Author Topic: பழமொழிகள்  (Read 6018 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #15 on: December 20, 2012, 01:23:27 AM »
50   ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
51   ஆனை படுத்தால் ஆள் மட்டம்.   
52   ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே   
53   ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.   
54   ஆனைக்கும் அடிசறுக்கும்.   
55   ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.   
56   ஆரால் கேடு, வாயால் கேடு.   
57   ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.   
58   ஆறின கஞ்சி பழங் கஞ்சி.   
59   ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.   
60   ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?   
61   ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.   
62   ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.   
63   ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.   
64   ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.   
65   ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.   
66   ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.   
67   ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.   
68   ஆழமறியாமல் காலை இடாதே.   
69   ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #16 on: December 20, 2012, 01:25:24 AM »
70   இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.   
71   இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.   
72   இஞ்சி இலாபம் மஞ்சளில்.   
73   இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.   
74   இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.   
75   இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

76   இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.   
77   இனம் இனத்தோடு தான் சேரும்   
78   இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே   
79   இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.   
80   இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.   
81   இரக்கப் போனாலும் சிறக்கப் போ.   
82   இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.   
83   இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே   
84   இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை இராச திசையில் கெட்டவனுமில்லை   
85   இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.   
86   இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.   
87   இராமன் ஆண்டா என்ன? இராவணன் ஆண்டா என்ன?   
88   இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.   
89   இருவர் நட்பு ஒருவர் பொறை.   
90   இரைச்சல் இலாபம்.   
91   இறங்கு பொழுதில் மருந்து குடி   
92   இறுகினால் களி , இளகினால் கூழ்.   
93   இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.   
94   இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.   
95   இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.   
96   இளங்கன்று பயமறியாது   
97   இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.   
98   இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.   
99   இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?   
100   இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #17 on: December 20, 2012, 01:26:03 AM »

101   ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்   
102   ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.   
103   ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.   
104   ஈர நாவிற்கு எலும்பில்லை.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #18 on: December 20, 2012, 01:26:35 AM »
105   உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.   
106   உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு   
107   உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.   
108   உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?   
109   உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா   
110   உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.   
111   உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.   
112   உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.   
113   உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?   
114   உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.   
115   உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.   
116   உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்   
117   உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.   
118   உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?   
119   உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.   
120   உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.   
121   உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்   
122   உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்   
123   உலோபிக்கு இரட்டை செலவு.   
124   உளவு இல்லாமல் களவு இல்லை.   
125   உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
126   உள்ளது போகாது இல்லது வாராது.   
127   உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய   
128   உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.   
129   உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.   
130   உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #19 on: December 20, 2012, 01:27:31 AM »
131   ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.   
132   ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.   
133   ஊண் அற்றபோது உடலற்றது.   
134   ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு   
135   ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.   
136   ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.   
137   ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #20 on: December 20, 2012, 01:28:14 AM »
138   எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?   
139   எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.   
140   எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?   
141   எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.   
142   எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?   
143   எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,   
144   எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.   
145   எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.   
146   எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.   
147   எண்ணை முந்துதோ திரி முந்துதோ?   
148   எதார்த்தவாதி வெகுசன விரோதி.   
149   எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.   
150   எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #21 on: December 20, 2012, 01:28:57 AM »

151   எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?   
152   எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.   
153   எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா   
154   எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?   
155   எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.   
156   எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.   
157   எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்   
158   எருது நோய் காக்கைக்கு தெரியுமா?   
159   எறும்பு ஊர கல்லுந் தேயும்.   
160   எறும்புந் தன் கையால் எண் சாண்   
161   எலி அழுதால் பூனை விடுமா?   
162   எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.   
163   எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.   
164   எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்   
165   எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?   
166   எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது   
167   எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?   
168   எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.   
169   எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்   
170   எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.   
171   எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.   
172   எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?   
173   எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.   
174   எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்   
175   எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
176   எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #22 on: December 20, 2012, 01:29:22 AM »
177   ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை   
178   ஏரி நிறைந்தால் கரை கசியும்.   
179   ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.   
180   ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக்கோபம்.   
181   ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.   
182   ஏழை என்றால் எவர்க்கும் எளிது   
183   ஏழைபேச்சு அம்பலம் ஏறாது   
184   ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #23 on: December 20, 2012, 01:30:00 AM »
185   ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.   
186   ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது   
187   ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #24 on: December 20, 2012, 01:31:03 AM »
188   ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.   
189   ஒரு காசு பேணின் இரு காசு தேறும்   
190   ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை   
191   ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?   
192   ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?   
193   ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை   
194   ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?   
195   ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.   
196   ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்   
197   ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.   
198   ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.   
199   ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.   
200   ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
201   ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை   
202   ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!   
203   ஒழுகிற வீட்டில் கூட இருக்கலாம், அழுகிற வீட்டில் இருக்கக் கூடாது   
204   ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #25 on: December 20, 2012, 01:31:33 AM »
205   ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.   
206   ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.   
207   ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.   
208   ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.   
209   ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.   
210   ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?   
211   ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.   
212   ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி   
213   ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #26 on: December 20, 2012, 01:32:25 AM »
214   கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?   
215   கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.   
216   கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.   
217   கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்   
218   கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி   
219   கடலுக்குக் கரை போடுவார் உண்டா?   
220   கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.   
221   கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?   
222   கடல் திடலாகும், திடல் கடலாகும்.   
223   கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?   
224   கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.   
225   கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
276   களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.   
277   கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.   
278   கள்ள மனம் துள்ளும்.   
279   கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.   
280   கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!   
281   கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!   
282   கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.   
283   கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
« Last Edit: December 20, 2012, 01:34:53 AM by Global Angel »
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #27 on: December 20, 2012, 01:32:56 AM »
251   கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?   
252   கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி   
253   கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.   
254   கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.   
255   கரணம் தப்பினால் மரணம்.   
256   கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?   
257   கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.   
258   கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்   
259   கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?   
260   கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.   
261   கறந்த பால் மடி புகாது   
262   கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.   
263   கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.   
264   கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.   
265   கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.   
266   கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.   
267   கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்   
268   கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.   
269   கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.   
270   கல்லாதவரே கண்ணில்லாதவர்.   
271   கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.   
272   கல்வி அழகே அழகு.   
273   கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.   
274   கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.   
275   களவும் கற்று மற
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #28 on: December 20, 2012, 01:33:41 AM »
   
284   காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.   
285   காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.   
286   காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.   
287   காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.   
288   காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?   
289   காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?   
290   காணி ஆசை கோடி கேடு.   
291   காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்   
292   காப்பு சொல்லும் கை மெலிவை.   
293   காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.   
294   காய்த்த மரம் கல் அடிபடும்.   
295   காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.   
296   காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.   
297   காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?   
298   கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை   
299   காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.   
300   காற்றில்லாமல் தூசி பறக்குமா?
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #29 on: December 20, 2012, 01:35:25 AM »

301   காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.   
302   காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.   
303   காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.   
304   காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்   
305   காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.   
306   காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.   
307   காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்   
308   கிட்டாதாயின் வெட்டென மற   
309   கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.   
310   கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
                    

Tags: