கருவறையில் 
உருவாக ஆகும்முன் 
என்னை 
உறவாக 
கண்டவள் 
நீயே 
உலகம் காண 
உருவம் கொண்டு 
வந்ததும் 
முதல் முத்தம் 
தந்தவள் 
நீயே 
பசி என்று என் 
நான் உணருமுன் 
வாரி அணைத்து 
பாலூட்டியவள் 
நீயே 
கல்விதனை 
நான் கற்க 
கைபிடித்து 
மணலில் எழுத 
கற்று தந்தவள் 
நீயே 
பசித்திருந்தும் 
உண்ணாமல் 
நான் வர காத்திருந்து 
உணவூட்டி 
பசியாறியவள் 
நீயே 
எனக்கு அடிபட்டாலும் 
என்னை விட 
வலியில் துடிப்பது 
நீயே 
ஊரார் என்னை பற்றி 
ஏது அவதூறு சொல்லினும் 
"என் பிள்ளை" பற்றி 
எனக்கு தெரியுமென 
என் பக்கம் 
நிற்பவள் 
நீயே 
என் ரகசியம் 
அனைத்தும் 
அறிந்த 
என் முதல் தோழி 
நீயே 
எத்தனை பிறவி 
எடுப்பினும் 
வேண்டும் 
என் தாயாய் 
நீயே 
****ஜோக்கர் ****