Recent Posts

Pages: [1] 2 3 ... 10
3
Thank-you so much all for all the love prayers and blessings 💕
4

அன்னை என்ற சொல்லுக்கு உயிர் கொடுக்கும்உறவுநீ... உலகின் முதல் பந்தம் எதுவாக இருப்பினும்
 தாய்-பிள்ளை உறவே உதிரப்பந்த உறவாகும்.
மழழை மொழியும் ,பசியும் தாய்க்கு மட்டுமே புரிகிறது.

எந்தெந்த உடையில் எத்தனை எத்தனை அலங்காரம் செய்து பார்க்கிறாய்...என்னென்ன உணவு எப்படி
பிடிக்கும் என்பது தாயைத்தவிர யாரேனும் அறிவாரோ..

சிறுவர் சிறுமியர் என்ற நிலை வரை அன்னையிடம் இருந்த நெருக்கம் இளமைப் பருவம் தொடங்கும் வயதில் இருப்பதில்லை.. இருந்தும் அனைத்தும் உணர்ந்த போதும் அந்த இடைவெளியை ஆனந்தமாய் ஏற்றுக்கொள்ளும் சுயநலமில்லா உறவு அவள்...

பெண்ணோ ஆணோ திருமண வயதுவரை மட்டுமே
அன்னையின் அன்பு முழுதாக நிறைவாக கிடைக்கிறது அதன் பின் அத்தனை வருட பாசமும் யார் யார்
கண்களுக்கு எவ்வாறெல்லாம் சுயநலமாக மாற்றமுடியுமோ மாற்றி விடுகிறது காலம்.

உண்மையான பாசமும் புரிதலும் இருக்கும் பிள்ளை மனம் மட்டுமே அந்த சூழ்ச்சி எண்ணவலையில் விழாமல் அன்னையை அரவணக்கின்றனர்.
புரியாத கைப்பொம்மையாய் போன பிள்ளை அன்னையை வேறொரு ஆளாக பார்க்கிறான்.

முதுமை பருவம் என்பதே மழழை நிலை போலதான்..உடல் செயல்பாடுகள் ஒவ்வொன்றாய் செயலிழக்க ஊன்றுகோலும் பெற்ற மகனுமே உறுதுணை...
ஆனால் முதுமைக்குழந்தையை தனக்கு செய்ததில்
ஒரு துளி கூட செய்யத்தயங்குகிறது இக்கால புதுமைப்பிள்ளைகள்..

எத்தனை முறை உணவு அளிக்க உண்டிருப்பான்...
எத்தனைமுறை இயற்கை உபாதைகளை சுத்தப்படுத்தி
இருப்பாள்... எத்தனை முறை நீராட்டியிருப்பாள்..
எத்தனை முறை சிகை அலங்காரம் உடைஅலங்காரம் செய்திருப்பாள்..

இவற்றில் ஒன்றினைக் கூடவா செய்ய மனமில்லாமல்
அத்தனை முதியோர் இல்லங்கள் உருவானது..
இந்த நவீன மனிதருக்கு பயந்து உன் அன்னைக்கு ‌‌‌‌‌செய்யவேண்டிய கடமையில் இருந்து தவறுகிறாய்??

நாளையே உன் பிள்ளையால் உனக்கு நீ செய்வது வந்தால் என்ன செய்வதென்பதை மனதில் நிறுத்திக்கொள் 
5
உயிரான உறவென்று உறக்கச்சொல்,
அது என்னை ஈன்றெடுத்த அண்ணை அவளின் தாய்மை என்று சொல்...

கருவுற்ற கணம் முதலே, தன் கனவுகளை கலைத்து,
கனவென்று இருப்பின் அது என் சிசுவென்று நினைத்து.

துயில்கள் தொலைத்து, துக்கம் தொலைத்து.

இன்னல்கள் அனைத்தையும், இன்பங்களாய் ஏற்று.

உணவென்று உண்பதாய் இருப்பினும்,
அது என் உயிரான சிசுவிற்கு உகந்ததாய் உன்பேன் என்று.

நேசம் எனும் கடலில் மூழ்கி நிற்கும் , "தன் சிசுவின் மேலான" பாசம் எனும் சுவாசம்...

கடக்கும் கணம் எல்லாம், கண்மணியின் வருகையைஎண்ணியே.

தன் சிசுவிர்காக சமரசம் செய்வதில் கூட சமரசமின்றி சகித்து கொண்டவள்,
சாகும் வரை தன் சிசுவை தன்னுள் இணைத்துக்கொண்டவள்.

இத்தனை தவங்களும், தவிப்புகளும் நிழலான உயிர்தனை கருவறையை அலங்கரித்த கண்மணியை நிஜத்தினில் காணவே......

உறவே! உன் தாயின் தியாகங்கள் அவை ஏட்டில் எழுதப்படும் என்பதற்காக அல்ல,
மாறாக மழலை உருவான நீ அவளை நிச்சயம் ஒருநாள் உன் மடிதனில் சுமப்பாய் என்றே.....

( உன் தாய் !  உனை சிரமத்துடனே பெற்றெடுத்தால், உனை சிரமத்துடனே வளர்த்தெடுத்தால், அவளை " சீ " என்று கூட  சொல்லிவிடாதே..  -- Al Qur'an )...
6


திருக்கோயில் திருதெய்வங்கள்
ஊருக்குள் நடமாடும் அவள் வடிவில்..
தினந்தோறும் நிம்மதி சுரக்கும் அவள் மடியில்..

தெய்வங்கள் தூங்கிப் போனாலும்
தூங்காமல் உன்னை காப்பாள்.
அலைகின்ற தென்றல் ஓய்ந்தாலும்
ஓய்வின்றி உனக்காக உழைப்பாள்...

நீ முதல் முறை " அம்மா "என்று அவளை
அழைத்தது அவளின் ஆன்மாவில் பதிந்திருக்கும்..

நீ விளையாட
அவள் ஒரு பொம்மையாக மாறுவாள்..

அலுவலக அவசரத்திலும் ,
அடுப்படி பரபரப்பிலும்
அவளின் அத்தனை சிந்தனை நரம்புகளும்
உன்னை பற்றியே சிந்திக்கும்..

உனது இந்த நோய்க்கு இந்த மருத்துவமனை
இந்த நோய்க்கு இந்த மருந்து என்று
மறக்காமல் வைத்திருப்பாள்
தன் நோயை மறந்து கிடப்பாள்...

உன் முகம் பார்த்து மனநிலை அறியும்
உயிரின் கண்ணாடி..

அளவாக மசாலா சேர்த்து
அளவில்லாத பாசத்தை குழைத்து
அமுதத்தை சமைத்து
அன்போடு பிசைந்து
அள்ளி உனக்கு ஊட்டுவாள்..

தன் காதில் சிறு குச்சியை கம்மலாக
போட்டுக்கொண்டு உனக்கு தங்கங்களை
போட்டு அழகு பார்ப்பாள்...

கிழிந்த  இலவசசேலையை
அணிந்துகொண்டு
உனக்கு புத்தாடை போட்டு பரவசமாவாள்...

உன் மழலை பேச்சை ரசிக்கும் முதல் வாசகி.
கடைசிவரை உனக்கு பணிவிடை செய்யும் சேவகி...

அவளின் மூச்சு உந்தன் நலனின்றி
வேறு ஏதும் நினையாது.
அவளின் பேச்சை மீறிப் போனால்
வாழ்க்கை நிலையாது..

அவளின் கடைசி மூச்சு கூட
உன்னை எண்ணியே கண்ணீர் விடும். _
அவளைத்தான் திருத்தெய்வங்கள்
தேடி வந்து வாழ்த்தும்..

உன்னை பத்து மாதம் சுமந்து
பெற்ற தாய்க்கு,
பத்து தலைமுறை கடந்தாலும்
அந்த கடனை அடைக்க உன்னால் முடியுமா?

வயதாகும் போது தாயை பாதுகாப்பது உனது கடமையல்ல,
அது இறைவன் உனக்கு கொடுத்த வரம்...

கற்றவர்க்கு போகும் இடம் எல்லாம் சிறப்பு
தாயின் காலடியை தொட்டு கும்பிட்டால்
உன் வாழ்க்கையில் கிடைக்கும் சிறப்போ சிறப்பு...!

தாயை மதியுங்கள்
பிறவிப் பலன் அடைவீர்கள்..!

குறிப்பு: மனசாட்சி என்ற சட்டையை கழட்டி வைத்து விட்டு, தாய் வயதாகும் போது முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகன்களே/மகள்களே,உனக்கும் இதே போன்று ஒரு நாள் வரும் என நீ ஏன் நினைப்பதில்லை
                 இப்படிக்கு உங்கள் தோழன்
                                       Abinesh

7
மங்களமாய் தான் துவங்கியது,
சிரிப்பும் களிப்புமாய் தான்
சென்றது என் அன்னையின்
மண வாழ்வும்..
விதியின் கொடிய கரங்களில்
சிக்கி சிதிலமடைந்த
தந்தையின் மறைவு நிகழும் வரை ...

வேரோடு பிடுங்கப்பட்ட
மரமாய் ஆனாலும்
உயிர் துளிர்த்திருந்தாய்,
உயிர் வளர்த்திருந்தாய்..
தன்னில் பூத்த தன் மகனுக்காக..
தன்னில் மலர்ந்த தன் குழவிக்காக...
உன்னில் உதித்த எனக்காக...

துயரத்தின் கூடாரத்தில்
நீ வாழ்ந்தாலும்
எனக்கு நீ தந்ததென்னவோ
புன்னகை கம்பளம் விரித்த உலகையும்,
பரந்து கிடக்கும் பாசக் கடலையும் தான்...

தன் ஆசைகள் வெறுத்து,
தன் தேவைகள் குறைத்து
எனக்காக மட்டுமே வாழ்ந்தவள்..
அவள் வாழ்வையும் எனக்காகவே ஈந்தவள் ..
என் கண்ணீர் துளிகளை
தான் வாங்கிக் கொண்டு,
தன் சிரிப்புகளையெல்லாம்
எனக்குத் தாரை வார்த்தவள்...

பத்து மாதம் கருவில் சுமந்தவளே,
பத்து வயது வரை தோளில் சுமந்தவளே,
தற்போது வரை நெஞ்சில் சுமப்பவளே,
எதைச் சுமந்து ஈடு செய்வேன்?
எதைக் கொண்டு நிகர் செய்வேன்?
அன்னையே உன் அன்பையும் நேசத்தையும்??

கடவுள் தந்த வரமாய் அல்ல
அந்தக் கடவுளாய் ஆன என் அன்னையே
காலம் முழுவதும் என் தோள்களில்
உன்னை சுமப்பேன்..
மறுபிறவி ஒன்றிருந்தால் அதில்
செருப்பாய் உன்னை தாங்குவேன் ...
வாழ்நாள் முழுவதும் உன்
அன்னையாய் நானிருப்பேன்....!
9


கருவுற்ற நாள் முதல் கவலைகள் மறந்தாள்
கண்ணே உன்னை கருத்தில் கொண்டு
கனவுகள் பல பல கண்டாள்

தாய் என்ற பட்டம் பெற
தவமாய் தவமிருந்து
சுகமான சுமையாய் உன்னை தாங்கினாள்
இன்று உன் பணி சுமையை நான் அறிவேன்
ஆனால்
ஒரு போதும் அவளை சுமையாய் எண்ணி விடாதே


பத்து மாதம்...
பத்திய சோறும் பிடித்து போனது
பல நாள் தூக்கமும் கண் விட்டுப்போனது
பயணங்கள் பிடித்தும் தவிரத்தாள்
பக்குவமாய் உன்னை பெற்றெடுக்க

நீ பிறந்த நொடி
உலகமே அவள் கைக்குள் அடங்கிய உணரல்
அன்று முதல் இன்று வரை
நீ மட்டுமே அவள் உலகம்

உன் காலில் நீ நிற்க கற்று கொடுத்தாள்..
அவள் கால்கள் இன்று தளர்ந்து போனது
உன் காலில் அவளை தாங்கும் தருணம்..
கைகள் பிடித்து நடக்க கற்று கொடுத்தவள்...
நடக்க முடியாமல் நலிந்து போனாள்
கைத்தடியாய் அவளுக்கு நீ மட்டுமே..


சொர்ப்ப பணம் போதும்..
அவளை அரவணைக்க ஆசிரமம் பல உள்ளது..
ஆனால் அன்பு காட்ட???
உன் அன்பு மட்டுமே அவளின் அனைத்துமாய்..

அடுத்தவர் கதை கேட்டு நடுங்கி கிடக்கிறாள்
ஆசிர்மம் நோக்கி தன் பயணம் தொடருமோ என்று
அவள் காதில் சொல்லிவிடு
"அம்மா!  உனக்கு நான் இருக்கிறேன்"
இந்த வார்த்தை தரும் நிம்மதி
நீயும் அறிவாய் கண்ணே ஒரு நாள்

கடைசி நிமிடங்களில் அவள் உடனிருந்து
அவள் உடலுக்கு நீ இடும் கொள்ளி
வெறும் நெருப்பு அல்ல
பல பல ஜென்மமாய் உன்னை துரத்திய
பாவங்களை எறிக்கும் யாகமே..10
Wishing you Many More Happie Happie returns of the day sis...

Stay blessed and be happy always...

❤️❤️❤️❤️❤️]
Pages: [1] 2 3 ... 10