Author Topic: ஆதலால் காதல் செய்வீர்...  (Read 96 times)

Offline இளஞ்செழியன்

  • Jr. Member
  • *
  • Posts: 61
  • Total likes: 236
  • Karma: +0/-0
  • செத்துக்கொண்டே இருப்பதற்கும் ஒரு வாழ்வுதேவைப்படும்
ஆணும் பெண்ணும் காதலிப்பதில் வரும் பொதுவான பிரச்சனைகளை உளவியல் ரீதியாக பார்கலாம் ( சொந்த கருத்துகளும் சில புத்தகஙகளில் இருந்து படித்தையுமே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.. )

தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள், நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தகத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம் ( என் இனம் அப்படின்னு சொல்லிட்டு கை தூக்காதிங்க). அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும்.
ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் அவள் கண்ணுக்குப் பிடித்த பெண் அவ்வளவுதான். கண்ணுக்குப்பிடித்த பெண்ணை மனதுக்கு பிடிக்கவைக்கும் முயற்சிகளையும் காதல் என்பான். கண்ணுக்குப்பிடித்த பெண்ணை பின்தொடர்ந்து அவளை கவரும் முயற்சிகளின் ஆபத்து என்னவென்றால், எப்படியாவது அவளுக்கு பிடித்தமானவனாக ஆகிவிடவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு நிலையில் உருமாறி அவளுக்கு என்னை பிடிக்காமல் போகவே கூடாது என்று ஆணின் உள்ளுக்குள் ஒரு அகங்காரமாக(ego ) மாறும்.
இது மேலும் தீவிரமடைந்து தன்னுடைய ego satisfactionற்காக அளப்பரிய அன்பையே தரும் நிலைக்கு போகும், அவள் இதுவரைக்கும் கண்டிராத அன்பு. உயிரை கூட பணயம் வைக்கும். இதையெல்லாம் பார்த்து என்னவொரு ஆத்மார்த்த காதலென்று அப்பெண் அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டதும் அவன் இயல்புக்குத் திரும்பிடுகிறான்
அவளைப்பொறுத்தவரை அவன் வேறு ஒரு ஆணாக மாறிவிடுகிறான்
தன்னை விரட்டி விரட்டி காதலித்தவன், தனக்கு பிடித்தமானவை எல்லாம் தெரிந்து வைத்து நிறைவேற்றியவன் இவன் இல்லையே என்று பெண் குழம்புகிறாள். காதலை ஒரு இலக்காக நிர்ணயித்து பெண்ணிடமிருந்து அதனை அடைந்ததும் அதற்கு பின் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனே யோசிக்கிறான் நான் அன்பாகத்தானே இருந்தேன், இப்போது இவள்மீது ஏன் நாட்டமின்றி போகிறது?
அவன் செலுத்திய அன்பு அவனுடைய ego satisfactionனுடைய விளைவுதானே தவிர தாமாக விளைந்த உணர்வெழுச்சியின் வெளிப்பாடல்ல. (ego satisfaction love இதைத்தான் காரணமே இல்லாத அன்பு என்று புரிந்து கொண்டிருக்கின்றிர்கள்.) இவ்வுண்மையை அவன்தன் வாழ்நாள் முழுக்கவே உணர்ந்துகொள்ள முடியாது. அவன் ego அதற்கு விடாது. தன்னைக் குற்றம் சொல்லக்கூடிய எந்தவொன்றையும் அது உள்ளிருந்து எதிர்த்துக்கொண்டே இருக்கும்.
பெண்ணின் ego satisfaction வேறு மாதிரி, காதலிக்கப்படுதலை விரும்புபவள் அவள். ஆணின் முக அசைவுகள் வைத்தே அவன் மனதை வாசித்திடும் திறன் அவளுக்கு உண்டு. அம்மாக்கள் பிள்ளைகளின் முகம்பார்த்து நிலை அறிந்து கொள்வது போல அப்பாக்கள் செய்வதில்லை. எதுக்கு அண்ணா டல்லா இருக்கற? என்று தங்கைகள் கண்டுகொள்வது போல தம்பிகளால் முடிவதில்லை. இப்படியிருக்க, பெண்ணோடு பழகும் ஒருவன் அவளைக் காதலிக்கிறான் என்றால் அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? நிச்சயம் கண்டுபிடித்து விடுவாள். ஆனால் வெளிச்சொல்ல மாட்டாள். ரசிப்பாள். காதல் சொல்லத் தூண்டுவாள். அவனே வந்து காதலைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். அவளுக்கு காதலிக்கப்பட மட்டுமே வேண்டும், ஆணை கவர்கின்ற பெண்ணாக இருக்கிறேன் என்று அவளுக்கு அவளே அவளை நிரூபித்தாக வேண்டும். ego satisfaction.
தன்னை விட புத்திசாலி என்று அவள் நினைக்கின்ற ஆணோடு விரும்பிப் போய் பேசுவாள். அவர்களோடு மிக எளிதில் நட்பாகிவிடுவாள். அவனுக்குள் இருக்கும் மிகச் சாதாரண ஆண் பிம்பத்தை கண்டுகொள்வாள். வெற்றிபெற்றதாகச் சிரித்துக் கொள்வாள்
இத்தனை சிக்கலான ஆண், இத்தனை சிக்கலான பெண் காதல் கொள்வது அதைவிடச் சிக்கல்

காதலை ஏதாவது ஒரு வகையில் எக்ஸ்பிரஸ் செய்துகொண்டே இருப்பார்கள். இங்கு அடிக்கொருமுறை காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காதலை உணர்த்த முடியவில்லை என்றேதான் அர்த்தம். உணர்த்த முடியவில்லை என்றால் காதலும் இல்லை. அங்கிருப்பதெல்லாம் எனக்கொரு தேவை இருக்கிறது அதற்காக நீ வேண்டும். நான் உன்னை முன்பதிவு செய்து வைக்கிறேன் என்னும் ஒப்பந்தம் மட்டுமே. இங்கு தேவை என்பது வெறும் உடல்ரீதியான பார்வை மட்டுமல்ல- என்னோடு பேச, பழக, நேரம்போக்க, என்வெளியில் நான் அறிமுகம் செய்து மகிழ எனக்கொரு எதிர்பாலின இணைவேண்டும் என்பதும் சேர்த்தி. இதுதான் இவர்கள் காதலென்று நினைத்திருக்கும் ஒன்றின் சிக்கல்.

எந்தளவிற்கு உருகி உருகி ஒரு காதல் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறதோ அதேயளவு அதில் போலித்தனமும் சேர்ந்திருக்கும்.
நான் உனக்காகவே வாழ்கிறேன் உனக்காகவே சாகிறேன், -என்றால் நீயும் எனக்காகவே வாழ்/சாவு
உன்னைத்தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க மாட்டேன் -என்றால் நீயும் பார்க்கக்கூடாது.
ஒவ்வொரு காதல் வெளிப்பாட்டிலும் இப்படி மறைமுக கட்டளை ஒளிந்திருக்கும்.
மறைமுக கட்டளைகளுக்குள் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் என்பதே பெண்ணுக்கு மிகத் தாமதமாகத்தான் தெரியவரும்.
இந்த உறவில் எங்கு இடறினோம் என்ன பிரச்சினை என்று அவள் உணரும் போது, உன்னை விரும்புகிறேன் விரும்புகிறேன் என்று சொல்லிச் சொல்லியே அவளுக்கான அழகிய கூண்டை ஆண் வடிவமைத்து முடித்திருப்பான்.

பெண்ணை,பெண்ணின் உடலை உரிமை கொண்டாட ஆசைப்படும் மனச் சிறையிலிருந்து விடுபடத் தெரியாமல் அவளையே கூண்டில் வைத்து விடுகிறான்.
அவள் விடுவிக்கச் சொல்லிக் கோரும் போது, நான் உன் மீது செலுத்தும் அன்பை நீ உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாய் என்று அவளையே சாடவும் செய்வான். இதற்கு பெயர் அன்பல்ல டார்ச்சர் என்று அவளுக்கு தொண்டை கிழிய கத்த வேண்டும் போலிருக்கும்.

அன்பை வழங்கும் போது அதனை சாதகமாகப் பயன்படுத்தும் உரிமையும் சேர்த்தேதான் கொடுக்கப்படுகிறது. சாதக உரிமைக்கு அனுமதி இல்லையென்றால் நீங்கள் செலுத்துவது அன்பல்ல, ஆளுமை!
கிட்டத்தட்ட உனக்கு சுதந்திரம் தருகிறேன் அதனை நீ மிஸ்யூஸ் செய்யக்கூடாது என்பதைப்போல. - சுதந்திரம் என்பதே மிஸ்யூஸ் செய்யத்தான். அதில் சந்தேகமில்லை. அவளுக்கு சுதந்திரம் கொடுக்க நீ யார் என்பது தான் முதல் கேள்வி. இதற்கு விடை தேடினாலே விடியல் கிடைத்திடும்.
நிஜமாய் காதல் என்பது தன்முனைப்புகள் ஏதுமின்றி நிகழ்தல்,
நாம் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியில் மகிழ்தல்,
அம்மகிழ்ச்சிக்கு நான் மட்டுமே காரணமாக இருந்திடவேண்டும் என்னும் சுயநலத்திலிருந்து விலகுதல்,
அவர்கள் மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்கின்றார்களோ அவையனைத்தையும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளல்,
அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லையா? வேறு ஒருவரை பிடித்திருக்கிறதா? அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியா?
ஆம் எனில்
இவ்வளவு நாள் நீ உடனிருந்தது பொய்யா? உன் காதல் போலியா? உன் அன்பு நடிப்பா? நான் எந்த வகையில் குறைந்துபோய்விட்டேன்? என்ற கேள்விகளுக்கு இடம்தராமல், அவர்கள் மகிழ்ச்சியை அவர்கள் தேடிக்கொள்வதற்கு இடையூறாக இல்லாதிருத்தல்.

இவ்வளவு நாள் நீ உடனிருந்தது நிஜம்!
உன் காதல் நிஜம்!
உன் அன்பு நிஜம்!
இப்போது நீ இல்லாதிருப்பதும் நிஜம்!
நிஜங்களை நிபந்தனையின்றி
ஏற்றுக்கொள்ளப் பழகுதல் காதல்

எழுதும் எழுத்துக்களில் இருப்பவை எல்லாம் நிகழ்ந்தவை அல்ல நிகழ்த்தப்படவேண்டியவை💕

Tags: