FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 20, 2021, 03:42:10 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: Forum on June 20, 2021, 03:42:10 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 270

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/270.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: எஸ்கே on June 20, 2021, 07:26:12 PM
அவள் மீது காதல்  கொண்டேன் பார்க்காமலே ...🌹
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
காதல் கை கூடுமா அல்லது இடை நின்று போகுமோ! 🌹

அவளின் மறு வார்த்தைக்காக காத்து கிடந்தேன்.... 🌹
அவளோ  பாராமுகமாக நடந்து கொண்டாள்.. 🌹
அவளின் சந்திர வதனம்  பார்க்க
என் மனம் ஏங்கி கிடப்பது ஏனோ!! 🌹

பாழாய் போன  இந்த மனம் என்னவோ
சொல் பேச்சு கேட்க மறுக்கிறது... 🌹
அவளின் முதல் பார்வை காண ஏதோ
பரிதவித்து கிடக்கிறது இந்த நெஞ்சம்!!! 🌹

ஆனால் அவளின் நிலைமையோ என்ன
யாருக்கு தெரியும் என் போல் அவள்
இருப்பாள் என என்ன நிச்சயம்... 🌹
ஒரு வேளை முதல் பார்வையில் அவள்
என் மீது காதல் கொள்வாளோ என்னவோ!!!! 🌹

பாராக் காதலிலும் ஒரு சுகம் இருக்க தான்
செய்கிறது ஆனால் அதை அவள் அறிவாளா என்னவோ... 🌹
ஒரு வேளை அவள் பெண்ணாக தான்
இருப்பாளோ என ஐயம் ஏற்படுகிறது...🌹
ஒரு வேளை மாய பிம்பமாக இருக்குமோ!!!!! 🌹

என்னவாகவோ இருக்கட்டும் பார்த்தவுடன்
காதல் என்பது சாத்தியம் தானா.... 🌹
விழி பிதுங்கி நிற்கின்றேன் நான்
அவளின் முதல் பார்வைக்காக ....🌹
தரிசனம் தருவாளா காத்திருந்து பார்ப்போம்...!!!!!! 🌹

                                     
                                                                           🌹 எஸ்கே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: thamilan on June 20, 2021, 09:32:17 PM


காதல் ஒரு உணர்வு
காதல் உடம்பில் ஏற்றப்படும்
ஒரு ரசாயனக் கலவை
மனதின் பரிமாண வளர்ச்சி

காதல் யாருக்கு வரும்
எப்போது வரும்
வரும் வரை யாருக்கும் தெரியாது
வந்துவிட்டால் வாழவும் விடாது
சாகவும் விடாது

காதலில் பலவகை உண்டு
கண்டதும் காதல்
காணாமலும் காதல்
இன்டர்நெட்டில் காதல்
கடிதத்தில் காதல்
சிலருக்கு நிழலை கண்டும் காதல் வரும்

காதல் எப்படி வேண்டுமானாலும் வரட்டும்
அது உள்ளங்களில் இருந்து
உணர்வுகளுடன் கலந்து
உண்மையாக வரட்டும்
அந்தக் காதல் ஆயுள்வரை நிலைக்கும்
அழகைக்கண்டு உடல் அமைப்பைக்கண்டு
வரும் காதலுக்கோ ஆயுள் கம்மி

பலரது
காதல் என்ற உணர்ச்சி
உடம்பில் இருந்தே வருகிறது - அது
உள்ளத்தில் இருந்து வருவதில்லை
அதனால் தான்
இன்றைய காதல் எல்லாம்
உடம்புகளுடன் முடிந்து விடுகிறது

காதல் ஒரு வகை
உணர்ச்சி தான் - ஆனால்
உணர்வுகளுடன் கலக்காத அந்த
உணர்ச்சி உருவம் பெறுவதில்லை

காதலுக்காக கட்டப்பட்ட
தாஜ்மகாலை போலவே
காதலும் இன்று
கல்லறை ஆகிவிட்டது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: இணையத்தமிழன் on June 20, 2021, 11:23:11 PM
பார்த்ததும் காதல்
அவளை பார்த்த அந்த நொடி
அவள் விழியினில் கண்டேன்
காதலின் மொழியை

கண்களாலே கைதும் செய்தாய் அன்று
இன்றோ வார்த்தைகளால் கைதுசெய்கிறாய்
வெறுக்கவைக்க நினைக்கிறாய்
தோற்பாய் என்று அறிந்தும்

நடைபிணமாய் இருக்கிறேன்
நடந்ததை எண்ணி கரைகிறேன்
உள்ளத்தை பறிகொடுத்து
உணர்வற்று திரிகிறேன்
உடைந்தும் தான் போகிறேன்
உயிரையும் தான் துறக்கிறேன்

அழுகையில் சிரிக்கிறேன்
அழுதுகொண்டே நடிக்கிறேன்
இதயத்தை தொலைத்துவிட்டு
இயல்பாக நடிக்கிறேன்

மரணமும் விரும்பிட 
மனதும் கனத்திட
மனதையும் மாற்றினேன்
மனைவியின் வார்த்தைக்கு  (நான் கொடுத்த வாக்கிற்கு )

மரணத்தை மறந்தவனோ
மணித்துளியும் மரணித்தேன்
உந்தன் மௌனத்தை கண்டிட

மலர்த்தூவி மண்ணுள்ளே சென்றாலும்
மறையாது நம்காதல்

மாலையிட  நினைக்கின்றேன்
மனைவியாக்க துடிக்கின்றேன் 
மண்டியிட்டும் கேட்கின்றேன்
மறுக்காதே பெண்ணே
இப்படிக்கு

                       -இணையத்தமிழன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: PreaM on June 21, 2021, 01:06:50 AM
மனிதா...
காதலுக்கோ கண்கள் இல்லை
கண் இருந்ததும் நீ குருடனே

உன் பார்வையிலே தவறு இல்லை
நீ பார்ப்பதெல்லாம் உண்மை இல்லை

பாவப்பட்ட மனிதனுக்கு
காதல் ஒன்றும் புதிது இல்லை

காதலிக்க வயசு இல்லை
உன் காதலியோ உண்மை இல்லை

உண்மையான காதலுக்கு
உருவம் ஒன்றும் தேவை இல்லை

உன் சிந்தனையை சிதறவிடும்
காதல் ஒரு போதையே

காதல் செய் தவறு ஒன்றும் இல்லை
உருவம் பார்த்து அல்ல
உள்ளம் பார்த்து காதல் செய்

நிழலை பார்த்து
நீ கொண்ட காதலுக்கு
நிஜத்தில் உண்டு ஏமாற்றம்
மனதை பார்த்து காதல் செய்

கண்டவுடன் காதல் கொண்டவனே
நிழல் வேறு நிஜம் வேறு
கண் இருந்தும் குருடன் ஆகாதே

நிழல் ஒருபோதும் நிஜம் ஆகாது

மரத்தின் நிழல் என்றும் உனக்கு மகிழ்ச்சியே

நிழல் கண்ட காதலுக்கு என்றும் இல்லை வளர்ச்சியே


                         《-----------  ❤  பிரேம் ❤ -------------》






Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: MoGiNi on June 21, 2021, 01:12:25 AM
சிறுகச் சிறுக
என்னை
சிறைப் பிடிப்பதாய்
உணர்வு...

காலைகள்
அவளின்
கசங்கிய
சேலையில் மலர்வதாக
நினைவு..

மாலைகள்
மணக்கும்
மல்லியில்
மயங்குவதாக
எண்ணங்கள்..

உறங்கும் பொழுதுகளை
அவள்
உலர்ந்த உதடுகளால்
உயிர்ப்பிப்பதாய்
கனவுகள்...

கடந்து செல்லும்
பறவையின் கண் கொண்டு
என்னை
பின்தொடர்வதாக
கற்பனைகள்..

தென்றலிடம்
அவளின்
வாசனை நுகர்ந்து
அவள்
என்னை ஆலிங்கனம் செய்வதாய்
ஆசைகள்...

அவள் வளர்க்கும்
அழகிய பூனையாக
அவளோடு நான்
உருவகங்கள்...

நீண்ட தென்னைமரத்து
நிழல்களின்
அசைவில்
அவள்
என்னை நெருங்கவதாக
எதிர்பார்ப்புகள்..

சில பூக்களின்
அலர்வில்
அவள் என்னை
புரிந்திருப்பதாய்
சில நம்பிக்கைகள்...

எங்கும்
எதிலும்
பிம்பமாய் அவள்..
என்னுள் இவள்..
இது காதல் தானே ...?

எனினும்
இன்னும் அவளை காணவில்லை
இணையமெங்கும்
தேடல் தானே..

நிழல் கொடுத்த
காதல் தன்னில்
நிதமும்
நிஜம் தொலைத்து வாழ்கிறேன்
குலம் தொலையும் முன்னே வா
நீ என் குமரி தானா காண்கிறேன்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: SweeTie on June 21, 2021, 07:00:42 AM
தினம்   காத்து கிடக்கின்றேன் 
அவள்   முகம் காண  விரைகின்றேன்
நகல்  தெரிய  நிற்கின்றாள்   .  '   
பித்துபிடித்து  போனேன்  அவள் 
மொத்த அழகையும்  பார்த்து !

 எட்டுப்போல்  இடுப்பழகும்
பட்டுப்போல் மேனியின்   பளபளப்பும்
புடம் போட்ட தங்கம்போல் நாசியும்
வடிவான   சங்கு கழுத்தும் 
குட்டி குதிரைவால்  கூந்தலும்
நாய்க்குட்டிபோல்    என்னை ஈர்த்ததே

நிழல் பார்த்த   கணத்தில்   என்னுள்
காதல் கொழுந்து விட்டு   எரியுதடி
உடல் வேர்த்து   விறுவிறுக்க   
மனம்   எனோ  பதை பதைக்க   ,
கால்கள்  நிலை தடுமாறுதடி   

நித்திரையில்  வந்த  பெண் மயிலா?
நித்தமும்  என் நினைவில்  நின்றவளா?
வைகறையில்  பூத்த  தாமரையா ?
தேன்  மதுரை தமிழ் கொஞ்சும் தேவதையா?

கண்முன்  வந்துபோன  கன்னியரோ   
அழகழகாய்   ஆயிரம் பேர்
 ஏறெடுத்தும்   பார்க்காத என் மனசு   
உன் நிழல் பார்த்து  காதலுற்றேன்
காரணமும்  நானறியேன் 

செக்க செவந்தவளோ 
செவ்வாழை  போன்றவளோ   
கன்னக்குழி  தெரிய   
கலகலத்து   சிரிப்பாளோ
காத்துக் கிடக்கின்றேன்   அவள்
கண்ணோடு  கண்  நோக்க !!!

ஏறெடுத்து    பார்ப்பாளா?
ஏளனமாய்   சிரிப்பாளா?
காதல்  ஒரு கேடா என்று  '
கைகொட்டி  சிரிப்பாளா?
யானறியேன்  பராபரமே !
நின்னை  சரணடைந்தேன் !




 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: AgNi on June 21, 2021, 09:26:29 AM


நிழல்களை  நாம் நிஜங்க
ளாக...
எண்ணி  ஏன் ஏமாறுகிறோம்?


கறுப்பாகி போன  இதயத்திற்கு...
ஏன் வண்ணம் தீட்ட  முயல்கிறோம்?

வருடி செல்லும்  காற்றிடம்....
ஏன் வானவில்லை கேட்கிறோம்?

சில்லென்ற‌ மழையிடம் ஏன்.‌..
சிலிர்த்து நிற்க ஏங்குகிறோம்?

வாசலில் தூவும் மலரிடம் ஏன்
வாசனை நுகர பார்க்கறோம்?

எங்கோ கூவும் குயிலிடம் ஏனோ
இங்கு கானம் பாட அழைக்கிறோம்?

உருவம் இல்லா உணர்வுக்கு என்ன
ஊசலாட்டம் வெற்று மனதில்..?

பிம்பங்கள் மறைந்த கண்ணாடியில்
எதை தேடி  உற்று நோக்குகிறோம்?

கனவுஇல்லா இரவுதனில் ஏனோ புதுகனா கண்டு விழிக்கிறோம்?

நிச்சயமில்லா உலகில் ....
உண்மையில் எதைதேடி இங்கு
நாம் அலைகிறோம்?



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 270
Post by: Mr Perfect on June 21, 2021, 10:43:17 AM


❤️என் கண்மனியியே உன்னை பார்த்த முதல் பார்வையிலே என்னிடம் காதல் பிறந்தது.....
🌹உன் மீன் போன்ற கண்களும் கிளி போன்ற மூக்கும் ரோஜா இதழ் போல் உன் உதடும் பார்த்த நொடியில் காதலில் விழுந்தேனேடி


🌹உன்னை கண்ட நொடி முதல் என் இதயம் உன்னை மட்டுமே விரும்புகிறது.
🌹கண்கள் உன்னை மட்டுமே தேடுகிறது.
🌹என் இதழ்கள் உன் பெயர் மட்டுமே சொல்ல துடிக்கிறது.


🌹உன்னை பார்த்த முதல் நொடி என்னையே மறந்தேனடி.
🌹காதலில் விழுந்தேனடி...
🌹"கண்டதும் காதல்" என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவன் இன்று உன்னை பார்த்ததும் நம்பிக்கை கொண்டேனடி...


🌹உன்னை கண்ட பொழுது முடிவு எடுத்தேன் நீயே என் வாழ்க்கை துணையடி..
🌹உன்னை கண்ட உடனே என் இதயம் புத்தகத்தில் உன் முகம் பதித்து விட்டேன்..
🌹உன்னில் என்னை கண்டதால் என்னவள் நீதானோ என்று கண்கள் உன்னை தேடுதடி...


🌹அன்பே உன்னை பார்த்த அக்கணமே மனம் கொண்ட மலராக ஒளி கொண்ட நிலவாக கரை தொடும் கடலாக உன்னை கான துடிக்கிறேனடி..
🌹மீண்டும் எனக்கு காட்சி
அளிப்பாயாக என் உயிர் காதலியே..