Author Topic: இன்னிசை அளபெடை - 9 - ச ப - ம ப - ம ப - ம ப - ம ப - நி நி ப  (Read 568 times)

Offline ChikU

இன்னிசை அளபெடை - 9
       
         இசையும் காதலும் ஒன்று. ஒருசமயம் தூக்கி சுமந்து உச்சிக் கொம்பில் கொண்டு போய் நிறுத்தி வைக்கிறது. மறுகணம் அதே உச்சிக் கொம்பில் இருந்து கீழே தள்ளி விடுகிறது. கீழே வீழும் நம்மை தாங்கி பிடிக்கவும் செய்கிறது. ஆக, இசையும் காதலும் நம்மை பிரிவதுமில்லை நம்மை விட்டு விலகுவதுமில்லை. இசையின் கருணையும் அது தான் காதலின் கருணையும் அது தான். இசை மென்மையாக தான் இருக்கவேண்டும் என்று எந்தவித வரையறையும் இல்லை. Beats அதிகம் ஒலிக்கும் ஒரு பாடலும் கூட நம்மை போதையில் ஆழ்த்தும். இசை செய்யும் மாயாஜாலம் அது தான்.

ரஹ்மானின் இசை செய்யும் மேஜிக் அது தான். இந்த பாடலை இசையாக அணுகுவதை விடவும் அதன் பாடல் வரிகளை கொண்டு அணுகுவது தான் சரியான முறையாக இருக்கும். பலமுறை கவ்வாலி வகை பாடல்களைப் பற்றி பேசியிருக்கிறோம். கவ்வாலியோ, சூஃபியோ அது என்னைப் பொறுத்த வரை வெறும் இசை மட்டுமில்லை அது ஒரு வாழ்க்கை முறை. கவ்வாலி வகை பாடல்கள் ஏதேனும் ஒரு வகையில் மனதிற்கு நெருக்கமாக, வாழ்க்கைக்கு நெருக்கமாக, தத்துவார்த்தமாக அமைந்திருக்கும். அது காதலை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும். ரஹ்மானின் கவ்வாலி வகை பாடல்கள் அப்படி தான் அமைந்திருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மூலமாகவே எனக்கு சூஃபி இசை அறிமுகமானது. அது என்ன மாதிரியான இசை வடிவம் என்பதை அறிமாலிருந்த பொழுது தான் நண்பரின் வலைத்தளம் ஒன்றில் சூஃபி இசைப் பற்றி விரிவான அறிமுகம் கிடைத்தது. அதற்கும் முன்னதாகவே அந்த பாடலின் மேல் ஒருவித மயக்கம் இருந்திருந்தாலும். அப்பாடல்களின் உண்மையான வகை அறிந்தபொழுது தான் பெரும் உவகையாக இருந்தது. முடிவற்று நீண்டு கொண்டிருந்த ஒரு உவர்ப்பான இரவின் தான் முதன்முறையாக ராக்ஸ்டார் (Rock Star)படத்திலிருந்து குன் ஃபாயா (Kun Faya Kun)பாடலை கேட்டேன், அன்று அந்த பாடலை இரவு முழுமைக்குமாக்கி ஆயிரம் முறை கேட்டிருப்பேன்.

அப்படியான பல உணர்வுபூர்வமான பாடலை, உணர்வுநிலைகளின் உச்சத்தை எட்டக் கூடிய பாடல்களை ரஹ்மான் வழங்கியிருக்கிறார். இப்பொழுது நான் பேசப் போகும் பாடலுக்கும் சூஃபி இசைக்கும் எந்தவொரு இழையும் இல்லை. ஆனால் அது போன்ற உணர்வு நிலையை தரக்கூடிய பாடல் தான் இது

இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
படம்: ஆயுத எழுத்து
பாடல்: யாக்கை திரி
பாடல் வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், பாப் ஷாலினி, சுனிதா சாரதி


மேலோட்டமாக இந்த பாடலை பற்றி கூற வேண்டுமென்றால். க்ளப் வகை பாடல்கள் நமக்கு இதற்கு முன்னரும் பிரசித்தம் என்றாலும், எல்லாவற்றிலும் புதுமை புகுத்துப்பட்டுக்கொண்டிருந்த அந்த காலத்தில் இந்த பாடல் One of the finest club song என்று தாராளமாக கூறலாம்.
மெல்லிய டெக்னோ ஒலிகளோட ஆரம்பிக்கும் பாடலில் இணைக்கிறது ரஹ்மானின் Fanaa, இந்த Fanaaவை பற்றியும் பேசுவோம். அதை தொடர்ந்து யாக்கை திரி காதல் சுடர் என்று ஆரம்பிக்கும்பொழுது பாடலின் டெக்னோ ஒலிகள் மற்றும் மெல்லிய பீட்ஸ்கள் வேகமெடுக்க ஆரம்பிக்கின்றன. பாடல் முழுக்க இந்த பீட்ஸ்கள் மற்றும் டெக்னோ ஒலிகள் ஒரு சீராக செல்லாமல் நான் லீனியராக ஏற்ற இறக்கங்களோடு செல்வது பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. ஒரு மெலடி பாடலுக்கு அழுத்தமான ரிதம் முக்கியமாக Electrifying இசைக்கோர்வையை கொடுக்க கூடிய மேஜிக் ரஹ்மானால் மட்டுமே செய்ய முடியும்
Techno pad beats பாடல் முழுக்கவே சீராக ஒரே மாதிரி ஒலிக்கிறது. அழகான தமிழ் வரிகளை கொண்ட பாடலுக்கு வெஸ்டர்னைஸ்ட் பீட்ஸ் கொடுத்து அழகாக்க கூடிய தைரியம் ரஹ்மானிக்கு மட்டுமே உண்டு என்று சர்வ நிச்சயமாக கூறுவேன். உற்சாக மனநிலையில் இந்த பாடலை கேட்கும்பொழுது இந்த பாடல் நம்மை தாளம் போடவும் செய்யும், ஆடவும் செய்யும், அதுவே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்று நோக்கினால் இசையின் உன்னதத்தை ஆத்மார்த்தமாக உணர்ந்து கொள்ளலாம்.

ரஹ்மானுடைய ரானெஸ் கலந்து இருக்கும் குரல் எனக்கு ரொம்பவே பிடித்தமானது. அதாவது அது கரகரப்பான குரல் என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை அதனை raw vocals என்று குறிப்பிடுவது தகும். எளிமையாக உச்சத்தை தொட்டுச் செல்லக் கூடிய சக்தி அந்த குரலுக்கு உண்டு. ரஹ்மான் பாடும் பொழுது எனக்கு அவரின் உள்ளிலிருந்து மொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் பாடுவது போல் தோன்றும். இந்த பாடல் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது என்றாலுமே கூட பாடல் ஆரம்பிக்கும்பொழுது அவர் பாடும் Fanaaவில் ஒரு மென்சோகம் ஒளிந்திருப்பது போலவே தோன்றும். ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பார் ரஹ்மான். Fanaaவில் மென்சோகம் என்றால் யாக்கை திரியில் உற்சாகம் வழிந்தோடுகிறது ரஹ்மானின் குரலில். பிறகு பிறவி பிழை காதல் திருத்தத்தில் காதல் வழிந்தோடுகிறது. அதனாலேயே நாமும் அந்த உணர்வு நிலைகளோடு ஒன்றி போய்விடுகிறோம்.

<a href="https://www.youtube.com/v/umM81O0LPnk" target="_blank" class="new_win">https://www.youtube.com/v/umM81O0LPnk</a>

பாடல் முழுக்கவே பிண்ணனியில் ஒலிக்கிறது Fanaa.. Fanaa.. Fanaa

Fanaa என்றால் என்ன? Fanaa என்கிற வார்த்தை உருதுவா இல்லை ஹிந்தியா என்கிற தர்க்கத்திற்கெல்லாம் செல்ல தேவையில்லை. சூஃபியிசத்தில் Fanaa என்றால் annihilation அதாவது நிர்மூலமாக்குவது. நாம் நேரடியான அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அது தர்க்கத்திற்கு தான் நம்மை இட்டுச் செல்லும். இஸ்லாமிக் எழுத்தாளரான கஸ்ஸாலி ஃபனா என்கிற வார்த்தையை ’இஹ்யா உலூமித்தீன்’ என்கிற நூலில் உபயோகப்படுத்தியிருக்கிறார். அதன் அர்த்தத்தை self-actualization என்று குறிப்பிடுகிறார்.  self-actualization என்றால் தன்மெய்ம்மையாக்கம் அல்லது சுய மெய்நிகராக்கம் என்று சொல்லலாம். இன்னமும் எளிமையாக கூற வேண்டுமென்றால் தன்னுடைய உண்மையான உள் நிலையை அறிதல். Fanaa என்கிற நிலையில் ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான உலகை துறக்கிறான் அல்லது இழக்கிறான், மெய்நிகர் நிலையை அடைகிறான். இப்படி ஆன்மீக நிலையையும் தத்துவார்த்தை நிலையையும் உணர்த்துகிறது இந்த வார்த்தை. எல்லாவற்றையும் விடுத்து இந்த பாடலோடு ஒப்புமைப்படுத்தி பார்த்தால் Fanaa
என்றால் destroyed in love என்றே பொருள் கொள்ள வேண்டும். இப்பொழுது சொல்லுங்கள் Fanaa என்கிற வார்த்தை அழகான வார்த்தை தானே.


பாடல் ஆரம்பிக்கும்பொழுதை விட முடிகிற இடம் இன்னும் Electrifyingயாக நுட்பமாக இருக்கிறது. ஃபனாவை போலவே ‘அன்பே’ நெஞ்சே’ வரிகளை ரஹ்மான் பாடும்பொழுது இன்னுமும் உயிர்த்தன்மை வழிந்தோடுகிறது பாடலில். பீட் ரிதமிக்கான எலக்ட்ரிபையிங் இசை பாடலை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்கிறது. முக்கியமாக சுத்த தன்யாசி ராகத்தில் ரஹ்மான் சரளி வரிசையை பாடும்பொழுது அவ்வளவு soulfulலாக இருக்கிறது.
பாடல் முடியும் இடத்தில் கோரசை பின்னுக்கு தள்ளிவிட்டு மேலோங்கி ஒலிப்பது ரஹ்மானின் குரல் மட்டுமே.

இதயத்தை உருக செய்யும் அந்த சுத்த தன்யாசியின் சரளி வரிசை,

சப மப மப மப மப நிநிப மப
சப மப மப மப கமப சகரி
சப மப மப ,மப  மப நிநி பமபமப மப

ச நிபநிபமகரிமகரி
நிநிசச நிநிசச நிநிசச ககசநி
நிநிசச நிநிசச நிநிசச ககச
மப நிநிப மப நிநிப மப நிநிப மப நிநிப
நிநிப மப நிநிப மப நிநிப மப நிநிப மப சா
கமக சகக கமக சகக கமக சகக


And not missing, ரஹ்மானின் ட்ரேட்மார்க் முடிக்கும் இடம்
ஆஹ்ஹ்ஹ் ஃப்னாஆஆ ஃபனாஆஆ

இந்த பாடலுடைய மிகச் சிறந்த இடம் இந்த ஆலாபனையும் வெஸ்டர்ன் இசையும் சேருமிடம் தான். இறுதி வரை அந்த vibeஐ எடுத்துச் சென்றிருப்பார் ரஹ்மான்.

மொத்தத்தில் இந்த பாடல் ஒரு மனதை மயக்கும் one of the best Cult வகை பாடல்

பாடல் வரிகள்:

FANAA - Destroyed in love


காதலினால், காதலில் அழிவு உண்டா? காதல் நம்மை வீழ்த்தும் சக்தியா? அதில் வீழ்வதினால் தான் வீழ்ச்சி என்று இந்த வார்த்தை குறிக்கிறதா?

வைரமுத்து ஒரு ஜீனியஸ். என்ன சொல்ல இந்த பாடலின் வரிகளைப் பற்றி? இரண்டு வரிகளில் இந்த உடலையும் இந்த உயிரையும் காதலோடு சம்பத்தப்படுத்தி ஒவ்வொரு வரியும் ஒரு குறும் ஹைக்கூ போல இருக்கிறது. உயிர் கொண்ட சதை பிண்டமான உடலும் காதலும் பிரித்துவைக்க முடியாதது என்பதை உணர்த்தும்விதமாக வரிகள் அமைந்திருக்கும்.

"யாக்கை திரி காதல் சுடர்"
யாக்கை என்றால் உடல். உடலை திரி என்றும் காதலை சுடர் என்றும் கவிஞர் ஆரம்பவரிகளிலேயே தீந்தமிழை வார்த்தைகளால் தீட்டியிருக்கிறார்.
திரி போன்ற இந்த உடலினில் காதல் தான் சுடர். இந்த திரியினை ஒளிற செய்யும் சுடர் தேவை. உடலென்னும் திரியினை ஒளிற செய்ய காதலென்னும் சுடர் தேவை

"ஜீவன் நதி காதல் கடல்"
உயிராகிய ஜீவன் நதியை போன்றது. இந்த நதி சென்றும் கலக்கும் கடலானது காதல். இந்த வரிகள் , " நதி எங்கு செல்லும், கடல் தன்னை தேடி" என்கிற வரிகளை நினைவுபடுத்துகிறது. அப்படியாக நம் உயிராகிய நதியும் காதலென்னும் கடலினை தேடி தான் சென்றடைகிறது

"பிறவி பிழை காதல் திருத்தம்"
நாம் உயிர் வாழும் இந்த பிறவியே பிழையானது, பிழையான இந்த வாழ்வை திருத்த காதலால் மட்டுமே முடியும். என்னவொரு அழகான வரிகளை வைரமுத்து எழுதியிருக்கிறார். நினைக்க நினைக்கவே இந்த வரிகள் திகட்ட வைக்கிறது. ஆழமாக பார்த்தால், எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒருவன் இந்த வாழ்க்கையையே பிழையென்று தூற்றுகிறான், அவனிடம் சிறிது பேரன்பை, காதலை கொடுத்துப் பாருங்கள், பிழையான அவனுடைய வாழ்வை காதலே திருத்தி அமைக்கும். அது தான் காதலின் சக்தி

"இருதயம் கல் காதல் சிற்பம்"
கல்லை போன்ற இதயத்தை கூட கனிய வைக்கும் காதல். இல்லை கனிய வைப்பதற்கும் மேலாக அதை அழகான சிற்பமாக உருமாற்றுவது/உருமாறுவது காதல் தான்.

"தொடுவோம், தொடர்வோம், படர்வோம்,
மறவோம், துறவோம்"ஃபனா!


காதலால் தொடுவோம்/தொடப்படுவோம், காதலை தொடர்வோம், கிளை போல, கொடி போல, வேர் போல இந்த காதலை படரச் செய்வோம், காதலால் மறவாமல் இருப்போம்* காதலை துறக்காமல் இருப்போம்*

தொட்டுணர்ந்து நாம் காதல் செய்வோம், பின் இந்த காதலையும் காமத்தையும் தொடர்வோம், படர்வோம், இந்த காதலை மறவாமல் இருப்போம், இந்த காதலை துறக்காமல் இருப்போம்

[*காதலில் மறப்பதும், காதலை துறப்பதென்பதும் நடவாத விஷயங்கள் தானே?]
 
தொடுவோம், தொடர்வோம், படர்வோம்,
மறவோம், இறவோம்? ஃபனா!

மீண்டும் தொடர்வோம், மறவோம் இந்த காதலினால் இறவாமல் இருக்கும் நிலையை அடைவோம்.


ஜென்மம் விதை காதல் பழம்– உயிர் பிறந்து நாம் வந்திருப்பதே காதல் செய்து வாழ்ந்திருக்க தான்

லோகம் துவைதம் காதல் அத்வைதம் – இதில் லோகம் துவதைம் என்பதை Hell, heaven கான்சப்ட்டாக எடுத்துக் கொள்ளலாம், துவதை என்றால் dual, லோகம் இரண்டானாலும் காதல் என்பது கடவுளை போல ஒன்று தான்
சர்வம் சூன்யம் காதல் பிண்ணியம் – எல்லாமே இந்த உலகில் பூஜ்யம் என்ற நிலையில் இருந்தாலும் காதல் மட்டும் infinite (பிண்ணியம் என்றால் infinite) காதல் அளவில்லாதது தானே. உலகத்தில் எதுவுமே இல்லாமல் போனால் கூட காதல் நம்மை வாழ வைக்கும் தானே

மானுடம் மாயம் காதல் அமரம் – இந்த மாய உலகத்தில், கடலில் தள்ளாடும் படகை திருப்ப உதவும் தண்டு போன்றது தான் இந்த காதல்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே
அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும் காதல் மட்டும் தான் என்று காதலை உயர்வு நவிற்சியில் கவிஞர் செந்தமிழ் வார்த்தைகளால் இதயத்தினை தீண்டி இருப்பார் கவிஞர்.


இந்த பாடல் குறித்து மற்றுமொரு Perspective இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே. தெரிந்து கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். மீண்டுமொரு முறை வேறொரு இசையில் தொலைந்துபோவோம்..

காதலால் வீழ்ந்தோம்
காதலில் வீழ்ந்தோம்

Fanaa
- ChikU
« Last Edit: August 27, 2019, 11:39:23 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Dong லீ

Was waiting for this many days

Offline ChikU

Thank you paulna. I know it was very late

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline gab

ரொம்ப அருமையான பதிவு. இந்த பாடலில் இவளோ அர்த்தம் இருக்கு  என்பதே உங்கள் பதிவை படித்ததும்  தெரிந்துகொண்டேன் . இசையையும்  ,  பொருளையும் மிக அழகா விளக்கி இருக்கீங்க.   தொடரட்டும் உங்கள் இன்னிசை அளபெடை .

Offline ChikU


வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline RishiKa

  • FTC Team
  • *
  • Posts: 162
  • Total likes: 717
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


அன்புள்ள சிக்கு !
உன் இன்னிசை அளபெடை  பதிவை கண்டு பிரமித்து விட்டேன்
எவ்வளவு ஆழமும் கருத்தும் கொண்ட வரிகள் !
பாடல்கள் கேக்க வெறும் மலரை போல அழகு மட்டும் இல்லாமல்
அதன் மகரந்த தாளுக்குள் பொதிந்து இருக்கும் தேன் எடுத்து
எங்களுக்கு பரிமாறுகிறாய் !..வாவ் !அதன்  சுவை எங்களுக்கு எல்லாம் விருந்து
போல ...இசையையும் காதலையும் கற்று கொடுக்கிறாயா ?  :-* :-* :P :P
When we all listen these song again ..we might all Fanaa ... ;) Love You...Continue ur post babe   :-* :-*

Offline ChikUஅன்புள்ள சிக்கு !
உன் இன்னிசை அளபெடை  பதிவை கண்டு பிரமித்து விட்டேன்
எவ்வளவு ஆழமும் கருத்தும் கொண்ட வரிகள் !
பாடல்கள் கேக்க வெறும் மலரை போல அழகு மட்டும் இல்லாமல்
அதன் மகரந்த தாளுக்குள் பொதிந்து இருக்கும் தேன் எடுத்து
எங்களுக்கு பரிமாறுகிறாய் !..வாவ் !அதன்  சுவை எங்களுக்கு எல்லாம் விருந்து
போல ...இசையையும் காதலையும் கற்று கொடுக்கிறாயா ?  :-* :-* :P :P
When we all listen these song again ..we might all Fanaa ... ;) Love You...Continue ur post babe   :-* :-*


Thank you so so so much babiee. your words mean so much to me. Much love  :-* :-* :-* Lets get destroyed in Love

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Karthi

Beautiful post chik ;) intha song lam kekumbothu music thaan athigam namma mind ku varum athigama thirumba thirumba keka thonum but unga writings padichi thaan intha song layum ivlo lyrics iruku athula ivlo meanings iruku nu teriyuthu puriyuthu... romba alaga explain panirukingaa... neenga inga use panura tamil words lam really nice naan niraiya words ku dictionary thaan paakanum pola  understand panika :P...after long gap aprom post panirukingaa so next update taknu quick ah podungaa we are waitingzzz :-\

Offline ChikU

Beautiful post chik ;) intha song lam kekumbothu music thaan athigam namma mind ku varum athigama thirumba thirumba keka thonum but unga writings padichi thaan intha song layum ivlo lyrics iruku athula ivlo meanings iruku nu teriyuthu puriyuthu... romba alaga explain panirukingaa... neenga inga use panura tamil words lam really nice naan niraiya words ku dictionary thaan paakanum pola  understand panika :P...after long gap aprom post panirukingaa so next update taknu quick ah podungaa we are waitingzzz :-\

Thank you so much Karthi. எதோ எனக்கு தெரிஞ்சது கிறுக்குறேன். நண்பர்களோட அன்பும் ஆதரவும் தான் என்னை எழுத வைக்கிது அப்படின்னு நம்பறேன். குறைகள் இருப்பதையும் சொல்லுங்க நான் கண்டிப்பா திருத்திக்கிறேன். அடுத்த போஸ்ட் சீக்கிரமே எழுதுறேன். நன்றி கார்த்தி

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Tags: