Welcome, Guest. Please login or register.

February 26, 2021, 06:33:58 AM

Login with username, password and session length

Shoutbox

Recent

Author Topic: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)  (Read 308 times)

Offline Forum

பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)

நண்பர்கள் கவனத்திற்கு,
 எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும்  திங்கள்  கிழமை   (11-01-2021) இந்திய நேரம் இரவு 12 மணிக்கு  முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

Offline thamilan

பொங்கல்
உழைப்புக்கு மரியாதை செய்யும் ஒருநாள்
உழவருக்கு நன்றி சொல்லும் திருநாள்   
மாடாய் உழைத்திடும் உழவர்க்கு
உறுதுணையாய் நின்று உழைத்திடும்
மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நன்னாள்
பகலவனுக்கு படையலிட்டு
உலகை உய்ப்பிக்கும் ஆதவனுக்கு
நன்றி சொல்லும் நாள்

கால் மேல் கால் போட்டு
கழுத்தில் டை கட்டி
குளிரறைக்குளே வியர்க்காமல்
உடை கசங்காமல் உழைப்பதை
பெருமையாக நினைக்கிறோம்
சேற்றில் கால் பதித்து
உடையெல்லாம் அழுக்காகி
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி
உலகிற்கே உணவு அளித்திடும்
உழவர் தம்மை
நினைத்திட மறக்கிறோம்

அந்த வானம் மழை பொழிந்தாலொலிய
மண்ணில் விதை விழுந்தாலொலிய
உழவன் கால் சேற்றில் பதிந்தாலொழிய 
சோறு தட்டில் விழாது 
நெல்லை சொல்லில் மட்டுமே பார்க்கலாம்

உறவுகளின் புன்னகை
வீட்டில் பொங்க
இனம் புரியா இன்பம் மனதில் பொங்க..
நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்.

FTC  நண்பர்கள் அனைவருக்கும்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
 
« Last Edit: January 09, 2021, 07:22:30 AM by thamilan »

Offline JeGaTisH

தை திரு நாலாம் இன்று
சூரியனார் வருகைக்கா
காத்திருக்கிறார்கள் சில கலப்பைகளுடன்
விவசாசியின் கைகளும் உன்னை வணங்கிடவே !

வாழ்த்திடுவீரே எங்கள்
வாழ்க்கை செழிக்க !
வாழவுதொறும் வந்திடுமோ
இன்னாலும் உன்னை நெனைக்க !

தரிசு நிலங்கள் விளை நிலங்களாக
மாறிட மாரி மழையாக உதவிடாயா !
காற்றுக்கு கோஜம் ஓய்வுகொடுத்து
அதை சற்று தாமதமாக்கிடையா !

உழவர் நாளின்று படைக்கிறோம்
பொங்கல் பொங்கி !
வருஷமெங்கும் எங்கள் வாழ்வு உயர்ந்திட
வழியொன்று செய்திடையா  !

பகை பஞ்சம் பொறாமை எரித்து
பண்பு பாசம் பகிர்வு என நல்லெண்ணங்களை
எல்லோரு மனதிலும் விதைத்து
இனிதாக ஆரம்பிக்கட்டும்
இவ்வாண்டு  இனிதாய்
தைபொங்கலோடு பொங்கலாய் !

எல்லா FTC நண்பர்களுக்கும் என் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் !Offline SweeTie

கிழக்கு திசை நோக்கி 
முக்கல்   அடுப்பு  மூட்டி   
புதுப்பானைதனை   ஏற்றி   
புத்தரிசி சக்கரை    பால்  சேர்த்து'
பழ வகையும்    நறுமணமும்
கூடவே    தேன்  சேர்த்து
பொங்கிடுவோம்  பொங்கல்
பொங்கலோ பொங்கல் 

கதிரவனை   சாட்சிவைத்து
ஏர்  பூட்டி   வயல்  உழுது 
நாற்று நட்டு  நீர்  ஊற்றி 
நாற்புறமும்   காவல்  போட்டு 
பட்சி  பறவை   கொத்தாது
நடுவிலே   வெருளி  வைத்து 
காத்திருந்து   பூத்த  வயல்
உழவர்  மனம் கோணாமல் 
நெல்மணியாய்   பூத்து   நிற்க
நன்றி சொல்லும்  திருநாள் 
உழவர்  திருநாள்   இதுவே.

விழைவித்த   பூமிக்கு  நன்றி 
மழை கொடுத்த   வருணனுக்கு நன்றி
ஒளி  கொடுத்த  கதிரவனுக்கு நன்றி
உழவனோடு  உழைத்த மாடுகளுக்கு நன்றி
உணவூட்டும்  உழவருக்கு   நன்றி   
நன்றி கூறும்  திருநாளில்   
அனைவரையும்  அன்போடு  போற்றுவோம்
பொங்கலோ பொங்கல்  பொங்கட்டும்
உங்கள் உள்ளங்கள்  அன்பால்  நிறையட்டும்.

( அனைத்து  நண்பர்களுக்கும்   ஜோவின்  இனிய பொங்கல்  வாழ்த்துக்கள் )   

Offline MysteRy

 • Global Moderator
 • Classic Member
 • *
 • Posts: 216762
 • Total likes: 21596
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/
பொங்கல்
உழவுக்கும் உழுது உழைக்கும் மாடுகளுக்கும்
உலகை வளமிக்கதாக மாற்றும் ஆதவனுக்கும்
நன்றி சொல்லும் நாள்

வருடத்தின் முதல் மாதம்
நடுப்பகுதியில் வரும்
இந்த திருநாள் தைத்திருநாளாகும்
வேண்டாதவற்றை எல்லாம்
நெருப்பிலிட்டு பொசுக்குவது
போகிப் பொங்கல்
அகங்காரம் ஆணவம்
பொறாமை பகைமை என
நம் மனதிலுள்ள வேண்டாதவை யாவற்றையும்
இந்த தீயிலிட்டு பொசுக்குவோமாக

தைப் பொங்கல்
இது உழவர்களுக்கும்
அறுவடைக்கு உதவும் ஆதவனுக்கும்
நன்றி சொல்லும் நாள்

மாட்டுப் பொங்கல்
உழவுக்கு உறுதுணையாக இருக்கும்
எருதுகளுக்கு நன்றி சொல்லும் நாள்

காணு பொங்கல்
சகோதரர்கள் சகோதரிகளுக்காகவும்
சகோதரிகள் சகோதரர்களுக்காகவும்
இறைவனை பிராத்திக்கும் நாள்

அதிகாலையே
குளித்து புத்தாடை உடுத்தி
வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு
கற்களால் அடுப்பு மூட்டி
புதுப் பானை வைத்து
அரிசியிட்டு பொங்கல் வைத்து
பொங்கி வழியும் போது
பொங்கலோ பொங்கல் என்று
எல்லாம் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சி ஆரவாரமிட்டு
கொண்டாடும் பொங்கல்
தனி ஒரு ஆனந்தம்

இந்த பொங்கல் திருநாளில்
நண்பர்கள் அனைவருக்கும்
கடவுள் அருளும் ஆசியும்
பொங்கி வழிய வேண்டும் என
வாழ்த்துகிறேன் 
 
« Last Edit: January 12, 2021, 06:49:04 PM by MysteRy »

Offline MoGiNi

உழுதுண்டு வாழ்பவர்
தம்
உணர்வுகளுக்கும்
உரிமைகளுக்கும்
அவர்தம் வழங்கும்
உணவுகளுக்கும்
நன்றிபகிர
நாள் ஒன்று போதுமா ...

இருந்தும்
உமக்காக நாம்
ஒருநாளை ஒதுக்கி
உமக்கு உறுதுணையாம்
அந்த ஆதவனுக்கும்
ஆ நிரைக்கும்
அகம் மகிழ்ந்து
அன்பில் திளைத்து
பகிர்கிறோம் நன்றி
இத்தைத் திருநாளில் ..

ஊசிக்குளிரில்
ஊண் நடுங்கி
உறைபனி கண்ட பொழுதும்
உறங்காது பொங்கல் பொங்கல் என
மனம் செய்து
விழித்து வெடவெடக்க
சூரியனை
காணாத போதும்
வெளிநாடுவாழ் தமிழர் நாம்
பொங்கிச் சரிக்கிறோம் என்றால்
உளவர்க்கு
உரைத்துவிட  முடியாத
உவகை ததும்பும்
நன்றியை தவிர வேறுண்டோ ..

வாழ்க ஏர்மக்கள்
வாழ்க மேன்மக்கள்
வளர்கவே ...

Offline Raju

 • Jr. Member
 • *
 • Posts: 67
 • Total likes: 225
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am the Perfect version of me !!
வாசல் தெளித்து
கோலமிட்டு
மாவிலை கட்டி
புதுப்பானை புத்தரிசி
சர்க்கரைப் பொங்கலிட்டு
ஊரெங்கும் கமகமக்க
உள்ளங்கையில் எடுத்து
ருசிபார்க்கும்
உவப்பான பொங்கல் இன்று...

ஏர் பூட்டி உளவுபார்த்து
எங்களுக்கும் உங்களுக்கும்
ஏன் பாருக்கே சோறுபோடும்
உழவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது..

இன்றோடு கடந்திடும்
நன்றியும் நவில்தலும்..
இனி அடுத்துவரும் தைவரை
அவர்களை நாம்
மறந்துவிடுவோம்...

கொண்டாட ஓர் நாள்
கொடுத்து தின்ன ஓர் நாள்
பண்பாடு பேச ஓர்நாள்
சில பட்டி மன்றம் அரைநாள்..
தொலைக்காட்சிப் பெட்டியில்
தை விடுமுறையை தொலைத்துவிட்டு
மறுநாள் வளமைக்கு திரும்பும்
நமக்கெல்லாம்
பொங்கல் ஒர் நாள்
அவ்வளவே...

ஏர் பூட்டி
சேறுளைந்த மக்களுக்கு
அவர் தம் வேர்வை
பூக்களாகும்
திருநாளே
பொங்கலென்பேன் !!!


இனிய பொங்கல்  திருநாள் வாழ்த்துக்கள்