Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 318  (Read 2399 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 318

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline JenifeR

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 67
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
உன்னோடு நான் பயணித்த நாட்கள் !!!!
கடந்து போனாலும் என்றும் என் நினைவில் !!!
.நாம் சென்ற பாதையில்
இன்று கடந்து போகையில் !!!
கண்களில் ஏனோ கலக்கம்...
உனக்கு தெரியாது …
நான் இன்று வரை வேறு ஒருவனோடு பயணித்ததில்லை..
இது கற்பனை இல்லை !!!
என் வாழ்க்கை !!!
என்றும் உன் நினைவுகளுடன் நான் !
பயணங்களில் ...அந்த பெட்டிக்கடையில்.. நிறுத்தாமல் செல்வதில்லை
எனக்கு கடலை மிட்டாய் பிடித்த காரணத்தினால்
திரும்ப திரும்ப சரியாக இருக்கிறாயா? ...
என்று கேட்க மறந்ததில்லை!!!

உன் தோள் தொட்ட முதல் தொடுதல்
என் ரோமங்கள் எட்டிப்பார்த்தன
எங்கே அந்த இளவரசன் !!!

மறக்க நினைத்தாலும் முடியவில்லை !!!
நீ கொடுத்து சென்ற நினைவுகள்!!!....
« Last Edit: August 30, 2023, 03:31:55 AM by JenifeR »

Offline ShaLu

என்னவனே..!!!
எப்போதும் செல்கின்ற அச்சாலை
இன்று ஏனோ புதிதாய் தோன்றியது
உன்னருகே உன்னுடன்
உன்னவளாய் பயணிப்பதால்..!!
காலமெல்லாம் கரம் பிடித்து
கனவுகளுடன் வர நினைத்தேன்
இக்கள்வனின் காதலியாய்

என் இனியவனே.!!!
என்னுள்ளே துடிக்கும் இதயம் நீ
என் உயிரில் கலந்த உறவு நீ
என் வாழ்வை அர்த்தமுள்ளதாய்
ஆக்கியவன் நீ
எனை ஈர்க்கும் புவிஈர்ப்பு விசை நீ
என் இரவின் நிலவு நீ
என் பகலின் சூரியன் நீ
நான் சுவாசிக்கும் சுவாசக்காற்று நீ
என் வாழ்வை மலரச் செய்து
மணமாக்கிய மலர் நீ
என் இருளும் ஒளியும் நீ
என் காதலும்  தேடலும் நீ
என் பலமும் பலவீனமும் நீ
என் இன்பமும் துன்பமும் நீ
என் உயர்வும் தாழ்வும் நீ
என் கண்ணீரும் புன்னகையும் நீ
என் வானமும் அதில்
தோன்றும் விண்மீனும் நீ
இவ்வாறு நான் காணும் யாவும் நீயாய்
உன் நினைவுகளோடு நானாய்..!!!

உந்தன் ஸ்பரிசம்
உன் குறும்பு புன்னகை
எப்பொழுதும் எனை சிலிர்க்க வைக்கும்
உன் காதல் பார்வை
உன் அன்பான அரவணைப்பு
இவை யாவும் நேசிக்கிறேன் -
இவையுடன் சேர்த்து உன்னையும்..!!!

ஆயிரம் வண்ணத்து பூச்சி
சிறகடித்து பறக்க கண்டேன் -
உன் காதல் ததும்பும் கண்களை
பார்க்கையில்
சுவாசிப்பதே கடினம் ஆயிற்று
உனைக் காணா ஒவ்வொரு நொடியும்

என் இதயத்தையும் ஆன்மாவையும்
ஆட்கொண்டவனே
உலகமே காலடியில் இருப்பதாய்
உணர வைத்தாய்
உன்னுடன் நான் இருக்கையில்

என் வாழ்வை வானவில்லாய்
வர்ணம் சேர்க்க வந்தவனே
உன் கைகோர்த்து தோள் சாய்ந்து
வாழ் நாள் முழுவதும் பயணிக்க
உனையே எண்ணி தவமிருக்கும்  உன்னவள் !!!
« Last Edit: August 29, 2023, 07:56:19 PM by ShaLu »

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 190
  • Total likes: 823
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum

உன்னுடன் பயணிக்கும் இந்த நொடிக்காய்
நின்னை கண்ட நொடி முதல் காத்திருந்தேன்
கண்கள் நான்காய் இருக்க
காணும் காட்சி என்றும் ஒன்றாய்

மேகங்கள் நம்முடன் பயணிக்க
சில்லென்ற காற்றின் ஸ்பரிசம் நம் மனதின் கனவுகளை தீண்ட
மனக்கதவுகள் திறந்து .. உன்னோடு..
நினைவலைகளால் நிரம்பிய கனவுலகில் பறந்து

நாம் பயணிக்கும் பாதையே மணமேடையாய்
சுற்றி இருக்கும் இயற்கையே நம் சொந்தங்களாய்
காற்றின் ஸ்பரிசமே மங்கள இசையாய்
உன் தோள் தொட்ட நிமிடமே நம் திருமண நிகழ்வாய்

இன்று வரை கண்டதில்லை இந்த ஒரு சந்தோசம்
இனியும் காண்பேனோ என்பதே என் சந்தேகம்
கண்ணாளனே , கனவாய் போன இத்தருணம்
நினைவாய் மாற ஏங்குகிறேன் ..

நித்தம் நித்தம் நினைத்து பூரிக்க
இந்த நினைவுகளை சேமிப்பேன் என் மனதில்
நான் அழிந்தாலும் என்றும்
அழியாமல் காப்பேன் என் வாழ்வின் பொக்கிஷமாய்...

தோள் சாய்ந்து உன் ஸ்பரிசத்தில்
உலகை மறந்து என் உணர்வுகளில்
உன்னை உள்வாங்கியவளாய் வாழ
மீண்டும் ஒரு ஜனனம் வேண்டும்...


நினைவுகளில் அல்ல
நிஜத்திலும் உன்னுடன் பயணிக்க .......


« Last Edit: August 30, 2023, 12:27:31 AM by VenMaThI »

Offline Minaaz

  • Newbie
  • *
  • Posts: 40
  • Total likes: 247
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
நீல வானும் நிலா வெளிச்சத்தில் இருளென காட்சியளித்திட, நீளும் பாதையில் தொடர் பயணமாய் உன்னோடு பயணித்திட வேண்டுமடா,,

உன் தோல் சாய்ந்து கதைகள் பேசிகளிப்பின் உச்சத்தில் கலைந்தாடிட அகம் தவிக்கும் பொழுதினில்,

கொஞ்சி உரசிட்டு தொடராய் பயணித்திடும் தென்றலில் மிதந்தோடிடும் மலர்களின் வாசத்தில் மணப் பந்தலில் மனையாளியாய் உன்னோடு அமர்ந்திருந்த காட்சிகள் மேனியை சிலிர்க்க வைக்கும் அற்புதம்,,

காரணம் தேடி ஆராயும் பொழுதினில் உன்னை கண்ட காட்சிகளில் மெய் மறந்து இதழோரம் இளைப்பாரின நினைவுகள் யாவும் புன்னகை என்னும் புதிராய்

எண்ணங்கள் யாவும் உன்னைச் சூழ்ந்திட எதையோ பரிகொடுத்திட்ட ஏக்கம், சற்று ஆழ்ந்ததினால்தான் புலப்பட்டது என்னோடு உள்ளத்தை உனக்கென எழுதிக் கொடுத்து விட்டேன் என்பது..

காடருகே காதோரம் தவழ்ந்தாடும் கணீர் பட்ஷிகள் கொஞ்சிடும் கணீர் குரல்கள்

வேண்டுமடா, உன்னருகே உன்னவளென ஓர் நீளாப் பயணம்...

வேண்டுமடா, நீளாப் பயணங்களிலும் தொடர்ந்திடும் நீண்ட உரசல்கள்..

வேண்டுமடா, மேனியைத் தொட்டு உரசிச் செல்லும் தென்றலின் வசியத்தில் உன்னோடு நான் இருந்த பொழுதுகள் யாவும் நினைவலையாக பயணத்தோடு பயணமாய் பயணித்திட..

வேண்டுமடா, தொடரும் நிலா வெளிச்சத்தில் துணையாய் என் அருகில் நீ மிளிர்ந்திடும் பயணமதில் என்னுடைய நினைவுகள் உன்னைச் சூழ்ந்திட..

வேண்டுமடா, காதோரம் தவழ்ந்திடும் பட்ஷிகளின் கொஞ்சல் மொழிகளின் கலைகளை கற்றுக் கொண்டிட,,

வேண்டுமடா, இளைப்பாரும் இடமாய் என்னுடைய இதயமே உனக்கான கோட்டையாய் உருமாரிட..

பல காதல் கனவுகளை நிஜமென நிலையென சுமந்திடும் இப் பயணம் உனக்கு நான் எனக்கு நீ என்ற கோட்பாடு வாழ்விலும் நீளாப் பயணமாய்  தொடர்ந்திட வேண்டுமடா...♥️

இப்படிக்கு உன்னவள்.....

Offline Mani KL

  • Newbie
  • *
  • Posts: 38
  • Total likes: 182
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
உன்னோடு பயணித்த அந்த இன்பவேளை

கனவுகண்ணியே!

துயரத்தை மறந்து
தூக்கத்தை மறந்து
தூவல் காற்றோடு இழைவதுபோல
உன்னோடு நான் பயணித்த
மாயாத அந்த நாள்கள்

இசையோடு கலந்து
இன்பமாக இரு இதயங்களும்
இயற்கை ரசித்து பயணித்த
அந்த நாள்கள்
மறக்க முடியாமல்
உன் நினைவுகளோட

மழை சாரலில் நனைந்து
இருக்க பிடித்து இருக்கிற போது
உன் மூச்சு காற்றின் வெப்பதை
 பிடித்து வைக்க துடிக்கும்
என் கன்னங்கள்
அந்த தருணத்தை மறக்காத
உன்னோடு பயணித்த என் பயணம்

கனவுகளோடு உறங்கி
காலையில் எழுந்து
காபி குடித்த பின்
காற்றை தழுவி என் கனவுகளோடு
உன்னுடன் பயணித்த
அந்த பயணம்
மறக்கமுடியாத நினைவலைகள்

பயணத்தில்
ஒங்கிய சப்தத்துடன்
எழுந்து நின்று ஆடிய போது
விழுந்தோம் இருவரும்
அந்த நிமிடத்தை
நினைத்து நினைத்து
சிரித்த உன் குழந்தை போல்
அந்த சிரிப்பை கண்டு ரசித்த
 என் கண்கள்

மறக்க முடியுமா அந்த பயணம்
மறக்காமல்
 மனதில் வைத்து
நினைத்து நினைத்து ஏங்குகிறேன்
அந்த பயணம் முடிவு இல்லாத
பயணமாக இருந்திருக்கக்கூடாத
என்று ஏங்குகிறேன்

உன்னோடு பயணித்த
அந்த பயணம்
என் நினைவுகளோடு
இப்போதும் 🌹🌹🥰🥰




Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 849
  • Total likes: 2410
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
ஓவியம் உயிரகிறதுக்கு உரைநடை கவிதை என்ற விதை போட்டது dong லீ (எ) பால் வாக்கர். அந்த விதையில் முளைத்த சிறு துளிராக இதோ என் உரைநடை கவிதை.

நன்றி பால் வாக்கர் மச்சி !

இவை அனைத்தும் கற்பனையே

காட்சி ஒன்று

தூங்கா இரவு

நாளை முதல் முறையாக
அவளுடன் பைக் ரைட்
உள்ளங்கை வேர்கிறது
இதயத்துடிப்பு வேகமாகிறது
என் மனமோ
நன்றாக தூங்கு
எல்லாம் சரியாகிவிடும் என்றது
ஆனால்
என் மூளையோ
அவளை இம்ப்ரஸ் செய்ய
ஏதேதோ சிந்தனைகளை
சுழட்டி சுழட்டி அடிக்கின்றது
தூங்கவிடாமல்

கதாபாத்திரங்கள்

நான் - சாக்கி
அவள் - ஜெயிலர் படத்தில் வரும் ரஜினியின் மருமகள்(ரீசன்ட் க்ரஷ்)

காட்சி இரண்டு

மறுநாள் - க்ரஷ்-வுடன் பைக் ரைட்
 

நான் : குஷி படம் பாத்துருக்கியா நீ ?
அவள் : இல்லையே
நான் : அப்பாடா ! என் மைன்ட் வாய்ஸ் (அப்பாடா அந்த சீன்ஆ காப்பியடிச்சிட வேண்டியதான்)
அவள் : ஏன்டா?
நான் : ஒன்னும் இல்ல சும்மாதான் கேட்டேன்

பக்க்க்க் பக்க்க்க் (அட வேற ஒன்னும் இல்ல பைக் திக்கி முக்கி நிக்கிற சத்தம் தான்)

அவள் :என்னடா ஆச்சு
நான் : பெட்ரோல் காலி
அவள் :கிர்ர்ர்ர்(grrrr) >:( >:( இப்போ என்ன பண்றது
நான் : ஒன்னும் பண்ணவேணா ஜாலியா பேசிட்டே நடந்து போவோம்
அவள் : அப்போ பைக்கு
நான் : அது ப்ரெண்டு பைக் ! எவனும் எடுக்கமாட்டான் அப்பறம் பாத்துக்கலாம்
அவள் : அட பாவி !
நான் : ஓகே ! ஒரு கேம் உன் ஹாஸ்டல் வரவரைக்கும்  நீ கேள்வி கேளு நான் கவிதையா பதில் சொல்றேன்.

 
ஓகே ஸ்டார்ட்!

உனக்கு ஏன் என்ன இவ்ளோ பிடிக்கும் ?

பேரின்பம் தான்
என் சோகங்களுக்கு செவி சாய்த்து
என் ரணங்களை பகிர்ந்து
என் வெட்டி கதைகளை சகித்து
என் குறும்புகளை ரசித்து
துன்பங்களில் தோள் கொடுத்த
உன்னை எனக்கு இம்புட்டு
பிடிக்காமல் போகுமா என்ன?

உனக்கு என்மேல கோவமே வராதா?

உன் அழும்புகளை
கண்டவுடன்
உன்மேல் இருக்கும்
என் கோபம் கூட
குப்பைத்தொட்டிக்கு செல்லும்
காகிதம் போல்
கசக்கி எறிகிறேன் !

உன்கூட பைக்ல பேசிட்டு வரும்போது என்ன தோணுச்சு?

என் காதோரம்
நீ பேசுகையில்
அனல் வீசும்
உன் மூச்சுக்காற்றால்
குளிர் மழை தான்
எனக்குள்!!!

திடீர்னு நா உன்கிட்ட பேசாம காணாம போயிட்டா என்ன பண்ணுவ ?

தேம்பி தேம்பி அழுவேன்
உன்னை தேடுவேன்
உன் நினைவுகளை
எண்ணி எண்ணி
கவிதைகளை கிறுக்குவேன்
என்று சொல்லமாட்டேனே
ஹா ஹா ஹா !!!

கொண்டாடப்படாத
ஒன்சைடு அன்புக்கு
என்றுமே ரெக்கை உண்டு
ஸோ
வேற பொண்ணுகிட்ட இதே
கவிதைகளை உருட்டுவேன்
ஹா ஹா ஹா !!!

அவள் : அடப்பாவி நீ செஞ்சாலும் செய்வ சீரியஸா பதில் சொல்லு

அன்பை கையாள்வது
என்றுமே கடினம்
ஒருவேளை
உன் நேசம் பொய்த்து போனால்
எத்தனை தைரியம் இருந்தும்
நான் கோழையாகிவிடுவேன்

என்ன ப்ரொபோஸ் பண்ணா எப்படி பண்ணுவ?

நான்  : உன் ஹாஸ்டல் வந்துடுச்சு ..கிளம்பி கிளம்பு !! ஜர்கண்டி ஜர்கண்டி !!
அவள் : அது எங்களுக்கு தெரியும் பதில் சொல்றா வெண்ண

 
உன்னிடம்
இரண்டு வார்த்தைகள்
சொல்லவேண்டும் என்றேன்
நீயோ
சொல் என்றாய்
"ஐ லவ் யூ" என்றேன்
இரண்டு வார்த்தைகள் என்றாய்
ஆனால்
மூன்று வார்த்தைகள் உள்ளதே
இல்லை
ஐ(i) -யும் &  யூ(you) -வும்
வேற வேற இல்ல ஒன்னு தான்
ஷபாஅஆஆஆ முடியலடா
என்ற மைண்ட் வாய்ஸ் எனக்கு
நன்கு கேட்கிறது

அவள் :போதும் டா உன் கவிதை...டைம் ஆச்சு கெளம்புறேன்
நான் : லாஸ்ட்டா ஒரே ஒரு கவிதை
அவள் : சரி சீக்கிரம் சொல்லி தொல

கவிநடை இல்லாத
இந்த
நடை கவி பயணத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்காமல்
கமா வைத்தால்
என் வாழ்க்கை மோட்சம் பெறும் 

அவள் : பாப்போம் பாப்போம் !!

உனக்கு நா ஒரு உண்மையா சொல்லட்டா.. நா குஷி படம் பாத்துருக்கேன்

நான் : ஆத்திதிதிதிதீதீதீதீதீ !
நல்ல வேல கார் சீன் காப்பி பண்ணோம். மொட்டமாடி இடுப்பு சீன் காப்பி  பண்ணிருந்தா சோலி முடிஞ்சிருக்கும்
                                          சாமீய்ய்ய்ய்….
« Last Edit: August 30, 2023, 05:22:00 PM by சாக்ரடீஸ் »

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 445
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
அன்பே காதலில் இருவரும் அகரமெழுத ஆரம்பித்த காலமது..
உன்னோடு தனியே பயணிக்கும் தயக்கங்களை அழகாக
தகர்த்தெறிந்ததும் நீதான்..
உற்றார் உறவினர் கண் படாமல் சாலை கடக்கும் கள்ளங்கள்
கற்றுக்கொடுத்ததும் நம் காதல் தான்..

உன் காதோரத்தில் என் பேச்சுக்களும்
உன் எதிர் பேச்சுக்களுக்குமான என் நகையொலிகளுமாக
காலேஜ் செல்லும் சாலைகள் கூட இன்னும் கொஞ்சம்
நீளாதா என ஏங்க வைத்த நாட்களது..

உன் தோள் தொட தயங்கிய என் கரங்களை ,
உன் இருகபற்றலின்றி பயணிக்க முடியாத நிலைக்கு
மாற்றியதும் நீதான்..
என் அணைப்பின் அழுத்தத்தின் அளவுகளில்
என் மன நிலையறியும் தந்திரக்காரனும் நீதான்..

வீடு செல்லும் குறுந்தூரங்களை நெடுஞ்சாலைகளாக மாற்றும்
கலைகளெல்லாம் எங்கு சென்று கற்றாயோ ??
அது சரி கனவு காண கற்று தரும் காதல்தான்
சந்திப்புக்களுக்கான காரணங்கள் கண்டுபிடிப்பதிலும்
கில்லாடியாயிற்றே..

சாலையோர தேநீர்கடைகளும் தள்ளு வண்டி தாத்தாக்களுமே நம் காதலின்
நெருக்கமறிந்த சாட்சிகள்..
வழி பிள்ளையார் கோவிலருகே கண் மூடி நான் கும்பிட
குங்குமமிட்டு பொண்டாட்டி என்று வம்பிழுக்கும் உன்னை
செல்ல கோவங்களின் போர்வையின் மறைவில்
ரசித்திருக்கிறேன்..

வாழ்க்கை பாதையையும் கை பிடித்து நடை பழக்குவாய்
என நம்பியிருக்கையில்..
கை உதறி சென்றாய் இரக்கமுமின்றி.. காரணமுமின்றி..
நான் எழுத நினைக்கும் கவிதையாய் நீ இருக்க ..
நீ படிக்க மறுக்கும் கவிதையாய் நான் மாறியதேனோ??

கடக்க முடியாமல் தவிக்கிறேன்..
நீ இல்லாமல் நாம் சென்ற சாலைகளை..
என்னை உனக்கான காதலில் விழ செய்தது
உன் தவறுதான்..
ஒன்று அணைத்து விடு..
இல்லை என்னை அழித்து விடு..
« Last Edit: August 31, 2023, 10:06:22 PM by Madhurangi »

Offline SweeTie

நீண்ட பாதையில்   நெடுந் தூர பயணத்தில்
கருத்தொருமித்த   காதலர் இருவர்
நெருக்கமாய் இணைக்கும்  மோட்டார் ரத்தத்தில்
தனிமையில்  இனிமை  காண்பது கண்டேன்

காலங்களால்  தள்ளிப்போன காதலை
கட்டுக்கோப்புடன்    காப்பாற்றி   
மீண்டும்   புதுமையோடு   புதுப்பித்து
இன்று    பவனி போகிறது

வெண்துகில் விரித்த நீல  வானதனை   
தழுவி நிக்கும்  அடர்ந்த  காட்டுப் பாதை 
முடிவில்லாத   ஆசைகளை  மூச்சுமுட்ட பேசிவிட
காத்துக்கிடந்த  நேரமிது  .

பேச்சுக்களில் இல்லாத  சுகம்  அவனுக்கு 
அவள்  உராய்தலில்    கிடைக்கையில்
வானை தொடும்  உயரத்தில் பறக்கிறது
அவன்  மனஓட்டம்

மோட்டாரின்  வேகத்தை  மிஞ்சி நிற்கும்
காதல்  இதயங்களின்    வேகத்தை   அளக்க
இன்னுமா  இந்த  உலகம்    அளவுகோல்
கண்டுபிடிக்கவில்லை

கண்ணெதிரே காணும்  காட்சிகள் எல்லாம்
கானல் நீர் போல் மறைவதுபோல்
நம் காதல் என்றும்  மறையாது   
காட்டாற்று வெள்ளம்போல்  நம்முடனே வாழும் !!!