Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 248  (Read 327 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 248
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline MoGiNi

உன் நினைவுகளின் நீட்சியில்
உன் உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
நினைவு மலரென நான் ...

அதன் மகரந்தங்கள்
மனக்கருவறையில்
கடந்து சென்ற
பசுமையான நினைவுகளை
கருக்கொள்ள வைக்கிறது ...

உறை நிலைக் காலமொன்றில்
பாதி
உருகி விட்ட பனிப் பொம்மையென
என் உருவச் சிதலங்கள்
உறைந்து
உருக்குலைக்கிறது
இருந்தும் சிலிர்த்து
சிந்திக்க தவறியதில்லை ...

பூக்கள் நிறைந்த வனத்தில்
உதிர்ந்துவிட்ட பூவொன்றின்
ஸ்பரிசத்துக்காய்
ஒற்றையாய் தவமிருக்கும் தும்பியென
தவம் இன்னும் தொடர்கிறது ..

உள்ளம் கவர்ந்த ஓவியம் ஒன்று
உயிர் உருவிச் சென்றபின்னும்
அதன் நிழல் தேடி அலையும்
மன விசித்திரம் ..

உன்னை தாண்டும் தென்றல் என
உன் வாசம் சுமக்கிறது என் சுவாசம்
வரைந்து வைத்த ஓவியமென
நெஞ்சத்தில்
புனைந்து வைத்தகாவியம் நீ
வெகு தூரத்தில் இருப்பினும்
உன்னை விலகாது
நுகரும்
நினைவுப்பசி ...

புகழ் பெற்ற ஓவியர்கள்
தீட்டிய களங்கமற்ற ஓவியம்போன்ற
உன் வரிவடிவில்
வாழ்ந்துவிட துடிக்கிறது
ஒரு நிமிடம்
சிறகடிக்கும் இருதயப்பறவை ...

வண்டுகள் நுகரா மொட்டென
மலர மறுக்கும்
உன் இதழ்க் கடையில்
வழியும் அமுத மொழியில்
சிறகுலர்த்த தவிக்கிறது
இதுகாறும்
இன்மைஎனும்
வெம்மையில் குளித்த மனப்பறவை ...

திறக்காத உதடுகள் திறக்கும்
என்றோ ஒரு நாள் ஒரு பொழுது
ஒரு நொடியில் ...
அதைக் காண அன்று
திறக்காமல் போகலாம்
இமைக் கதவு ...
« Last Edit: October 25, 2020, 12:10:05 AM by MoGiNi »

Offline இணையத்தமிழன்


எட்டிப்பிடிக்க ஆசைப்பட்டவளை
கட்டிப்பிடிக்க வந்தவனே
எந்தன் கற்பனையில் உதித்தவனே
கண்ணுக்குள் இருப்பவனே
எந்தன் கண்ணாளனே
எந்தன்மனதை கொள்ளைகொண்ட 
கள்வனே காதலனே 

உந்தன்காந்தப்பார்வையிலே
என்னை கட்டியும் ஆண்டவனே
உந்தன் கடைக்கண் பார்வைக்கே
என்னையும் தொலைத்தேனடா

நன் வரைந்த ஓவியமே
என்னை திட்டிய காவியமே
உந்தன் இதழ் சாயம் பூசிட
என்னிதழும் பதித்தேனடா ;) :P
நீ ஓவியம் என்றும் மறந்து
உந்தன் இதழமுது பருகிட எத்தனித்தேன் :-*
எண்ணிமகிழ நிஜம் பல இருந்தும்
ஏனோ மனம் நிழலையே நாடிட

நீ நிழல் என்றறிந்தும்
நிஜஉலகிற்கு உன்னை
மறைத்தே வைத்தேனடா

உந்தன் ஸ்பரிசம் தொட்டு
காதலும் புரிந்திட
காத்திருப்பேன் காலமெல்லாம்

                          -இணையத்தமிழன்
« Last Edit: October 25, 2020, 09:57:20 AM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline thamilan

பூவணியும் பெண்ணாள் புதுமையாய்
தாவணியும் போட்டாள் சில நாட்கள்
காரணம் நான் கேட்க
காப்பாற்றத்தான் என்றாள்
மாராப்பை கொஞ்சம் மறைத்து

கற்பியல் என்ன களவியல் என்னடி
அற்புதமே உன்னை அடைந்திட-சிற்பி
செதுக்காத என் காதல் சித்திரமே
என்னை திரை சீலையில் செதுக்காமல்
உன் மனதில் செதுக்கு

நீ வரைந்த என்கண்களில்
காதல் வளருவதை நீ அறியாயோ
உன் கைப்படப் பட
என் உருவில்  காதலும் வளருவதை
நீ அறிவாயா
என் கைகள் துடிக்கிறதடி
உன்னை கட்டி அணைத்திட
உதடு துடிக்குதடி
உன்னை உச்சி மோந்திட

தூரிகையால் என்னை நீ வரைந்தாய்
பிரமன் எதை கொண்டு உன்னை வரைந்தான்-என
திகைத்து நிற்கிறேன் நான்
கண்நாடிப் போகும்கால்
கண்ணாடி போலிருந்த
பின்னாடி வந்தாளே பேசத்தான்
என்நாடி எல்லாம் ஏங்கியதே-ஏனென்றால்
முன்னாடி நின்றாள் முளைத்து

தீக்குச்சி போலவே தீவிரமாய்
வரைந்திட்டாய் என்னை
பூக்குச்சி ஆகியதுன் பூம்பார்வை
தாக்கும் இடியாய் இருந்தேன்
இதழ் முத்தம் தந்தாய்
பொடியானேன் உன்னில் புதைந்து

Offline Raju

 • Jr. Member
 • *
 • Posts: 53
 • Total likes: 173
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am the Perfect version of me !!
ஓர் இலை துளிர்
காலத்தின் ஈர நினைவு நீ..

உன் தூரிகை உணர்வால்
உயிர் கொடுத்த ஆத்ம லயம் ஒன்று
உன் அணைப்பினை
யாசிக்கின்றது..

இராக் காலதின்
நிசப்த நிசியில்
இதயப் பறவைஉன்
நினைவுகளில் சிறகுலர்த்திய தருணங்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை..

அன்பே.. காடு மலை தாண்டி
பறந்திடும் கற்பனை குதிரை
உன்னை யாசிப்பது நீ
அறிய வாய்ப்பில்லை..

அதன் நீளக் கால்கள்
உனக்காக நிலவழக்க காத்திருக்கின்றது..

உன்னால் புரிந்து கொள்ள முடியாத
சில புள்ளிகளால்
இணைக்கப்பட்டிக்கிறது
இந்தப் பொழுது..

ஆரத் தழுவும் உன்
ஆலிங்கனத்தில் என் ஆத்மா
உலவுகின்றது என்பதை நீ அறிவாயா..

தூரிகையில் என்னை வண்ணமிட்டது
போதும் என் காரியே..
வா.. உன் எண்ணத்தில்
நான் கோலமிடுகிறேன்..
அது சிவப்பு மஞ்சள்
பச்சையென தொடரட்டும்...

Offline AgNi

 • Jr. Member
 • *
 • Posts: 64
 • Total likes: 269
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !

அவன் :

என் சூரியனை சுமந்து திரிந்தவளே!

அன்று உன் மூச்சு காற்றை ..
சேமித்து ஒளித்து வைத்தேன் !
மூடி வைத்த காதலை நான்
சொன்னபோது இமை மூடாமல்
கேட்டு விட்டு  கெடு  வைத்தாய் !
கால் காசு பெறாத நீ ....
கால் கோடி  சம்பாதித்து  வா  என்றாய் !
உயிர்க்கு தீ மூட்டி  மனசுக்கு நீருறினாய் !
காதலுக்கும் காசுக்கும் சம்பந்தம் உண்டு
என்ற போதே என் பாதி உயிர் வெந்து விட்டதடி !
பேர் தெரியா ஊரில் உழைத்தேன் உனக்காக
கண் காணா தேசத்தில் ....
கலவரத்தில் களவாட பட்டது என் உயிர் !
இன்று ஆன்மாவாய் அலைகின்றேன் !
என்னை ஓவியமாய் தீட்டி .....
காதலை வேண்டி உருகுகிறாய் !
நீ துரதிஷ்டசாலியா?  இல்லை  நானா ?


அவள் :

மாய குதிரையாய் என் மன வானில்
வலம்  வந்தவனே !

எதுவும்முக்கியமற்றுப் போன
அந்த கணத்தில்...
உன் காதலை சொன்னபோது ...
எதிர்துருவங்கள் இரண்டு
இறுக்கிக் கொண்டதாய்
இதயத்துக்குள் ஓர்
இன்ப அதிர்வு....
காட்டிக்கொள்ளாமல் ....உள்ளுக்குள் சிரித்து ..
வெளியில்  முறைத்து ....
விளையாட்டாய் கெடு விடுத்தேன் ...
அதை உண்மை என்று நம்பி ...
எனக்காக வெளிநாடு சென்று விட்டாய் !

அதிகாலை அமைதியில்
வரும் உன் கனவு.
திடுக்கிட்டு வியர்த்தேன் !
விடை தெரியாத கேள்வியாய் நீ !
எங்கோ இருந்து என்னை ஆட்டிவைக்கிறாய் !
குத்துயிர்க்கனவுகள் ...
கடலாக்கியது என்னை...
உயிர்ப்பற்றகுமிழிகள் மேடுதட்டும் ...
ஓவியத்துக்குள் உன்னை சிறை
வைக்க முயல்கின்றேன் !
நீயோ என்னை உன்னுள் ..
இழுத்து சிறை எடுக்க பாக்கிறாய் !
எரிமலையாய்  குமுறும் இதயம் ...
உன் அணைப்பில் பனிமலையாய் உருகும் !
வந்துவிடு  என்னிடம் !
சரண் அடைந்தேன் உன்னிடம் !


அது .... (எது? ):

கால சக்கரத்தில் சுழலும் நான் !

வஞ்சனை இல்லா காதல் தான் ..
இவர்களிடத்தில் .....
ஆனாலும் சேர விடமாட்டேன் நான் ....
சத்தத்தை விட வலிமையான
மௌனத்தை  அவர்களுக்கு பரிசளிப்பேன் !
கவலை கண்ணீரில் மூழ்கட்டும் !
பிரிவு வேதனையில் பரிதவிக்கட்டும் !
உலகமே அவர்களுக்கு எதிராய் ...
இருப்பதாய்  வாழ்க்கை வெறுக்கட்டும் !
தோல்வியில் பாடம் பெறட்டும் !
நினைவுகளே இங்கு சுகமில்லை
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை ...

உயிரிகளின் ஜனனம் மரணம் என் கையில் ....
என்னை வெல்ல  யார் இந்த உலகில் ...?

« Last Edit: October 26, 2020, 09:04:22 AM by AgNi »

Offline JsB

 • Newbie
 • *
 • Posts: 19
 • Total likes: 93
 • Karma: +0/-0
 • Gender: Female
 • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
என் இதயத்தில்
உன்னை செத்துக்கி
நான் வரைந்த
மிகப் பெரிய அழகிய
ஓவியத்தின் சொந்தக்காரனே...
அதில் நான் நினைத்து 
பார்க்க முடியாத
உருவமாய் வந்தவனே...

என் கனவில் பிறந்தவனே...
என் கவிதையில் உருவானவனே...
என் கவிதையாய் வந்தவனே...
என் கவிதை நாயகனே...
எனக்கு உறவானவனே...
என் கற்பனை
திறனை வளர்த்தவனே...
என் நினைவில் வாழும்
என் அன்புக் காதலனே...

நான் உறங்கும் போது கூட
என் கனவிலும்...
விடிந்த போது கூட
என் நினைவிலும்...
வாழும் உன்னை
மறக்க வேண்டும் என்றால்...
நான் முதலாவதாக
இறக்க வேண்டும்
என்னுயிரே...
என்னுயிரில் கலந்தவனே...
என் மனதை கொள்ளையடித்தவனே...

என் தனிமையை இனிமையாக்கியவனே...
யாருமில்லா தனி அறையில்
அன்பே...
உன் உருவத்தை ரசித்தவளாய்
உன்னுடன் பேசி சிரித்தவளாய்
உன் மீது பைத்தியமானேனே 

எனக்கு ஆறுதல் தருபவனே...
கலங்கின நேரமெல்லாம்
என்னோடு இருப்பவனே...
உன் அரவணைப்பிலே
என்னைக்கட்டிப் போட்டவனே...
உன் பாசக் கயிற்றினால்
என்னைக் கட்டியணைத்தவனே...
முத்த மழையில் என்னை நனைப்பவனே...
மூச்சி முட்ட எனக்காய் சிரிப்பவனே...
என் சுவாசக் காற்றாய் மாறியவனே...

சித்திரையில்
சித்திரம் பேசும் கண்ணே
உன்னை மட்டும் அல்ல
உன் நினைவை சுமப்பதும்
எனக்கு கிடைத்த வரமே...
அது என் வாழ்வின் சுகமே...

என் நினைவலையில் நீ செய்திட்ட
உன் குறும்பின் எல்லைகளை
நான் நினைக்கும் போதெல்லாம்
எனக்குள்ளே தேனாய் இனிக்கிறது
என்னவனே...
அதை நினைத்து ரசிப்பதே...
நான் அதிகம் விரும்பி பார்க்கும்
படமாய் மாறிவிட்டது...

பல  உறவுகள் உனக்கு  இருந்தாலும்
என்னுறவு மட்டும் உனக்கு ஆழமாக
உன் அன்பின் ஆழத்தை உணர்ந்தவளாக
ஒவ்வொரு நொடியும் உனக்காகவே
வாழ துடிக்கும் என்னை மறந்து விடாதே...

விட்டு விட்டு துடிக்கும்
என் இதயமோ...
விடாமல் துடிக்கிறது
உன் வருகையின் தாமதத்தை
அறியாமல்...
நான் மறக்க முடியாத பிம்பம் நீயடா...
நான் தவிர்க்க முடியாத நினைவும் நீயடா...
வந்து விடு என்னோடு...

என்றும் அன்புடன்
உன் ஓவியத்திற்கு
தினமும் உயிரூட்டி ரசிக்கும்
உன்னுயிர் காதலி
JSB❤️
« Last Edit: October 26, 2020, 03:23:42 AM by JsB »

Offline TiNu

 • Full Member
 • *
 • Posts: 243
 • Total likes: 510
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
நீ இல்லா அறைதனில்
உயிரற்ற உடலாய் நானும்
வாழும் நிலை ஏனடா?

நாம் நகைத்து பேசிய
வார்த்தைகள் எனை கொல்ல
வாழும் நிலை ஏனடா?

தனிமை அறியா நம் இரவுகள்
தனித்தனியே தவித்து
வாழும் நிலை ஏனடா?

நிஜம் உரு மறைந்து மறந்து
நிழலை அணைத்து உயிர் 
வாழும் நிலை ஏனடா?

உன் மொழி கேளாத செவிகளும்
உன் உருவம் காணா கண்களும்
இருந்தென்ன பயனடா? 

ஒளியிழந்த என் விழிகளும்
உணர்விழந்து மெலிந்த என் தேகமும்
உயிரற்ற மரமாய் மரத்து கிடக்குதடா..

மனம் இல்லா மலர் போல வாடிய எனை
உன் சுவாசம் கொண்டு மலர செய்யடா - உன்
தீண்டலில் எனையும் உயிர்த்தெழ செய்யடா..

என் உடல் இங்கே... என் நினைவுகளோ அங்கே
உன் உருவம் அங்கே... உன் மனமோ இங்கே...
ஏன் இந்த பிரிவு நம்மிடையே.. வந்துவிடு என்னுடனே..

கதிரவ ஒளி பட்டு சிதறும் பனி போல
உன் குரல் கேட்டிட  நம் பிரிவு விலகி -  நாம் கூடும்
நாளை எண்ணி ஏங்கிடும் என் மனமே!!!
« Last Edit: October 26, 2020, 04:59:22 PM by TiNu »

Offline SweeTie

தூரிகைகளும் வர்ணங்களும்
எனக்கு வரப்பிரசாதம்
ஆனால்  நீயோ   என் வரம்
உன்னை வரையும்  ஒவொரு
கணமும்   நீ  என்னோடு
இருப்பது போல் பிரமையில்
துள்ளி குதிக்கின்றேன்
தோழ்  சாய தோழன்
நீ  கூடவே   இருக்க   
ஆழ்  மன த்தில்  ஆசைகளை
அணு அணுவாய்   நான் ரசிக்க
என்ன தவம்  செய்தேனோ   

தூரிகைகள் கொண்டு
உன்  கண்களில் பளிச்சிடும்
காதல் பொறிகளை
எப்படி  தீ ட்டுவேன் என
எத்தனையோ கற்பனைகள்
என்னை அடிக்கடி பார்த்து
கண்ணாடிக்கும்போது
தெரியும் அந்த குறும்பினையா
செல்ல கோவமும்   கொஞ்சலுமாய் 
ஏங்கும்  அந்த கெஞ்சலையா?
திமிரோடு   தெரியும்  உன் அதிகார
தோரணையின்  ஆளுமையையா?

 வரைந்த உன்  விரல்களுக்கு  வர்ணம்
தீட்டுகையில்  என் விரல்களுக்குள்
அவை சிக்கி கொள்வதும்
விடுவிக்கமுடியாமல்  நான் தவிப்பதும்
நீ  என்னை வேடிக்கையாய்
ஓரக்கண்ணால் பார்த்து சிரிப்பதும்
அது ஓவியம் என்பதையும்  மறந்து
.என்னை  நீ கட்டிக்கொள்வதும்
என் வெட்கத்  துகிலை  இழுத்து
 மூடிக்கொண்டு .....
சீ   .....போடா.....என்பதும்..
காதலின்  பரிபாஷை அன்றோ

 
« Last Edit: October 26, 2020, 12:33:29 AM by SweeTie »

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 792
 • Total likes: 2488
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பெண்ணின் ரகசியம்

நான் பரிச்சியம் ஆனா பின்
பழகினாள்,பரவாசமானாள்
பகிர துவங்கினாள்
வாழ்வின் ஒவ்வொரு நொடியயையும்

இப்படி ஒரு அழகை கண்டதில்லை
என அவளே வினவுவாள்
எங்கள் உறவுக்கு
அழகு பொருட்டல்ல என்று
தெரிந்தும்
அவளே வியப்பாள்

என்னுடன்
செல்ல செல்ல சண்டைகளிடுவாள்
குழந்தையின் கோவம் கொள்வாள்,
தினம் தினம் நடப்பதை
என்னுடன் சொல்லி பிரதி எடுப்பாள்
இருந்தும்
என்னிடம் அவளுக்கு
பிடித்தது
என் மௌனங்கள்

நான்
அவள்
கணவனோ அல்ல
காதலனோ அல்ல
நண்பனோ அல்ல
அவள் நேசிக்கும்
உறவுக்கு பெயரும் வைக்கவில்லை

பெண்ணின் சிரமங்களை
அவள் மூலம் உணர்ந்தேன்

பிரம்மன்
படைத்தான்
அவளை

அவள்
தூரிகையால்
படைத்தாள்
என்னை

ஆணாக என்னை
படைத்ததில்
தெரிந்தது
பெண்ணின் ரகசியம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Tags: