Author Topic: விவசாயி  (Read 809 times)

Offline சிற்பி

விவசாயி
« on: October 07, 2019, 08:25:56 PM »
ஒரு கோடி தேவையில்லை
உலகெலாம் தேவையில்லை
மண்போகும் நாள் வரைக்கும்
அந்த வான் போகும் நாள் வரைக்கும்
இந்த மண் போதும் எங்களுக்கு

உலகுக்கே சோறூட்டும்
உழவெங்கள் தொழில் ஆகும்
உழைக்காமல் வாழ்ந்தால் தான்
அது எங்கள் பிழையாகும்
உடல் சோர்ந்து போனாலும்
இந்த உயிர் போகும் என்றாலும்
மண் தந்த மானத்தை மார்போடு
சுமந்து வாழ்வோம்


ஏழேழு ஜென்மங்கள்
பிறந்தாலும் இறந்தாலும்
இந்த பொன்னான பூமியிலே
பிறக்கின்ற வரம் வேண்டும்
வயலோடு விளையாடி
வருகின்ற சந்தோசம்
அயல்நாட்டு வாழ்க்கையிலே
ஒரு போதும் கிடைக்காது

விவசாயம் காப்போம்
உலகை காப்போம்
உயிர்களை காப்போம்

        ... சிற்பி...
« Last Edit: October 07, 2019, 08:52:10 PM by சிற்பி »
❤சிற்பி❤