Author Topic: ~ ஏன் ஐ விரல்களையும் குவித்து உணவு உண்ண வேண்டும்? ~  (Read 207 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218397
  • Total likes: 23071
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஏன் ஐ விரல்களையும் குவித்து உணவு உண்ண வேண்டும்?



ஐ விரல்களையும் ஒன்றிணைத்து உணவு உண்பதுதான் காலங்க காலமாக நாம் வழக்கத்தில் கொண்டுள்ள பழக்கம். உலகத்தின் பல இனத்தைச் சார்ந்தவரகள் இந்த பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தாலும் இந்தியர்களான நாம் தொன்று தொட்டு இந்தப் பழக்கதை கையாள்கிறோம்.

ஆனால் தற்போதைய காலத்தில் மேசைக் கரண்டி, முள்கத்தியை பயன்படுத்தி உணவு உண்பதன் மூலம் கிருமிகள் அண்டாத உணவை உண்பதாக நாம் எண்ணிக் கொள்கிறோம். இதனால் கைகளில் உணவை எடுத்து உண்பதை தவிர்த்து வருகிறோம்.
ஆனால் கைகளில் உணவு உண்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன எனபதை நாம் மறக்கிறோம். காலங்காலமாக இந்த முறையில் உணவு உண்பதற்கு என்ன காரணம் என்று நாம் யோசித்திருக்கிறோமா?

கைகளில் உணவு உண்து உங்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். தொடுதல்தான் உடம்பில் உள்ள ஐப்புலன்களில் மிகவும் உணர்ச்சி மிக்க புலன். நாம் உணவினை விரல்களால் தொடும் போது லட்சக்கணக்கான நரம்புகள் நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது.

இதன் மூலம் நம் மூளை, குடலுக்குச் செல்லும் உணவை அரைக்கவும் செரிமானம் செய்யவும் தேவையான அமிலத்தை வெளிப்படுத்த உத்தரவிடுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களின் உணவு ஜீரணிக்கப்படுகிறது.

கைகளில் சாப்பிடுவதன் மூலம் நீங்கள் சாப்பிடும் உணவின் மேலான கவனம் அதிகரிக்கிறது. நீங்கள் உணவு உண்ணும் போது உங்களின் கவனம் சிதறினால் அது உங்கள் ஜீரணத்தையும், திருப்தியையும் சிதறடிக்கும்,
கைகளில் சாப்பிடும் போது உண்ணும் உணவின் மீதான கவனம் உங்களுக்கு அதிகரிக்கிறது. நாம் என்ன உணவை நம் வாயில் வைக்கிறோம் என்ற கவனம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உணவு உண்கிறீர்கள்.

வேத ஞானத்துதின் படி ஐ விரல்களைக் குவிப்பது ஒரு வகை முத்திரையாகும். இந்து சமயத்தில் பல முத்திரைகளின் பயன்பாடு நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐ விரல்களை ஒன்றாக குவிப்பதும் ஒரு முத்திரைதான். ஐ விரல்களும் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. கட்டை விரல் ஆகாயமாகவும், ஆள்காட்டி விரல் காற்றாகவும், நடுவிரல் நெருப்பாகவும், மோதிர விரல் நீராகவும், சுண்டு விரல் நிலமாகவும் குறிக்கப்படுகிறது.
இந்த ஐந்து விசயங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். நாம் ஐ விரல்களையும் குவித்து உணவு உண்ணும் போது இந்த ஐ விசயங்களும் உணவின் மூலம் நம் உடலுக்குச் சென்று நம்மை ஆரோக்கியமாக்குகிறது.

இனி ஐ விரல்களையும் குவித்து உணவு உண்பதை வழக்கமாகக் கொள்வோம். ஆரோக்கியமாக இருப்போம்.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218397
  • Total likes: 23071
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/