Author Topic: பேரன்பு - வலி  (Read 43 times)

Offline இளஞ்செழியன்

பேரன்பு - வலி
« on: October 29, 2020, 10:19:05 PM »
யார் நம்மை
உடைந்தழச் செய்வார்களோ!
அவர்களையே நம் மனம்
சிரிக்க வைக்க பாடுபடும்.
யாருடைய
சந்தோஷங்களைக் கண்டு
நம் மனம் குதூகலித்துக் கூத்தாடுமோ!
அவர்கள் நம் துயரங்களைக் கூட ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

யாரிடம் பரஸ்பரம்
நம் உணர்வுகளை
அதீதமாய் தொலைத்தோமோ!
அங்கே தான் நம் உணர்வுகள்
அற்பமாய் வடிவம் பெரும்.
எவரின் நலன்களுக்காக
அதிகப் பிரயத்தனங்கள் எடுப்போமோ!
அவர்களாலேயே நம் மனநலம்
உயிர்ப்பிழந்து தடுமாறும்.

எவருடைய குறுஞ்செய்திக்காக
நம் அழைப்பேசியையே
நாம் வெறித்து
பார்த்துக் கொண்டிருப்போமோ!
அவர்களிடமிருந்து மட்டும்
எந்த குறுஞ்செய்தியும்
நம்மை வந்தடையாது.
எவரின்
குரல் அழைப்புக்காக தவிப்போமோ!
அந்தக் குரலோசையை
கேட்பதற்கு மட்டும்
காதுகள் வரம் பெற்றிருக்காது.

யாருக்காக
உருக்குலைந்து
தவித்துக் கொண்டிருப்போமோ!
அவர்கள் மிக நிதானமாகவே
எம்மை அணுகுவார்கள்.
மேலும்...!
எவரெல்லாம்
நம் இன்மையை உணர்ந்து
நம்மிடம் நல விசாரிப்பு
செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ!
அவர்கள் யாரும்
நம்மை எண்ணி,
பச்சாதாபப்படுவதே இல்லை.

யாரை
நம் மனதுக்கு
மிக நெருக்கமானவராக
கொண்டாடித் தீர்ப்போமோ!
முதல் அலட்சியம்
அவர்களிடமிருந்து தான் ஆரம்பிக்கும்.

கடைசியாய்ப் பாருங்கள்...!
இத்துனையும்
நாம் அவர்களுக்காகத் தான்
செய்தோம் என்பதைக் கூட,
அறியாதவர்கள் போலவே
வெகு இயல்பாய் இருப்பார்கள்.
சகலமும் சரணாகதி என்றான இடத்திலேயே சரிந்தழ நேர்வதெல்லாம்,
பேறின்மையன்றி வேறில்லை.

Offline AgNi

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 269
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: பேரன்பு - வலி
« Reply #1 on: October 29, 2020, 10:44:16 PM »

தோழரே!   ஆழ் மனதின்உண்மைகளை அழகாக இயம்புகிறீர்கள்!..அருமையான கவிதை!  வாழ்த்துக்கள்!

Tags: