Author Topic: ~ முட்டை குழம்பு ~  (Read 69 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218388
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ முட்டை குழம்பு ~
« on: December 17, 2015, 07:46:28 PM »
முட்டை குழம்பு



தேவையான பொருள்கள் :

முட்டை – 2
தக்காளி – 1
மிளகாய்த்தூள் – 1/4 மேஜைக்கரண்டி
தனியாத்தூள் – 2 மேஜைக்கரண்டி
மிளகு தூள் – 1/2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் – 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

அரைக்க :

தேங்காய் துருவல் – 8 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 8

தாளிக்க :

கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை – சிறிது
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 5

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
* அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். வதங்கியவுடன் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். வதக்கியதும் மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு 2 நிமிடம் கிளறவும்.
* அதன்பின் 1 1/2கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து முட்டையை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்க வேண்டும். பின் லேசாக முட்டையை பிரட்டி விட வேண்டும்.
* பின் 5 நிமிடங்கள் கழித்து மிளகு சீரகப்பொடியை போட வேண்டும்.
* கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சுவையான முட்டைகுழம்பு ரெடி.