FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 20, 2022, 10:35:40 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 292
Post by: Forum on June 20, 2022, 10:35:40 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 292

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/292.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 292
Post by: VenMaThI on June 21, 2022, 12:15:19 AM
அழகே கண்ணே முத்தே பவளமே தங்கமே மயிலே
என கொஞ்சிய மகளே
உன்னை பெற்றநாள் வடித்தேன் இன்று மறுமுறை வடிக்கிறேன்
ஆம் கண்ணே என் கண்களில் வழிவது ஆனந்த கண்ணீரே
வாழ்க்கை என்னும் புத்தகத்தின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது
அதன் முதல் வார்த்தை தான் இந்த திருமணம்

பிறவிப்பயனை பெற்றோர் அடைய, உற்றமும் சுற்றமும்
அட்சதை தூவி, ஆசீர்வதித்து, கண்ணீர் தெளித்து
உன்னவன் கரங்களில் உன்னை சமர்ப்பிக்க..
வாழ்க பல்லாண்டு 16 ம் பெற்று பெருவாழ்வு

உன்னவன் கரம் பிடித்து மனதில் கனவு பல சுமந்து
புகுந்த வீடு செல்லும் பெண்ணே
என்றும் உன் வாழ்வில் வசந்தமே வீசட்டும்


உன் மணநாள்..
வாழ்க்கை என்ற சொல்லின் அர்த்தம் மாறும் காலமே உன் மணக்கோலம்
பெற்றோரை விட்டு, வாழ்ந்த வீட்டை விட்டு, சூழ்நந்திருந்த சுற்றத்தை விட்டு
யாரென்று அறியாத உன் புகுந்த வீட்டிற்கு நீ செல்லும் நாள்...
இந்த நிகழ்வை கடப்பது பெண்ணின் சாபமென்றாலும்.. மகளே
புகுந்த வீட்டிற்கு நீ வரமே..

குற்றம் பல இருப்பினும் குறை சொல்லாதே கண்ணே
பெற்றவர் மீது கொண்ட பாசத்தை புகுந்த வீட்டின் மேலும் தூவி விடு
உன் பாச மழையில் அவர்களை நனைத்துவிடு
உன்னை கண்ணீர் மழையில் நனயாமல் பார்த்து கொள்வார்கள்

பெற்றவள் நான் இருக்க பெரு வேலை எதுவும் கொடுத்ததில்லை
காரணம் தெரியுமா மகளே
புகுந்த வீட்டில் உனக்கான பாரம் காத்திருக்கும் என்பதை நானும் அறிவேன்
என்றோ ஒரு நாள் நானும் புகுந்த வீடு சென்றவள் தானே

சினம் கொள்ளாதே மகளே
சீண்டி பார்க்க தயங்க மாட்டார்கள்
உன் பிஞ்சு மனம் தாங்காது என நானும் அறிவேன்
ஆனால்.. பெண்ணாய் பிறந்து விட்டோம்
சினம் நம் மன வீட்டை மட்டுமல்ல மணவீட்டையும் மாற்றிவிடும்

ஆயிரம் ஆயிரம் குற்றம் சாட்டினாலும்
ஆலமரமாய் அந்த வீட்டை நீ தாங்க வேண்டும்
வேறான பெற்றோறும்
கிளையான உடன் பிறந்தோறும்
நன்றாக இருப்பின்
அந்த மரத்தின் பூவாய்
நீயும் உன்னவனும் உன் பிள்ளைகளும் மணம் வீசுவீர்கள்


கடைசியாக ஒன்று சொல்கிறேன் கேள்
குடும்ப பாரம் என்பது சுமக்க கூடிய பாரமே
ஒரு வேலை உன்னால் சுமக்க முடியவிட்டால்
உன்னால் சமாளிக்க முடியாவிட்டால் சகித்துக்கொள்ள முடியாவிட்டால்..
கண பொழுதும் யோசிக்காதே
உன்னை சுமக்க நான் இருக்கிறேன்
ஓடி வா மகளே அனைத்துக்கொள்ள என் கைகள் என்றும் விரிந்தே இருக்கும்
மறந்தும் கூட மாய்த்துக்கொள்ள எண்ணி விடாதே
மரண படுக்கையில் நீ மட்டும் அல்ல
நம் குடும்பமே விழும் என்பதை நினைவில் கொள்...

என்னை பெற்றவள் எனக்கு சொன்னதை
பக்குவமாய் உனக்கும் சொல்லி வைக்கிறேன் மகளே
நாளை உன் மகள் மறுவீடு செல்லும்போது நீயும் கூறுவாய்.. அன்று அறிவாய் மகளே இந்த தாயின் மனதை...

விட்டு கொடுத்து செல் மகளே குடும்பம் உன்னை விடாது
சமாளிக்க கற்றுக்கொள் மகளே சகலமும் உன் கையில் வரும்
சந்தோசம் மட்டுமே நிலைத்திருக்கும்../color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 292
Post by: Abinesh on June 21, 2022, 03:36:08 AM
மணமேடையில் கணவன் காத்திருக்க
சுற்றி குடும்பத்தார், உறவினர்கள்
வழைந்திருக்க,மணமகளுக்கு தன்
வீட்டை விட்டு ஒரு புதிய வீட்டுக்கு
குடியேற போகிறோம் என்ற பயமும்
தன் கணவனுடன் சேர்ந்து ஒரு புதிய வாழ்கையைஆரம்பிக்க போகிறோம்
என்ற பதட்டமும் மனதில் இருந்தாலும்
சிரிப்பு மாறாத உன் முகம் ஆயிரம்
விளக்குகளுக்கு  சமம் ஆகும்...


புது கணவனின் முகம் பார்த்து வரும் வெட்கம்,மனதிலிருந்து வரும் உண்மையான
காதலை வெளிக்காட்டும் அவள் நானம்!
தன் மனதிற்கு பிடித்த வாழ்க்கை இந்த மணமேடையில் இனிதே ஆரம்பிக்க போகிறது என்ற ஒரு ஆனந்தம் தன் மனதிலிருக்கும் கஷ்டங்களை தூக்கி போட செய்கிறது வானுயர்ந்த தேவதைக்கு...

தேவைதயே உன் வீட்டார் பல சவரன் நகைகள் போட்டு உனக்கு அழகு பார்த்தாலும், பல ரூபாய் செலவு செய்து திருமணம் நடத்தினாலும்,உன்னை பிரியும் போது வரும் வலி கொடுமையிலும் கொடுமை...

புகுந்த வீட்டிற்கு செல்லும் நீ ஒரு புது தேவதையாக மாறுகிறாய்.உன் குணம் உன் சுற்றி உள்ளவர்களை ஈர்த்து,உன்னையும் உன் வளர்ப்பு பற்றி உன் வீட்டாரையும் பெருமயடைய செய்கிறது...

நீ வாழ போகும் புதிய வாழ்கை கடவுள் கொடுத்த வரம்,உன் வீட்டார்கள் செய்த தவம்
கடலின் ஆழத்தை போல,உனது மனதின் ஆழத்தை அளக்க வரும் கணவன் நீ செய்த பாக்கியம்.உனது அன்பை  பாசத்தை கட்டி அடக்கி ஆள வரும் அரசன் உன் கணவன்.


உண்மையான அன்பு வெளிப்படும் தருணம்
காதல் புதிதாக பிறக்கும் இந்நேரம் குற்றால அருவியில் தண்ணீர் கொட்டுவது போல,உன் காதல் எனும் அருவி உன் கணவனிடத்தில் கொட்டும்,அப்போது வாழ்க்கை இன்பமாகும்,துன்பங்கள் மறைந்து போகும்...


தேவதையே இனி நீ வாழ போகும் வாழ்க்கை,நீயும் உன் கணவனும்
இன்பத்திலும், துன்பத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து
பல செல்வங்கள் பெற்று வாழையடி வாழையாக ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்...

குறிப்பு: வரதட்சணை இல்லாத ஒரு நாடு உருவாக வேண்டும், வரதட்சணை கொடுமையால் நிம்மதி இழந்து வாழும் எத்தனை எத்தனை பேர்,ஒரு மனதிற்கு பிடித்த ஆணும் ஒரு மனதிற்கு பிடித்த பெண்ணும் மன நிம்மதியுடன் வாழும் காலம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை
      (இப்படிக்கு உங்கள் தோழன் Abinesh)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 292
Post by: Sun FloweR on June 21, 2022, 12:20:14 PM
கண்கள் கவரும் காஞ்சிப்பட்டோ
கன்னி அவள் இடையிலே..
மனம் ஈர்க்கும் மல்லிகையோ
மங்கை அவள் குழலிலே..

தான் மட்டும் ஆடாது பார்ப்பவர் மனம்
ஆட்டும் ஜிமிக்கியோ அவள் செவியிலே..
தங்கப்பாம்புகளாய் குழைந்து கிடக்கும்
சுட்டியோ அவள் நெற்றியிலே...

மொட்டவிழ்ந்த மலர்களாய் விரிந்து
கிடக்கும் பூக்களோ அவள் அதரங்களிலே..
வாழ்வைத் துவங்கும் ஆசையும்
வாழ்தலைத் துவங்கிய ஆனந்தமும்
அவள் அவயங்களிலே...

நெடுநாள் கனவொன்று
திருநாள் நிகழ்வாய்
மாறிய பொழுதை
ரசித்தபடி, ருசித்தபடி
இவள் வீற்றிருக்க...
பார்ப்பவர் கண்களுக்குத் தெரிவதென்னவோ
இவளின் சிரிப்பும், களிப்பும் மட்டும் தான்...!!!

ஒரு கண்ணில் வாழ்வை
ஆரம்பிக்கும் தாபமும்,
மறு கண்ணில் உறவைப்
பிரிந்த ஏக்கமும்,
ஊர் முன்னே சிரித்தபடி,
உள்ளுக்குள்ளே குமைந்த படி
தவித்துக் கிடக்கும் தாமரை இவள்..

மணமேடையில் அமர்ந்தவள் ..
மணப்பெண்ணாய் ஆனவள்..
மங்கையவள் கண்களில்
பொங்கும் ஆசைகள் கோடி ...
நங்கையவள் மனதிலே
எழும்பும் கேள்விகளும் கோடி ...???
பார்ப்பவர் கண்களுக்குத் தெரிவதென்னவோ
இவளின் சிரிப்பும் ,களிப்பும் மட்டும் தான் !!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 292
Post by: Orchids on June 22, 2022, 03:42:35 PM
எவ்வளவு அணிகலன்கள் அணிந்த போதும்
அச்சிறு சிரிப்பே அவள் அழகு

கனத்த பட்டுடுத்தியிருப்பினும் மெல்லிய புன்னகையே அவள் பிரகாசம்

ஊர் கூடி வாழ்த்தியிருப்பினும்
தன் தாய் தந்தை நிம்மதியே அவள் சந்தோஷம்

அத்தனை பூக்கள் சூடியிருப்பினும்
அந்நெற்றி குங்குமத்திலே தான் அவள் நிறைவு

பலபேர் சூழ்ந்து இருப்பினும்
தன் தமையனின் சோக முகத்தை புன்னகைக்க வைப்பதே அவள் ஆவல்

பிறந்த வீட்டின் இளவரசியாக இருப்பினும்
புகுந்த வீட்டின் சேவகி ஆவதே அவள் கனவு

கோடி சொந்தங்கள் இருப்பினும்
கணவனின் அன்பை மட்டுமே நம்பியிருக்கும்
 அவள் மனம்

சிறு துன்பம் தெரியாது
பெற்றோர் அன்பில் திளைத்து
அண்ணனின் கண்டிப்பில் வளர்ந்து
எச்சவாலையும் சந்திக்க கண்ணீர் கலந்த புன்சிரிப்புடன்
தயாராகி விட்டாள்
இப்புதுமணப்பெண்!
இவ்வாழ்வு
ஆசிர்வாதங்களையும்,
அன்பையும்,
சந்தோஷங்களையும்
மட்டுமே
பொழிவதாக
அமையட்டுமே..!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 292
Post by: TiNu on June 22, 2022, 06:58:27 PM


நேற்றுவரை.. கார்முகிலேன..
அலைமோதிய.. உன் கரும் கூந்தலும்...
இன்று.. நெற்றிசுட்டிக்குள்.. அடங்கியதேனோ ...

நேற்றுவரை.. சிறு  கடுகென மின்னி..
சிரித்த.. உன் காதணிகளும்..
இன்று.. குடையென விரிந்ததேனோ....

நேற்று வரை.. ஆம்பல் மொட்டென
மூடிய கிடந்த.. உன் விழிகளும்..
இன்று.. கயலென துள்ளுவதேனோ ..

நேற்றுவரை.. சிப்பிக்குள் முத்தென   
அடங்கிய.. உன் பற்களும்..
இன்று.. வெடித்த மாதுளையானதேனோ...

நேற்றுவரை.. தென்னை கீற்றென..
மிளிரிய... உன் புருவங்கள்...
இன்று.. வானவில்லேன விரிந்ததேனோ.. 
 
நேற்றுவரை .. ஆயிரம் கனவுகளோடு...
நீ காத்திருந்த... பொன்னான நாட்களும்..   
இன்று உன் கண்ணெதிரிரே... வந்ததாலா? ...

நேற்று பெண்ணாக பிறந்து..
இன்று பெண்ணாக வளர்ந்து...
நாளை பெண்ணாக முழுமையடைவதாலா?

பேதையே.. உன் புன்னகை நிலைக்கட்டு..
மங்கையே.. உன் சந்தோசம் பெருகட்டும்..
மலரே... உன் வாழ்வு மலரட்டும்...

வாழ்த்துகிறேன்.... வணங்குகிறேன்...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 292
Post by: QueeN on June 22, 2022, 07:15:35 PM
வளர்த்த பெற்றோர்களையும்
உடன் பிறந்த சகோதர உறவுகளையும் விட்டு
புகுந்த வீட்டிற்கு என்னவனை  மட்டுமே நம்பி
புதுவாழ்க்கை தொடர
இன்று தொடக்க விழா காணும்
இந்த திருமணம் .

பிடித்த துணையுடன் நிகழும் திருமணம் என்பது
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்
அழகானது மிகவும் அற்புதமானது.
எண்ணற்ற கனவுகளையும் ஆசைகளையும்
எதிர்பார்ப்புகளையும் சுமந்த சுப நிகழ்வு.

இருவீட்டார் சம்மதத்துடன் இருமனம் இணையும்
திருமண நிகழ்வில் உறவுகள் கூட ...
மகிழ்ச்சிகள் துள்ள ...

அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப
அனைத்து நிகழ்வுகளையும் பார்த்து பார்த்து
 மகிழ்வுடன் ஏற்பாடுகள்  செய்ய ...
ஆடலும் பாடலுமாய் இனிதே நிறைவேற.... 
மணமக்களை மனநிறைவுடன்
 உறவுகள் சாட்சியாக
 கூடி  வாழ்த்த நிகழும் திருமணங்கள்
 கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவையே..

மெய்ப்படும் கனவுகளால்
சிலிர்த்திடும்  சிந்தையுடன்
என் உள்ளம் பூரிப்படைய
குன்றா எழிலுடன் முகம் மலர
பல கோடி கனவுகள் சுமந்து
மறுவீடு செல்ல  மகிழ்வோடு
நான் . துணையாக என் உறவுகள்.

சொந்தங்களும் பந்தங்களும்
சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும்
நண்பர்களும் நெருக்கமான நேசங்களும்
ஒன்று சேர்ந்து வாழ்த்தும் திருமணம்...
அது வாழ்வின் ஒரு வரம்.

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 292
Post by: SweeTie on June 23, 2022, 10:02:00 PM
நான் காண்பது கனவா-  இல்லை
ஆண்டுகள்  கடந்த    கனவின்  நிழலா ?
தீண்ட  நினைக்கும்  என்  நினைவுகளின் 
தீராத   காதலின்    புதிரா?

வாழ  நினைக்கிறேன்   -  அவன்
தோழோடு  சாய   நினைக்கிறேன்
காலச் சுவடுகள்    வழி  தடுமாறியதா ? - இல்லை
காலமே  நம்மை  கைகோர்த்ததா ?

பௌர்ணமி  நிலவில்  நாம் பழகிய நாட்கள்
கடற்கரை  மணலில்   காலாறிய நொடிகள்
என் சிரிப்பொலியின்    சிணுங்கலிலும்
கொலுசொலியின்  கொஞ்சலிலும்    - நீ
கொண்ட   கோடி  மயக்கங்கள்
நினைத்தாலே  பனிக்கிறது   -என்
நீலோற்பழ விழிகள்   

வைராக்கியத்தின்   விளிம்பில்  போராட்டம் - நம்
உண்மைக்காதலுக்கான   வெறியாட்டம்   
பதினாறில்    வந்த  பருவக் காதல் அல்லவே
பருவத்தே   பூத்த     நிஜமான  எம்  காதல்
கற் புதரில் ஒளிந்துகொள்ள   கருவண்டு  அல்லவே
காதல்  சிறகடிக்கும்  பட்டாம்பூச்சிகள்   

காலனும்   காதலும்   கரம் கோர்ப்பார்களா?   - இல்லை
தீயில்   வெந்து  சாம்பல்   ஆவார்களா ?
காத்திருக்கிறது  காதலை பழிக்கும்   
துரோகிகள்    கூட்டம்   
எத்தனை   ஜென்மங்கள்   எடுத்தாலும்
மாறாத  ஜென்மங்கள்    இவர்கள்

நம்பிக்கை  நயம் கெட்டு  போகவில்லை   
தேம்பி அழுத கண்ணீர்  வீண்சிந்திப்   போகவில்லை
காலனும்  காதலும்   கைகோர்க்க தவிறியதுமில்லை
கைகாட்டி  அசைந்ததும்  பயணிக்கும் ரயில் -  எம்மை
தாலாட்டி செல்கிறது  வாழ்க்கையின் முதல்  படிக்கு .