Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 230  (Read 4532 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 230
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team  சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline KuYiL

அன்பே எங்கள் உலக தத்துவம் !

திறந்த வாசல்கள் ..
பரந்த ஜன்னல்கள் ..
கூரை வேயாத வீடு
பச்சை கம்பளம்
போர்த்திய எங்கள் காடு ..

தென்றல் காதலியாய் மேனி
வருடும் இளம் காற்று ...
வீசும் சாமரம் ..
பேசும் பூக்கள்..
தலை  வருடும் கிளைகள்..
அச்சதை போடும் இலைகள்..

எட்டு கட்டை பாட்டு எழுதிய
குயிலும் .....
எச பாட்டு பாடும் செம்பூத்தும்
தலை ஆட்டி தாளம் தட்டும்
நாணல் நாணம் சிந்த ...
வளைந்தோடும் சிற்றுயிடையாள்
கன்னி அருவி அவள் துள்ளி
ஓட...

சில் வண்டுகள் போடும் தாளத்தில்
தன்னை மறந்து ஓடும் நதி 
இவள் காட்டு அரசனின் காதல் அரசி ..
இரவு மன்மதனின் அழகு ரதி
இன்பம் பொங்கும் முழு மதி..

பறவைகளின் RINGTONE 
நிலவு ராணியின் வெள்ளை ஒளி
சுதந்திரத்தை சுதந்திரமாய்
சொந்தம் கொண்டாடும்
வனதேவதையின் ஸ்வீகார
புத்திரர்கள் ..
இந்த வன விலங்குகள் .....

காட்டு ராஜாவின் ஏக போக
உரிமை இளவரசனாய்
எப்போதும் வீறு நடை போடும்
கம்பீர தந்தம் நீட்டிய களரிகள்....
சிம்மாசனம் போட்ட ராஜாவாய் ..
என் அரியாசனம்...
இந்த கரிய வேழத்து இரும்பு தந்தங்கள்...

கை பிடித்து பை தூக்கி செல்லவில்லை
பள்ளிக்கு..
மரங்களை வெட்டாதே என்று படிக்க
பல்லாயிரம் மரங்களை வெட்டி சாய்த்து
தயாரித்த  புத்தக பக்கங்களின்
வாசனை அறியா சிறுவன் நான்..
நாலடி சுவருக்குள் சமாதியாய் வாழும்
நாகரீ உலகம் எட்டி பார்த்தது இல்லை நான்...

என் காடு என் பள்ளிக்கூடம்
இந்த இயற்க்கை என் ஆசான்
இந்த பறவைகள் என் கூட்டாளிகள்
இந்த அருவி என் ஆருயிர் தோழி ..
இந்த வன வாசம் என் சுவாசம் ...

என்னை நான் மனிதனாய் பார்ப்பதில்லை
அதனால் தான் என்னவோ...
ஆறறிவு தேவைஇல்லாத என் யானை தோழன்
ஆருயிர் தோழனாய் என்னுடன் ...

எதுவும் எங்கே மாறி போகவில்லை
படித்த அறிவு ..அழிவை தான்
தருமென்றால் ...
கை ரேகை அழிய எழுதி படித்த பாடம்
படிக்கும் முன்பு
என் ஆயுள் ரேகை அழிந்துவிடும்
என்றால் பள்ளிக்கு நான் ஏன்
செல்ல வேண்டும் ...

உங்கள் அறிவியல் இன்னொரு உலகத்தை
படைக்க போவதில்லை
இருப்பதை அழித்து இல்லாத உலகத்தை
ஏன் தேடி ஓடுகிறாய் ...
முடிந்தவரை முழுவதுமாய் அழித்து
விட்டு எங்கே ஓட பாக்கிறாய்...

இன்னும் ஒரு உலகம் உன் கண்ணில்
தென்படாமேலே இருக்கட்டும்
தப்பி பிழைத்து போகட்டும்
உன் கண்ணில் படாமல் ...
தெரிந்தால் நீ அதையும் அழிக்க
அறிவாய் பேசுவாய் ...

நாட்டை காப்பாற்ற காட்டை
அழிக்கும் அரசியல் கோமாளிகளுக்கு
போராடும் ஒரு   " SWEEDEN GRETA THUNBERG"  பத்தாது...





Offline சிற்பி

அன்பின் வழியது உயர்நிலை
அன்பே உலகின்  தன்னிலை

ஓரறிவு  முதல்
ஆறறிவு உயிரினங்கள்
வரையிலும்
புரிந்துணர்து வாழும்
ஓரே வழி
அன்பின் மொழி..

அன்பு தேவதைக்கு எதுவும்
நிகரில்லை
அன்பே சிவமாய் அமர்ந்தார்
கடவுள்...

அன்பு யாவருக்கும்
பொதுவாக இருப்பது
பகைவனிடத்திலும்
அன்பு காட்ட சொல்கிறது
பைபிள்.....

அன்பக்கு உயிர்கள்
பேதமில்லை
அதனால் தான்
புறாவுக்காக தொடையை அறுத்து
கொடுத்தான் சிபிசக்கரவர்த்தி
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
மகனை தேரில் காலில் விட்டான்
மனுநீதிச் சோழன்...

அன்பு தான் மொழிகளுக்கும்
அழகு....
அதனால் தான் தமிழன்னை
அகமும் புறமும்
கலந்து
அன்பின் ஐந்திணையாக
உலகிலேயே சிறந்து
விளங்குகிறாள்
தமிழ் தாய்......


உயிரும் மெய்யும் சேர்ந்து
உயிர்மெய் அது
எழுத்துகளின் பிறப்பு
உயிரும் மெய்யும் பிரிந்தால்
மரணம் அது உயிரினங்களின்
இறப்பு.....

அன்பின் அன்பாய்
பேரன்பாக நாம்
வாழ்ந்திருப்போம்.....
.....
சிற்பி...
« Last Edit: September 29, 2019, 05:23:41 PM by சிற்பி »
❤சிற்பி❤

Offline JasHaa

நீண்ட இடைவெளிக்கு பின் 
மிருகக்காட்சி சாலைக்கு ஒரு பயணம்!
உடனிருத்தோரின்  சலசலப்பு 
பிரியமான விலங்குகளை  பற்றிய விவாதம்
எனதுமுறை வரும்  நொடிகளில்  உதித்த  சொல் "  யானை  "

சட்டென்றே சிரிப்பலை 
ஏன் உருவ ஒற்றுமையா என்று  ?
இது மனித மனங்களின் வக்கிரம் !
சட்டென்று அமிலங்களை  அள்ளித்தெளிக்கும்  சுபாவம் !

சிறு மென்னகையுடன்  எனது விடை  என்னவாக  இருக்கும்  தோழர்களே  தோழிகளே?

களிறுகள் என்றுமே பிடிகளை தாழ்த்துவதில்லை 
எனது உருவம்  உனது கண்ணை  உறுத்தினால்  குறை  என்னிடம்  இல்லை...
உனது பார்வைதனில்..
செல்லுமிடம்  மிருக காட்சி  சாலையோ ? இல்லை வாழும் சமூகம்  மிருகங்களின்  வாழ்விடமோ?
மென்னகை சிரிப்பலையாய்  மாறியது  என்னிடம்  😃

குறிப்பு : 
களிறு  -  ஆண்யானை
பிடி  -  பெண்யானை

Offline Guest 2k

வாழ்க்கையின் திசைகள் கலைத்து
இலக்கற்று பயணிக்கிறான்
ஒரு பயணி
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு
தளைகளை களைந்துவிட்டு
நீண்ட நெடிய பாதையை
தேர்ந்தெடுக்கிறான்
சிறிய நிழற்படக் கருவியோடு.
ஒவ்வொரு  நிழற்படமும்
அப்பயணிக்கு
வாழ்க்கையின் தாத்பரியங்களை உணர்த்திச் செல்கிறது,
ஒரு கதையை கூறி செல்கிறது,
நிஜங்கள் நிறுவ மறுத்த உண்மைகளை
ஊடுருவிச் சென்று நிழல்களில் பதிக்கிறது.


சில படங்களில் மனிதர்கள்,
மனிதர்களின் புற முகங்கள்
சில படங்களில் மிருகங்கள்,
மிருகங்களின் ஒளி நிறைந்த கண்கள்
சில படங்களில் காடுகள்,
காடுகளின் நிச்சலனம்
சில படங்களில் கடல்கள்,
கடல்களின் பேரமைதி
அந்நிழற்படக் கருவி ஒய்வில்லாமல்
ஒவ்வொரு தடங்களையும்
தன்னுள் அடக்கிக் கொண்டே செல்கிறது


ஒரு நாள், பெரும் வனத்திற்கு மத்தியில் சலசலத்து ஓடும் ஆறும்
இடதும் வலதுமாய் பலநூறு ஆண்டு காட்டோடு பிணைந்திருக்கும் மரங்களும்,
வலுவேறிய முதிய மரமொன்றின் வயிற்றின்
சின்னதொரு குடிசையின்
இருபதடி உயரத்திலிருந்து
கீழே நீர் அள்ளித் தெளிக்கும்
யானையுனுடன் விளையாடி மகிழும்
மனிதர்களை
படம்பிடித்தபடி நின்றிருக்கும் பின்மாலையில்
இலக்கற்ற அப்பயணி
வனத்தின் ஆதிகுடிகளில்
ஒருவனாகிறான்....


ஒரு ஆற்றங்கரையோரத்தில் பிடிக்கப்படும் நிழற்படத்திற்கு
எந்தவொரு சிறப்பம்சமும் தேவையில்லை
ஜீவனோடும் கண்களும்
சின்ன சின்ன அன்புகளும்
அன்புக்கு அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் தூய உள்ளங்களும்
போதும்
கண நேரம் நிழற்படக் கருவியை
விலக்கிவிட்டு பார்க்கிறான்
அப்பயணி
உலகத்தின் அத்தனை துயரங்களையும் மறந்துவிட்டு நீரள்ளி தெளித்து விளையாடும்
யானைக்கும், அச்சிறுவனுக்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை.
ஒரு நொடி வாழ்க்கையின் நிதர்சனத்தை விடுத்து
அக்காட்சியின் அழகியலில் மெய்மறந்த பயணி கூறிக்கொண்டான்,
"நிச்சயமாய்
இந்த வாழ்வு ஆசிர்வாதத்திற்குரியதுதான்"

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline ஆதிரை


வனம் ! இது வானம்  திறக்கும் இடம் !
மனிதர்க்கும் மிருகத்திற்கும்
கருணை பற்றி கொள்ளும் கணம் !
   
ஒ! மனிதா ...
மனத்தால் குழந்தையான
யானையை நீ அன்பால் கட்டி போடலாம் !
அதிகாரத்தால்  அல்ல...
தன் பலத்தை அறியாத விலங்கா அது ?
மலையையே தூக்கும் ...
ஆனாலும் உனக்கு அடங்கி இருப்பது போல் நடிக்கும் !

மனமும் யானையும் ஒன்று !
தன்  பலம் அறியாமல் ..
முடங்கி கிடக்கும்..
உருவத்தில் பெரிதானாலும்..
உள்ளத்தில் குழந்தையாய்...
ஊமையாய் அடங்கி நடக்கும்!     

காசுக்கு அலையும் உலகில்
கருணைக்கு ஏங்கும்  உள்ளங்களும் உண்டு
சாது மிரண்டால் காடு கொள்ளாது !
அடிமையாய் நீ கொடுமை படுத்தினால்
அதன் ஒரு அடியில் நீ சமாதி !     

ஒன்று நினைவில் கொள்!
அதன் மீது நீ கருணை காட்டவில்லை ..
யானைதான் உன் மீது கருணை காட்டி
அன்பிற்கு கட்டு பட்டு நிற்கிறது !

Offline Reece

aduthu oru try ;)

அன்பு ..
உலகையே ஆளும் ஒரு   உன்னதமான ஆயுதம்
மனிதர்களிடத்து மற்றுமின்றி பிற உயிர்களிடத்தும்
அன்பு செலுத்துவோம்

மனிதர்களைப் போல மிருகங்கள் இரண்டு
முகங்கள் கொண்டிருப்பதில்லை
பிறர் முன்னேற்றம் கண்டு
பொறாமை கொள்வதில்லை

மதம் பிடித்தால் மனிதர்களை   
தாக்கும்  விட உயிர்களைவிட
மதத்தின் பெயரால் மனிதர்களை
தாக்கும் மனிதர்களே கொடிய  மிருகங்கள்

அன்பே உயிர்களின் வளர்ச்சிக்கு ஊற்று
"ஊனுடலை வருத்தாதீர் உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!"

என்னும் பாரதியின் சொல்லுக்கேற்ப
அன்பினால் அழகாக்குவோம் இம்மானுடப் பிறப்பை !!!





Offline thamilan


மனிதனையும் மிருகங்களையும் பிரிப்பது
ஒரு அறிவே
மனிதனுக்கு ஆறறிவு
மிருகங்களுக்கு ஐந்தறிவு

ஒரு அறிவு குறைந்ததினால்
மிருகங்கள் ஒன்றும்
மனிதரிகளை விட தரம் குறைந்தவை அல்ல
மனிதனுக்கு அறிவு புகட்டுவதே மிருகங்கள் தான்

சுறுசுறுப்புக்கும் சேமிப்புக்கும்
உதாரணம் எறும்புகள்
பகிர்ந்துண்டு வாழ்வதத்திற்கு
உதாரணம் காக்கைகள்
நன்றிக்கு நாய்கள்
இப்படி மனிதனுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வது
மிருகங்களும் பறவைகளும் தான்

தங்களுக்கு உணவூட்டுபவர்களிடம்
தன்னலமில்லா அன்பை செலுத்துவது மிருகங்கள்
மனிதன் செலுத்தும் அன்பை விட
பலமடங்கு அன்பை செலுத்துவது மிருகங்களே
எட்டி உதைத்தாலும் நம்
காலடியில் கிடப்பது மிருகங்களே

அந்த மிருகங்களை மனிதன்
எப்படி பழகுகிறான்
யானைகளை பிச்சை எடுக்க பழகுகிறான்
கிளிகளை பிடித்து கூண்டில் அடைத்து
ஒரு நெல்மணிக்காக பொய் சொல்ல பழகுகிறான்
குரங்குகளை திருடவும் பழகுகிறான்

மிருகங்களையும் பறவைகையும்
கூண்டில் அடைப்பதை  நிறுத்துங்கள்
இயற்றுகையுடன் கலந்து சுதந்திரமாக
வாழ விடுங்கள்
அவை நம்மை வாழ்த்தும்

Offline BreeZe



அங்கிளுடன் ஒரு ஜங்கிள் பயணம்
(Jungle Ke Uncle)


சோம்பேறி ஞாயிற்றுக்கிழமையில்
உறக்கம் கலையாமல் படுக்கையில்
உருண்டு கொண்டிருந்தை என்னை
அங்கிளின் குரல் எழுப்பிவிட்டபோது தான்
அங்கிள் என்னை இன்று ஜங்கிளுக்கு அழைத்து போவேன் என்று சொன்னது
நினைவுக்கு வந்தது
குஷியாக எழுந்து கிளம்பினோம்
காடு நெருங்க நெருங்க
சூரிய ஒளி மேலேறிக்கொண்டிருந்தது
நிமிர்ந்து நான் சூரியனை பார்க்க முயற்சித்தால்
என்னால் சூரியனை பார்க்க இயலாமல் கண்கள் கூசியது
காட்டிற்குள்ளே நுழைந்தவுடன்
சூரியன் ஒளி மெது மெதுவாக மறைந்தது
திடீரென தூரத்திலே,
"கிக்கீ கிக்கீ குக்குகூ குக்குகூ"
என குருவிகளும் குயில்களும் கூவும் சத்தம் கேட்டது
ஆனால் நான் தேடி தேடி பார்த்தும் ஒரு பறவையும் கண்ணில் தட்டுப்படவில்லை
கீச்சிடும் குருவிகளை தேடிக்கொண்டே
காட்டின் உள்ளே ஓடினேன்
திடீரென
"ஸ்ஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ் இஸ்ஸ்ஸ்"
என்ற சத்தம்
என்னவென்று குனிந்து கீழே பார்த்தால்
கருகருவென்று நீண்டு நெளிந்த
ஒரு பாம்பு (ஸ்னேக்க்க்க் பாபு)
பாம்பை கண்டால் படையே நடுங்கும்
நானும் அங்கிளும் எம்மாத்திரம்
எடுத்தோம் பாரு ஓட்டம்
ஓடினோம் ஓடினோம்
காட்டின் உள்ளே வரை ஓடினோம்
அங்கே
பாம்பை விட நீளமாக சலசலத்து
ஓடியது ஆறு
ஆற்றை கண்டதும் சந்தோஷமாக
நீரில் இறங்கி குளித்தோம்
திடீரென
"சர்ர்ர்ர் புர்ர்ர்ர்ரென" என்ற சத்தம்
என்னவென்று திரும்பி பார்த்தால்
கரிய பெரிய யானை (கும்கிக்குட்டி) நீரருந்தி கொண்டிருந்தது
குளித்து பல நாள் ஆனது போல இருந்த அந்த யானை நீரை வாரி மேலே தெளித்துக் கொண்டதை பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தேன்
என் சின்னஞ்சிறு கைகளால் நீரை அள்ளி நானும் யானை மேலே தெளித்ததேன்.
ஒரு சந்தேகம் வந்து அங்கிளிடம்
காட்டுக்கு ராஜா சிங்கம் என்றால்
யானை யாரென்று கேட்டேன்.
உன்னை போல சிங்கக்குட்டிக்கு
நான் எப்படி அங்கிளோ
அதே போல இந்த காட்டுக்கே அங்கிள் தான் யானை என்று கூறி
என்மேல் நீரை தெளித்தார்
யானையும் அங்கிளுடன் சேர்ந்து கொண்டு
தன்னுடைய நீண்ட தும்பிக்கையால்
நீரை வாரி இறைத்தது.
மாறி மாறி
நாங்கள் நீரை அள்ளி தெளித்து விளையாடிக்கொண்டிருந்தோம்
திடீரென
"க்ளிக் க்ளிக் க்ளிக்"
என்றொரு சத்தம்
என்னவென்று திரும்பி பார்த்தால்
அங்கே ஒரு போட்டோகிராபர் அங்கிள்(யாழிசை சிஸ்)
எங்களை படமெடுத்துக் கொண்டிருந்தார்
"ஹய்யோ இங்கேயும் துரத்திக்கிட்டு பின்னாடி வந்துடீங்களா"
என்று அவர் மீதும் கொஞ்சம்
தண்ணீரை அள்ளித் தெளித்தோம்...


Copyright by
BreeZe