்தமிட்ட ஓர்
இலவச உடன்படிக்கை!


பாடும் பறவைகள்
பரவசமாய்ச் சுற்றித்திரிந்து
தன் சிறகைப் பதிக்கும்
உன் வரியற்ற வீதிகளில்....


மண்ணில் ஏவும் செயற்கைகோள்கள்,
விண்ணில் மேவும் இயற்கை கோள்களுடன்
இணைந்து உறவாடி இன்புறுகிறது....


வானமே!

நீ எங்களுக்கு தானமாக
வழங்கப்பட்ட ஓர்
அப்பழுக்கற்ற அரிய சொத்து !
உன்னை மாசுபடுத்தாமல்
மலர்கள் தூவும் காலம் என்றோ?

Offline RishiKa

 • FTC Team
 • *
 • Posts: 162
 • Total likes: 717
 • Karma: +0/-0
 • Gender: Female
 • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


என் நினைவு  வானில் ஆயிரம்
மேகங்கள் கடந்தாலும்....
நான் காத்திருப்பது ..
நீ எனும் நிலவுக்காக ....

என் கவலைகளை புதைத்து கொள்ள
எனக்கு தெரியும்   ...
புதை மணலாய் நினைவுகள்
என்னை அழுத்தாத வரையில் ..

உயிர் இல்லை என்றாலும்
எத்தனை பலம் நினைவுகளுக்கு ..
விடைகள் சில தேடுகையில்
வினாக்களே கிடைக்கின்றன ...

ஊமை இதயமாய் உணர்வுகள் துடிக்க
வெறும் அலங்கார சொற்களில் ...
அழுகையை மறைத்து ...
சிரித்து கொண்டு இருக்கிறேன் ...

கானல் நீராகும் கனவுகள் எல்லாம்  ...
காட்சி பிழைகளாக ...
பாதி பயணத்தில் பிரிந்த உனை சேர
பாதை தேடி அலைகிறேன்..

என்னில் உன்னையும் ...
உன்னில் என்னையும் ..
தொலைத்த பின் ...
நீயற்ற நான் ....நானாக இல்லை ..

காலங்கள் சென்றாலும் ..
உன் மீதான காதலும் ..
உன்னால் ஆன காயங்களும்
மாற போவதே இல்லை !
மாறாக கணம் கூடி கொண்டேதான்
செல்கிறது ....

காலம் கடந்து கொண்டு இருக்கிறது !
கவலை இல்லை ..
காத்து இருக்கிறேன் !
காதல் என்னையும் கடந்து போகட்டும்
இந்த மேகங்களாக ...


Tags: