Author Topic: இறைஞ்சுகிறோம் இறைவா  (Read 1109 times)

Offline SweeTie

இறைஞ்சுகிறோம் இறைவா
« on: March 22, 2020, 10:49:31 AM »
நிற்கவும் நேரமில்லை
நிமிர்ந்து பார்க்கவும் முடியவில்லை
கைத்தொலைபேசியே  என் உலகம்
மடி கணினியே    என் வாழ்க்கை
எனது எனது என்றிருந்தோர்
எதிர்பார்த்து நிற்கின்றார் இன்று.

தாழிட்ட  வீடுகள் உள்ளே
நிலை குலைந்துபோன மனிதர்
வெறிச்சோடிய  வீதிகள்  எங்கும்
முகமூடி மனிதர்கள்
வெறுமையான  கடைகளையம்
விட்டு  விடவில்லை  இவர்கள்

பள்ளி சென்ற சிறுவர்
வீட்டில் அடங்கி விட்டார்
ஆளில்லா  பேரூந்தும்
அடுக்குமாடி அலுவலகமும் 
பேய் தூங்கும் இடமானதோ
'
ஊரடங்குச் சட்டத்தில்
உறங்கிக்கிடக்கிறது  உலகம்
பாராண்ட   தலைவரெல்லாம்
பதை பதைத்து நிற்கிறார்கள்
பங்குச் சந்தையெல்லாம்
சரிந்து விழுந்துவிட
பரிதவித்து  உறைந்து விட்டார் செல்வந்தர்

என்ன கொடுமை செய்தோம் என 
ஏன்கித்  தவிக்கிறது  உலகம்
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
பெற்றவளை நிந்தித்தாய்
காடுகளை அழித்தாய் காட்டுத் தீயானாள்
நீர்நிலைகளை அழித்தாய்  சுனாமியாய் வந்தாள்
மண் சூறையாடினாய்  எரிமலையானாள்
எத்தனை கொடுமைகள் எத்தனை அவலங்கள்

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
அத்தனையும் மறந்தாய் நீ மானிட!!
விஞ்ஞானம்  கண்டாய் 
மெய்ஞ்ஞானம்  மறந்தாய்
மதவெறியில்  மதம் கொண்டு
மதத்  தலங்களை அழித்தாய்   அன்று
பூஜைகள் முடங்கின இன்று
அசுர  வேகத்தில் வந்த அழிவா இது ?
உன்னை நீ உணர்வாய்  மானிடா!!

(எங்கள் இனிய இறைவா இறைஞ்சுகிறோம் !!! உலக மக்களை காத்தருள்வாய்)
 

 

Offline அனோத்

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 246
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !
Re: இறைஞ்சுகிறோம் இறைவா
« Reply #1 on: March 22, 2020, 04:33:39 PM »
தற்கால சூழலுக்கு ஏற்ப தங்களுடைய
வரிகளால் நிரம்பிய கவிதை மிகவும்
எம்மை சிந்திக்கவும் மாற்றத்தை நோக்கி
பயணிக்கவும் வைக்கிறது.

இயற்கை நமக்கு அவ்வப்போது
பல பாடங்களை கற்பிக்கிறது.
அவ்வகையான ஒரு பயத்தின்
பிடியிலேயே இவ்வுலகம்
இன்று சிக்கல்களை எதிர் நோக்குகிறது.

இருப்பினும் எம்மத்தியில் பலர் ஆற்றிய
மனித சேவைகளால் இந்த பிரச்சனைக்கான தீர்வு
வெகு சீக்கிரம் அமையுமென நம்புவோம்.

உங்கள் வரிகளின் தொனியும்
வார்த்தைகளின் ஆழமும்
அழகுற அமைந்திருக்கிறது-

வாழ்த்துக்கள் அக்கா

Offline SweeTie

Re: இறைஞ்சுகிறோம் இறைவா
« Reply #2 on: March 24, 2020, 09:14:05 PM »
Thank you  thambi!!!

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: இறைஞ்சுகிறோம் இறைவா
« Reply #3 on: April 09, 2020, 12:48:26 PM »
நல்லதொரு பிராத்தனை.
இறைவன் உங்களின் பிராத்தனை, இன்னும்
கஷ்ப்படும் ஏழை மக்களின் பிராத்தனைகள்,
ஏனைய அணைத்து மக்களின் பிராத்தனைகளையும்
ஏற்பானாக  என்று பிராத்திக்கிறேன்.   

நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள்  JOTHIKA🌹🌹

Offline SweeTie

Re: இறைஞ்சுகிறோம் இறைவா
« Reply #4 on: April 13, 2020, 10:47:32 PM »
நன்றிகள்  பல.  !!!