Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 231  (Read 670 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 231
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   ANOTH அவர்களால்        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline JeGaTisH

மனிதநேயம் இல்லாத மனிதனே
மடிசாய ஓர் மர நிழல் தேடுகிறாயோ !

இயற்கை என்னும் அன்னை
உன்னை அள்ளி அணைக்கையிலே
அவள் கைகளிலே  விலங்கிடுவதும்  சரியோ !

சிறு விரல்களால்   உன்னை அரவணைக்க
இயற்கை என்னும் உன்
அன்னை விருப்புகிறாளோ !
உன்னை பற்றி பிடித்து முத்தம் தந்திடவோ !

மரத்தை நட்ட மனிதா நீயே
இயற்கை யை அழிப்பது சரியா!
சாய நிழல் தேடும் மனிதனே
உன் சுகத்துக்காக மரத்தை அழி ப்பது சரியா !

மனிதம் உள்ளதென இயற்கை காட்டுகிறது
அது மனிதனிடம் உள்ளதென்று
அவன் உணரும் நாள் எதுவோ !

வாழ்க்கையில் இயற்கையை அழித்து
இன்பம் பெற  நினைத்தால்
அழிவின் ஆரம்பம் அதுவாகவே இருக்கும் !

இயற்கைக்கும் உயிர் இருக்கிறது
அதுவும் ஓர் அன்னையென என்று உணர்கிறாயோ !
அன்று தான் உன்னில் இருக்கும்
மனித நேயம் மண்ணை வெல்லும் !
 !


                                       அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்
« Last Edit: May 14, 2020, 07:59:06 PM by JeGaTisH »
அன்புடன் SINGLE  சிங்கக்குட்டி  ஜெகதீஷ்


Offline அனோத்

 • Jr. Member
 • *
 • Posts: 78
 • Total likes: 99
 • Karma: +0/-0
 • நான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை
விடை தெரியா  கேள்விகளுடன்
நடைப் பிணமாய் நானிருக்க
படை கொண்ட வேகத்துடன்
அணிதிரளும் பட்டாம் பூச்சிகள்.......

சடை கொண்ட கூந்தலை
தடையின்றித்  தழுவியவன்
நடை பயிலும் வயதிலோ
அடைபட்டிருக்கிறான்......

சடைத்து நிற்கும் மரத்தடியில்
புதைந்து போன தாய்மடியை
உணர்ந்து கொள்ளும் போதுதான்
அவள் உணர்த்தும் பாசமோ
பசுமை தரும் காட்சி தான்.......

உதிரம் இறுகும் வேளையில்
உதிரும் இலைகளின் வேலையால்
இழகும் மனதின் உணர்வுகள்
உன் தாய்  எமக்காற்றும் ஆறுதல்......

இலைகள் உரசும் காதலாய்
குருவிகளின் தஞ்ச பீடமாய்
இம்மரத்தடி மௌனத்தில் உணர்கிறோம்
நாம் தேடி வந்த தாய் மடி இதுவென………


முத்தமிழ் காதலன் அனோத்

Offline Hari

 • Newbie
 • *
 • Posts: 17
 • Total likes: 25
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
என் தாயின்  பூமிக்கருவறையுள்
விதையாய் நுழைந்தேன் 
சூர்ய வெப்பத்தின் கதகதப்பும்
ஆகாய தாயின் மழை நீர்துளிகளும்
எனக்கு  உயிர் கொடுக்க   
மரமாய்  இங்கு  உருவெடுத்தேன். 

பாலூட்டிகளுக்கு  பசியை போக்க
என் இலைகளை  பரிசாக்கினேன்
பறவைகளுக்கு   புகலிடம் கொடுக்க
என் கிளைகளை பரிசாக்கினேன்

மனிதனே!  நச்சு காற்றை நான் சுவாசித்தேன் 
நீ  சுகமாய் உயிர்வாழ  என் மூச்சுக்காற்றை தந்தேன்.

வெயிலின் அகோரத்தில்  மழையின்றி வாடினாலும் 
இதமான நிழல் கொடுத்து  அரவணைத்து
என் பிள்ளையாய்  காத்திடுவேன்
உன் பசி போக்க  கனி தருகிறேன் 
உன் களை  போக்க நிழல் தருகிறேன் 

அன்னை உன்னை சுமந்தாள் பத்து மாதம்
நான் உன்னை சுமப்பதோ  பிறப்பு முதல் இறப்பு வரை.

மானிட!!
பிறப்பு முதல் இறப்பு வரை நான் உன் நண்பனடா 
 நான் நிமிர்ந்து படர்ந்தால்  உனக்கு நிழல் .
பூக்கும் போதெலலாம்  நீ அருந்துவாய்  தேன் .
சிரிக்கும் போது உனக்கு இதமான தென்றல்
என் இலைகள் உதிர்கையில் மண்ணுக்கு உரம்.


நன்மைகள் செய்யும் என்னை அழிப்பது நியாயமா?
உன்னை காக்க வந்த என்னை  நீயே அழிப்பது சாபமா ?..
எனது அழிவு  உனது அழிவென்பதை அறிவாயா? 
எதிர்கால சந்ததிக்கு  நீ செய்யும் துரோகம்   என புரிவாயா?

கொரோனா  போன்ற  உயிர்கொல்லி நோய்கள் 
இயற்கையின்  சாபம்  என்பதை    தெரிவாயா?

மானிடா  இனியாவது  திருந்த  முயற்சி செய்
மரங்களை  அழிக்காதிரு
ஆயிரம் மரங்கள் நடுங்கள்  என்கிறார் ஐயா கலாம்
அவர் கூற்றை  மெய்யாக்குங்கள்   


இப்படிக்கு உங்கள் நண்பன் மரம் ..
« Last Edit: March 13, 2020, 09:41:22 PM by Hari »

Offline thamilan

விதைக்காமலும் விளைவது மரம்
காக்கையின் எச்சம்
பறவைகள் தின்ற மிச்சம் - இதிலிருந்து
வளர்ந்து படருவது மரம்

இறைவன் படைத்திட்ட
உலகத்தின் வரப்பிரசாதம் மரம்
உலகம் செழித்திட உயிர்கள் வாழ்ந்திட
இறைவன் அளித்திட்ட நன்கொடை மரம்

மழை தரும் 
நிழல் தரும்
காற்று தரும்
தன் உடம்பையே  மனிதனுக்காக
தியாகம் செய்திடும் மரம்
அதற்கு கைமாறக்க
மனிதன் என்ன செய்கிறான்

காடுகளை அழித்து
வீடுகளை கட்டுகிறான்
தன் தலையில் தானே
மண்ணை அள்ளிக் கொட்டுவது புரியாமல்

மனிதனுக்காக படைக்கப்பட்டது இயற்கை
அந்த இயற்கையை அழிப்பது
தன்னைத் தானே அழிப்பது என
மனிதன் ஏன் உணர மறுக்கிறான்
மரத்தை வெட்டுவது
தன் கைகளை தானே
வெட்டிக்கொள்வதுக்கு சமன்

இறைவன் எதையும்
காரணகாரியம் இல்லாமல் படைக்கவில்லை
இதை உணர்ந்து
மரங்களை வளர்ப்போம்

Offline SweeTie

மகனே உனக்கொரு கதை சொல்வேன்
நாளை நீ வளர்ந்து  இந்த மரம்போல்
நாட்டுக்கு நன்மைகள் செய்யவேண்டும்

iஇயற்கை அன்னையின் கொடைகள்  இவை
மக்களும் மாக்களும்  இனிது வாழ
வழங்கினான்  இறைவன் 
இயற்கையின்  வளங்கள். '
 
நீர்  நிலம்  காற்று  தீ  ஆகாயம் 
என்ற  ஐம்பூதங்களின்  ஆளுமையில்
உருவானது  இந்த  உலகம்

உண்ண உணவும்  கனியும்  கொடுப்பன
ஆற நிழலும்  சுவாசிக்க  பிராணவாயும்
பட்சிகளுக்கும்  மிருகங்களுக்கும்   தங்க இடமும்   
கொடுப்பன இந்த மரங்கள் .

மாக்களுக்கு ஐந்தறிவு கொடுத்தவன்
மானிடன் நமக்கு  ஆறறிவு  கொடுத்தான்
ஆறாம்  அறிவை  மறந்தான்  மனிதன்
நன்மை செய்யும் மரங்களை  வெட்டினான் 
நகரங்கள் அமைத்து சுயநலம் கண்டான்.

பட்சிகள்  தங்க இடமின்றி  தவித்தன
மிருகங்கள்   வெருண்டு   ஓடி ஒழிந்தன
நோய்களும்  நொடிகளும் நாடியே வந்தன
நிம்மதி இழந்தான்  சுயநல மானிடன் .

மகனே !  நாளைய  உலகம்  நலம் பெறவேண்டும்
இளைய சமுதாயம்  இனிதே வாழவேண்டும்
நோயற்ற  வாழ்வுக்கும்    அன்னையின்  ஆசிக்கும்
ஆயிரம் ஆயிரம்  மரங்களை நடுங்கள்
தந்தை  நான் சொல்லும் மந்திர வார்த்தை இது.

« Last Edit: March 26, 2020, 07:49:47 PM by SweeTie »

Offline BreeZe

 • FTC Team
 • *
 • Posts: 672
 • Total likes: 2286
 • Karma: +0/-0
 • Gender: Female
 • Smiling is the prettiest thing you can wear


உலகத்தை உய்விக்க பிறந்த
இயற்கை அன்னை நான்
உலகம் செழித்திட
உயிர்கள் தழைத்திட
இறைவன் படைத்த இயற்கை
அன்னை நான்

மரங்கள் மலைகள்
ஆறுகள் நதிகள் என
எங்கும் வியாபித்திருப்பவள் நான்
மரங்களைக் கொண்டு மழையை வருவித்தேன்
மனிதன் சுவாசிக்க தென்றலை தந்தேன்

நதி பெருக்கோடி
அருவியாய் கொட்டிட  வைத்தேன்
வான்முட்டும் மலைகளால்
முகில்களைத் தடுத்து
மழையால் பூமியை நனைத்திட்டேன்

ஆனால்
மனிதராகிய நீங்கள் என்ன செய்தீர்கள்
பால் குடித்த தனங்களையே அறுத்தது போல
மலைகளை அழித்தீர்கள்
உங்களை தழுவி சுகம் தந்த
மரங்களை அறுத்தீர்கள் 

நதிகளை அழித்து
மாடி வீடுகளை கட்டினீர்கள்
வயல்வெளி காடுகள் எல்லாம்
கட்டிடங்களாக மாறின

நீங்கள் செய்த பிழைகளின் விளைவை
நீங்களே அனுபவிக்கிறீர்கள்
மழை  இல்லை  குடி நீர் இல்லை
விவசாயம் பண்ண விளைநிலங்கள் இல்லை
ஆலைகளால் ஓசானில் ஓட்டை
அதனால் அதிகரிக்கும் வெப்பம்
கிருமிகளின் தாக்கம் என
உலகம் அழிய நீங்களே காரணம்

உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான்
தப்பு செய்தவன் தண்டனை அடைவான்
இனி சரி திருந்துவீர்களா
மூளையற்ற மானிடரே


Copyright By
BreeZe


Offline Unique Heart

 • Full Member
 • *
 • Posts: 126
 • Total likes: 214
 • Karma: +0/-0
 • Gender: Male
 • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
மரமான நானே! மக்களின் அறமாவேன்.!!
 
என்னுயிர் வாழும் வரை மண்ணுயிர்  காப்பேன்.

மானுடம் காக்க, என் ஜீவகம் தொடரும்.
என்னில் உரமான உணர்வுகளை,
உறவாக உருவகித்தேன்.   

இறைவனின் அருட்கொடையை கொண்டு,
மழை எனும் மாணிக்கத்திற்கு, 
பூமி தாயின் மடிதனில்  மக்களாய் பிறந்தேன்.

என் பூமி தாயிற்கு வளம் சேர்க்கவும்,
என் பூமி தாய் பெறாமல் சுமக்கும்,
எம் மக்களின் நலனுக்காகவும் நான் வாங்கி  வந்த வரமே. 
இம்மரம் எனும் நான்..

இப்பூவுலகில், சுயநலம் கருதி என்னை வெட்டுவோர் பலர்.

இருப்பினும், பொதுநலன் கருதி என்னை வளர்த்தவரும் உண்டு,
இன்னும் வளர்பவரும் உண்டு..

அவர் நலம் ஏதுவான போதிலும்,
என் நலம் எம் மக்களின் நலனுக்காக மட்டுமே.

இப்படிக்கு மானுடம் காக்க வந்த மாணிக்கம் (மரம்)..


என்றும் எம்மக்களை நினைக்க மறவா உறவாளன் 
💞💞AARON AHAMED💞💞
« Last Edit: April 04, 2020, 05:01:23 PM by Unique Heart »

Tags: