FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VenMaThI on June 24, 2022, 07:10:31 PM

Title: ❤ என் மகளே ❤
Post by: VenMaThI on June 24, 2022, 07:10:31 PM


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அழகே கண்ணே முத்தே பவழமே
தங்கமே மயிலே
என கொஞ்சிய மகளே
உன்னை பெற்றநாள் வடித்தேன்
இன்று மறுமுறை வடிக்கிறேன்
ஆம் கண்ணே என் கண்களில் வழிவது ஆனந்த கண்ணீரே

வாழ்க்கை என்னும் புத்தகத்தின்
புதிய அத்தியாயம் தொடங்குகிறது
அதான் முதல் வார்த்தை தான் இந்த திருமணம்


பிறவிப்பயனை பெற்றோர் அடைய .
சூழ்ந்திருக்கும் உற்றமும் சுற்றமும்..
அட்சதை தூவி
ஆசீர்வதித்து
கண்ணீர் தெளித்து
உன்னவன் கரங்களில் உன்னை சமர்ப்பிக்க..
வாழ்க பல்லாண்டு
16 ம் பெற்று பெருவாழ்வு

உன்னவன் கரம் பிடித்து
உன் மனதில் கனவு பல சுமந்து
புகுந்த வீடு செல்லும் பெண்ணே
என்றும் உன் வாழ்வில் வசந்தமே வீசட்டும்


உன் மணநாள்..
பெற்றோரை விட்டு
வாழ்ந்த வீட்டை விட்டு
சூழ்நந்திருந்த சுற்றத்தை விட்டு
யாரென்று அறியாத
உன் புகுந்த வீட்டிற்கு நீ செல்லும் நாள்...
இந்த நிகழ்வை கடப்பது பெண்ணின் சாபமென்றாலும்.. மகளே
புகுந்த வீட்டிற்கு நீ வரமே..

பழகிக்கொள் மகளே

புகுந்த வீடும் உனக்கு பிறந்த வீடே..
உன்னவனின் சுற்றம் உன் சுற்றமே
குற்றம் பல இருப்பினும்
குறை சொல்லாதே கண்ணே
பெற்றவர் மீது கொண்ட பாசத்தை
புகுந்த வீட்டின் மேலும் தூவி விடு

உன் பாச மழையில் அவர்களை நனைத்துவிடு
உன்னை கண்ணீர் மழையில் நனயாமல் பார்த்து கொள்வார்கள்

ஆயிரம் தான் நீ அம்மா என்று அழைத்தாலும்
உனக்கு அவர் மாமியாரே
அதனால் செல்லமே
சீக்கிரம் விழித்திடு
அயர்ந்தும் கூட தூங்கிவிடாதே
குறை கூற காத்திருப்பார்கள்
கடுகளவும் இடம் தராதே

உனக்கு பிடித்த உணவை நான் அறிவேன் கண்ணே
ஆகையால் நீ வரும் வேளையில் நான் சமைத்து தருகிறேன்...
உன் மாமியும் மாமனும் உண்டு பழகிய ருசியை...
நீ அங்கு குறைவின்றி சமைத்து கொடு...

உன் பிறந்த வீட்டில் நீ அடைய நினைக்கும் சுகங்களை
உன் புகுந்த வீட்டில் பிறந்த பெண் அடைந்து போகட்டும்
எந்த வேளையிலும் அவளிடம் முகம் சுழிக்கதே
நீ புகுந்த வீட்டில் படும் பாட்டை
அவளும் அவள் புகுந்த வீட்டில் அனுபவிக்க சாத்தியம் உண்டு...

பெற்றவள் நான் இருக்க
பெரு வேலை எதுவும் கொடுத்ததில்லை
காரணம் தெரியுமா மகளே
புகுந்த வீட்டில் உனக்கான பாரம் காத்திருக்கும் என்பதை நானும் அறிவேன்
என்றோ ஒரு நாள் நானும் புகுந்த வீடு சென்றவள் தானே

சினம் கொள்ளாதே
சீண்டி பார்க்க தயங்க மாட்டார்கள்
உன் பிஞ்சு மனம் தாங்காது என நானும் அறிவேன்
ஆனால்.. பெண்ணாய் பிறந்து விட்டோம்
சினம் நம் மன வீட்டை மட்டுமல்ல
மணவீட்டையும் மாற்றிவிடும்

வாழ்க்கை என்ற சொல்லின் அர்த்தம்
மாறும் காலமே உன் மணக்கோலம்
குழந்தை அல்ல நீ
குமரி என்றுறைக்க
குதூகளமான மணவிழா..

உன் குழந்தை தனம் அனைத்தையும்
மூட்டை கட்டி வைத்துவிடு மகளே
பிறந்த வீடு வரும்போழுது விளையாடி கொள்ளலாம்

ஆயிரம் ஆயிரம் குற்றம் சாட்டினாலும்
ஆலமரமாய் அந்த வீட்டை நீ தாங்க வேண்டும்
வேறான பெற்றோறும்
கிளையான உடன் பிறந்தோறும்
நன்றாக இருப்பின்
அந்த மரத்தின் பூவாய்
நீயும் உன்னவனும் உன் பிள்ளைகளும்
மணம் வீசுவீர்கள்

நீ சுமந்து சென்ற கனவுகள்
நினைவானால்
அவை நிறைவேறினால்
மார் தட்டிக்கொள் மகளே
எனக்கு மற்றொரு தாய் தந்தை தமயன் தாமக்கை கிடைத்தார்கள் என்று

ஒரு வேலை
கனவு கனவாகவே இருப்பின்
கவலை கொள்ளாதே மகளே
கடவுளிடம் மட்டுமே கதறி அழு
உன் கனவு அனைத்தும் நிறைவேறும்..


கடைசியாக ஒன்று சொல்கிறேன் கேள்

குடும்ப பாரம் என்பது சுமக்க கூடிய பாரமே
ஒரு வேலை
உன்னால் சுமக்க முடியவிட்டால்
உன்னால் சமாளிக்க முடியாவிட்டால்
உன்னால் சகித்துக்கொள்ள முடியாவிட்டால்..
கண பொழுதும் யோசிக்காதே
உன்னை சுமக்க நான் இருக்கிறேன்
ஓடி வா மகளே
அனைத்துக்கொள்ள என் கைகள் என்றும் விரிந்தே இருக்கும்
மறந்தும் கூட
மாய்த்துக்கொள்ள எண்ணி விடாதே
மரண படுக்கையில் நீ மட்டும் அல்ல
நம் குடும்பமே விழும் என்பதை நினைவில் கொள்...

என்னை பெற்றவள் எனக்கு சொன்னதை
பக்குவமாய் உனக்கும் சொல்லி வைக்கிறேன் மகளே
நாளை உன் மகள் மறுவீடு செல்லும்போது நீயும் கூறுவாய்.. அன்று அறிவாய் மகளே இந்த தாயின் மனதை...

விட்டு கொடுத்து செல் மகளே
குடும்பம் உன்னை விடாது
சமாளிக்க கற்றுக்கொள் மகளே
சகலமும் உன் கையில் வரும்
சந்தோசம் மட்டுமே நிலைத்திருக்கும்..


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️



Title: Re: என் மகளே
Post by: TiNu on June 24, 2022, 07:16:31 PM

Super Sister...

(https://i.postimg.cc/hGL96XKJ/clapping-gif-27.gif)