FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on August 17, 2018, 03:20:07 AM

Title: உனக்கான தோள் நான், எனக்கான மடி நீ
Post by: Guest on August 17, 2018, 03:20:07 AM
அன்பு பெருக்கெடுத்து
அகண்டவெளியில் மிதக்கும் ஒரு தருணத்தில் கவிதையூறும் மனம் ஒன்றை யாசிப்பேன்.

கூடவே..
உணர்வுகளால் நெய்த ஒரு போர்வையையும், அதன் கதகதப்பை உணரும் நெருக்கத்தையும்..

பொழுதுகள் தாண்டி,
பொதுவெளியில் எனக்குள்ள 'அமைதியானவன் முகமூடி' களைந்து உன்னோடு ஒரூ  மிருகபல சண்டையும்...

ஏன் என்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கம் பேசி கொஞ்சம் சுயபூராணம்...

ஒரூ நொடி மாற்றத்தில் உன் நியாயங்கள் உணர்வேன்.

பின், அன்பு திமிறும் ஒரூ புள்ளியில் சண்டையும், வெறுப்பு உருகும் ஒரூ புள்ளியில் அன்பும் செய்வோம்.

பரஸ்பரம் வெறுப்புகள் தாண்டி நேசம் கொள்வதும், விரக்திகள் தாண்டி கனவுகள் காண்பதுமே வாழ்க்கை.

இத்தனை களோபரங்களிலும்
உனக்கான தோள் நான்,
எனக்கான மடி நீ..

வா! கவிதைகள் குறித்து பேசிக்கொண்டே அண்டம் வியந்து பார்க்கும் வகையில் ஒரு அன்பு செய்வோம்.